சனி, 23 ஏப்ரல், 2011

பாடப்புத்தகங்கள் பாசிசத்தை பரப்புகின்றன இலக்கியங்கள் பாதுகாக்கின்றன .


புதிதாய் ஒரு காகம் கிளம்பியிருக்கிறது. உங்களில் சிறந்தவர்களில் ஒருவரைப் போல தனக்கும் திறனுண்டு என்பதைப் போல வெற்று செய்யுளைக் கொண்டு அது பகட்டு செய்கிறது. முழுக்க எல்லாம் தெரிந்த ஆசாமியாக இது அலட்டிக் கொள்கிறது ...என கேலிக்கு ஆட்பட்ட ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த Miguel de Cervantes ,Inca Garcilaso de la Vega,Maurice Druon, Haldor K.Laxness, Vladimir Nabokov, Josep Pla and Manuel Mejia Vallejo போன்ற படைப்பாளிகளின் பிறந்த தினம், நினைவு தினமான ஏப்ரல் 23-ஆம் தேதி உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தாங்கள் இவ்வளவு தெளிவான சிந்தனைகளுடன் செரிவான கருத்துக்களை எழுதுகின்றீர்களே அதற்கான மூலம் எங்கிருந்து உங்களுக்கு கிடைக்கின்றது என தனது கடிதத்தில் காந்தியடிகள் வினாவிய பொழுது அதற்கு டால்ஸ்டாய் அவர்கள் திருக்குறள் என்னும் நூலில் இருந்து நான் பெறுகிறேன் என பதிலலித்தது கண்டு ஆச்சரியப்பட்ட காந்தியடிகள் திருக்குறளை மூலத்திலேயே படித்தால் தான் முழுச்சாரமும் உணரமுடியும் என்பதற்காக தமிழ் படித்தாராம் .அப்படிப்பட்ட திருக்குறள் இன்றைக்கு எத்தனை தமிழர்கள் வீட்டில் இருக்கின்றது ? .

உலகை புரட்டிப்போட்ட புத்தகம், மாற்றியமைத்த புத்தகம் என பலவற்றை பலர் கூறினாலும் அவைகள் அனைத்தும் மக்களின் நல்வாழ்வுக்கான மாற்றங்களைக் கொண்டு வரும் ஓர் உந்து சக்தியாக இருக்கவில்லை என்பதுவே இது வரை இருந்துவரும் ஒரு பேருண்மையாகும் .இதனை மறுப்பவர் கட்டாயம் ஒரு பாசிச பாதுகாவலனே  .

இன்று உலகம் முழுவதும் உள்ள பாடப்புத்தகங்கள் அனைத்தும் பாசிசத்தை பரப்புகின்றன .இலக்கியங்கள் அதனை பாதுகாக்கின்றன .அதனால் தான் இன்று சமூகம் இத்தனை சரிவுகளை சந்தித்துக்கொண்டுள்ளது .மனித நேயம் சிறிதும் இல்லாமல் சுயநலத்துடன்  மனிதர்கள் வாழ்வதற்கும் இதுவே காரணம் ஆகும்.

தன் நிலை பற்றி கவனம்கொள்ளாமல் அறிவியல் பார்வையில்லாமல் சுயநலத்துடன்  வாழ்ந்ததால் தான் ஜப்பான் இன்று இவ்வளவு துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளது .அறிவியலை குறுகிய கண்ணோட்டத்தில் மட்டுமே பயன்படுத்தும் எந்த நாடும் அழிவிலிருந்து தப்பமுடியாது என்பதற்கு ஜப்பானிய அழிவுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும் .

இயற்கையை கற்காத சமூகமும் ,கற்பிக்காத இலக்கியமும் இயற்கையாகவே அழிந்துவிடும் .







பார்க்க :

அணு சக்தி வேண்டவே வேண்டாம் :நோபல் அறிஞர்கள்


ஜப்பானில் தாய்ப்பாலிலும் கதிர்வீச்சு பரவியது; கர்ப்பிணி பெண்கள் பீதி








.
Download As PDF

திங்கள், 18 ஏப்ரல், 2011

புரட்சியை ஒத்திப்போடக்கூடாது


எல்லாரும் நல்லவர்களாக மாறும் வரையில் புரட்சியை ஒத்திப்போடக்கூடாது.புரட்சி வரும் வரையில் ஒழுக்கத்தையும் ஒத்திப்போடக்கூடாது .


அழுக்கை இடம் மாற்றி வைப்பது புரட்சியல்ல .அடிப்படை வேர்களையே மாற்றுவதுதான் புரட்சி .


ஒன்றுமே செய்யாமல் இருப்பதைவிட -ஏதாவது செய்வது மேல் .


கொள்கையை இழந்து அடிமையாக இருப்பதைவிட -கொள்கையை அமுலாக்குவதற்காக அடம்பிடித்து -கீழ்ப்படியாமல் இருப்பது மேல் .


