வியாழன், 14 அக்டோபர், 2010

புத்தரை எனக்கு ஏன் பிடிக்கும் .

மிகவும் மென்மையாக ,அழகாக  எழுதப்பட்டது
புத்தரின் வரலாறு.மிகவும் திட்டமிடப்பட்டு எழுதப்பட்டதால்
தான் இவ்வளவு நாகரிகமான நயங்களை இதில் காணப்படுகிறது .
''Paul Carus'' எழுதிய
''THE GOSPEL OF BUDDHA'' என்னும் நூலை
''புத்தரின் புனித வாக்கு'' என
''மு.கி.சந்தானம்'' அவர்களின் தமிழாக்கத்தில்
இந்திய அரசு வெளியிட்ட நூலிலிருந்து சில பகுதிகள் ...

அவருடைய கணவனாகிய அரசன் .அரசியரின் புனிதத்தன்மையுடன் விளங்கும் சமயத்தில் அவரை கௌரவித்தார் ...
(இளவரசர் சித்தார்த்தர் புத்தர் ஆகிறார் -4.போதிசத்துவரின் பிறப்பு -3-பக்கம் 11 )
எவ்வளவு நயம் பாருங்கள் எழுத்தில்.

சாம்ராஜ்யம் அவரை நாடி வரும் .ஒன்று இவர் புவியாளும் ராஜாதி ராஜாராக ஆவார்.அல்லது உண்மையில் புத்தராக ஆவார் .
(இளவரசர் சித்தார்த்தர் புத்தர் ஆகிறார் -4.போதிசத்துவரின் பிறப்பு -21-பக்கம் 15 )

கடைசி புத்தர் என்னும் முன்முடிவை பக்குவமாக இயம்பியுள்ளதை பாருங்கள் .

இளவரசருக்கு அரசர் கொடுத்திருந்த மாளிகை அனைத்து சொகுசுகளும் நிறம்பப் பெற்றிருந்தது ...-1
துயரங்கள் சித்தார்த்தரை வந்தடையாது இருந்தால் தான் இளவரசருக்கு உலகின் துயரங்கள் இருப்பது அறியாமல் போகும் என்று நம்பினார் -2
ஆனால்,சிறைப்பிடிக்கப்பட்ட யானை காட்டு வாழ்வுக்கு ஏங்குவது போன்று இளவரசருக்கு வெளி உலகைக்கண ஆசைப்பட்டார் -3
சுத்தோதனரும் நான்கு கம்பீரமான குதிரைகள் பூட்டப்பட்டு நகைகளால் ஜொடிக்கப்பட்ட தேரை சித்தம் செய்து இளவரசர் செல்லும் சாலை முழுவதையும் அலங்கரிக்கச் செய்தார்-4
அதன்படி நகரின் வீடுகள் எல்லாம் திரைச்சீலைகளாலும் பதாகைதோரணங்களாலும்,அழகுபடுத்தப்பட்டன.பார்வையாளர்கள் சாலை இரு மருக்கிலும் நின்று தங்களது அரசருக்கு வாரிசான இளவரசரைஆவலுடன்எதிர்கொண்டுஅழைத்தனர் .சித்தார்த்தரும் தமது தேர்ப்பாகன் சன்னாவுடன் நகரின் வீதிகளிலும்,நீரூற்றுக்களாலும் கண்ணிக்குஇனியமரங்களாலும் நிறைந்த புறநகர் பகுதிகளிலும் தேரில் வலம் வந்தார்-5 
(இளவரசர் சித்தார்த்தர் புத்தர் ஆகிறார்-6.மூன்று துயரங்கள்-1-5 -பக்கம் .18,19)

இது வரை சரியாக இருந்தது .
காட்சி உடனே மாறுகிறது

அவ்வாறு வலம்வரும் பொழுது வழியில் கூன் விழுந்து,முகத்தில் சுருக்கம் ஏற்பட்ட ,கவலை தோய்ந்த பார்வையை உடைய முதியவர் ஒருவரை சந்தித்தார் ...
(இளவரசர் சித்தார்த்தர் புத்தர் ஆகிறார்-6.மூன்று துயரங்கள்-6 -பக்கம்.19)
மேலும் முன்னேறுகையில்,வழியில் வயதான ஒருவர் தென்பட்டார்.அவர் உடல் உருக்குலைந்தவராக வலியால் துடித்து அவதிப்பட்டு மூச்சுவாங்கிக் கொண்டிருந்தார்.-9
பிணத்தைச் சுமந்து கொண்டு நான்கு பேர் எதிர்ப்பட்டனர் ...-13 
(இளவரசர் சித்தார்த்தர் புத்தர் ஆகிறார்-6.மூன்று துயரங்கள்-9,12 -பக்கம்.21)

இவ்வாறு செல்கிறது ...

