புதன், 12 அக்டோபர், 2011

இங்கு எரிமலைகள் மட்டும் வெடிப்பதில்லை.
நீங்கள் பார்க்கும் 
இந்த ஓவியம் நான் வரைந்தது.

ஓவியத்தின் தலைப்பு  YIN TU  

இதை பார்த்த பலர் பலவிதமான பார்வைகளை பகிர்ந்தும் ,
YIN TU என்ற பெயருக்கான காரணத்தையும் 
என் மூலம் அறிய முயன்றபொழுதெல்லாம் 
நான் அவர்களை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் என கூறிவந்தேன்.

நேற்று எனது நண்பன் கேட்டுக்கொண்டதற்கிணங்க 
இது பற்றிய எனது மௌனம் கலைந்தேன் . 
YIN TU  வை வரைந்த போது  நான் எழுதிய சிற்பாக்கள் .

.
.

.
என் ரோஜாத் தோட்டம்
மலரும் மணக்கும்
நானில்லாவிட்டாலும்
.

.
.

சுத்தம் செய்யப்படும்
எவ்விடமும்
பழையதின் சலசலப்பு

.
.

.


YIN TU  என்றால் ? ...

உலக வரலாற்றில் மறைக்கப்பட்ட விசயங்கள்,மறக்கப்பட்ட விசயங்களில் இதுவும் ஒன்று .

இங்கு வரலாறு முழுவதும் எழுதப்பட்ட ஒன்றாகவே
இருக்கிறது.( அ.பொ : எழுதப்பட்ட - எழுத்தத்தெரிந்தவர்களால் படிக்கத்தெரிந்தவர்களுக்காக ஆக்கப்பட்டது ) .
உண்மையான வரலாறு இனி வரும் .
அதற்கான சூழல் உருவாகிவருகிறது.

YIN TU  என்பது எழுதப்பட்ட வரலாற்றில் எழுதப்படாத பக்கங்களில் எழுப்பப்பட்ட சில உண்மைகளில் இருந்து பெறப்பட்ட வார்த்தை. 

இவ்வார்த்தையின் அர்த்தம் ' மகான்களின் பூமி '.
அதாவது ' நல்லவர்களின் பூமி ' .' உயர்தோரின் இருப்பிடம் '

இது எங்குள்ளது என்றதற்கு 
இவ்வார்த்தையை உச்சரித்தவர்கள் சுட்டிக்காட்டிய இடம் நமது தாயகம்.இவ்வாறு நமது நாட்டை அழைத்ததன் காரணத்தினால், 
நமது மா நிலத்தை மிக அருமையான வார்த்தையினால் உச்சரித்த மாந்தர்கள் மறந்துவிட்ட மறை விடயங்களினின்றும் ,அதன் உண்மைத்தன்மையினாலும் ,சமிப வரலாற்று நிகழ்வுகளானாலும் பீய்த்துக்கொண்டு வெளிவருகின்றது.நமது மாந்தரின வரலாறு.


உண்மையில் அன்பானவர்களால் நிறைந்திருந்த நமது நாடு காலத்தின்  சுவடுகளால் நசுக்கப்பட்டு ,இன்று பாதங்களை விட பார்வையே முக்கியம் என்ற உன்னத நிலைக்கு உந்தப்பட்டு வரலாற்றை முடுக்கவேண்டிய நிலையில் பாய்ந்து பறந்துகொண்டிருக்கிறது.

சில சிற்பாக்கள்

.

.


வரலாறும் 
உண்மையும் .
இங்கு எரிமலைகள் மட்டும் வெடிப்பதில்லை..

.இறந்தது
வீழும் .
கல்லறை மலர்கள்..


.


ஓவியங்களும் உண்மை சொல்லும்.
.


Download As PDF

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

அகிம்சை, மனிதம்


மோப்ப
குழையும்
அகிம்சை


............................

சொல்லி
தெரிவதில்லை
மனிதம்

......................Download As PDF

சனி, 8 அக்டோபர், 2011

உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி யாருக்கு ?.


அரசியல் அறிவும்,பார்வையும் சிறிதும் இல்லாத அரசியல்கட்சிகளின் நிர்வாகிகளால் இந்தியா என்றும் ஆளப்பட்டுவருகிறது.
அரசியல் என்பது M.P,M.L.A ஆவது தான் என்பது இன்றைய நிலையாகிவிட்டது.

அரசியல் கட்சிகளும்,அதன் பிரதிநிதிகளும் அரசியல்கோட்பாட்டில் ஒரு அங்கம் மட்டுமே என்பதனைக்கூட  அறியாத தலைவர்களையே நாம் இன்றும் அரசியலில் பார்க்கின்றோம்.