கருத்து-மருந்து -இவையிரண்டும் எந்த நாட்டிற்குள் புகுவதாக இருந்தாலும் அதற்கு தடைகள் இருக்கக்கூடாது .


நீண்டகால அடிப்படையில் -வளராத அரசியல் மதமாகிவிடும் .

குறுகிய கால அடிப்படையில் -வளர்கின்ற மதம் அரசியலாகிவிடும் .


எப்பொழுதும் அதிகரித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கைத்தரம் ஒரு சிலருக்கு மட்டும் என்பது கூடாது .

தலைவன் -வழிகாட்ட வேண்டும்.வழிகாட்டப்படக் கூடாது (A Leader should Lead.He should not be Led )


தலைவன் -மக்களுக்கு வெறும் பிரதிநிதியாக மட்டும் இருக்கக்கூடாது,மக்களோடு மக்களாக ஐக்கியமாக வேண்டும் .

உலக நாடுகளின் பிரச்சனைகளை லட்சிய அடிப்படையில் அணுகவேண்டும் .ஆனால்,நமது நாட்டின் தேசிய பிரச்சனைகளை நடைமுறைக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் .






Download As PDF

வியாழன், 14 ஏப்ரல், 2011

நண்டு செஞ்ச தொண்டு

 
ஊரை யடுத்த ஓடைக் கரையில்
ஓட்டை நிறைந்த ஒருசிறு குடிசை
நாள்புறம் வயல்கள் நல்ல விளைச்சல்
நாகனும் வள்ளியும் வசிக்கும் இடமிது

சொல்லச் சொல்ல சுவையேறு தமிழில்
வள்ளியுரைக் கின்றாள் மச்சா னிடத்தில்:
மச்சான் மச்சான் கதையைக் கேட்டியா?
வாரக் குத்தகை தர்ரதாச் சொல்லி
வாம்பலில் கொஞ்சம் நட்டுவச் சோமே!

ஆமா ஆமா அதுக்கென்ன இப்போ?
நேத்தைக்குத் தண்ணி நிறைய இருந்ததே
பின்னாடி நட்டதால் பிஞ்சா யிருக்கு இன்னும் பத்துநாள் எல்லாம் பழுத்திடும்

அதுக்கில்லே மச்சான் நான்சொல்ல வந்தது
அடுத்த வயல்லே நின்னாரு
ஆத்து வாய்க்காலை அடைச்சுத் திருப்பணும்
ஐம்பது காசுக்குத் தண்ணி பாய்ச்சணும்

ஆருவந் தாலும் அடிப்பேன் உதைப்பேன்!
அப்படி இப்படீன்னு அலறிக் குதிச்சாரு
இதுக்கும் நமக்கும் எட்டா துன்னு
இருட்டும் முன்னே வீட்டுக்கு வந்திட்டேன்.

பொழுது விடிஞ்சு போய்ப் பாத்தா
பொங்கித் ததும்புது நம்ம வயலும்
வாய்க்காலும் வெட்டலே மடையும் திறக்கலே
வழியும் அளவுக்குத் தண்ணி யேது?

நண்டு செஞ்ச தொண்டு மச்சான்
நாட்டு நிலைமையை நல்லாப் பாத்தது
ஏற்றத் தாழ்வை ஒழிக்க வரப்பில் போட்டது வளையைப் புரட்சி நண்டு,
பாய்ந்தது தண்ணி பரவி எங்குமே
காய்ந்த பயிர்களும் கதிரைக் கக்கின.

ஆகா ஆகா அருமை நண்டே
உனக்கு இருக்கும் உயர்ந்த நோக்கம்
உலக மனிதர்க்கு உண்டா நண்டே?
பெருநிலக் காரன் வரப்பைக் குடைந்து சிறுநிலங் காத்துச் சிறந்த நண்டே!

என்றுநாகன் நன்றி செலுத்து கையில் எதிருள வயல்களை இருவரும் நோக்கினர்
பச்சை மயில்போல் பயிர்கள் அசைந்தன
பழுத்த கதிர்கள் படுத்துக் கிடந்தன

படுத் திருந்த பசுந்தரை அடியில்
வெடித்த கிளையிலும் விஷய மிருந்தது
உழைப்பாளர் பலனை ஒட்ட உறிஞ்சி
ஒதுக்கிப் பதுக்கும் உல்லாச மனிதரின்

கள்ளத் துணிவையும் கருங்காலிச் செயல்களையும்
கொல்லும் ஈட்டிபோல் குருத்துகள் நின்றன
இந்தக் காட்சியில் இன்பம் கண்டனர்
இயற்கை ஆட்சியை இருவரும் வியந்தனர்
மடைதாண்டி விழுந்த வாளை மீன்போல்
வள்ளி துள்ளி வரப்பில் குந்தினள்!




மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தனிப்பாடல்கள் தொகுப்பிலிருந்து .



..........

எனக்குப்பிடித்த பட்டுக்கோட்டையாரின் திரைப்பாடல்கள் சில 



                             திருடாதே… 
படம்: திருடாதே | ஆண்டு: 1961
                                                                                     என்னருமை… 
படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர் | ஆண்டு: 1960
                               தாயத்து… படம்: மகாதேவி | ஆண்டு: 1957
                                                                                              
குறுக்கு வழியில்… படம்: மகாதேவி | ஆண்டு: 1957
                                                                                 தூங்காதே.. தம்பி… படம்: நாடோடி மன்னன் | ஆண்டு: 1958
                                                                                           சின்னப் பயலே… படம்: அரசிளங்குமரி | ஆண்டு: 1961
                                                                         நன்றி : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இணை
தளம் .                                                                                                                                                                .                                                                           
Download As PDF

இனி நம் மற்ற 9 விரல்கள் ஆற்றவேண்டிய கடமைகள் என்ன ?


ஒரு விரலில் மையிட்டு நமது ஜனநாயகக்கடமையை ஆற்றி ஜனநாயகத்தை காத்த எனதருமை சொந்தங்களே ,இனி நம் மற்ற 9 விரல்களின் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டுகிறேன் .





1.இனக்காப்பு

2.மொழிக்காப்பு

3.சுயமரியாதைக்காப்பு

4.மனிதஉரிமைக்காப்பு

5.கானகக்காப்பு

6.காட்டுயிர்க்காப்பு

7.சுற்றுச்சுழல் பாதுகாப்பு

8.அறிவியலை அழிவினின்று காப்பு

9.ஊழல் ஒழிப்பு

இவைகளே இனி நம் மற்ற 9 விரல்கள் ஆற்றவேண்டிய கடமைகள் ஆகும் .


நமது கடமைகளை இனிதே ஆற்றுவோம் .
ஒன்றுபட்ட மாந்தனாய் .





.



Download As PDF

சனி, 9 ஏப்ரல், 2011

ஐயா அன்னா ஹசாரேயிடம் ஒரு பணிவான வேண்டுகோள் .



மதிப்பிற்குரிய பதிவுலக நண்பர்களே ,சட்டசபைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் .வாக்கு நம் உரிமை ,வாக்களிப்பது நம் கடமை . எனினும் நமது உரிமைகளும் கடமைகளும் அத்தோடு நின்றுவிடுவதில்லை அதையும் தாண்டி நமது உரிமையும்,கடமையும் சரியாக நிலைநிறுத்தப்படவேண்டும் .இதுவும் நமது கடமையாகும்.அதற்காக நாம் பாடுபடவேண்டும் .அதற்கு நாம் நம் உரிமைகளையும்,கடமைகளையும் ஊழலற்றமுறையில் நேர்மையாக நிறைவேற்றவேண்டும்.
நாம் மட்டும் அவ்வாறு இருத்தால் போதாது நம்மை சுற்றியுள்ளவர்களும் நம்மைப்போன்றே இருந்தால் தான் நமது உரிமையும்,கடமையும் மிகச்சரியானதாக அமைவதோடு நிலைநிறுத்தப்பட்டதாகவும் இருக்கும் .ஆதலால்,நாம் நம்மைப்போன்றே நம்மை சுற்றியுள்ளவர்களிடமும் இவ்விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டியது நமது தலையான கடைமையாக மேற்கொள்ளவேண்டிய சூழலில் இன்று நாம் உள்ளோம் .அதனால் இதற்கு ஆதரவாக நாம் இன்று ஊழலுக்கு எதிராக போராடிவரும் அன்னா ஹசாரேயின் குரலினை வேண்டுதல் சரியாக இருக்கும் என நம்புகிறேன் .ஆதலால் பதிவுலக நண்பர்களே கீழ்கண்ட எனது கோரிக்கையை ஐயா அன்னா ஹசாரேயிடம் நான் வைக்கிறேன் .தாங்களும் இதனை மேற்கொள்விர்கள் என நம்புகிறேன் .


ஐயா அன்னா ஹசாரேயிடம் முன்வைக்கும் கோரிக்கை :

Most Respected Anna Hazare Sir,
We pledge our wholehearted support and assistance to your agitation. It is a source of happiness to all of us that we achieved success in our fight for the creation of Lok Pal.
Presently, in the interests of our Nation as a whole, I have only one request to be placed before you. This is most important and essential for the welfare of our Nation.

It is election time now. Political parties are all out to spend huge sums of money
- to give it as bribe to the voters - to ensure that they win the elections and occupy the seats of power and authority. It is at this critical juncture that we need your presence most. Our request is simply this:
Please visit Thamizh Nadu now and conduct a campaign against this  vulgar and corrosive corruption of the election process - low, demeaning, disgusting and degrading practice of the political parties corrupting the voters to vote in their favour for money as quid pro quo.
It is now more than at any other time that we need you to visit Thamizh Nadu
to conduct a massive campaign against corruption .
We hope and trust that you
would accept our request and initiate the Crusade against corruption here in
Thamizh Nadu.. 