' இந்த விசயம் அவருக்கு தெரியாது அதனால் தான் இப்படி '.
'தலைவி நாலேசுக்கே எதுவும் போகரதில்ல ,அவங்க நாலேசுக்கு போச்சுனா கட்சி இன்னேரம் எப்படி இருக்கும் தெரியுமா ?' .
'தலைவருக்கு மட்டும் இது தெருஞ்சதுனூ வச்சுக்க பிச்சிடுவாறு பிச்சு' .
'அய்யாகிட்ட இத சொல்ல வேண்டாம் .அவருக்கொல்லாம் இதுக்கு நேரமில்லப்பா நான்  முடிச்சுத்தாரேன்'. 
'அடடா,ஏப்பா இத என் கவனத்துக்கு கொண்டுவல்ல .சரி ,இனி நான் பாத்துக்கரேன் '.

நிறையா இடங்களில் இப்படியான வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் எதற்காக அவர்கள் அங்கிருக்கின்றார்கள் என்ற எண்ணம் தோன்றும் .

ஆழ்ந்து யோசித்ததில் ...

காந்தி ,சே போன்றோர் மக்களை நேரடியாக சந்தித்தனர் .சந்தியில் .அதனால் தான் அவர்களுக்கு மக்களின் உணர்வுகள் புரிந்தது .

அப்படி இல்லாதவர்களால் மக்களை நேசிக்க முடியாது .
நேசிப்பதாக சொல்லதெல்லாம் வெறும் பேச்சே .

//நகரின் வீடுகள் எல்லாம் திரைச்சீலைகளாலும் பதாகைதோரணங்களாலும்,அழகுபடுத்தப்பட்டன.// என்ற முன்னேற்பாட்டுடன் சென்ற புத்தர் மூன்று துயரங்களை புத்த கதைகள் கூறியபடி தேரில் சென்று சந்தித்திருக்க வாய்ப்பில்லை .
அதுவும் ஒரே நாளில் .
இவை மிகைப்படுத்தப்பட்டுள்ளது ,
எனினும் புத்தர் மக்களை தனியாகவே சந்திந்திருக்கின்றார் என்பது தான் உண்மை .எது எப்படி என்றாலும் புத்தர் மக்களை நேரில் சந்தித்துள்ளார் .பல நாட்கள் பல இடங்களுக்கு சென்றிருக்கின்றார் .இளவரசராக இருந்துகொண்டு. ஆனால்,அரசு அதிகாரமின்றி .
தனக்கு இவ்வுலகின் இயல்பான வாழ்க்கையை ஆடம்பரம் என்னும் மறைப்பின் மூலம் அதிகாரம் தனிமைப்படுத்துகிறது என்பதனை உணர்கிறார் .பிறகு அவர் தனது பயணத்தை ஆடம்பரம்,அதிகாரம் இன்றி தொடரவிரும்பி இயற்கையுடன் இயைந்த மனித வாழ்வை நோக்கி நகர்கின்றார்.

மக்களையும் அந்த நகர்வை நோக்கி அழைத்தார் .
அதனால் இவர் மக்களுடன் ஐக்கியமாகி விட மக்களும் இவருடன் ஐக்கியமானார்கள் .

இந்த ஐக்கியமான நகர்வுதான் புத்தரிடம் எனக்கு பிடித்தது.
.... . ..


