வெள்ளி, 13 ஏப்ரல், 2012

"இயற்கை எதிர்பாளர்களை இயற்கை அழிக்கும்"... உறங்கிக்கொண்டிருப்பவன் எழட்டும் ...நாம் நமது மொழி மற்றும் இனம் பற்றி விசயங்களில் இன்னும் அதிகமாக சிந்தித்து செயல்படவேண்டிய தருணத்தில் உள்ளோம்.கடந்த காலத்தைவிட தற்பொழுது நம்மை விட்டு தூரதேயங்களாக விரிந்துவிட்ட நமது இனத்தையும்,அதனால் மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது .நாம் தற்பொழுது நமது இனத்தின் ,மொழியின் வளமையையும்,அதன் வளர்ச்சி மற்றும் பயணத்தையும் கணித்து,மிகவும் பாங்காக நமது இன,மொழி அடையாளங்களை அடுத்து எடுத்துச்செல்லும் உன்னதப்பொறுப்பிற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.நாம் தான் இதனை செய்ய முடியும் என்பதை விட நாம் தான் இதனை செய்தே ஆக வேண்டும் என்பதுவே உண்மையிலும் உண்மை.இது நமக்கே ஆன கடமையாகும்.இதனை நாம் உணர்ந்து செயல்பட்டே ஆக வேண்டும்.நமது இனமொழி காப்பு உறுதிமொழிக்கேற்ப இந்த அமர்விற்கு புதிய உறுப்பினர்கள் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இருந்தாலும் ,கடந்த காலத்து பதிவுகளைப்போல இம்மவர்வும் நமக்கு நல்ல படிப்பினையையும் ,பாடத்தையும்,பயணத்தையும் கொடுக்கும் என்று நம்புவோமாக.இது மூன்றாவது அமர்வு என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.நான் கலந்துகொள்ளும் இரண்டாவது அமர்வு இது.

தான் என்ற அகந்தையையும்,அகங்காரத்தையும் வெளிப்படுத்தி,அனைத்தையும் தெரிந்தவன் என்ற வேசமற்ற தன்மையுடையவர்களாக ,நமது குறிக்கோள் நமது இனம் மற்றும் மொழி மட்டுமே என்ற எண்ணம் கொண்டவர்களாக ,தனது அறிவுன் தன்மையை அனைத்தையும் மொழியில் வெளிப்படுத்தி ,இனத்தில்  வளர்ச்சியையும்,வனப்பையும்,உயர்வையும் கொண்டுவந்து சேர்த்த நமது முன்னோர்களின் பாதையில் பயணிக்கும் நாம்.நமது அனைத்தையும் அவர்களின் வழியிலே நின்று என்றும் உயர்ந்த குடிகளாவோம், பண்புடையவர்களாக.

புதியவர்கள் இங்கு எந்தவிதமான ஒளிவு மறைவு இன்றி,அனைத்து விசயங்களையும் மனத்திறந்து நமது இனம் மற்றும் மொழியின் நன்மையை மட்டும் கவனத்தில் கொண்டு,அதன் வளர்ச்சி மற்றும் பயணத்திற்கு உண்டான சங்கதிகளை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன்.அதோடு ,அனைவரும் தாங்கள் சந்தித்த அனைத்தையும் மிகவும் விபரமாக தெரிவிக்குமாறும் கோட்டுக்கொள்கிறேன்.அது நமது மொழியின் வளர்ச்சிக்கு,இனத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.நமது நடவடிக்கைகள் தான் நமது இனத்தையும்,மொழியையும் காக்கும் அருமருந்து என்பது தான் கடந்தகால அசைவுகள் வெளிப்படுத்தியுள்ளது.தற்பொழுதைய அமர்வில் கடந்த அமர்வுகளில் கலந்துகொண்ட சுசுமானியரும்,டமாசும் இதுவரை கலந்துகொள்ளமுடியாத நிலை கவலை தருகிறது.அது நமக்கு சற்று பின்னடைவே ஆகும்.


...