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்  மேலே ஆங்கிலத்தில்  உள்ளதை copy செய்து இங்கே சென்று தங்களைப்பற்றிய விவரங்களை  தந்து Comments, suggestions, queries, complaints : என்ற இடத்தில் தாங்கள் copy செய்ததை paste செய்து submit செய்யுங்கள் அவ்வளவே.


ஊழலுக்கு எதிராக ஒன்றுசேருவோம் .





.
Download As PDF

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

வாருங்கள் பதிவுலக நண்பர்களே காந்தியவாதி அன்னா ஹசாரேயுடன் கைகோர்ப்போம் .

காந்தியவாதி அன்னா ஹசாரே பற்றி நான் அதிகம் சொல்லத்தேவையில்லை பதிவுலக நண்பர்களே . இப்பொழுது நாம் செய்யவேண்டியதெல்லாம் Click here to sign the petition!  .   இதன் மூலம் காந்தியவாதி அன்னா ஹசாரேயுடன் கைகோர்ப்போம் . வாருங்கள் பதிவுலக நண்பர்களே ஊழலுக்கு எதிராக நாமும் துணைநிற்போம்




இந்த போராட்டத்தை பற்றி இன்னும் விவரங்கள் தெரியவேண்டும் என்றால் இந்த சுட்டிகளை பார்க்கவும் 



Download As PDF

கனவுகளை கசக்காதீர் ...


Govind 2nd place Chamki

Chamki - Dilsukhnagar Arena - Award-Winning 2D Animation Short Film  -Winner of the Awaaz Do  short film contest


மேலும் பார்க்க http://www.facebook.com/unicefindia
நன்றி : UNICEF,Awaaz Do ,Dilsukhnagar Arena,YouTube.

Download As PDF

வியாழன், 7 ஏப்ரல், 2011

விஜயகாந்தின் கேப்டன் டீவியில் ராஜபக்சேயின் பேச்சு




நன்றி : You Tube ,karadi2000 ,Captain TV
Download As PDF

புதன், 6 ஏப்ரல், 2011

பெரியாரைப் பேசுதல் பாவம்! திராவிடத்தைத் தீண்டுதல் தீட்டு!