அதற்காக இவர்களால் தினமும் நடத்தப்படும் அரசியல்நாடத்தைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது .இதற்கு பதில் இவர்கள் சினிமாவில் நடிக்கப்போவதே நல்லது.ஏனெனில்,இவர்கள் தற்பொழுது  நடிக்கும் இந்த வீதிநாடகத்தை விட சினிமாவில் நல்ல தொழில்நுட்பத்துடன் எப்பெக்டாக நடிக்கமுடியும் என்பதோடு மிகச்சிறந்த திரைப்படத்தையும் நாட்டிற்கு அர்ப்பணித்த புண்ணியமும் கிடைக்கும்.  

தேசிய அரசியல் இப்படி இருக்க

தமிழ்நாட்டில் மாநில கட்சிகள் தற்பொழுது தங்களின் நிலையை உறுதிப்படுத்தும் ஒரு களமாக உள்ளாட்சித்தேர்தலை பயன்படுத்தியிருக்கிறது .அதனால் தமிழக கட்சிகள் தங்களின் பலத்தினை அறிந்துகொள்வதோடு. இதை ஒரு அளவாக வைத்துக்கொண்டே ஒரு 20 ஆண்டுகளை பயணித்துவிடும்.சில கட்சிகள் இந்த தேர்தலிலிருந்து ஓரங்கட்டப்பட்டும் விடும்.

மேலும் மக்கள் கட்சிசார்ந்து ஓட்டளிப்பதால் தேர்ந்தெடுக்கப்படுவது என்பதும் கட்சி சார்ந்தே இருப்பதனால் மிகவும் பலவீனமான ஒன்றாகவே அமையும்.இதனால் உள்ளாட்சியில் மக்களுக்கு ஒரு பலனும் இருக்காது.

எனவே,மக்கள்
இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளை பார்க்காமல் வாக்களிக்க முடியாத சூழலை அரசியல் கட்சிகள் ஏற்படுத்தியுள்ள நிலையில்,
இனிவரும் காலங்களின் இதுபோன்ற உள்ளாட்சித்தேர்தல்களில் அரசியல் கட்சிகள் தலையிடாமல் சுதந்திரமாக உள்ளூர் தேர்தலாக தங்களுக்குள் தாங்களே தேர்தெடுத்துக்கொள்ளும் விதத்தில் அமையும் வண்ணம்செயல்படவேண்டும்.

அதற்கு மக்கள் தற்பொழுது தங்களின் முன் நிற்கும் நபர்களின் தனித்தன்மையை மட்டுமே பார்த்து,அவர் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது சுயேச்சையாக இருந்தாலும் சரி அவர்களுக்கே வாக்களித்து வெற்றிபெறச்செய்யவேண்டும்.

அப்படி வாக்களித்தால் தான் உண்மையில் இது மக்களின் வெற்றியாக இருக்கும் .

இல்லாதுபோனால் இது மக்களுக்கு ஒரு அரசியல் பின்னடைவாகவே அமையும் .

ஆம்,அரசியலில் ஒரு அங்கமாக இயங்கவேண்டிய மக்கள்
அரசியல் கட்சி உறுப்பினனாக தொடரும் அவலம் நீடிக்கும் .

அதனால் என்றும் மக்களே வெற்றிபெறவேண்டும்.

எனவே உள்ளாட்சி தேர்தலில் வெற்றி யாருக்கு ? என்பது நமது கையில் தான் உள்ளது.


நம்ம ஊருல நம்ம கூட இருக்கும் நமக்கான நல்லவரை அறிந்துகொள்ளமுடியாத,தேர்தெடுக்கத்தெரியாத நபராக இருக்கக்கூடாது. இது பண்பான மனிதருக்கு அழகல்ல.

அதனால்
அனைவரும் வாக்களிப்போம்,
மக்களுக்காக உழைப்பவர்களுக்கு.மேலும் ...  இவற்றையும் பார்க்க ...
Download As PDF

புதன், 5 அக்டோபர், 2011

என்னமோ நடக்குது , மர்மமாய் இருக்குது .நொரண்டு : வணக்கம் நண்டு

நண்டு : வாங்க நொரண்டு

நொரண்டு :  எப்படி இருக்கீங்க

நண்டு :  நல்லா இருக்கேன்

நொரண்டு :  எங்க 14  நாளா ஆளையே காணம்

நண்டு :  ம் ...

நொரண்டு : என்ன ... ம் ...

நண்டு : ம் ...

நொரண்டு : என்னமோ நடக்குது , மர்மமாய் இருக்குது .


நண்டு : மர்மம் எல்லாம் ஒன்னு இல்லை ,உடம்பு சரியில்ல அதான் வலைப்பக்கம் வரமுடியல் ...

நொரண்டு : நான் உன்ன சொல்ல்லப்பா ...உலகத்துல நடக்கறத சொன்னேன்

நண்டு : ஆமாம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது .

நொரண்டு : தமிழ்மணம் மிக நல்ல முடிவை எடுத்துள்ளது .

நண்டு : வரவேற்கத் தக்க முடிவு .