நான் புதியவன்,நான் "ங"விலிருந்து வருகிறேன்.நான் எங்களின் மூன்றாவது பீடத்தின் உத்திரவின் பெயரில் இங்கு அனுப்பப்பட்டுள்ளேன்.எனக்கு முன் பேசிய பாப்போ ஆகட்டும்,கீர்,எகமடான் மற்றும் லாத்தர் ஆகட்டும் தாங்கள் நிலையை தெளிவாக கூறினார்கள்.அது போலத்தான் நானும் கூற உள்ளேன்.ஆனால்,அதற்கு முன் "இயற்கை எதிர்பாளர்களை இயற்கை  அழிக்கும்" என்றும் ,அது விசயமாக நாங்கள் கண்ட சில தெளிவுகளையும்.மேலும்,அது நடைமுறையாகவும்,பழக்கவழக்கமாகவும் ஆகிவிட்டால் அதன் உண்மைத்தன்மையின் உறுதியையும் ,அதனால் நாம் அடையும் உயர்வையும் ,தாழ்வையும் நாங்கள் சோதித்தது அறிந்ததை இங்கு கட்டாயம் சொல்ல முனைகிறேன்.இது எனது சொந்த விருப்பமாகும்.பீடத்தின் செய்தியல்ல.பீடத்தின் செய்தியை பிறகு சொல்கிறேன்.சரி விசயத்திற்கு வருகிறேன்.

இயற்கையை நாம் முழுவதும் உணரவேண்டும்.நாம் அதனை நேசிக்கவேண்டும்.அதனை கூர்ந்து கவனிக்கவேண்டும்.அதனை கூர்த்து கவனிக்க ,கவனிக்க அது செய்திகள் சொல்லும்.அந்த செய்திதான்  உயிரினங்களின் செய்தியாகும்.அந்த செய்தி தான் இந்த பிரபஞ்சத்தின் வரலாறாகும்.அதனை இயற்கையால் மட்டுமே கூற முடியும்.அதனால் மட்டுமே அது சாத்தியமாகும்.அதனைத்தான் நாம் அறியவேண்டும்.அது கூறும் செய்திகளை அறிந்துகொள்ளும் பக்குவத்திற்கு வரும் வரை நாம் அதனை நேசிக்கவில்லை என்பதுவே முதல் பாடமாகும்.அதன் செய்திகள் நமக்கு புரியவில்லை எனில் நம்மை நாம் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.இது இரண்டாவது பாடம்.இரண்டாவது பாடத்தின் முதல் சோதனையே நாம் இயற்கையாக இருக்கின்றோமா என்பதுதான்.இப்படி நாம் இயற்கையாக இல்லையெனில் நாம் இயற்கையை வெறுமையாக ஆயும் பகலில் கண்ணால் நட்சத்திரம் பார்க்கமுயற்சிக்கும் வானியலான் ஆவோம்.அப்பொழுது இயற்கை நமக்கு மிகவும் சிக்கலானதாகவும்,புதிராகவும்,அச்சமூட்டக்கூடியதாகவும் தோன்றி நம்மை இருமையில் ஆழ்த்திவிடும்.அத்தகைய சூழலுக்குள் இன்று நாம் சென்றுகொண்டிருக்கின்றோம்.இது நமது அழிவின் ஆரம்பம்.இயற்கையை நாம் பலநாட்கள் அழித்தாலும் அது தன்னை ஒரே வினாடியில் சீரமைத்துக்கொள்ளும் ,ஆனால் நாம் நம்மை அவ்வாறு ஒருபொழுதும் மீண்டுகொள்ளவே முடியாது .
எங்களின் பீடம் ,இயற்கை ஏன் தன்னை சீரமைத்துக்கொள்கிறது ?.அதன் அவசியம் என்ன ?.என்பதனை கடந்த இரு குறிஞ்சி ஆண்டுகளாக ஆராய்துவருகிறது .இன்னும் ஆய்வுகள் நடந்துகொண்டுதான் வருகிறது.எங்களில் பலர் இயற்கையில் செய்திகளை உணர ஆரம்பித்தவர்களாக உள்ளோம்.இன்னும் இரண்டு திவலைகளில் கடும் மழை பொழிய உள்ளதால் நாம் உடனே சாலைக்கு சொல்வோம் ....
இதையும் பார்க்க .


