சனி, 26 ஜூன், 2010

கவி கம்பனாய் விழித்தெழு தமிழா ,தமிழால் விழித்தெழு் .


நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் .
அதற்காக தமிழை வளர்க்க
மிக அழகாக இனிமையாக நேர்த்தியாக அற்புதமாக சுவையாக
"புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்று
பொருமை கொள்ளத்தக்க வகையில் எழுதப்பட்ட
செந்தமிழை போற்றாமல் இருப்பது
என் பகுத்தறிவிற்கு அடுக்குமா ? முறையா ? என சிந்தித்ததால் இந்தப்பதிவு .

கம்பரின் காப்பியம் மானுடம் பாடும் காவியம் .
கம்பர் தமிழை செலுமைப்படுத்தவே தனது காவியத்தை படைத்தார் .
மதத்தினை புகுத்தும் வண்மம் அவரின் காவியத்தில் இல்லை .

இது போன்று ஒரு சிறந்த உயர்ந்த காவியத்தை இனி தமிழில் படைக்கவேமுடியாது .
அவ்வளவு அற்புதமான காவியம் . இதற்கு ஈடு இணையான காப்பியம் தமிழ் இலக்கியத்தில் இதற்கு
முன்னும் பின்னும் இல்லை .

சங்க இலக்கியங்களைத்தவிர்த்து ,கம்பர் காவியத்திற்கு முன்னால் ஈரோட்டிலமர்ந்து ஒரு
சிற்றெரும்பு இமயமலையை எட்டிப்பார்க்க முயற்சிப்பது போல தான் மற்ற அனைத்து தமிழ்
இலக்கியங்களும் இருக்கிறது இதற்கு.

கம்பரை போற்றாத தமிழன் முதலில் தமிழனே அல்ல பிறகு மனிதனே அல்ல .
ஏனெனில் கம்பர் இல்லையேல் இன்றைய தமிழ் நமக்கில்லை என்பதுதான் வரலாறு .

வள்ளுவனுக்கு சிறப்புச்செய்வது தமிழுக்கு அழகென்றால்
கம்பருக்கு சிறப்புச்செய்வது தமிழுக்கு அணி .
கம்பரில்லாத தமிழை என்றும் யாரும் எண்ணிப்பார்க்கவே முடியாது .

அவரைத்திட்டும் அறிவாளிகளைக்கேட்கிறேன் ,
உங்களின் வாழ்நாளில் ஒரு வரி கம்பர் போல் எழுத முடியுமா உங்களால்?

எங்க பெரிய அப்பிச்சி இராமர் பத்தி பேச்சு வந்தபோது
இங்கு இருக்கிற ஒருத்தனுக்கும் இராமரைப்பத்தி பேச யோக்கியமில்லை .
ஏன்னா இவனுங்க எல்லாம் இராமரைப்போல் யோக்கியவான்கள் இல்ல .
அதனால இவன்களுக்கு இராமரை புடிக்காது .
இராமரை புடிக்கும்னூ சொன்னா கோவலனாக வாழ முடியாதே இவர்களால்.
அதனால் இராமரை திட்டிக்கிட்டே இருப்பாங்க .

நாங்கூட நினைச்சேன் இலங்கை இராவணர் இரத்தசம்பந்தப்பட்ட சொந்தமாக இருந்திருப்பார் போலனு. அதனால் தான் வரிந்து கட்டிக்கொண்டு புத்தக எரிப்பென்ன ,செருப்பில் விளையாட்டென்ன,போராட்டங்கள் என்ன ,எத்தனை எதிர் காவியங்கள் ,எத்தனை எத்தனை மேடைப்பேச்சுக்கள் ...தமிழ்மணக்க எழுதிய இராமாயணத்தை தமிழச்சியே சகிக்காத அளவிற்கு எத்தனை எத்தனை அசிங்கமான வசவுகள் ...ஏங் காலத்தில ஆடாத ஆட்டம் ஆடுநாங்க .

அதனாலா அவங்க சாதிச்சது என்னான நல்ல மனுசன் காமராசரை நோகடிச்சு காங்கிரச
தோக்கடிச்சதுதான் . அன்னைக்கு கெட்டுச்சு தமிழ்நாடு .
அவங்கெல்லாம் இருக்காங்கலா இப்ப .
அப்படியிருந்த நல்லெண்ணம் கொண்டவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் .
அப்ப இருந்த எல்லாருக்கும் வயசாயிருக்கும்
ஞாபகம் இருக்கவாபோகுதுனு நினாச்சு கோழி புடிப்பாங்க னு கூறி பொக்கவாயால
கிலுக்கிலுக்னு சிரித்தார் .

தண்ட காரண்யம் அந்த நட்டநடுங்காட்டில் தன்னந்தனியாக அமைதியாக வாழ புறப்பட்டுஅயரஎண்ணிய மிக உயரிய பண்புகொண்ட அந்த மனிதனுக்கு உரிய சொத்தை அடுத்தவன் அபகரிக்கின்றான் . அபகரித்தவன் சாமானியமானவன் அல்லன் .அவன் மிகப்பெரிய போரரசன் .இப்ப நிலத்த அபகரித்ததனால் தண்ட காரண்யத்தில் மக்கள் அவதிப்படுவதைப்போல் அன்று தனது மனைவியைஅதே தண்ட காரண்யத்தில் அபகரித்ததனால் அவஸ்தைப்பட்டான் இராமன் .யார் என்று தெரியாமல்.இப்பவும் மக்களுக்கு தண்ட காரண்யத்தில் அதே குழப்பம் தான் .

தனி ஒருவனாக இருந்து தனது தம்பியின் துணையுடன் தனது அறிவின் ஆற்றலினாலும்
,நற்குணத்தினால் பொற்ற அன்பு நிறைந்த மக்களின் உதவினாலும் ,தனது வீரத்தினாலும் தனி
ஒருவனாக முயன்று அந்த முயற்சியில் வெற்றியும் பெறுகின்றான் .மிகப்பெரிய அரசனான
இராவணரை வெல்கின்றான் .அதற்கு தனது அரசு செல்வத்தையோ ,சொல்வாக்கையோ அவன்
பயன்படுத்தவில்லை .அவ்வளவு நெஞ்சுரம் கொண்டவன் .வீரம் மட்டுமே அவன் சொத்து ,அரசியல்
தந்திரமே அவனின் ஆயுதம் . சென்றான் வென்றான் .

நினைத்துப்பார்த்தால் மலைப்பாக இருக்கிறதல்லவா ? தனது மனைவி ,ஒரே பிரஜைக்காக ஒரு
அரசனை தனி ஒருவன் அதுவும் நெறி தவறாமல் நின்று வீழ்த்தி வென்று உள்ளான் .
போற்றுவதற்கு உரிய காவியம் .

இப்படி காப்பியம் படைத்த கம்பரை அவரின் காப்பியம் அரங்கேற்றம் காண மன்னாராட்சி காலத்தில்
எங்வளவே எதிர்ப்புகளுக்கும் மத்தியில் தனி ஒருவராய் நின்று போரரசுகளையும் ,பொரும்
படைகளையும் கண்டு அஞ்சாது தனது ஒப்புயர்வற்ற காவியத்தை தமிழன்னைக்கு மட்டுமே
காணிக்கையாக்கியுள்ளார் எனில் ,

இந்தக்காலத்திலேயே ,அதுவும் மக்களாட்சிக்காலத்தாலே கொடுர ஆட்சியாளர்களால் எவ்வளவு கஸ்டம் கருத்துரிமை ,பேச்சுரிமை ,வாழ்வுரிமை இதுகளுக்கொள்ளாம் இதவிட மோசம் அப்ப இம் என்றால் வனவாசம் ,ஏன் என்றால் சிறைவாசம்னு எதுத்தா பிணவாசம் என்றிருந்த சமயத்தில அவரால் தனித்து இயங்கமுடிந்துள்ளது எனில்,

அந்த வீரம் .அந்த வெறி ,அந்த பக்குவம் அனைத்தையும் அவர் இராமகாவியம் படைத்ததினால்
இயல்பாக இராமருடைய அந்த குணம் அவரிடம் ஒட்டிக்கொண்டது என்பதோடு ,தமிழ் அவருடன்
வாழ்ந்தது அதனால் தான் அவரால் இவ்வளவு சிறப்பான காவியத்தை மங்கு மருவின்றி
அளிக்கமுடிந்ததுள்ளது .

இல்லாது போனால்,இன்று என்ன நடக்கிறது பல பேரின் சுயமரியாதைகள் அவமானப்படுத்தப்பட்டு
அசிங்கப்படுத்தப்பட்டு வருகிறது அரசியல் என்ற பெயரில் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.

மிகச்சிறந்த அந்த தமிழமுதத்தை அவர் காலத்தே ஆட்சிக்கும் மாட்சிக்கும் வணங்காமல்
தமிழன்னைக்கு மகுடம் சூட்டினாரே அவர் எங்கே.இன்று மேடை போட்டு தம்மைத் தாமை
பாராட்டிக்கொள்கின்றோமே நாம் எங்கே .

இத்தகைய தன்மானமுள்ள வீரமுள்ள விவேகமுள்ள தமிழரை நான் பாராட்டுகின்றேன் .
அவரைப்போலவே நாம் அனைவரும் எந்த வித அச்சமுமின்றி தமிழுக்காய் மட்டுமே வாழ்வோம் என
வேண்டுகிறேன் .
எனவே ,

''கவி கம்பராய் ''

''விழித்தெழு தமிழா ,தமிழால் விழித்தெழு ''

என்று கூறி

''வாருங்கள் தமிழ் நெஞ்சங்களே ''
''வாழ்வோம் தமிழ் நெஞ்சங்களில் ''.

என அழைக்கின்றேன் .


வாழ்க தமிழ் ,வாழ்க வாழ்கவே .


.............


அனைத்தையும் சந்தேகப்படு -2
தொடரும் .........

.


.

.

Download As PDF

வெள்ளி, 25 ஜூன், 2010

பார்பனர் திராவிடர் சண்டையை தோற்றுவித்த முதல்வர் .






















தன் மதத்தினை , இந்திய மக்களிடையே ,தனக்கு முன்வந்தவர்களைவிட , தான் சிறப்பான முறையில், புதிய உத்தியைப்பயன்படுத்தி ,எப்படியாவது பரப்பிவிடவேண்டும் என்ற வெறியுடன் 1838 ம் வருடம் சென்னை வந்திறங்கிய அந்த லண்டன் சமயத்தொண்டருக்கு ,இங்கு மிகப்பெரிய புதிர் காத்திருந்தது .

அவர் நினைத்தமாதிரி எளிதாக மக்களை கிருத்துவ மதம் அணுக முடியலவில்லை .அது மட்டுமல்லாமல் ,இங்கிருப்பவர்கள் தாங்கள் பின்பற்றிய மதங்களில் உறுதியான இருந்தனர் .மதமாற்றம் என்பது சாத்தியப்பட முடியாத ஒன்றாக இருந்தது .ஏற்கனவே புத்தம் ,சமணம் இவற்றிலிருந்து மாறியவர்கள் தற்பொழுதிலுள்ள நிலையில் ஆணித்தரமாக ஒன்றிவிட்டிருந்தனர் .அதோடு சைவமும் ,வைணவமும் ஒன்றிற்குள் ஒன்று உறவு கொண்டாட புதிதாக பிற கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளத்தயாரில்லலாமல் இருந்தனர் .அதோடு அன்னியர்களை புத்தம் ,சமணம் சரணாகதிக்குப்பின் நினைத்துப்பார்க்கவே மறுத்துவிட்டனர் . இங்கிருந்த மதங்கககோட்பாடுகளை விட உயரியதாக தன் மதத்தின் கோட்பாடுகள் இருப்பதாக நிருபிக்க முடியவில்லை .எவ்வழிகளில் ஆய்ந்தாலும் தனது கடை சரங்கு இங்கு விற்காது எனத்தெரித்துகொண்ட அவர் .தன்னை இங்கு அனுப்பிய நாட்டிற்கும் ,மிசினரிக்கும் உண்மையானவனாக இருக்காதவனாகி விடுவோமா என்ற ஐயம் தோன்றியது .

ஆங்கில ஆட்சி இங்கு மேலும் மேலும் உறுதிப்பட இங்கு வாழும் குடிகளை தங்களின் அரசிற்கு விசுவாசம் கொள்ளும் வகையில் மதத்தால் ஒன்றிணைக்கும் யுத்தி படுதோல்வியைத்தழுவிக்கொண்டிருந்தது .மதத்தினால் மக்களைப் பிரிக்க முடியவில்லை ,மொழியினாலும் மக்களைப்பிரிக்கமுடியவில்லை .மக்கள் பிரிந்து நின்றாள் தானே தம் சரக்கு விற்கும் என்ன செய்ய என எண்ணிக்கொண்டிருக்கும் பொழுதுதான் ' பேராசிரியர் .சர் .டேனியல் சேண்ட் ஃபோர்டு ' கற்றுக்கொடுத்தது நினைவிற்கு வந்தது .மொழி,அதன் வழி இனம் என பகுத்து மக்களிடையே உள்ள ஒன்றுமையைக்குழைத்துவிட்டால் , சிறிது சிறிதாக மக்களிடையே அது பகைமை உணர்வு வளர்ந்து .பின் அதுவே பெரும் பகையாகி தனது அரசுக்கும் ,தனது மதத்திற்கும் பெரிய அரணாக பின்னாளில அது இருந்து வாழ்விக்கும் என்றும்,அதோடு தனக்கும் அது மிகப்பெரிய கௌரவத்தையும் கொடுக்கும் என்ற தீர்க்கமான முடிவுடன் 'இனத்தால் இந்த மனிதர்களைப் பிரிப்பது 'என்ற தனது ஆயுதத்தை கையில் எடுத்தைக்கொண்டார் .இது இவரே மேற்கொண்டாரா அல்லது அங்கிருந்து அனுப்பிவைக்கும் பொழுதே அவருக்கு இடப்பட்ட கட்டளையா என்பது ஒராயிரம் கோடி ருபாய் பரிசுக்குறிய கேள்வி .எது எப்படியிருப்பினும் ஆங்கிலேயர்களின் இந்த 'பிரித்தாலும் சூழ்ச்சிக்கு 'என்றும் மக்கள் பலிகடா ஆகிவருவதுதான் கொடுமையிலும் கொடுமையாக உள்ளது .(அப்படி அவர்கள் செயல்பட்டதனால் தான் இந்தியாவை இரண்டாகப்பிரிந்து இன்னும் அதன் வக்கிரமத்தில் அவஸ்தைப்பட்டுக்கொண்டு வருகின்றேம் .) இந்த கட்டுரை யின் நாயகர்
"MR .ROBERT A.CALDWELL " தனது "A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN "
என்ற நூலின் மூலம் நாசுக்காக தனது 'பிரித்தாளும் சூழ்ச்சியை ' புகுத்தினார் . அன்று இவர் புகுத்திய அக்கினிக்குஞ்சு தான் மெல்ல மெல்ல பரவி ,இங்கிருந்த மக்களை திராவிட இனம் என்றும் ,ஆரிய இனம் என்றும் தங்களுக்குள்ளேயே பிரிந்து சண்டையிட காரணமானது . இவர் தான் பார்பனர் திராவிடர் என்ற சண்டையை தோற்றுவித்த முதல்வர் .


...







.............


அனைத்தையும் சந்தேகப்படு -1.
தொடரும் .........





.


.

. Download As PDF

வியாழன், 24 ஜூன், 2010

நல்ல நறுமணம் வீசுகிறது .






















கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.




ஆமாம் ...பா ...ஆமாம் ....
எங்க டோமிப்பயன் கூட 2 நாள் பூ வச்சிட்டு வாரான் .
அவன் மீது கூட நல்ல நறுமணம் வீசுகிறது .


.





.

Download As PDF

திங்கள், 21 ஜூன், 2010

செம்மொழி மாநாடும் அழியும் தமிழனின் அடையாளமும்.சிந்து சமவெளியும் .





















இன்று வரை நம் மக்களிடையே பொதுவாக திருக்குறள் ஒரு அறநூல் என்றும் ,அதில் உள்ளவைகள் அனைத்தும் அறம்,பொருள்,இன்பம் இவற்றை அடித்தளமாகக்கொண்டே இயற்றப்பட்டன எனவும் ;பிற கருத்துக்கள் இருந்தாலும் அவற்றை விடுத்து அவையும் இவற்றிற்காகவே இயற்றப்பட்டது என்ற பார்வையிலேயே பார்த்தும் ; வேறு பார்வை பார்க்க முடியாத ,கூடாத அளவுவிற்கு, நிகழ்ந்து வந்த வரலாற்றுச் சண்டைகளினால் ,குறள் தனது கருத்தினை எடுப்பார் கைப்பிள்ளையாக ஆகி ,பலவாக உருமாறி நம்முன் கூனி நிற்கிறது .அவ்வாறு உருவாகியவைகளில் சிலப்பதிகாரம் தலையான ஒன்றாகும் . குறளுக்கு இலக்கியமாக அது மிகச்சிறப்பாக இளங்கோவால் வார்க்கப்பட்டுள்ளது என்றால் அதுவும் மிகையல்ல .

உண்மையில் திருக்குறளே உலகின் மிகச்சிறந்த அரசியல் நூல்.

முதல் அரசியல் நூலும் இதுவே .

'அரசியல் நூல் 'என்பதனின்று அழியும் இதன் அடையாளத்தை காக்கவேண்டியது நம் கடமையாகும் .



















நாம் ஒவ்வொருவரும் வெட்கப்படக்கூடிய விசயம் ஒன்று உண்டெனில் ,அது நாம் நமது நாகரிகத்தை நாமே ஒத்துக்கொள்ளாமலும் ,அதனைப்பற்றி எந்த அக்கறையும் நாமக்கே இல்லாமலும், அதனை நாமே நிராகரித்தும், வருவது தான் .

இன்று வரை சிந்து சமவெளி நாகரீகம் ,அனைத்து தமிழர்களுக்கும் ஒரு வரலாற்றுப் பாடம் என்றளவே இருப்பது தான் அதைவிட மிகவும் வேதனையளிக்கும் விசயமாக உள்ளது. அதனைக்கண்டு வெட்கித்தலைகுனிகின்றேன்.

'அ ' வை கண்டுபிடித்த எனது மூதாதை இவர் தான் என என்னால் அடையாளத்துடன் உலகின் முன் நிறுத்த முடியாவிட்டாலும் .என்னால் ஆற்றங்கரைகளில் அழிந்துபோன எமது அண்மை தொன்மையை காணமுடிந்தது. அது தான் சிந்து சமவெளி நாகரீகம் .அது நமது நாகரீகம் .அங்கு வாழ்ந்தவர்கள் நமக்கு இன்றைய ஜீன்களை கொடுத்தவர்கள் .அதனை அறியாமல் ,உணராமல் ,போற்றாமல் வாழ்தல் முறையா ?.









2003ம்வருடம் நண்பர் திருப்பூர்அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் நீண்டநேர திராவிட நாகரிகம் பற்றி வாக்குவாதம் நடந்தது .அவர் முடிவாக உங்களின் கருத்திற்கு காலம் தான் பதில் செல்லவேண்டும் எனக்கூற விவாதம் முடிவுற்றது .அதனை தனது 'திருப்பூர் குமரன் கொடியில் பூத்த சுதந்திர மலர்'... என்ற நூலில்
'தமிழ்த் தேசியம்,இந்திய தேசியம் என்றெல்லாம் பிரிக்காமல் ,இந்தியாவின் ஒட்டு மொத்த பூகோளப் பரப்பையும் தமிழ் இனவழிப்பரப்பாக ஆய்வு செய்யக்கூறி அறிவுரை வழங்கும் வழக்கறிஞர் ஈரோடு இராசசேகரன் ...'என்று நினைவுகூர்ந்ததையும் இத்தருணத்தில் எண்ணிப்பார்க்கின்றேன்.


கோவையில் நடக்கும் செம்மொழி மாநாடு

'சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் ' என்பதனை பல்வேறு தளத்தில் இருந்து நிருபிக்கவும் ,நிலைநிறுத்தவும் அடித்தளமா அமையும் என்பதனை எண்ணி பூரிப்படைகிறேன் .மேலும் திருக்குறளுக்கு 'அரசியல் நூல் ' என்னும் அங்கீகாரமும் உயர்வும் கிடைக்கும் என்றும் எண்ணி மகிழ்கின்றேன்.
அழியும் தமிழனின் இந்த அடையாளத்திற்கு முற்றுப்புள்ளிவைக்கும் முகமாக முதல் செம்மொழி மாநாடு அமைந்துள்ளதை எண்ணி பெருமைப்படுகின்றேன் .


அதனால் ,
திருக்குறளுக்கும் ,திராவிட நாகரிகத்திற்கும் உயர்வைச்சேர்க்கும் இம் மாநாட்டிற்கு பெரும்திரலாக தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றுதிரண்டு 'அழியும் நமது அடையாளங்களை காக்க 'உறுதிபூணுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் .


இதற்கான முயற்ச்சியெடுத்து கண்துஞ்சாது பாடுபடும்
தமிழக முதல்வர் அவர்களை நன்றியுடன் நினைத்துப்பார்க்கின்றேன் .



'வாருங்கள் தோழர்களே கோவைக்கு'

'உயர்ந்த முதல்குடியாக உலகில் வாழ்வதற்கு'

என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன் .







.



.


. Download As PDF

ஞாயிறு, 20 ஜூன், 2010

செம்மொழி மாநாடும் அழியும் தமிழனின் அடையாளமும் . அரசியல் நூல் .











நேற்று என் நண்பர்களுடன் நடந்த மிகப்பெரிய விவாதத்திற்குப் பிறகு
எனக்கும் அப்படித்தான் தோன்றியது .
என்னிலை விளக்கமாக
நான் யாரையும் ஆதரிப்பதும் இல்லை ,எதிர்ப்பதும் இல்லை.
என் பணி அதுவும் அல்ல.எனக்கு அது அவசியமும் இல்லை.
எனக்கு நானே பார்த்து திருந்துவது மற்றும் கத்துக்கொள்வது.
முடிந்தாவரை அதனை பகிர்ந்து கொள்வது .
எனது அனைத்தும் தமிழ்.அதனால் தமிழே அனைத்தும் எனக்கு.அவ்வளவே .

ஒற்றுமையில்லாமல் இங்குள்ள யாவரும் ஒரே மக்களே. ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி உறவை மறுக்கவா போகின்றோம் .
இப்படியே சென்றுகொண்டிருந்தால் இதன் முலம் அதிக சேதாரம் அடைவது நமது மொழி ,நமது மொழி, நமது மொழி மட்டுமே.

வரலாற்று ரீதியில் நாம் மொழியின் மீது எத்தனை ஆண்டுகள் ஆளுமை செலுத்துகின்றேம் என்பது தான் இங்கு மிகவும் முக்கியம் . என்னைப்பொறுத்தவரை தமிழ்த்தாய் என்னை அவளின் தனது ஏறக்குறைய
5 லட்சமாவது வருடத்தில் ஈன்றாள் .நானும் அவளுடன் இனி எப்பொழுதும் பிரியாமல் பயணப்பட ஒட்டுமொத்த என் உழைப்பு முழுவதையும் செலவழித்துக்கொண்டு வருகின்றேன் .என் உடல் இன்னும் எந்தனை நாள் அவளுடன் பயணிக்கும் என்று தெரியாது .ஆனால் ,என் எழுத்தை அவளின் மேல் ஏற்றி நானும் அதன் முலம் பயணம் அவளுடன் அவள் வாழ்வு நெடுகிழும் .அவ்வளவே .

எத்தனையோ அரசுகளையும் ,போரரசுகளையும் ,பெரிய பெரிய மாபெரிய விழாக்களையும் ,இலக்கிய இலக்கணங்களையும் இன்னும் பிறவற்றையும் தமிழ்த்தாய் கண்டிருந்தாலும் .இன்று நம்முன் நிற்பவைகளைப்பார்க்கும் பொழுது மிகச்சொற்பத்தை மட்டுமே நாம் வைத்துள்ளோம் .அதற்கு காரணம் என்ன ? நம்மை நாமே பிரித்து பிரிந்து கொள்வது, பிரிந்து நிற்பது எதனால்? புரியாத இப்பயணத்தில் ஆதாயம் அடைந்தது அன்றிலிருந்து இன்று வரை அரசியல் வாதிகளே .ஒவ்வொரு முறையும் தமிழும் ,தமிழனும் அரசியல் காரணங்களுக்கா மொழியால்,மொழியின் பெயரால் கொல்லப்பட்டுள்ளான்.இதைத் தமிழ் தனது இலக்கண ,இலக்கியங்களில் மிகவும் தெளிவாகவும் ,ஆணித்தரமாகவும் பதித்துள்ளது .என்றாலும் அறிவு வளர்ச்சி பெறாமல் ,அதனை உணராமல் மனதில் கொள்ளாமல் .வெறுமனமே தமிழ் என்றும் ,என் தாய் மொழி என்றும்,தமிழன் என்றும் கூறித்திரிவது ஏதோ காட்டுமிராண்டித்தனமான கூச்சலாகவே தெரிகிறது எனக்கு .

இதற்குக்காரணம் ஒட்டுமொத்த தமிழனுக்கே அரசியல்அறிவு இல்லாமையே என்றுதான் நான் கூறுவேன் .அதற்குக் காரணம் .தமிழில் மற்ற மொழிகளில் உள்ளது போல் அரசியல் நூல் அரசியல் நூலாக இல்லாதபடி மறைக்கப்பட்டுள்ளது .அது தான் .

நான் ஆட்சியாளனா இருக்கேன் ,ஓட்டுப்போடறேன், கட்சியில இருக்கேன் ,அதப்படிச்சிருக்கேன் இதப்படிச்சிருக்கேன் .அதுதெரியும் இது தெரியும், அவரைத்தெரியும் இவரைத்தெரியும் ,இவனென்ன ஆட்சி செய்யரான் ,அவன் சரியில்லை என பேசுவது இவைகள் எல்லாம் அரசியலே இல்லை .இவைகள் எல்லாம் பிழைப்பாகவே இருக்கிறது இங்கு .பிழைப்பில் ஆதாயங்களைப்பெறமுடியும் ,அதனை பதியமுடியும் அவ்வளவே. அறிவை ? .

உங்களிடம் ஒன்றைக்கேட்கின்றேன் தமிழில் அரசியல் நூல் இருக்கிறதாக உணர்கின்றீர்களா ? அப்படி இருந்தாலோ அல்லது உணர்ந்தாலோ அது எதுவென்று கூற முடியுமா ? .

...........
தொடரும் ....



...................
செம்மொழி மாநாடும்
அழியும் தமிழனின் அடையாளமும் .
தமிழில் அரசியல் நூல் .4.







...............


.
.

. Download As PDF

விடுபடும் காலை
















வியர்க்கும் மலர்
விரியும் தென்றல்
விடுபடும் காலை.






'இது தேவதைக்கு மட்டும் 'என்ற தொகுப்பிலிருந்து


.



. Download As PDF

சனி, 19 ஜூன், 2010

செம்மொழி மாநாடும் அழியும் தமிழனின் அடையாளமும் .எங்கே லெமூரியாக் கண்டம் ? .3










ஆயிரக்கனக்கான தமிழர்கள் வதைபட்டுக்கொண்டு இருக்கின்றனர் சுதந்திரமின்றி கேம்புகளில் அகதிகளாக . எங்கு அவர்கள் அகதிகளாக சிறைவைக்கப்பட்டுள்ளனரே அது லெமூரியாக்கண்டத்தின் இருதயப்பகுதியில் அமைந்துள்ளது .தனது மண்ணிலே அடிமைகள் போல் வந்தேறிகளால் சித்தரவதைப்படுத்தப்படுகின்றனர் .
கொடுமை .

எங்கே லெமூரியாக் கண்டம் ?ஏன் கிடப்பில் போடப்பட்டது ?
லெமூரியாக் கண்டம் பற்றி பல கோணங்கள் இருந்தாலும்.மாற்றுப்பார்வை இருந்தாலும் .அன்று அதனை ஏற்று .அதுவே தனது உயிர் மூச்சாக விவாகத்துடன்,வீரத்துடன் எழுந்த,எழுதிய அறிஞர் கூட்டங்கள்
எங்கு சென்றனர் ?.என்ன ஆனது அவர்களின் ஆய்வுகள்? என்பது போன்ற ஐயத்திற்கான தேடலில் 'மிகப்பெரிய அரசியல் சூது புகுந்துவிட்டது 'என்ற முடிவுக்கு வரமுடிந்தது .

வரலாற்றை நோக்க ,இலங்கையில் ஈழப்பிரச்சனை சூடு பிடித்து போர் ஆரம்பமாகும் வரை லெமூரியாக் கண்டம் ஆய்வுகள் அனல் பறத்து கொண்டிருந்தன என சொல்லலாம். போர் உக்கிரம் ஆகஆக லெமூரியா என்பது கட்டுரையாகி, புனைவாகி ,கற்பனையாகி பின் மறக்கும் படி மறைக்கப்பட்டுவிட்டது .

இதற்கு காரணம் என்ன ?
லெமூரியாக் கண்டம் நிருபிக்கப்பட்டால் ? என்ற கேள்விக்கு பதிலாக இருக்கிறது
அது .
லெமூரியாக் கண்டம் நிருபிக்கப்பட்டால் ,
லெமூரியா உண்மை என்றால் தமிழன் ஆதி முதல் மனிதன்.
லெமூரியா உண்மை என்றால் ஈழத்தமிழன் அந்த மண்ணின் மைந்தன் .
சிங்களவரோ வந்தேறிகள் .
இலங்கை முழுவதும் ஆளும் அதிகாரம் மண்ணின் மைந்தர்களுக்கே .
அதோடு மட்டுமல்லாமல் தமிழன் எழுச்சிபெற்றுவிடுவான் .
அந்த எழுச்சியில் அசைக்கமுடியாத ஒரு சக்தியாக தமிழன் உருவாகி விடுவான் .
அவன் எதையும் உருவாக்கக்கூடிய அளவிற்று வலிமைபெற்றுவிட்டுவான்.
தமிழனுக்கு நாடு உருவாகிவிடும் .

அப்படியிருந்தும் ஏன் மறைக்கப்பட்டது ? ?
யாரால் ,எப்படி என அறுதியிட்டு கூறமுடியவில்லை என்றாலும் ஈழபோரைத்தொடர்ந்து அது ஈழமக்களின் பிரச்சனை என்று மற்றவர்கள் ஒதுங்கிக்கொண்டது போன்றே தோன்றுகிறது . தமிழகத்தைப்பொறுத்தவரை எல்லா நிலைப்பாடும் ,நிலையும் அப்படியே .இதில் கட்சி வேறுபாடின்றி எல்லா கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் தான் இயங்குகின்றன.ஓட்டுக்கு .அதனை மீறி ஆய்வுகள் செய்ய யாரும் விரும்புவது இல்லை.ஏனெனில் இங்குள்ள தமிழனுக்கு எங்கிருத்தாலும் பெயரும் புகழும் கட்டாயம் வேண்டும் .எனவே சுயநலக்காரர்களாக தங்களை வடிவமைத்துக்கொண்டுவிட்டனர். சிந்திக்கத்தெரியாத பகுத்தறிவுவாதிகளாக மானுடம் பேசும் முகமூடிகள் .

அதோடு மட்டுமல்லாமல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநாடு நடத்தப்படாமலிருந்ததும் முக்கியகாரணங்களில் ஒன்று எனக்கூறலாம் .
தொடர்ந்து மாநாடுகள் அமைந்திருந்தால் இவ்வளவு பின்னடைவு ஏற்பட்டிருக்காது .
இது 23 வது மாநாடாக இருந்திருக்கும் .
இதற்கும் முழுக்க முழுக்க அரசியல் தான் காரணம் .

இந்த விசயத்தில் சிங்களர்கள் விழித்துக்கொண்டனர் .





.....

.

செம்மொழி மாநாடும் அழியும் தமிழனின் அடையாளமும் . 3 ......
(இக்கட்டுரை சுருக்கிய வடிவில் தரப்பட்டுள்ளது )
தொடரும் ....

.

.
.


.

. Download As PDF

வெள்ளி, 18 ஜூன், 2010

செம்மொழி மாநாடும் அழியும் தமிழனின் அடையாளமும் .2












சிங்கள ஆதிக்கம் அதிகரிப்பதையும்,அதனால் தமிழர்கள் இன்னலுறுவதையும் பொறுக்காத தனிநாயகம் அடிகள், சிங்கள அரசுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டார். அதனால் சிங்கள அரசு காவல், கண்காணிப்பு என்று பயமுறுத்த எத்தனித்தது. உடனே, தமிழகம் வந்துவிட்டார் .அவரது வாழ்க்கை தமிழ், தமிழ் மொழி என்பதாகவே இருந்தது. தனிநாயகம் அடிகளின் மனதில் மலர்ந்த விஷயம் தான் உலகத் தமிழ் மாநாடு .மொழிக்காக உலகளாவிய மாநாடு நடத்திய முயற்சிக்குச் சொந்தக்காரர் .அவரை இந்த வேளையில் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை.

1981 ல் 5 ம்உலகத் தமிழ் மாநாட்டிற்கு எங்கப்பா என்னை மதுரைக்கு அழைத்துச்சென்றார் . நான் பார்த்த முதல் தமிழ் மாநாடு .மதுரையையும் அப்பத்தான் பாக்கரேன் .புத்தகத்தில் பாடித்த சங்கம் வளர்த்த அந்த மண்ணை. அப்பொழுது என்னுள் விழுந்தது தான் ''குமரிக்கண்டம் '' ''லெமூரியாக் கண்டம் ''. இன்று வரை அதை நோக்கிய சிந்தனைகள் சென்றுகொண்டேயுள்ளன என்னுள்.இந்த கருதுகொள் தமிழனை ஆதி முதல் மனிதன் என்ற கோட்பாட்டிற்கு இட்டுச்சென்றது .இது நிரூபிக்கப்பட்டால் தமிழன் தான் உலகத்தின் ஆதி என்று முடிவாகிவிடும் .ஆனால் ,இதனை யாரும் கருத்துரீதியாகக்கூட ஏற்றுக்கொள்ளவில்லை .ஏனெனில் தமிழன் தான் ஆதி என்பதை யாராலும் ஜிரணிக்கமுடியவில்லை .இருந்தாலும் அதற்கான முயற்சிகளில் தனி நபர்களின் பங்களிப்பே மிகவும் அதிகமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் .அவர்களின் உழைப்பும் எண்ணி போற்றப்படத்தக்க வகையில் இருந்தது .அதிக பொருட்செலவு ஆகும் இம்முயற்ச்சிக்கு அறுதியிட்டுச்சொல்லக்கூடிய ஆதாரங்கள் இல்லை என்று கிடப்பில் உள்ளது .வருத்தத்திற்குரிய செய்தி தமிழுக்கும் ,தமிழனுக்கும்,தமிழ் இனத்திற்கும்.

நமது தொன்மத்தில் உள்ளது நமது உயர்வு .
அதுவே நம்மை நன்றாக அடையாளப்படுத்தும் .
அவைகள் அழிந்தால் நமது இனமும் ,மொழியும் அழியும் .
அவைகள் கண்டறியப்பட்டால் அறிவியல் நம்மை மீட்கும் .
அதனால் அவைகளை நாம் கண்டறியவேண்டும் .
கண்டறிந்து போற்றவேண்டும் .
பாதுகாக்கவேண்டும் .
இது நமது இனம் மற்றும் மொழியின் உயர்விற்கும் ,நமது சந்ததியினரின் வாழ்விற்கும் செய்துவைக்கவேண்டிய கட்டாயமான முதன்மையான செயலாகும்.



தொடரும் .....




.



.


. Download As PDF

இது தேவதைக்கு மட்டும்























இது தேவதைக்கு மட்டும்
விற்பனைக்கும் கற்பனைக்கும் அல்ல
என் தோட்டத்து பூக்கள்




.



.


.
Download As PDF

வியாழன், 17 ஜூன், 2010

செம்மொழி மாநாடும் அழியும் தமிழனின் அடையாளமும்





















நேற்று , நீதிமன்றத்தில் ,ஆங்கிலத்தில் 'செம்மொழி மாநாட்டு நாட்களில் தன்னால் ஆஜராக முடியாது அதனால் தான் ஆஜராகும் வழக்கை அதற்கு தோதாக வேறு ஒரு நாட்களில் மாற்றி அளித்திட மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன் ' னு நீதிபதிகளிடம் அந்த நீதிமன்றத்திக்கு அரசால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் கேட்க அதற்கு நீதிபதி அவர்கள் ஓ,ஆகட்டும்,சென்றுவாருங்கள் என்று தமிழில் இனிமையாகக் கூறினார் .
அரசின் கொள்கை ,கோட்பாடுகளை இவரின் முலம்தான் அரசு நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி நிலைநாட்டும் .அதற்காகவே அரசுகள் மாறும்பொழுதெல்லாம் ஆளும் கட்சியானவர்கள் தங்களின் கட்சியைச்சேர்ந்த வழக்கறிஞர்களை தங்களின் கு்ரலை நீதிமன்றத்தில் ஒலிக்க நியமிக்கும் முறை இங்கிளிஷ்ஸ்காரங்க காலத்திலிருந்து .
மாநாட்டு வேலைகள் .பிசி .உங்க கேஸ் அப்ப இருக்கா ? வாய்தா வாங்கிக்கங்க .நான் அப்ப இல்ல .நீங்க வரீங்களா ? னு என்னிடம் வினாவினார் .
நான் அவரிடம் கேட்டேன் ,எதுக்காக இந்த மாநாடு?னு .
உடனே அவர் என்னிடம் என்னங்க இது கொடுமையா இருக்கு .நீங்க எதுவும் படிக்கிறதில்ல போலருக்கு ,இது கூட தெரியாம .என்ன போங்க .நீங்கள்ளாம் .அதுவும் வக்கிலா இருந்திட்டுனு இங்கிளீசும் தமிழும் கலந்து பேசினார் .
நான் சிரித்துக்கொண்டே மீண்டும் கேட்டேன் .எதுக்காக இந்த மாநாடு?னு .
என்ன கிண்டல் பண்ரீங்களா பிரதர் னார் .
இல்லைங்க உண்மையாலுமே கேட்கிறேன்னு சொன்னேன் .
அதுக்கு அவர் தமிழ் வளர்ச்சிக்கு னார் .
நான் புரியலே விளக்கமா சொல்லுங்க னு சொன்னேன் .
என்னை ஒரு மாதிரி பாத்திட்டு திரும்பிக்கொண்டார் .
உண்மையில் இவருக்கு தெரியுமா தெரியாதா னு எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது .தமிழ் வளர்ச்சிக்கு மாநாடா தோவை ? .
சரி மத்தவங்க என்ன நினைக்கராங்கனு பாக்கலாம்னு எனது சக வழக்கறிஞர்களிடம் இதே கேள்வியைக்கேட்டேன் .ஒருவர் சொன்னார் நடத்தரவங்களுக்கே தெரியாத ஒன்ன ஏங்கிட்ட கேட்ட எனக்கெப்படி தெரியும்னார் .பொதுவாக சென்ன பதில்கள் ஒரு சாரார் தமிழ வளத்துறோம்னும்,மற்றவர்கள் தமிழ வளத்துறோம்னு சொல்லிக்கிட்டு தன்னையும் தன் குடும்பத்தையும் வளப்படுத்தறத்துக்கும்னும் .

............

செம்மொழி மாநாடும் அழியும் தமிழனின் அடையாளமும் .1.

தொடரும் ..............


.



.

. Download As PDF

திங்கள், 14 ஜூன், 2010

பிரபல காந்தியவாதி சுட்டு்ப்படுகொலை சத்தீஷ்கரில் இன்று.















பிரபல காந்தியவாதி சுட்டு்ப்படுகொலை தண்டகாரண்யாவில் இன்று.

சத்தீஷ்கர் தண்டகாரண்யாவில்
பிரபல காந்தியவாதி சுட்டுக்கொல்லப்பட்டார் .1000 குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில்
அவரது டலம் கண்டுபிடிக்கப்பட்டது .

சத்தீஷ்கர் ,ஜீன் 14- பிரபல காந்தியவாதியும்,காந்தியுடன் கடைசி வரை இருந்தவரும் ,காந்தியடிகளாலே துப்பாக்கி சித்தன் என அன்பாக அழைக்கப்பட்டவரும் ,காந்தியடிகளின் கடைசி ஆன்மா என உணரப்பட்டவருமான சித்தரஞ்சன் துரை என்பவரின் உடல் சுமார் 1000 குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு தண்டகாரண்யா காட்டுப்பகுதியில் இருந்து மிகவும் சிதறிய நிலையில் ....

எனக்கு கையும் ஓடல ,காலும் ஓடல ...
பிரபல காந்தியவாதி கொல்லப்பட்டாரா ?! ...
கொல்வதற்கு ...எப்படி மனது வந்தது ?!... முடியுமா ?...என்ன மனிதம் ? ...
இது உண்மையா இருக்குமா ?...
இன்றைய ஊடகங்களில் உண்மை செய்திகள் இல்லை என போன மாசம் ராமசுப்பு சந்திச்சப்ப சொன்னாறாம் காந்தித்தாத்தா .
இந்தச்செய்தியும் அதுபோலவே இருக்கவேண்டும் என மனம் துடித்தது .

.
ஊடகங்கள் மிது இப்ப எனக்கு நம்பிக்கையில்ல. உண்மையான ஜனநாயகக்கடமைகளை அவைகள் ஆற்றுவதில்லை .ஜனநாயகத்தின் ஆற்றல் மிகுந்த தூண்களாக அவைகள் இப்பொழுது இல்லை .அவைகள் மக்களின் உண்மை நிலையை பிரதிபலிப்பதில்லை .அவைகள் மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் பாலமாக செயல்படுவதில்லை .அரசு விளம்பரங்களுக்காக அரசிதழ்களாகவும் ,பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் விளம்பரப்பலகைகளாகவும் மாறிவிட்டன .மக்களுக்கு
ஜனநாயகக்கடமையாற்றுகின்றோம் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு செய்தி தருகின்றோம் என்ற போர்வையில் பணம் சுரண்டுகின்ற சுரண்டல்வாதிகளாகிவிட்டன .இவைகள் ஊடகங்களே இல்லை.அந்த பதத்தையே கொச்சைப்படுத்துகின்றனர். இன்றைய ஊடகங்கள் உண்மையை வெளியிடுவதில்லை ,அவைகளில் வருபவை உண்மையில் செய்திகளே இல்லை , உண்மையான செய்திகளும் இல்லை என மிகவும் வருத்தப்பட்டுச்சொன்னாராம் .
நானாயிருந்தா எல்லா ஊடகங்களும் அப்படியானு கேட்டிருப்பேன் .
ஆனா,ராமசுப்பு எப்பவும் காந்தித்தாத்தாவின் விசிறி .
அவர் சொல்றதெல்லாத்துக்கும் தலைய ஆட்டுவான் .நேரு போல .

காந்தித்தாத்தா ,
இவரை நாங்க இப்படித்தான் கூப்புடுவோம்.
ஏன்னா?
இந்தத்தாத்தா எப்பவும் மகாத்மா காந்திஜியப்பத்தியே பேசிக்கிட்டுருப்பார் அதனால.
எங்க ஊர்ல கடைசி வீடு ,வயக்காட்ட ஒட்டி இவருது தான்.
காந்தி குடில்னூ பேர்.
முன்னாடி ஒரு சின்ன தோட்டம் பிறகு தியானக்குடில் ,அதுக்குப்பக்கத்தில ஒரு நூலகம் .முழுக்க மகாத்மா ஜி புத்தகமா .அப்புறம் ஆட்டுப்பட்டி , பிறகு வீடு .
மொதமொத தாரணி அக்கா கூட்டிட்டு போச்சு .
நான் 7வது தாரணியக்கா 8 வது .அன்னைக்கு காந்தி ஜெயந்தி ,காந்தித்தாத்தா வருச வருசம் புத்தகம் ,மிட்டாய் எல்லாம் தருவாராம்
வருசாவருசம்.எங்கப்பவுக்கு காந்தித்தாத்தாவ புடிக்காது .அதனால விடமாட்டார் .தாரணியக்கா வானு கூட்டீட்டு போனதால போனேன் .நாங்க போரதுக்கு முன்னாடியே ஏங் கிளாஸ் பாபு ,ரவி ,8ம் கிளாஸ் அண்ணா அக்கா... நிறைய பேர் இருந்தாங்க .

காந்தி தாத்தா சட்டை போடலைல ...
அப்ப நீங்கள்ளாம் சட்டை போட்டுக்கிட்டு அவரேட இருந்தீங்களே உங்களுக்கு அது என்னவோ போல தெரியலையா ?
அமைதியாக என்னைப்பார்த்து புன்னகைத்தார் காந்தி தாத்தா .
இல்லப்பா அப்பெல்லாம் அவரின் கட்டளைகளை நிறைவேற்றத்துக்கே எங்களுக்கு நேரம் இருக்காது .இந்த யோசனையே வந்ததில்லை என்றார் .
எனக்கு என்னமோ மழுப்புறார்னு தோனுச்சு , எங்கப்பாகிட்ட இதச்சொன்னேன்.ஏப்பா +2 படிக்கற பையன் அவருகிட்டப்போய் ஏப்ப பேசிக்கிட்டிருக்க சுதந்திரமா வாங்கப்போறோம் .படிக்கப்பா போப்பா னார் . எனக்கு விடைகிடைக்காமல் மண்டை குடைந்தது .

சீனீயர்ஸ் இன்னைக்கு வெல்கம் பார்ட்டீனாங்க . அப்பத்தான் ராமசுப்புவ கல்லூரியில் பாத்தேன் .
ஊஞ்சப்பாளையமா நீ காந்தித்தாத்தாவை எனக்கு ரொம்ப புடிக்கும் .வாரம் ஒரு தடவை வருவேன் .நான் மாணிக்கம்பாளையத்துல இருக்கேன் . இந்த வாரம் வருவேன் .அங்க பாக்கலாம் னு ஏதே பல நாள் பழகியது போல பேசிட்டு போனது எனக்கு என்னமோ போலிருந்துச்சு .

துப்பாக்கி வேட்டையாட கண்டுபிடிக்கப்பட்டது ,அப்பொழுது மனிதன் விலங்கினத்திற்கு மிக அருகில் இருந்தான் .ஆனால் இப்பொழுது எவ்வளவே தூரம் பயணித்தாகி விட்டது இனியும் ஆதி மனிதனாகவே இருக்கவேண்டுமா ? வேறுபட வேண்டாமா ? அப்படியே இருப்பது காட்டுமிராண்டித்தனம் எனவே தான் நான் எதற்காகவும் எப்பவும் எங்கும் துப்பாக்கிய யாரும் எதற்கும் யாருக்கும் எதிராகவும் பயன்படுத்தக்கூடாதுனும் .அது மனித குலத்துக்கே விரோதமானது என்றும்.ஆயுதம் தாங்கா சமுதாயமே சிறந்த சமுதாயம்.ஆயுதங்கள் பயன்படுத்தா அரசே நல்லரசு என்ற கொள்கையுடையவானாக இருந்தேன் .அப்படிப்பட்ட அரசு அமைவதை லட்சியமாகக் கொண்டு கத்தியின்றி ரத்தமின்றி யுத்தத்தை மேற்கொண்ட காந்தியின் தலைமையை மனசிகமாக ஏற்று பிரச்சாரங்கள் மேற்கொண்டு வந்தேன் .அதை அறிந்த காந்தியடிகள் ராஜன் மூலம் என்னையழைத்தார் .உங்க பெயரென்ன என்றார் அண்ணல். சித்தரஞ்சன் துரை என்றேன் .அப்படியா இன்றிலிருந்து எனக்கு நீங்கள் துப்பாக்கி சித்தன் என்றார். அன்றிலிருந்து இத்தப்பேர் .
ராம சுப்புவும் ,நானும் ஒன்றாகச்சேர்ந்து சென்ற முதல் நாள் அன்று ஏன் இந்தப்பேர் என நான் கேட்டதிற்கு காந்தித்தாத்தா இத சொன்னார் .
அதன் ஆழமான தத்துவம் இப்பொழுது போல் அப்போது புரியவில்லை எனக்கு .
அதற்குள் காலங்கள் ஓடிவிட்டது.


காந்தியடிகளின் போராட்டங்கள் எல்லாம் எளிய போராட்டங்கள் தானே ?
அதனால் எப்படி வெற்றிபெற்றிருக்கமுடியும் ?.
ம்ம்ம்...
அவைகள் எல்லாம் எளிய போராட்டங்களா என்ன ? எளிய வடிவ போராட்டங்கள் .
எனக்கும் முதலில் அப்படித்தான் தோன்றியது .
ஆனா,அனுபவத்தில் அவைகள் தான் உண்மையான போராட்டங்கள் என்பதை போகப்போக நேரில் கண்டு வியந்தேன் .அதில் தான் வெற்றியின் இரகசியமே இருந்தது. அதனால் தான் வெற்றி மேல் வெற்றி அவரால் கிட்டிட முடிந்தது .நமக்கு சுதந்திரமும் கிட்டியது இரத்தம் சிந்தாமல்.இதற்கு முன்பு மற்ற போராட்டங்கள் எல்லாம் வெரும் வெத்து வேட்டு தான் .அதனை நன்கு உணர்ந்ததால் தான் காந்தியடிகள் அகிம்சை வழியில் எளிய முறையிலான உருவில் தனது போராட்டங்களை வடிவமைத்துக்கொண்டார் .
வெற்றியையும் பெற்றுத்தந்தார்.
நான் துடிப்புள்ள போர்குணமுள்ள இளைஞனாக சட்டக்கல்லூரியில் வலம்வந்தபொழுது இப்பதில் என்னை மிகவும் பாதித்தது .என்னுள் ஏற்றப்பட்டுள்ள துடிப்புள்ள இந்த போர்க்குணம் மிருகத்தனத்திற்கு என்னை இட்டுச்செல்லும் என்பதனை உணர்த்தியது .நான் அதிலிருந்து விடுபட முயன்ற பொழுது நயவஞ்சக ஓநாய்களின் இரத்தவெறியை என் உடலில் உணர்ந்தேன்


என்ன நடந்தது ராமசுப்பு ?

ராம் ...காந்திதேச இழிநிலையை பார்...
இதனால் தான் காந்தியடிகள் 125 வருடத்திற்கும் மேல் வாழ விரும்பினார் போலும்.
சுடப்படாமல் இருந்திருந்தால் வாழ்ந்திருப்பார்.
அப்படிப்பட்ட தூய உடலும் ,உள்ளமும் அவரிது .
அப்படி அவர் வாழ்ந்திருந்தால் இன்னைக்கு இந்தியாவில் இத்தனை கட்சிகள் தோன்றியிருக்காது .
கட்சிகளே இருந்திருக்காது .
ஆமா ,இருந்திருக்காது .சாத்தியக்கூறுகளே இல்லை. இன்று இந்தியாவில் இத்தனை பிரச்சனைகளுக்கு காரணம் இந்த அரசியல் கட்சிகள் தான் .
மக்களை மாக்களாக்கி விட்டனர் இன்றைய கட்சித்தலைவர்கள்.
நம் மக்கள் மிகவும் நல்லவர்கள் .ஆனால் மோசமான தலைவர்களை கொண்டிருக்கின்றோம் .
நம்ம நாடு இப்ப சரியான பாதையில் போவதா எனக்குத் தெரியல .
இரத்தம் சிந்தாமல் பெற்ற சுதந்திர பூமிய இப்ப இரத்தக்காடாக்க பாக்கராங்க அரசியல்வாதிங்க.
இதுக்குத்தான் காந்தி அவ்வளவு கஷ்டப்பட்டாரா ?
இங்க எந்த கட்சியும் சரியில்ல .
அத்தனை பேருக்கும் கட்சி மோகம் .கட்சிய காப்பதனுமுனு முதலாளிகளை காப்பாத்தமட்டுமே பாக்கராங்க .
நாட்டையோ,மக்களையோ யாரும் பாக்கரதில்லை.
ஏதோ வானத்திலிருந்து வந்தவர்கள் போல அவரவர்கள் நினைத்க்கொண்டு மக்களை இரத்தத்தில் மிதக்கவிடுகின்றனர் .
செல்லும் இடங்களில் எல்லாம் பழங்குடி மக்களை அழித்தொழி்க்கும் ஐரோப்பிய இனவாதம் இன்று இங்கு்ம் பரவி வருகிறது .
அரசு என்பது குடும்பம் என்ற அளகிலிருந்து உதயமாகிறது .எப்பொழுது குடும்பம் என்ற அமைப்பு சிதைகிறதோ அப்போதே அரசு என்ற தத்துவம் நீர்முலமாகி விடுகிறது.குடும்பம் என்ற அமைப்பு சிதைந்தால் அரசு என்பது ஒன்று பாசிச ஆளுமையாக இருக்கும் அல்லது கனவாக இருக்கும் .
இன்று குடும்பங்கள் சிதைகிறது .
அது காந்தீயம் அல்ல.
முட்டாள்களினால் காந்தீயம் இன்று வேட்டையாடப்பட்டு வருகின்றது .இப்படியே சென்றால் காந்தியின் பெயரை உபயோகிக்கக்கூட அருகதையில்லாத அயோக்கிய நாடாக அசிங்கப்பட்டுவிடுவோம் உலக அரங்கில் வரலாறு நெடுகிலும்.
இது மக்களுக்கான காந்தியின் தேசம் .
காந்தியின் மக்களின் மீது ஆயுதங்களை பயன்படுத்துவது காந்திக்குச்செய்யும் மிகப்பெரிய துரோகம் .
இதை இனியும் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றால் நான் ஒரு கோழை .காந்தியின் பெயரைச்சொல்லிக்கொண்டு வாழும் அயோக்கியன் .
மக்களுக்கு எதிரான அனைத்து ஆயுதங்களையும் தூக்கி எறிந்து அவர்களுக்கு உரியதை அவர்களுக்கு தருவதுதான் காந்திக்கு காந்தியின்தேசத்தில் அரசு அவருக்குச்செய்யும் முதல் மரியாதையாகும் .
அதுவரை தண்டகாரண்யாவில் சாகும் வரை உண்ணாவிருதம் இருக்கப்போறேனு ....
(மிக நீண்ட மவுனத்திற்குப் பின்)
DNA சோதனைக்குப் பின் தான் முடிவு தெரியமாம் ...
உடம்பு பூராம் குண்டுடா ...
கசகசனு...
தா...த்தா.......
(அழும் குரல் )
தொடர்பை துண்டிக்கிறது தானாக கைகள்
என்ன செய்வதென்று தெரியாமல் .




....................................................................
காந்தீய வேட்டை - சிறுகதை / புனைவு
....................................................................
.


.

.



.
. Download As PDF

சனி, 12 ஜூன், 2010

நேரு- ஹிட்லர் -சாப்ளின் -குழந்தைகள் வதை












நொரண்டு : வணக்கம் நண்டு .

நண்டு : வாங்க நொரண்டு .

நொரண்டு :வந்து

நண்டு : என்னப்பா

நொரண்டு : இல்ல இப்பவெல்லாம் வெளிநாட்டு உறவுகள் என்று கூறிக்கொண்டு நடக்கும் அரசியல் சந்திப்புகளில் மனிதநேயம் இல்லாதவர்கள் ,
கொலைகாரர் கூட பெரிய கனவான்களாக ......

நண்டு : ஹிட்லர் தெரியுமா. அவர் தான் உலகின் சக்கரவர்த்தி என்னும் முடிவுக்கு உலகம் வந்து கொண்டிருந்த நேரம் அது .அப்படித்தான் உலகிலுள்ள புல் பூண்டு கூட நினச்சுக்கிட்டுருந்துச்சு . நம்ம சென்னை மயிலாப்பூர்ல கூட ஜெர்மன் மொழி கத்துத்தரப்படுமுனு பள்ளியே ஆரம்பிச்சுட்டாங்க .

நொரண்டு : எதுக்கு ....?

நண்டு :ஹிட்லர் சென்னைக்கு வரும்பொழுது அவரின் மொழியில் வரவேற்கவேண்டாமா அதுக்கு .மக்களும் படிக்க ஆரம்புச்சுட்டாங்க .

நொரண்டு :அடுத்து சிங்களம் கத்துக்குவாங்களா ...?!

நண்டு :அட ,சொல்ல வர்ரத சொல்லவிடுப்பா .

நொரண்டு :சரி,சரி ...சொல்லுப்பா ..

நண்டு :அப்படியிருந்த காலகட்டத்தில் .சாப்ளின்னூ ஒரு நடிகர் இருந்தார் தெரியுமா ?

நொரண்டு :ஓ....அவரா...சிரிப்புகாட்டுவாரே .

நண்டு :அவரின் விசிறி இந்த ஹிட்லர் .

நொரண்டு :அட !!!!!

நண்டு :ஹிட்லர சந்திக்க உலகத்திலிருந்த அத்தனை தலைவர்களும் தவமா தவமிருந்தனர் .அப்படிப்பட்ட ஹிட்லர் சாப்ளினுக்கு செய்தி அனுப்புரார் .நான் உங்க விசிறி உங்கள நேருல பாக்கனுமுனு .

நொரண்டு :அப்படியா!!!!!!!!!!!!!!!!

நண்டு :சாப்ளினுக்கும் யூதர்களுக்கும் எந்தத்தொடர்பும் கிடையாது .ஆனா,ஹிட்லர் யூதர்களை இன அழிப்பு செய்து வந்த ஒரே காரணத்திற்காக சாப்ளின் அவரின் கோரிக்கைய நிராகரிக்கிறார் .அதோடு மட்டுமல்லாமல் அவ்விசயம் நடந்த சில நாட்களிலேயே 'தி கிரேட் டிக்டேட்டர் ' எனும் படம் எடுக்கிறார் .அதப்பாத்திட்டு ஹிட்லர் நான் உங்க பரம விசிறி நீங்க இப்படி எடுத்தது வேதனை தருதுனு கடிதம் போட்டாராம் .

நொரண்டு :அவ்வளவு உயர்ந்த மனிதரா சாப்ளின் ?!!!!!!!!!!!!!!!.
நம்மால்களா இருந்தா ..

நண்டு :ம்...நேருவுக்கும் கூட அவர் சிறந்த ஸ்காலர்னு தெரிஞ்சு சந்திக்க அழைப்பு விடுத்ததாகவும் இதே காரணத்திற்காகவே நேரு சந்திக்க மறுத்ததாகவும் எங்கோ படிச்ச ஞாபகம் .

நொரண்டு :அதனால் தான் அவங்கல்லாம் மனித மாணிக்கங்கள் .

நண்டு :நேருனு சொன்னதால

நொரண்டு :என்ன

நண்டு :நேத்து உலகக்கோப்பை கால்பந்து முதலாட்டம் பாக்கலாமுனு ஆவலா டீவி பாத்தப்ப

நொரண்டு : என்னாச்சு

நண்டு :அதுல வீரர்களை அறிமுகப்படுத்தும் போது அந்த சிறப்பு பெரிய மனிதர்கள் வீரர்களுக்கு முன் சிரித்த முகத்தொடு நின்று கொண்டிருந்த மழலைகளை ஏதோ செடிகளை கண்டு ஒதுக்கி விலக்குவது போல் விலகி வீரர்களுக்கு கை கொடுத்தது ஒரு மாதிரியா இருந்துச்சு . அந்த சிரித்த மழலைகளை தட்டிக்கொடுத்து கை கொடுக்கும் குறைந்த பட்சம் மனிதாபிமானம் கூட இல்லாத மாமனிதர்களாக இன்றைய மேல்தட்டு வாதிகள் .

நொரண்டு :என்னப்பா நாகரிகம் இது. இப்படி அரசு விழாக்களில் குழந்தைகளை நிற்கவைத்து வேதனைப்படுத்துவது .மனித உரிமைக்காவலர்கள் என்ன செய்யராங்கனே தெரியல ?.மனிந உரிமை ...மனித உரிமைனு .

நண்டு :இப்பவெல்லாம் உலகத்தில பிரதமர்களும் ,அதிபர்களும் முன்ன மாதிரியில்லப்பா.

நொரண்டு :என்ன செய்ய மனிதத்தை வதைக்கும் இந்த மக்களாட்சி மாமனிதர்களை .




.



.



. Download As PDF

வியாழன், 10 ஜூன், 2010

ராஜபக்ஷே மிகவும் நல்லவர்
















.


.


.


.


.


.


.


.



நொரண்டு : ராஜபக்ஷே மிகவும் நல்லவர்

நண்டு : ....? ....?.....? ....? ....

நொரண்டு : இல்லாட்டி இப்படி சிரிக்கமுடியுமா .



.


.


.

. Download As PDF

புதன், 9 ஜூன், 2010

ஈழம் முழுதும் புத்த கோரம் .




























.



.





.


மொழி .
எழுத்துக்களில் உறவாட
ஈழம் முழுதும் புத்த கோரம்



.




.



. Download As PDF

செவ்வாய், 8 ஜூன், 2010

எப்படியெல்லாம் வாழ்ரோம் பாருங்க ...













இப்ப எப்படியெல்லாம் வாழ்ரோம்னு நினைச்சா மனசு மிகவும் வருத்தமா இருக்குங்க .இன்னும் அரசுகள் வெத்து வேட்டுகளை விட்டுக்கிட்டேயும் ,நாமும் இலவசமா கிடச்சவரைக்கும் லாபமுனு தான் பாக்கரோமே தவிர நமக்கு மறுக்கப்பட்டு ,மறைக்கப்பட்டுவிட்ட விசயங்களை நினைக்கறது இல்லைங்க .தவறுகளை எழுத்தலதான் பாக்க பழகியிருக்கோமே தவிர கருத்திலும் நிகழ்வுகளிலும் பாக்கனும்கர அறிவ இழந்து விட்டோமுனே தோனுதுங்க.

வேலைக்குப்போக பஸ்டாப்பில நின்னா . கால் கடுகடுத்தப்பின்பு புட்போடு பயணம் .எவ்வளவு நேரம் இதுக்கே வாழ்க்கையில செலவாகுது நினைக்கவே அப்பாடா .இதிலயிருந்து தப்பிச்சுக்கலாங்கரவங்களுக்கோ டிராபிக் டு டிராபிக் டு டிராபிக் இதிலயிருந்து தப்பிச்சுக்க முடியல.

சரி ,அலஞ்சு திரிஞ்சு வீட்டுக்கு வந்தா கரண்டு இல்லைங்க அதுக்கு சரியா விலைய நாம சரியான நேரத்தில கொடுத்தாலும் கரண்டு இல்லை .கொடுக்காட்டி உடனே பீச பூடுங்கராங்க .அப்படிப்பட்ட நல்ல கண்ணியமான துறை ஏன் ஒழுங்க விநியோகம் மட்டும் செய்யமாட்டேங்கராங்கனூ தான் இது வரை யாரும் பதில் தெரியாம வாழ்ரோம் .

சரி தாகம் நீக்க தண்ணி குடிக்கலாம்னா அதுவும் காசு போட்டு வாங்குனாத்தாங்க உயிரா நடமாட முடியும் .இல்லைனா நாம நாமே கொஞ்சம் கொஞ்சம தகவமைக்கப்பட்டு வேறு உயிரியாக்கூட மாறும் சாத்தியக்கூறுகள் உண்டுங்க .நல்ல நீரைக்கூட கொடுக்காத நாடு என்ன ஜனநாயக நாடே தெரியலங்க .

சுத்தமான காத்தப்பத்தி அட இத கேட்கவே வேண்டாம் ...ஏன்னா இது பத்தி யாருக்கும் கவலையில்ல .ஏன்ன அந்த அளவிற்கு இங்கு யாருக்கும் அறிவில்லை .சுத்தமான காத்தா ,அத அரசு எப்படியா தரமுடியும்,முடிடாள் தனமா இருக்கு இவன் சொல்றதுனு சொல்ற அறிவுஜிவி தான் இங்கு எல்லோரும் .அப்படி இருந்ததால் தான் இன்னைக்கு நம முன்னாடி நின்று நம்மை அவமானப்படுத்திக்கொண்டிருக்கும் போபால் சம்பவங்க .இச்சம்பவத்திற்கு முக்கியனா குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தவில்லை .யார் அந்த முக்கியமான குற்றவாளினா அரசு தான் அது.அரசு தப்பிச்ச தோட இல்லாம இழப்பீடாவது உடனே கொடுத்தாங்கனா அதுவும் இல்லை .
எது எதுக்கொல்லாம் சட்டம் கொண்டுவராங்க .விரைவா கேச முடிக்கனும்னு மேடைக்கு மேடை அமைச்சருங்க பேசராங்க ,ஆனா என்ன லட்சணத்தில இருக்கறாங்கனு இப்ப பாத்தாவே தெரியுதுல.
இந்த லட்சணத்தில எங்களுக்கு என்ன கொடுத்தும் என்ன பயன் .மூளை பாதிச்சு ,உடல் உருமாறி ....
முதல்லா அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைக்க திட்டம் போடுங்கப்பா விரைவா .அப்புறம் பன்னாட்டு கம்பேனிக பக்கம் போய் காசு பாக்கலாம் .

அதுல வேடிக்க என்னானா எல்லா கட்சிகளும் இதுல ஒரே நிலைப்பாட்டுல தான் இருக்கு .மக்கள் மண்ணாங்கட்டிகள் என்று .


.


.

. Download As PDF

திங்கள், 7 ஜூன், 2010

கைவிலங்கிடும் உலகு .



















.



.



வண்ணத்துப்பூச்சிகள்
ஏன் வீழ்கின்றன
கைவிலங்கிடும் உலகு .



.






------



.




.


நான்
வண்ணத்துப்பூச்சி
விழித்த பின் உன் நண்பன்.





.




. Download As PDF

ஞாயிறு, 6 ஜூன், 2010

பீறிட கசியும் இரத்தம்

.



.




.



.



.

.

.

.
மூடப்பட்ட ஜனநாயகம் . . .
பீறிட கசியும் இரத்தம் . . .
சுதந்திரம் . . ...



.




.


-------




.




தெருவெங்கும் ...
குடிநீர் குழாய்கள் ...
பாம்பின அச்சத்து நகர் ...







.



.



---------




.



.



ஞாயிற்றுக்கிழமை ...
சிக்கனா , மட்டனா ...
வெறி ..





.





.





. Download As PDF

வெள்ளி, 4 ஜூன், 2010

மழலை மொழி .














.















இனிய இசை
குழலா ? யாழா ?
மழலை மொழி .







=====






கற்றனைத்த
அறிவு
மணற்கேணி.








'









.



. Download As PDF

வியாழன், 3 ஜூன், 2010

ABALSYZ தத்துவங்கள்












.


.
எந்த நாவலும் எட்டாத சிகரத்தை தொட்ட பிரசித்திபெற்ற"RAISING OF NEW HORISION '' என்ற நாவலை எழுதிய'' ABALSYZ " யை பேட்டிகாணவேண்டும் என்ற செய்தி கிடைத்ததும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் இருந்தது .இதுவே தலைப்புச்செய்தியாக அனைத்துத்தளங்களிலும் .அதுவும் உலகில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவரும் , இதுவரை எவருக்கும் பேட்டி தராதவரும் ,
பேட்டிகாணவே முடியாதவர் என்று கருதப்பட்டவரும் ,அதற்கு மேலாக ஆண்கள் என்றாலே பார்க்கக்கூட விரும்பாதவருமான ஒருவரை ,அதுவும் முழுக்க முழுக்க ஆண்களுக்காக போராடிவரும் "MANGO'' ராஸின் ஆதரவளாரான என்னை ...


.....


என்னை சந்திக்க வந்த காரணம் ?
ABALSYZ ....
ம்...
எத்தகைய கருத்துக்களையும் ,தரவுகளையும் எதிர்பார்க்கின்றீர்கள் ?.
அனைத்தையும் .
முதலில் ABALSYZ என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் "கன்நீடு " அதாவது கன்னியாகவே நீடித்திருத்தல் என்று எடுத்துக்கொள்ளலாம் .
VANDY என்பவர் தரும்விளக்கம் என்னவெனில்
ABALSYZ ல்
AB என்பது எப்படி ஆங்கில மொழியில்
AB முதல் அதுபோல்
நாங்கள் தான் உலகின் முதலானவர்கள் -ஆரம்பம் என பொருள் ,
ALஎன்பது -எல்லாவற்றிற்கும் ,ALL என்பதன் சுருக்கம்,
SY என்பது முன்னால் SEXY - EX - SEXY ல் பொதுவாகவுள்ள
EX யை நீக்க கிடைப்பது ,
Z என்பது எப்படி ஆங்கில மொழியில் முடிவான எழுத்தோ
அதுபோல் நாங்கள் தான்
உலகின் முடிவானவர்கள் என பொருள்.
ஆதி அந்தமான காமம் நீங்கிய அனைத்துமானவர்கள் என்பதைக்குறிக்கும் பதம் என்பதுவே.

புரியவில்லை ?

எழுத்துக்கள் ,வார்த்தைகள் தோன்றுவதற்கும் ,
அவை தோற்றுவிக்கும் அர்த்தங்களுக்கும், அவற்றை நாம் புரிந்துகொள்வதற்கும் அதன் பயன் மற்றும் பயன்பாடு தான் முக்கியமேயொழிய அதன் வழிமுறைகள் காரணமாக அமைவது இல்லை .

நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா ?.

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று அது .
ABALSYZ கள் தோன்றக்காரணமானவர் VANDY என்பவர் ."திருமணம் என்பது காம வெறிபிடித்த ஆண்வர்க்கம் தங்களின் காமஇச்சையை தீர்த்துக்கொள்ள அவர்களுக்குள்ளே ஏற்படுத்திக்கொண்ட நயவஞ்சக ஏற்பாடு '' ,
'' பெண்கள் மட்டுமே உள்ள சமுதாயத்தை மட்டுமே நான் விரும்புகின்றேன்'' ,
''எனக்கு ஒர் கனவு உண்டு அது நான் இறப்பதற்குள்
பெண்கள் மட்டுமே உள்ள உலகத்தை நான்
பார்க்கவேண்டும் '',
''பெண்கள், பெண்கள் பெண்கள் மட்டுமே ''
என்று உணர்ச்சிகரமாகப்பேசி பெண்ணினத்தை தன்பால்கவர்ந்தவர் . VANDY யின் ''THE DEGREE'' பத்திரிக்கை ஆண்களின் பாலியல் வக்கிரங்களால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான பெண்களுக்கு வடிகாலானது .VANDY யால் V1 என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது .உலக அளவில் அதிக உறுப்பினர்களைக்கொண்ட அமைப்பாக அது இருந்தது .அந்த அமைப்பினர் ஆண்களை முற்றிலுமாக வெறுத்தனர் . அதன் நீட்சியாக தங்களிடம் உள்ள இயற்கை தன்மையை கூட முற்றிலும் ஒடுக்கும் அளவிற்கு சென்றுவிட்டனர் .முடிவாக மரபணுத்தொழில்நுற்பத்தைகப்பயன்படுத்த ஆரம்பித்தனர் . தமது உடம்பிலுள்ள ஜீன்களில் படிந்துள்ள ஆண்மை சார்ந்த அனைத்து அம்சங்களையும் ஜீன்ரைட்டரின் மூலம் அழித்து முழுக்க முழுக்க இயற்கைக்கு நியதிக்கு வேறான உயிரினத்தை படைத்தனர். அதற்குப்பின்னிட்டுத்தான் நாங்கள் "MANGO'' அமைப்பை ஏற்படுத்தினோம் .அப்படி ஜீன்ரைட்டரின் மூலம் உருவானவர்தான் நீ பேட்டிகாணப்போகும் ''ஜீடோ ''என்றழைக்கப்படும் மனித கூறுகளில் ஜீன்களால் உருவாக்கப்பட்ட ஜீன் உரு .அவைகளுக்கு இயற்கை தன்மை கிடையாது .சமுதாயம் ,சமயம் ,வாழ்க்கை நியதி என எதுவும் கிடையாது .ஆறாம் அறிவே இல்லே ,அற்றது. ABALSYZ என்பது ''ஜீடோ '' ஜீன்களின் இரகசிய குறியிடாக விஞ்ஞானிகள் வைத்துள்ளது என்ற கருதுகோள் ஒன்றும் இருக்கிறது . அவ்வளவே .

ABALSYZ யை பேட்டிகான ஏதுவாக அவர்களைப்பற்றிய சரியான புரிதலுக்காக தங்களின்
உதவியை நாடினேன் .எனக்காக இவ்வளவு நேரம் ஓதுக்கியது மகிழ்ச்சியளிக்கிறது ராஸ் அவர்களே .தங்களுக்கு மிக்க நன்றி .

.

.......


பேட்டியை ஆரம்பிக்கலாமா?
ம்...
ABALSYZ உங்களின் பெயரைப்பற்றி ....?
ABALSYZ களில் முதலாவதாக நான் உதித்தேன்
அதனால் பெயராகியது .

தத்துவங்கள் பற்றி தங்களின் கருத்து ?

தத்துவங்கள் அனைத்தும் மதம் சார்ந்ததாகவும் ,மதங்கள் அனைத்தும் ஆணாதிக்கத்தை போற்றி
பாதுகாப்பதாகவும் இருப்பதால் நான் மதம் சார்ந்த தத்துவங்களை விலக்குகின்றேன் .

பகுத்தறிவு பற்றி ...

இது அனைத்தையும் கடந்த ஒன்று .
இதை அடைந்துவிட்டதா யாரும் கூறமுடியாது .
ஏனெனில் ,இது ஒவ்வொறு நிலையிலும் அதனை புதுப்பித்துக்கொண்டே செல்லும் . இது
உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானது .
எப்பொழும் இப்பதம் இறந்த காலத்தைத்தான் குறிப்பதாக உணர்கின்றேன் .

இறந்த காலம் என்றால் ?

நான் பகுத்தறிவாதி என்றால் ,
இந்தக்கணத்திற்கு முன்பு என்று மட்டுமே
எடுத்துக்கொள்ள வேண்டும் ,அதுபோல .

தாங்கள் எதிரியாக நினைப்பது யாரை ?

யாரையும் அன்று .
நாங்கள் ஒடுக்கப்பட்டு இருந்தோம் . எங்களுக்கு போடப்பட்ட விலங்குகளை நாங்களே
உடைத்துக்கொண்டு வெளி வந்துள்ளோம் .
அந்தப்பயணத்தில் சந்தித்த எதிர்ப்புகளை நாங்கள் கண்டு அஞ்சியது கிடையாது .எங்களின் பயணத்தில் குறுக்கிட்டவர்களை எதிரியாக நினைத்தது கிடையாது .
எங்களின் பயணத்தில் குறுக்கிட்டவர்களை புறம் தள்ளி எமது லட்சியத்தை முன்வைத்து சென்று
கொண்டிருக்கின்றேம் .

உங்களின் லட்சியம் என்ன ?

முதலில் எமது மூதாதையர்களின் நிலையைக்கூறுகின்றேன் .
அவர்கள்
''ஆண்கள் எல்லாம் கணவர்கள் ,
பெண்கள் எல்லாம் மனைவிகள் ''
என்ற கேவலமான கட்டமைப்பினால் கடுமையாக ஒடுக்கப்பட்டனர் .
ஆணாதிக்க சக்திகளால்
உடலாலும் ,மனதாலும்
சுரண்டப்பட்டார்கள் .
வீடு என்னும் சிறையில் கைதிகளாக இருந்தனர் .

வீடு சிறைச்சாலையா?

ஆம் , அவர்கள் காலத்தில் .
மேலும் ,
அவர்களின் மனித சக்திகள் மண்ணேடு மண்ணானது .
அவர்களின் அழுத்தப்பட்ட ஆத்திரம் , துக்கம் ,கோபம்
அடுத்த தலைமுறை ஜீன்களை பாதித்தது . தட்டுத்தடுமாறி முன்னேறியவர்கள் வேலைக்குச்சென்ற
நிலையில் அங்கும் ஆண்களின் காம வெறியாட்டத்தால் தவித்தனர் .
கடும் போராட்டத்திற்கு
மத்தியிலும் ,
அடிவாங்கி ,அடிவாங்கி
கோபம் கொண்டெழுந்த கூட்டம்
ஆணின் காமத்தினின்று தப்பிக்க எண்ணியது . நிலைமை மோசமாகிப்போன காலகட்டத்தில்
உதிர்த்தவர்தான்
எமது விடிவெள்ளி VANDY
அவர் ஆண்களின் மரபோ ,அம்சங்களே சிறிதும் கலக்காத முழுக்க முழுக்க
VAND
என்ற ஜுன்களை உருவாக்கினார் .
அதன் தொடர்ச்சியான நீச்சியில் உருவானவர்கள் தான் V1 மறபினர் . அவர்கள் ''மேனேஸ் '' கட்டளையில்லாமல் பிறந்ததால் கற்பப்பை இல்லாத சுகத்தை அனுபவித்தனர் .

பிறகு எப்படி உங்களின் V1 மறபினரின் பிறப்புக்கள் !!!?.

நாங்கள் ஆய்வகத்தில் பிறக்கின்றேம் . ஆணின் அகந்தைகள் அகற்றப்பட்டு .

அப்படியெனில் ஆணினத்திற்கு எதிரிகளா?

அது தான் முன்னமே கூறிவிட்டேனே .

இயற்கை விதிகளை மீறுகின்றீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா ?

அது நீங்கள் கற்பித்துக்கொண்ட இயற்கை விதி .
அது உங்களுடையது .
அதைப்பாதுகாப்பது உங்களின் கடைமையாக நினைத்து அழிந்து போய்க்கொண்டுள்ளீர் .

இல்லை ,தவறான புரிதல் உங்களிடம் தென்படுகிறது .
மரம்,செடி ,விலங்கினங்கள் ,பறவைகள் முதலியவற்றை பாருங்கள்
இயற்கை எதைக்கூறுகிறது என?

இனவிருத்தியை கூறுகின்றீர்களா .
ஏன் ,நாங்கள் பிறக்கவில்லையா .
எக்கலப்பும் இல்லாமல் நாங்கள் மட்டும் நாங்களாக தனித்தன்மையுடன் .

நீங்கள் இப்படி செய்தால் ஆணினம் அழிந்து விடாதா ?

''அதிகாரத்துடன் ,
சுரண்டிக்கொண்டும் ,
ஒடுக்கிக்கொண்டும் தான் இருப்போம்
என ஒரு இனம்
செயல்பட்டால்
அதன்
அழிவினை
அது விரைவில்
அடைந்துதான் தீரும் ''.
அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது .


ஆண்களே இல்லாத சமுதாயம் தான் உங்களின் செயல்பாடுகள் என்கின்றீர்களா ?


எமது சமுதாயத்தின் மலர்ச்சி தான் எமது லட்சியமே தவிர்த்து வேறு ஒன்றும் கிடையாது . மனித இனம் மட்டுமல்ல மற்ற அனைத்து உயிரினங்களிலும் எம்மைப்போன்ற ஆண் தன்மையற்ற அமைப்பினை ஏற்படுத்தி
நாங்கள் மட்டுமே உள்ள ABZ உலகை அமைப்பதுதான் எமது லட்சியம் .
எங்களின் VANDY ன் கனவும் அதுவே .
அதுவரை எமது பயணம் தொடரும் .

...

.

.

.


.

Download As PDF

புதன், 2 ஜூன், 2010

குடிகாரர்களே உஷார் , மரணம் மாத்திரைகளிலும் .

















மதுவைத்தொடாதவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு மனிதன் மது மீது நாட்டம்கொண்டுவிட்டான்.
அது சரியா ? தவறா ?
என்பது அவரவர் நிலைப்பாட்டைப் பொறுத்தது.

ஓவராக மப்பு ஏத்தியவர்களுக்கு ..

தலைவலி அல்லது பிற உடல் உபாதைகள் போதையின் போது ஏற்பட்டால் தாங்களாகவே மருத்தவரின் ஆலோசனை இன்றி ஏதோ ஒரு மாத்திரைகளை கடைகளில் வாங்கி சாப்பிடாதீர்கள்.சில சாதாரண வலி நிவாரணிகள் கூட மது அருந்தியவர்கள் எடுத்துக்கொள்ளும் போது அது உடனடி மரணத்தை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் 100% இருப்பதாக மருத்துவநூற்கள் கூறுகின்றன. சயனைடைவிட மிக விரைவாகக் கொன்றுவிடும் அத்தகைய சில வலி நிவாரணிகள் சாதாரண நேரங்களில் மிகச்சிறந்த வலி நிவாரணிகளாக செயல்படுவதுடன் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை , ஏற்படுத்தவும் ஏற்படுத்தாது .

ஆதலால், மது அருந்தியவர்கள் போதையில் இருக்கும்போது தலைவலி மற்றும் பிற உடல் உபாதைகள் ஏற்பட்டால் அருகிலுள்ள மருந்துக்கடைகளிலோ அல்லது பலசரக்கு கடைகளிலோ மாத்திரைகளை தாங்களாகவே மருத்தவரின் ஆலோசனை இன்றி வாங்கி சாப்பிடாதீர்கள் என எச்சரிக்கின்றேன் .

குடிகாரர்களே உஷார் ,
மரணம் மாத்திரைகளிலும் .

(பொது நலன் கருதி)




.

.




. Download As PDF

செவ்வாய், 1 ஜூன், 2010

மக்கள்தொகை கணக்கெடுப்பும், கல்வி உரிமையும் .




















நொரண்டு : வணக்கம் ,நண்டு.
நண்டு : வாங்க நொரண்டு.
நொரண்டு : இன்னைக்கு தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்க எங்க வீட்டுக்கு வந்தாங்க .உங்க வீட்டுக்கு .
நண்டு :ஒவ்வெரு வீட்டுக்குந்தான் வருவாங்க .ஒன்ற மாசம் இருக்குல .
நொரண்டு : அரைமணிநேரம் ,அத்தனை கேள்விக ..
நண்டு :இது முக்கியமானது .சரியான பதில் கூறுவது மிகவும் அவசியம் .
நொரண்டு : அப்படியா ?
நண்டு :ஆமாம் ,அப்பத்தான் எத்தனை நபர்கள் நாட்டில் இருக்கோங்கரதும்,எப்படி வசிக்கறோம் என்பது பற்றியும் முழுவிவரம் அரசு தெரிச்சு அதன்படி மக்களுக்கு என்ன செய்யலாமுனு யோசிக்க ஏதுவாயிருக்கும் .
நொரண்டு : அப்படினா ...பிச்சக்காரங்க ,நாடோடியா ,பராரியா திரியரவங்க ,வீடில்லாமல் வீதியில இருக்கரவங்க ,சாமியாருங்க ,மனநலமில்லாது ,தனித்து வீதியில விடப்பட்டவர்கள் ...இவங்களை எப்படி .?
நண்டு :விடுப்பா அவங்களை .
நொரண்டு : சரி .
நண்டு :இவை இரகசியமா வைக்கப்படும் .தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற கேட்க முடியாது .
நொரண்டு : அப்ப நான் என்ன விவரங்களை அளித்தேன் என எனக்கே சொல்லமாட்டாங்களா?.நானே தெரிஞ்சுக்க முடியாதா ? .ம் ....பாரத்தில தவறான தகவல்களை அளிப்பது குடியுரிமை விதிகள் 2003 ன் படி தண்டனைக்குரியது என பார்த்தேன் .
நண்டு :தவறான தகவல்களை ஏன் தர்ர .அச்சமின்றி அனைத்து சரியான தகவல்களையும் தரலாங்கறதுக்காகத்தான் இந்த ஏற்பாடு .
நொரண்டு : ஓ ..சரிதான் .நல்ல ஏற்பாடு.
நண்டு :ம்...
நொரண்டு : கணக்கெடுத்தவங்க நான் என்ன மொழி பேசறேனு கேட்கலேயே .
நண்டு :இந்த இந்த மொழி பேசும் மக்கள் இத்தனை பேர்னு தெரிஞ்சு என்ன செய்யப்போற ?.
நொரண்டு : அது முக்கியமில்லையா ?
நண்டு :இருக்கற நிலையில இதுக்கே கண்ணாமுழி பிதுங்கிபோயிரும் நீ என்னடானா?அது இல்ல ,இது இல்லனு கேட்டுட்டு .இதே எங்க வீட்டுக்கு கணக்கு எடுக்கும் அதிகாரி வந்துட்டாங்க ,நல்ல குடிமகனா ,அவங்களுக்கு வணக்கம் சொல்லி வரவேற்று அவங்க கேக்கிற கேள்விகளுக்கு மிகச்சரியான பதிலச்சொல்லி நான் என் ஜனநாயகக்கடமைய செய்யப்போறேன் ,வரட்டா ....


========

நொரண்டு : ஏய் உம்பிள்ளை ஸ்கூலுக்கு போய்டுச்சா ?
நண்டு :ம்...இன்னைக்குத்தான் ...பொதி சுமக்காம ...
நொரண்டு : ம்..இன்னையிலிருந்து சமச்சீர் கல்வி ஆரம்பம் .
நண்டு :ஆமாம்பா .நொம்ப நல்ல விசயம்பா .
நொரண்டு : அதேடு கல்விஉரிமைய இந்த ஆண்டிருந்து பெற்றுள்ளனர் .
நண்டு :மிக மிக நல்லவிசயம் இது .
நொரண்டு : அது என்னான்னா ,எனக்கு நிறைய குழப்பம் இருக்கு .
நண்டு :எத்ல ?
நொரண்டு : கல்வி உரிமைனா ஏன் ஸ்கூல பீஸ் வாங்கராங்க? .
நண்டு :உனக்கு தெரியலைனா விடு .இங்கிருக்கரவங்க எல்லாத்தையும் என்ன முட்டாளுனு நெனச்சுக்கிட்டயா .
நொரண்டு : ஏப்பா கோவிச்சுக்கற அரசு மாதிரி .
நண்டு :அடுத்து என்ன சந்தேகம் .
நொரண்டு : சரி ,பெற்றேர்களிடம் விழிப்புணர்வு இல்லாமல் எப்படி இது சாத்தியம் ? பெற்றேர்களின் பிடியின்று குழந்தைகளை எப்படி மீட்டு கல்வியளிக்க என்னென்ன சிறப்பு நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது ? பெற்றேர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கின்றனர் ?மேலும் ..
நண்டு :இதையெல்லாம் அரசு பாத்துக்கும் .
நொரண்டு : நல்லது .
நண்டு :சரி.
நொரண்டு : வந்துப்பா ...கல்வி உரிமைனா ஆசிரியர்களின் பணி பள்ளிக்கூடத்தில் அவர்கள் பாடம் நடத்துவதோடு இருக்கும் .
நண்டு :ஆம் .மேலும் நல்ல படித்த குடிமக்களை உருவாக்க ஆசிரியர்கள் அவர்களின் பணியில் மட்டுமே முழுமையாக இருக்கும்படி அரசு பார்த்துக்கொள்ளவேண்டும் .அது தவிர்த்து பிற பணிகளை அவர்கள் மீது சுமத்தக்கூடாது .
நொரண்டு : அதுக்கு என்ன செய்யவேண்டும் ?
நண்டு :ஆசிரியர்கள் என்றால் அவர்கள் பள்ளிக்கு செல்வார்கள் ,பாடம் நடத்துவார்கள்.அது மட்டுமே. அவ்வளவே .
நொரண்டு : ஓ...அப்படியா ..
நண்டு :ம் ..
நொரண்டு : சரி இதையல்லாம் ஏன் சொல்லற ?
நண்டு :மேலும் சிறப்பாக செயல்பட சில யோசனை தான் அவ்வளவே .


. Download As PDF