நொரண்டு : ஆமாம்...ஆமாம் ...

நண்டு : மர்மமாய் இருக்குனு எதை சொன்ன ?

நொரண்டு : வருமைக்கோடு .

நண்டு :ஓ...அதுவா....

நொரண்டு : நீ என்ன நினைக்கற ...

நண்டு :நான் முன்னமே சொல்லிட்டேன் ,புதிய பொருளாதார கொள்கை தோவைனு ?

நொரண்டு : யாரையா ... இப்ப அதப்பத்தி யோகிக்கராங்க .

நண்டு :நாம் தான் யோசிக்கனும் .

நொரண்டு : ஏன் ?

நண்டு :இல்லாட்டி தினமும் 10 ருபாய் சம்பாதிப்பவன் சூப்பர் டேக்ஸ் கட்டணும்னு இந்திய பொருளாதார மேதைகள் பாராளுமன்றத்துல சட்டம் இயற்ற ஆரம்பித்து விடுவாங்கப்பா ...

நொரண்டு : இந்திய பொருளாதார மேதைகளைப்பத்தி என்ன சொல்ல வர்ரா

நண்டு :வெங்காயம்.

நொரண்டு : அப்ப உலக பொருளாதார நிபுணர்களை என்ன சொல்லுவ

நண்டு :வெண்ணை வெட்டி சிப்பாய்கள்.

நொரண்டு : ஏன் இப்படி திட்டுகிறாய் .

நண்டு :இது திட்டுவதல்ல உண்மை.

நொரண்டு : என்ன சொல்ர

நண்டு :இவர்கள் ஏழ்மையைப்பற்றியோ,ஏழைகளைப்பற்றி சிந்திப்பதே யில்லை .அதான் ...ஆதங்கம் .

நொரண்டு : அதனால என்ன செய்ய சொல்ர.

நண்டு :முதலில் நாம் அனைவரும் நமது சுய எண்ணங்களை சீர்தூக்கி பார்க்கவேண்டும்.

நொரண்டு : ஏன்?

நண்டு :அப்பத்தான் நாம் நமது சொல்லிற்கும் செயலிற்கும் வாழ்விற்குமான இடைவெளியையும் உண்மைத்தன்மையையும் உணர்ந்து செயல்பட ஆரம்பிக்கமுடியும் .

நொரண்டு : எதற்கு ?

நண்டு :அப்பதுதான் நாம் ஒரு சமுக நோக்குள்ள மனிதனாக முடியும்,இல்லாது போனால் நாம் ஏழ்மையைப்பற்றி விவரங்கள் அறிந்த விலங்கினங்களாகவே இருப்போம் .

நொரண்டு : ஏழ்மைக்கும் ,இப்ப நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்குமான நீட்சிக்கும் உள்ள தொடர்பு ...

நண்டு :ஆம் ,இப்ப நமக்கு தேவை ஒரு தீர்வு .

நொரண்டு : புரியல ?

நண்டு :உலகில் பசியால் மனிதர்கள் இறப்பதை தடுப்பதற்கும்,லஞ்சம்,ஊழல் இல்லாத உலகை உருவாக்குவதற்கும் ,பயங்கரவாதம்,தீவிரவாதம் இல்லாத  சமுதாயமாக உலகை உருவாக்குவதற்கும் ,போர்களையே அறியாத மனிதர்களாக அச்சமின்றி வாழ்வதற்கும் ,ஏழை பணக்காரன்,உயர்ந்தவன் தாழ்ந்தவன்  என்ற நிலை இல்லாமல்  மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் இன்றைக்கு உலகிற்கு உடனடி தேவையாக இருப்பது புதிய கொள்கைகளும் கோட்பாடுகளுமே யாகும்.

நொரண்டு : அதனால் .

நண்டு :அதனால் புதிய கொள்கை உடனே உலகிற்கு தேவையாக உள்ளது .

நொரண்டு : இல்லைனா ...

நண்டு :புதிய கொள்கை உருவாகவில்லை எனில் இங்கு மனிதர்கள் மனிதர்களாகவே வாழமுடியாத நிலை ஏற்பட்டுவிடுவதோடு.அனைத்தும் மீறப்பட்டு உலக சமுதாயம் சொல்லவெண்ணா துயரத்திற்கு ஆளாகிவிடும் .

நொரண்டு : அதற்கு ஏதாவது எளிய தீர்வே இல்லையா ?

நண்டு :புதிய கொள்கையே எளிய தீர்வு . 

நொரண்டு : ஓ...

நண்டு :ஆனால் ,இதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தான் நமக்கு வேண்டும்

நொரண்டு : என்ன பக்குவம்.

நண்டு :முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு  சுயநலமில்லாமல் சிந்திக்கவும்வேண்டும்.உலகிற்கு உடனடி தேவை

தொடரும் ...
Download As PDF