'ஆரியர் - திராவிடர் யுத்தம் ஆரம்பம் ஆகிவிட்டது!’ என்ற
கருணாநிதியின் போர்ப் பிரகடனத்தைப் படிக்கும்போதே புல்லரிக்கிறது! ''நான் பாப்பாத்தி'' என்றும், ''ராமர் பிறந்த அயோத்தியில் கோயிலைக் கட்டாமல், வேறு எந்த இடத்தில் கோயில் கட்ட முடியும்?'' என்றும் கேட்ட ஜெயலலிதா.... ஆரியர் படைக்குத் தலைமை தாங்க முழுத் தகுதி படைத்தவர் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், திராவிடர் படைக்குத் தலைமை தாங்க கருணாநிதிக்கு இருக்கும் தகுதியை ஏற்பதற்கு இல்லை!
''பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் எம்.ஜி.ஆர். கட்சி நடத்தினார். நாங்களோ பகுத்தறிவாளர்கள்!'' என்கிறார் கருணாநிதி. எம்.ஜி.ஆர். மைசூர் தாய் மூகாம்பிகையை வணங்கியது வெளிப்படையான செய்தி.  ஆனால், 'மறைமுகமான பக்தி நடவடிக்கைகள் கருணாநிதியிடமோ, அவரது குடும்பத்தினரிடமோ, மூத்த நிர்வாகிகளிடமோ இல்லை!’ என்று அவரால் சொல்ல முடியுமா?
கடலூர் ஆதிசங்கர் நெற்றியில் குங்குமம் வைத்து கருணாநிதிக்கு முன்னால் காட்சி தந்தார். வியர்வையால் குங்குமம் நனைந்து வடிந்த காட்சி, கருணாநிதிக்கு ரத்தமாகத் தெரிந்தது. பதறிப்போனவராக ஆதிசங்கரைக் கிண்டல் அடித்தார். 'உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் எப்போதும் குங்குமத்துடன்தானே காட்சி தருகிறார்?’ என்று நிருபர்கள் கேட்டார்கள். ''அது பரம்பரைப் பொட்டு. இது பஞ்சத்துக்கு வைத்த பொட்டு!'' என்று விளக்கம் அளித்தார் கருணாநிதி. 'பரம்பரையோ பஞ்சத்துக்கோ பொட்டும் விபூதியும் வைப்பது தவறு’ என்று எத்தனை தி.மு.க-காரர்கள் இன்று நினைக்கிறார்கள்?
''பெரிய கருப்பனை ஏன் அறநிலையத் துறைக்கு அமைச்சர் ஆக்கினேன் தெரியுமா? அவர் கோயிலில் விழுந்து விழுந்து வணங்குவதைப் பார்த்துத்தான்!'' என்று கருணாநிதியே கம்பீரமாகக் காரணம் சொன்ன பிறகு... அடுத்த முறையும், 'அந்தத் துறையே தனக்குக் கிடைக்க வேண்டும்’ என்று பெரிய கருப்பன் இன்னும் பெரிய கும்பிடு போட மாட்டாரா என்ன? 
இன்று வரைக்கும் கருணாநிதியின் மஞ்சள் சால்​வைக்கும், சிவப்புக் கல் பவழ மோதிரத்துக்கும் சரியான விளக்கம் இல்லை. தேர்தலுக்கு முன்பும், வெற்றிக்குப் பின்பும் குல தெய்வம் கோயிலுக்குப் போகாமல் கருணாநிதி குடும்பம் இருந்தது உண்டா?
இந்த முறை தேர்தல் பிரசாரத்துக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, அவரது வாகனத்தின் முன்பு தேங்காய் உடைத்துக் கிளப்பியதன் மர்மம் என்ன?
கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் முக்கியக் கோயில்களுக்கு விஜயம் செய்யும் மாஜி நடிகை ஒருவர், யார் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து வருகிறார் என்பதையாவது கருணாநிதியை ஆதரிக்கும் பகுத்தறிவாளர்களுக்கு 'ஈரோட்டுக் கண்ணாடி’ காட்டிக் கொடுத்ததா?  ராஜாத்தி அம்மாளின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக 77 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்த திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்குள் கருணாநிதி சென்றதில் இருந்து ஆரம்பிக்கிறது இறங்குமுகம். அது ராகு காலம், எமகண்டம் பார்த்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதில் போய் முடிந்திருக்​கிறது.
எவ்வளவு நிறைந்த நாளில் தாக்கல் செய்தாலும், தமிழ்நாட்டின் நிதிநிலையில் துண்டு விழாமல் தடுக்க முடியுமா என்ன?
இதற்குப் பிறகும், தேர்தல் பொதுக்கூட்டங்​களில் கருணாநிதி தனது பகுத்தறிவு, திராவிடர் இயக்கம், பெரியார் என்ற வார்த்தைகளை உச்சரிப்பதுதான் ஆச்சர்யமானது!
ஈரோடு கூட்டத்தில் பேசிய கருணாநிதி, ''இது நான் வளர்ந்த குருகுலம்!'' என்கிறார். சேலத்திலோ, ''எங்களுடைய கொள்கையிலே, எங்களுடைய லட்சியங்​களிலே... ஒரு சிறு மாசும் ஏற்படுவதற்கு, எங்கள் உயிர் இருக்கிற வரையிலே விட மாட்டோம்... விட மாட்டோம்... விட மாட்டோம்!'' என்று சூளுரை மேற்கொண்டார் கருணாநிதி.
புட்டபர்த்தி சாய்பாபா, கோபாலபுரம் வீட்டில் எழுந்தருளி மோதிரம் வரவழைத்துக் கொடுத்தபோதும், வீட்டு வாசலில் ஜக்கி வாசுதேவ் வைத்த மரத்துக்குத் தண்ணீர் ஊற்றியபோதும், மாதா அமிர்தானந்தமயி உடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொண்டபோதும், வேலூருக்கே சென்று தங்கக் கோயில் நாராயணீ அம்மாவை சந்தித்தபோதும், குருகுல வாசம் மறந்துபோனதா?
ஐந்து முறை முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி, ஆறாவது முறையும் அந்தப் பதவியை அடைவதற்காகச் சொல்லும் காரணம், திராவிடக் கொள்கைகளை அமல்படுத்துவதற்காகவாம். ''இந்த கருணாநிதி வந்தால், திராவிடக் கொள்கைகளையே நிறைவேற்றுவான். அதை எப்படியாவது தடுத்தாக வேண்டும்!'' என்று அதற்கு விளக்கமும் சொல்கிறார். இந்த ஐந்து முறையும் திராவிட இயக்கத்தின் அடிப்படை லட்சியங்களுக்காக அவர் செய்தது என்ன என்பதுதான் இன்றைய கேள்வி!
'கோயிலில் சாதி நீக்கம் வேண்டும்’ என்பதே தந்தை பெரியார் வலியுறுத்திய முழு முதல் கொள்கை. 'அனைத்​துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்டத்தை முதல் தடவை முதலமைச்சராக இருந்தபோது கருணாநிதி கொண்டுவந்தார். அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதன் பிறகுதான், பெரியார் மறைவு சம்பவம் நடந்தது. ''அய்யாவின் நெஞ்சில் முள்ளாக இருந்த இந்தக் கொள்கையை நிறைவேற்ற முடியவில்லை. முள்ளோடு புதைக்கிறோம்!'' என்று கருணாநிதி சொன்னார். 37 ஆண்டுகளாக அந்த முள், பெரும் முள் புதராக மாறிப்போனதுதான் மிச்சம். இந்தத் தடவையும் அதே சட்டத்தைக் கொண்டுவந்து... உச்ச நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடையை உடைக்க தி.மு.க. அரசு செய்த முயற்சிகள் என்ன? அந்தக் கொள்கையை நிறைவேற்ற செய்த பிரசாரம் என்ன? கணக்குக் காட்ட ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதும், தடை விதிக்கப்பட்டால், அதைக் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதும்தானே நடக்கிறது. அர்ச்சகர் ஆகும் ஆர்வத்தில் படித்த மாணவர்கள் 200 பேர் இன்று தெருவில் திரிகிறார்கள். ஆனால், அதற்கான பாராட்டு விழாக்களும், வீரமணி வைத்த கல்வெட்டும் மினுமினுக்கிறது. இதற்குத்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி வேண்டும். ஆனால், 'திருவண்ணாமலை திருக்கோயிலில் 10 வகையான பணிகளைச் செய்வதற்கும், குறிப்பிட்ட சாதியினர்தான் இடம்பெற வேண்டும்’ என்று உத்தரவு போட்டதும் தி.மு.க. அரசுதான். இதற்கு யார் உச்ச நீதிமன்றம் போனார்கள்? முள்ளை எடுக்க யார் தடுத்தார்கள்?
கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில்  வாய்ப்புகளைப் பெறுவதன் மூலமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை உயர்த்திவிட முடியும் என்ற நோக்கத்துக்காகவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையை திராவிட இயக்கமும், அதற்கு முந்தைய தென்னிந்திய நல உரிமைச் சங்கமும் முன்மொழிந்தது. இந்தச் சலுகையைப் பெறுவதற்காக மட்டுமே, சாதி ஓர் அளவுகோலாக அமையலாமே தவிர, சாதிப் பெருமைகள் பேசுதல் கூடாது என்பதற்காகவே சாதிப் பட்டங்களை நீக்க பெரியார் உத்தரவிட்டார். ஆனால், செங்கல்பட்டு சுய மரியாதை இயக்க மாநாட்டின் 80-வது ஆண்டு நினைவு தினத்தில் கருணாநிதி தனது சாதியைச் சொல்லிக்கொள்வதும், அவரது கலை மற்றும் எழுத்துலக வாரிசான அவர் மகள் சுய சாதி மாநாட்டில் கலந்துகொள்வதும், மற்ற மந்திரிகளும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்று சொல்லப்படுவது திராவிட இயக்கத்துக்கு அழகா?
ஐந்து முறை முதல்வராக இருந்தபோதும், இதே தமிழகத்தின் கோயில்களில், தெருக்களில், தேநீர் விடுதிகளில், சுடுகாடுகளில் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்கின்றன. ஓடிக்கொண்ட தேரின் வடத்தை பக்தி மிகுதியால் தலித் பெண் ஒருவர் தொட்டார் என்பதற்காகக் கொல்லப்பட்ட சம்பவம் இன்றைய ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா?
40 ஆயிரம் கிராமங்களில், 90 சதவிகிதக் கிராமங்களில் நாளுக்கு நாள் சாதிய வன்மமும், சாதித் தீண்டாமையும் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. ஆண்டுக்கு ஒரு முறை தலித் ஒருவரை வலது பக்கமும், வன்னியர் ஒருவரை இடது பக்கமும் நிற்கவைத்து போலீஸ்காரர் ஒருவர் டீ குடித்து புகைப்படம் எடுத்துக்கொண்டால் தீண்டாமை மறைந்துவிடுமா?
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எப்படி அமல்படுத்துகிறீர்கள், அதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைத்து வருகிறதா என்பதைக் கண்காணிக்க, 'முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்​பட்ட கண்காணிப்புக் குழு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூடி ஆலோசனை நடத்த வேண்டும்’ என்று சட்டத்தில் இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒரு தடவை, அதுவும் மூன்று மாதங்களுக்கு முன் கூடியது. ''பள்ளர் பட்டம் போகாமல் சூத்திரர் பட்டம் போகாது!'' என்றார் பெரியார். திராவிடர் யுத்தத்துக்குத் தலைமை தாங்கக்கூடிய கருணாநிதி இதை நீக்க ஐந்து ஆண்டுகள் என்ன செய்தார்?
இட ஒதுக்கீடு என்பதில் அமெரிக்கா போன்ற நாடுகள் அடுத்த கட்டத்தைத் தாண்டிவிட்டன. கல்வி, வேலைவாய்ப்பு என்பதில் இருந்து அதிகாரம் மற்றும் வளத்தில் இட ஒதுக்கீடு என்று வந்துவிட்டன. கறுப்பின மக்கள், பழங்குடியினருக்கு பல்வேறு உரிமைகள் தரப்படுகின்றன. கல்வியில், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தருவதை ஓர் அரசாங்கம் சலுகையாகச் சொல்ல முடியாது. கல்வியை வழங்குவது அரசாங்கத்தின் கடமை. வேலைவாய்ப்பைத் தருவது என்றால், ஒருவனிடம் வேலை வாங்கிவிட்டுக் கூலி தருவது என்றுதான் பொருள். ஆனால், அந்த இட ஒதுக்கீட்டைக்கூட முழுமையாகத் தராமல், தனியார் துறைகளில் அந்தச் சலுகைகளை வழங்கும் முயற்சிகளையும் எடுக்காமல், அடுத்த கட்டத்துக்கு அதைக் கொண்டுசெல்லும் அக்கறையும் இல்லாமல் இருப்பதுதான் திராவிட இயக்க ஆட்சிக்கு அழகா?
'நீராருங் கடலுடுத்த நிலமடந்தை...’ என்ற மனோன்​மணீயம் சுந்தரம் பிள்ளையின் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாகத் தேர்ந்தெடுத்தார் கருணாநிதி. 'ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமைத் திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே’ என்ற சுந்தரம் பிள்ளையின் வார்த்தையை சூத்திர ஆட்சி ஏன் நீக்க வேண்டும்? அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு கொண்டாடப்பட்டது. இதைப் பார்த்ததும் பெரியார் ஓர் அறிக்கையை வெளியிட்டார். ''தமிழுக்கு ஒரு மாநாடாம்! வெங்காய மாநாடு! கும்பகோணத்தில் மகாமகம் நடத்துவதைப்போல இந்த மாதிரி தமிழ் மாநாடு நடத்துவதால் என்ன பிரயோஜனம்?'' என்று கேட்டவர் பெரியார். ராஜராஜ சோழனின் 1000-ஆவது ஆண்டு விழாவை பட்டுச் சட்டை, பட்டு வேட்டி, பட்டுத் துண்டு அணிந்து கொண்டாடினார் கருணாநிதி. ''இந்த சேரன், சோழன், பாண்டியன் எல்லோருமே தாங்கள் மன்னராக இருக்க, ஆரியரின் அடி வருடித் தங்கள் பதவியைக் காப்பாற்றிக்கொண்டவர்கள்!'' என்று கிண்டல் அடித்தவர் பெரியார். ஆனால், தன்னுடைய ஆட்சியின் சாதனையாக, கோவை செம்மொழி மாநாட்டையும், தஞ்சை விழாவையும் கருணாநிதி காட்டி வருகிறார். கோவை மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கலந்துகொண்டதையும் 'இரண்டாவது ராஜராஜ சோழன்’ என்று கருணாநிதியை அவரே பாராட்டியதையும் கொள்கைச் சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது. இதை ஏற்றுக்கொண்டால், 'சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று ஜெயலலிதாவைப் பாராட்டியதையும், 'திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி’யாகக் கண்டுபிடித்துச் சொன்னதையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்!
பெரியாருக்கு சாதி ஒழிப்பு எப்படி அடிப்படைக் கொள்கையாக அமைந்து இருந்ததோ, அதேபோல அண்ணா தனது மரண சாசனமாகச் சொன்னது மாநில சுயாட்சியை!
புற்றுநோய் தன்னைக் கொன்று வந்த நிலையிலும், 'மாநில சுயாட்சியை முறைப்படி வழங்காவிட்டால், இந்திய இறையாண்மையை அதிகாரக் குவிப்பு கேன்சராகக் கொன்றுவிடும்’ என்று சொன்னார். அண்ணா கடற்கரையில் காற்று வாங்கப் போய் அரை நூற்றாண்டு நெருங்கிக்கொண்டு இருக்கும்போதும், மாநில சுயாட்சியை அடைய வேண்டிய லட்சியமாகத்தான் கருணாநிதி சொல்லி வருகிறார். 96-ம் ஆண்டில் இருந்து (இடையில் 18 மாதங்கள் தவிர!) மத்திய அரசின் அமைச்சரவையில் அங்கம் வகித்தது தி.மு.க. மாநில சுயாட்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து மற்ற மாநிலக் கட்சிகளையும் ஒன்றிணைத்து அதை நிறைவேற்றவில்லை.
ஆனால் சோனியா சிரிக்கவில்லை, மன்மோகன்சிங் சந்திக்கவில்லை என்றால் மட்டும், மறுநாள் காலையில் 'மாநில சுயாட்சியை அடைந்தே தீருவோம்’ என்று குரல் கொடுப்பது கருணாநிதியின் வாடிக்கை ஆகிவிட்டது. அதாவது, தன்னுடைய சுயதேவைகளுக்கு மத்திய அரசாங்கம் தடை விதிக்குமானால், பூச்சாண்டி காட்டுவதற்கு அறிவாலயத்தில் அலமாரியில் இருந்த அண்ணாவின் சுலோகம் தூசி தட்டி எடுக்கப்படும்.
''இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசாங்கத்தின் கொள்கைதான் என்னுடைய கொள்கை!'' என்று அறிவித்ததை அண்ணாவின் தத்துவத்துக்கு எழுதப்பட்ட மரண சாசனமாகச் சொல்லலாமா? '63 இடங்களை எப்படித் தர முடியும்?’ என்று கேள்விகள் கேட்பதும், அந்தக் கோபம் சி.பி.ஐ-யை நினைத்து மூன்று நாட்களுக்குள் அடங்கிவிடுவதும் 63 இடங்களை தூக்கிக் கொடுத்துவிட்டு, 'சுமுக உடன்பாடு ஏற்பட்டது’ என்று ஆர்ப்பரிப்பதும் கருணாநிதியின் திராவிடத் தைரியத்துக்கு சமீபத்திய சான்று என்றும் சொல்லலாமா?
''பார்ப்பானும் இல்லை, பறையனும் இல்லை என்ற நிலையை உண்டாக்கக்கூடிய வசதியும், வாய்ப்பும் கிடைக்கக்கூடிய தறுவாயில்தான் நாம் பதவி குறித்துக் கவலைப்படுவோம். அதுவரை பதவிகளைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டோம். அவை எல்லாம் நாம் துப்பிய தாம்பூலங்கள்தாம்...'' என்றார் பெரியார். அவரது பெயரை கருணாநிதி பேசுதல் பாவம் அல்லவா!
-  ப.திருமாவேலன், படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

( எனக்கு மெயிலில் இதனை அனுப்பிய வழக்கறிஞர் கி.சிதம்பரன் அவர்களுக்கும்,கட்டுரையாளருக்கும் எனது நன்றிகள் )
Download As PDF

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

தமிழக தேர்தலில் நம் கடமை என்ன ?



நன்றி :  ThamizharParai , YouTube  
Download As PDF

திங்கள், 4 ஏப்ரல், 2011

தேர்தலும் ஆணையமும் அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியும் .





தமிழக சட்டசபைக்கான தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் அரங்கில் அதிலும் குறிப்பாக அரசியல் வாதிகளின் பேச்சுக்களில் பக்குவமற்ற ,முதிர்ச்சியில்லாத வார்த்தைகளில்  முண்ணனி வகிப்பது  அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி என்பது . 

உண்மையில் அப்படிப்பட்ட நிலை நிலவுகிறதா  ? ..

முதலில் ,தேர்தல் அறிவித்தவுடன் எதற்காக தேர்தல் நடக்கின்றதோ அந்த அமைப்பில் உள்ளவர்கள் அனைவரும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ,தேர்தல் நியாயமாகவும் ,சுதந்திரமாகவும் நடக்க வழிவிடவேண்டும் .அது தான் சரி,இதைத்தான்  உண்மையான ஜனநாயகவாதிகள்,நேர்மையானவர்கள் செய்வர் .அதைவிடுத்து பதவியில் அமர்ந்துகொண்டு தேர்தலைச்சந்திப்பதும்,அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியை புகுத்திவிட்டுள்ளது என ஒரு நேர்மையான அமைப்பைப்பார்த்து கூறுவதும் மிகவும் அபத்தமான ஒன்றாகும். இதைவிட அரசியல் அசிங்கம் வேறு ஒன்றுமில்லை.ஊழலையும் ,விலைவாசி உயர்வையும் மறைக்க பேசும் இப்பேச்சுகளால்  அரசியல் ஆதாயம் தேட நினைப்பதை  மக்கள் நன்கு உணர்வர் .

தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க ஆணையம் எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதனை எண்ணிப்பார்த்தால் மிகவும் வருத்தமான உள்ளது. எவ்வளவு ஊழலும் ,அயோக்கியத்தனமும் அரசியல் வாதிகளால் நடத்தப்பட்டு வருகிறது என்பதனையும்,இதற்கு காரணமான அரசியல் வாதிகள் யார் என்பதனையும் எளிதில் இனங்கணமுடிகிறது .

எவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கவேண்டியுள்ளது ஒரு ஜனநாயக நாட்டில் நேர்மையாக தேர்தல் நடக்க ,பணநாயகத்தை ஒழித்து ஜனநாயகத்தை காக்க என நினைத்துப்பார்த்தால் மிகவும் வேதனையாக உள்ளது .லஞ்சத்தை ஒழிக்க எவ்வளவு முயற்சிகளை ஆணையம் எடுத்துவருகிறது என்பதையும் அதற்கு முட்டுக்கட்டை போடும் நபர்கள் யார் என்பதையும் ஆய்ந்தால் ,யார் இதற்கொல்லாம் காரணம் என்பதனை எளிதில் அறிந்துகொள்ளாலாம்.

மிகவும் சிறப்பாக தேர்தல்ஆணையம் செயல்படுவது மிக்கமகிழ்ச்சியான இருப்பதுடன் .போற்றக்கூடிய வகையிலும் உள்ளது .
இதற்காக தேர்தல்ஆணையத்திற்கு ஒரு ராயல் சல்யூட் .

இப்பொழுதும் ... இனி எப்பொழுதும்... லஞ்சத்தை துரத்துவோம் .ஜனநாயகம் காப்போம் .






.


Download As PDF