 தொடரும் ....Download As PDF

14 கருத்துகள்:

விழித்துக்கொள் சொன்னது…

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது " idhai naan aamodhikkindren, padhivu nandru.
surendran

Lakshmi சொன்னது…

சிறந்த விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துகள்.

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அருமையான பகிவு நன்றி

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

நல்ல அருமையான பகிர்வு நன்றி

Seshadri e.s. சொன்னது…

இயற்கையை நாம் பலநாட்கள் அழித்தாலும் அது தன்னை ஒரே வினாடியில் சீரமைத்துக்கொள்ளும் ,ஆனால் நாம் நம்மை அவ்வாறு ஒருபொழுதும் மீண்டுகொள்ளவே முடியாது .
-உண்மை! அருமை
-காரஞ்சன்(சேஷ்)

மாசிலா சொன்னது…

//நாம் தற்பொழுது நமது இனத்தின் ,மொழியின் வளமையையும்,அதன் வளர்ச்சி மற்றும் பயணத்தையும் கணித்து,மிகவும் பாங்காக நமது இன,மொழி அடையாளங்களை அடுத்து எடுத்துச்செல்லும் உன்னதப்பொறுப்பிற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.நாம் தான் இதனை செய்ய முடியும் என்பதை விட நாம் தான் இதனை செய்தே ஆக வேண்டும் என்பதுவே உண்மையிலும் உண்மை.//

//இயற்கையை நாம் பலநாட்கள் அழித்தாலும் அது தன்னை ஒரே வினாடியில் சீரமைத்துக்கொள்ளும் ,ஆனால் நாம் நம்மை அவ்வாறு ஒருபொழுதும் மீண்டுகொள்ளவே முடியாது .//
மனதில் நின்ற உண்மைகள். மிகச்சரியாக கூறினீர்.

அனைத்து தமிழரும் படித்து மனதில் பதிய வைகக வேண்டிய கருத்துக்கள்.

பதிவு பகிர்வுக்கு மிக்க நன்றி.

Vairai Sathish சொன்னது…

நல்ல பகிர்வு நண்பா

இன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்

சின்னப்பயல் சொன்னது…

இயற்கையை நாம் முழுவதும் உணரவேண்டும்.நாம் அதனை நேசிக்கவேண்டும்.அதனை கூர்ந்து கவனிக்கவேண்டும்.அதனை கூர்த்து கவனிக்க ,கவனிக்க அது செய்திகள் சொல்லும்.அந்த செய்திதான் உயிரினங்களின் செய்தியாகும்.

ஹேமா சொன்னது…

இனிய நந்தன வருட வாழ்த்துக்கள் !

தேவையானதொரு பதிவு !

ராஜி சொன்னது…

இதனை செய்ய முடியும் என்பதை விட நாம் தான் இதனை செய்தே ஆக வேண்டும் என்பதுவே உண்மையிலும் உண்மை.//
செய்ய வேண்டிய விசயத்திற்கும் செய்தே ஆக வேண்டிய விசயத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நல்லதொரு பதிவு. இனிய நந்தன வருட வாழ்த்துக்கள் சகோ

N.H.பிரசாத் சொன்னது…

இயற்கை வளங்கள் நாட்டுக்கு மிகவும் முக்கியம். பகிர்வுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான பதிவு ! நன்றி !

கும்மாச்சி சொன்னது…

எஸ்.ரா. நல்ல விழிப்புணர்வு பகிர்வு, தொடரட்டும் உங்கள் பணி.

Guna சொன்னது…

UNGALATHU INTHA IDUGAYAY VALAISARTTHIL INAITHU ULLEN .http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_15.htmlNANDRI,

GUNA

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "

Bloggers.com

Nandunorandu - Find me on Bloggers.com