. Download As PDF

8 கருத்துகள் :

மணிமகன் சொன்னது…

நல்ல பதிவு.புத்தர் குறித்து அவசியம் அனைவரும் படிக்கவேண்டும்.புத்தமும் தம்மமும் என்ற அம்பேத்கரின் நூலையும் படியுங்கள்.அவரது பார்வை,ஆய்வு முற்றிலும் புதிது.அம்பேத்கர் நூல் தொகுதி 22 இல் இது உள்ளது.நல்ல தமிழ் மொழிபெயர்ப்பில் எழுதப்பட்டுள்ளது.இந்நூல் செஞ்சுரி புக் ஹவுசில் கிடைக்கும்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்ல பதிவு

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

புத்தரைப் பற்றிய ம்ற்றொரு சிந்தனை - மறுபக்கம் - நண்டுவிற்கு ஏன் பிடித்தது - அருமையான விளக்கங்கள் - புத்தர் இயல்பாகவே இயல்பான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டிருக்கிறார். இல்லை எனில் அவர் ஓரிரவில் சடாரென மாற முடியாது - அரச போகங்களைத் துறப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

நல்ல சிந்தனை நண்டு
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

cheena (சீனா) சொன்னது…

சோதனை மறுமொழி

Chitra சொன்னது…

தனக்கு இவ்வுலகின் இயல்பான வாழ்க்கையை ஆடம்பரம் என்னும் மறைப்பின் மூலம் அதிகாரம் தனிமைப்படுத்துகிறது என்பதனை உணர்கிறார் .பிறகு அவர் தனது பயணத்தை ஆடம்பரம்,அதிகாரம் இன்றி தொடரவிரும்பி இயற்கையுடன் இயைந்த மனித வாழ்வை நோக்கி நகர்கின்றார்.

மக்களையும் அந்த நகர்வை நோக்கி அழைத்தார் .
அதனால் இவர் மக்களுடன் ஐக்கியமாகி விட மக்களும் இவருடன் ஐக்கியமானார்கள் .

இந்த ஐக்கியமான நகர்வுதான் புத்தரிடம் எனக்கு பிடித்தது.

.......You have captured the essence, very nicely. :-)

யாதவன் சொன்னது…

நல்லா இருக்கு.......வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் சொன்னது…

//காந்தி ,சே போன்றோர் மக்களை நேரடியாக சந்தித்தனர் .சந்தியில் .அதனால் தான் அவர்களுக்கு மக்களின் உணர்வுகள் புரிந்தது .

அப்படி இல்லாதவர்களால் மக்களை நேசிக்க முடியாது .
நேசிப்பதாக சொல்லதெல்லாம் வெறும் பேச்சே//

உண்மைதான்.. மக்களோடு இரண்டறக்கலப்பவர்களால்தான் அவங்க பிரச்சினைகளை புரிஞ்சுக்க முடியும்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகைபுரிந்து

இந்த இடுகைக்கு ஆதரவாக


thamizmanam & இன்ட்லி ஆகிய இரண்டிலும்
வாக்களித்து சிறப்பித்த

jeyamaran &
Starjan &
option1n @n1option &
ChitraSolomon @chitrax &
yamsasi2003 &
jayanthi@Jayanthig64 &
menaga @ menagasathia


ஆகிய உங்களுக்கும்thamizmanam த்தில்
வாக்களித்து சிறப்பித்த

Radhakrishnan &
oyvagam &
affleads &
appanpalanisamy &
geraldindia


ஆகிய உங்களுக்கும்


இன்ட்லியில்
வாக்களித்து சிறப்பித்த

RDX &
bharani &
kousalya &
kingkhan1 &
BIGLE &
balajisaravana &
ashok92 &
MVRS &
jegadeesh &
spice74 &
tharun &
nanban2k9 &
kvadivelan &
amalraaj &
vilambi &
ldnkarthik &
soundar1987 &
kaelango &
ganga &
malgudi &
sramse2010


ஆகிய உங்களுக்கும்


பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய

மணிமகன் &
T.V.ராதாகிருஷ்ணன் &
cheena (சீனா) &
Chitra &
யாதவன் &
அமைதிச்சாரல்
ஆகிய உங்களுக்கும்

என் மனமார்ந்த நன்றிகளையும் ,
வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

மிக்க நன்றீங்க .


(குறிப்பு :இதில் யாராவது பெயர் தவறுதலாக இடம் மாறி இடம்பெற்றிருத்தாலோ அல்லது விடுபட்டிருந்தாலோ தயவுசெய்து தெரிவிக்கவும் திருத்திக்கொள்கிறேன் .)

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "