வியாழன், 17 நவம்பர், 2011

கடவுளின் சாம்ராஜ்யமும் அபாகஸும் .மலைப்பாதையை தொடுவதற்கும் குதிரை வீரர்கள் வருவதற்கும்
மிகச் சரியாக இருந்தது .இல்லாது போனால் இன்றைய இந்தியா மேலும் பல இருண்ட காலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும்.இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த நிமிடமே இந்தியா கருத்தியல் ரீதியாகவும் ,வரலாற்று ரீதியாகவும் பல உன்னத பங்களிப்புடனும்,பண்பாட்டு ரீதியில்,தனது பழக்க வழக்கங்களில் பல மாற்றங்களுடன் தனது பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டது என்பதுவே உண்மை.

வரலாற்றில் இப்படியான நிகழ்வுகள் அரிதிலும்,அரிதாகவே நிகழ்கிறது.ஆனால்,அவைகளினால் மானுட சமுதாயம் பல மாற்றங்களையும்,முன்னேற்றங்களையும் அடைகிறது.இப்படித்தான் என்றிருந்தது ,இப்படியல்ல என்பதனின்று ,ஓ...இப்படித்தானா என வியப்புடன் பயணிக்கவைக்கும் மிகப்பெரிய வரலாற்றை மாற்றியமைத்த நிகழ்வுகளுக்கு ஆரம்பம் சில அசாதாரண சூழலில்  சில கணங்கள் தாமதித்திருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கும் என்ற விளிம்பு நிலையில் ஏற்படும் அற்புதமான சந்திப்புகள் ,சந்தித்த நபர்களையே,பின்னெரு நாளில் அதனை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிக உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்று உழல வைத்து விடும்.ஆனால்,எல்லா சந்திப்புக்களும் இத்தகைய சாத்தியக்கூறுகள் உண்டா என்றால்.உண்டு என்பது தான் .ஆனால்,அதன் பின்னணியில் சுயநலங்கள் இருக்கும் பட்சத்தில் அனைத்தும் சூனியமாய் போய் வாழ்வே வருமையாய் விடும் .சந்திப்புகள் தகுதியான சூழலில் ஏற்படவேண்டும்.சூழல் பொது நலத்தினை முன்னிருத்தியதாக இருக்கவேண்டும்.சூழலை உருவாக்க சந்திப்புகள் நிகழ்ந்தால்,சந்திப்பை கேலிக்குறியதாக்கும் சூழல் ஏற்படும் என்பது மற்றொரு உண்மை. இந்திய துணைக்கண்டத்தில் சூழலில் ஏற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்களில் மிகவும் முதன்மையானதாக இதனை கூறலாம்.இந்த சந்திப்பிற்குப்பிறகு தான் இந்தியா தனது வரலாற்றை பதிக்க ஆரம்பித்தது .ஆம் ,அதற்கு முன் இந்திய துணைக்கண்டம் தனது அனைத்தையும் மன்ன சக்தியில் சேகாரம் செய்து கடத்திக்கொண்டு வந்தது.அதனால் சில இழப்பீடுகள் ஏற்பட்டாலும் முதன்மை கொள்கை மாறாமல் பாதுகாக்கப்பட்டவைகள் ஏராளம்.இன்றைய சூழலில் நமக்கு இதனைப்பற்றிய கருத்து சற்று குறைபாடுடைய அறிவுடையதாக இருக்கின்ற காரணத்தினால் பல மோதல்கள் வெடித்து,அவைகள் மனிதர்களை பலவாறாக பிரித்து,உண்மையை அறியமுடியாத உயரத்திற்கு தற்சார்பு சுயநல அகங்கார மனிதனாக எதையும் பிரித்துப்பார்க்கும் பிளவுபட்டவனாக,நடமாடி வருவதோடு காட்டுமிராண்டியை விட கேவலமான நடத்தையுடையவனாகவும்,கேவலமான செயல்களில் ஈடுபடுபவனாகவும் இருந்துவருகிறான்.

எது எப்படியிருப்பினும் இந்தியவைப்பற்றிய மற்ற நாட்டவர்களின் மாற்று எண்ணத்திற்கு ஒரு பதிலாகவும் ,இந்தியா உலகம் முழுவதும் தனது வேர்களை மிக ஆழமாக வரலாற்று காலகட்டத்தில் பரப்ப வழிவகுத்து ,இன்று பல நாடுகள் தங்களின் கருத்தென்று மார்தட்டிக்கொண்டிருக்கின்ற அனைத்திற்கும் மிகவும் அச்சாரமாக இருக்க  இந்திய அனுபவமும்,வாழ்வும் காரணமாக இருந்தது இந்த சந்திப்பு என்றால் மிகையன்று.ஆனால்,இந்த சந்திப்பில்  சந்தித்த இருவரும் இதனை அறிந்துகொள்ளும் வன்மை உடையவர்கள் தான் என்றாலும்,வரலாறு அவர்களை வேறு முகமாகவும் அறிமுகம் செய்து வைத்தது.

நாம் இவர்களின் சந்திப்பை இன்று இவ்வாறு அறியவதன் மூலமே இவர்களின் சந்திப்பில் மறைக்கப்பட்ட முகம் மலரத்தொடங்கியுள்ளது . இவ்வாறு  நாம் நமது கலாச்சார,பண்பாட்டு,தொண்மை விழுமியங்களை  அறியப்படாத வரை ,நாம் உண்மையில் அனைத்தையும் நமது என்று கூறிக்கொள்ளும் அருகதையற்றவர்களாகின்றோம்.உண்மையில் இவர்களின் சந்திப்பும்,அதனால் ஏற்பட்ட இந்திய வரலாற்று மாற்றங்களும் மிகவும் ஆச்சரியப்படக்கூடியதே .

குதிரையில் வந்த இருவரில் ஒருவர் அபாகஸ் ,அவர் சந்தித்த பெருந்தகை ....        
 

தொடரும் ....


....மறுபக்கம் என்னும் எனது வரலாற்று புதினத்தின் முதல் அத்தியாயம் ......Download As PDF

37 கருத்துகள் :

கோகுல் சொன்னது…

வணக்கம் நண்பரே!
சிறிய இடைவேளைக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி.
சுவாரஸ்யமான துவக்கம்.

சந்தித்தவர் யார்?
காத்திருக்கிறேன்!

பெயரில்லா சொன்னது…

நீண்ட இடைவேளைக்கப்புறம் மறுபக்கம் தொடருடன் ...வாழ்த்துக்கள்...

மகேந்திரன் சொன்னது…

வணக்கம் நண்பரே,
நீண்ட நாட்களாக தங்களை வலைப்பக்கம் காணவில்லையே?

புதினத்தின் முதல்பாக பகிர்வுக்கு மிக்க நன்றி.

DrPKandaswamyPhD சொன்னது…

தொடருங்கள், தொடர்ந்து வருகிறேன்.

விக்கியுலகம் சொன்னது…

தொடர்கிறேன்!

சசிகுமார் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி சார்... வாழ்த்துக்கள்.

suryajeeva சொன்னது…

நானும் தொடர்கிறேன்...

Ramani சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Ramani சொன்னது…

சுவாரஸ்யமான துவக்கம்
தொடர வாழ்த்துக்கள்

Ramani சொன்னது…

த.ம 5

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பயணம் தொடரும்...

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

யாரை சந்தித்தார்...
காத்திருக்கிறேன்...

அமைதிச்சாரல் சொன்னது…

நல்லதொரு துவக்கம்.. தொடருங்க.

Jeyamaran $Nila Rasigan$ சொன்னது…

nallarukku anna.........

K.s.s.Rajh சொன்னது…

வணக்கம் நண்பரே உங்கள் தொடர் சுவாரஸ்யமாக இருக்கின்றது வாழ்த்துக்கள்....தொடருங்கள்

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

சென்னை பித்தன் சொன்னது…

வரலாற்ருப் புதினமா? நன்று!

M.R சொன்னது…

வரலாற்று புதினம் வாசித்தேன் நண்பரே ,தொடருங்கள் தொடர்கிறேன் ,நன்றி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அண்ணன் பி ஏ பி எல்லா? பி ஏ ஹிஸ்டரியா? ஹி ஹி

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

அருமைய‍ன தொடர்
தொடர்வோம் நன்றி!

புலவர் சா இராமாநுசம்

Rathnavel சொன்னது…

தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துகள்.

ceekee சொன்னது…

Looks like you have now moved into a new terrain and plunged into creating detective fiction rivaling Sir Arthur Conan Doyle and Agatha Christie !
I'm confident that whatever form, shape and colour your writing may assume, they are for the liberation of Mankind in general and Thamizhs in particular ...
My best wishes !

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அருமையான தொடர் ..

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்

கவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு

மாலதி சொன்னது…

சிறப்பான ஆக்கம் பாராட்டுகள்

Kanchana Radhakrishnan சொன்னது…

வாழ்த்துகள்....தொடருங்கள்.

மதுமதி சொன்னது…

இன்று முதல் உங்கள் தளத்தை தொடரப்போகிறேன்.

PUTHIYATHENRAL சொன்னது…

நல்லபதிவு வாழ்த்துக்கள்!

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா? மக்களின் பரபரப்பான போராட்டங்கள், மக்கள் போராட்டத்தை ஒடுக்க தேசதுரோகம், ராணுவநடவடிக்கை என்று அரசின் மிரட்டல்கள், தினமலரின் தமிழர்விரோத, மக்கள்விரோத பிரசாரங்கள் என்று நகர்கிறது கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விடயம். கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானதா? இல்லையா? பார்ப்போம் please go to visit this link. thank you.

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான பகிர்வு பாராட்டுகள் தொடர வாழ்த்துக்கள் சகோ ......

மாய உலகம் சொன்னது…

தொடருங்கள் சகோ! தொடர்கிறேன்... பெருந்தகை யார்? அறிய ஆவல்.. வாழ்த்துக்கள் சகோ!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

.மறுபக்கம் என்னும் எனது வரலாற்று புதினத்தின் முதல் அத்தியாயம் அருமையான ஆரம்பம்..

பாராட்டுக்கள்..

பண்பாட்டு விழுமியங்களை அறியத்தரும் அற்புத தொடருக்கு வாழ்த்துகள்...

PUTHIYATHENRAL சொன்னது…

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

PUTHIYATHENRAL சொன்னது…

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

RAMVI சொன்னது…

முன்னுரையே அசத்தலாக இருக்கு.தொடர்ந்து படிக்க மிக ஆவலாக இருக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் வருகைக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தொடக்கமே செம விறுவிறுப்பு. வாழ்த்துக்கள்

Lakshmi சொன்னது…

முன்னுரையே அசத்தலாக இருக்கு.தொடர்ந்து படிக்க மிக ஆவலாக இருக்கிறேன்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "