வெள்ளி, 27 ஜூலை, 2012

தமிழுக்கு தமிழ் அரசுகள் செய்த துரோகங்கள் ...

நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி  .....
நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி ....
ம்.....
கொண்டுவந் தானொரு தோண்டி...
அதை ...
மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...
ம்... ம்...ம் ... ம்:  நொரண்டு   

நண்டு :  என்ன நொரண்டு ஒரே பாட்டா இருக்கு.

நொரண்டு ஜிண்க்கா...ஜிண்க்கா ..ஜிண்ஜா.
ஜிங்...
ஜிண்க்கா...ஜிண்க்கா ..ஜிண்ஜாக்கா....ஜிண்க்கா

நண்டு : என்னப்பா ? .என்னாச்சு ?.

நொரண்டு : அட இந்தப்பாட்டு தெரியாதா உனக்கு.
இது காடு வழியோ,கடுவெளியோ ,என்னமோ ஒரு சித்தர் பாடல் .
எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நண்டு : ஓ.

நொரண்டு :  இதுக்கு அர்த்தம் தெரியுமா ?.

நண்டு :  செல்லுப்பா ,என்ன ?.

நொரண்டு : நந்தவனத்தில இருந்த ஆண்டி  ஒருத்தன்  பிச்சை எடுக்க  குயவனை நச்சு நச்சுனு நச்சி  பிச்சை பாத்திரத்த ( தோண்டி ) ஒன்னு வாங்கிவந்தத்தனாம் .புது தோண்டி கிடைச்ச சந்தோசத்தில கூத்தாடி போட்டு உடைச்சுட்டானாம்.அதிகம் ஆடுன அம்புட்டுத்தான்  இதன் தத்துவம் .

நண்டு : நீ  ஜிண்க்கா  இப்ப போட்ட மாதிரி.

நொரண்டு : ஏய் என்னப்பா ,எனக்கே வா ? .

நண்டு : இது சித்து .

நொரண்டு : அப்படினா ?.

நண்டு : சித்து  நேரடியாக தரும் பொருளை விட மறைமுகமாக தரும் பொருள் மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.அது தான் சரியானது.

நொரண்டு :அப்படினா சித்து சுத்துனு சொல்ர.

நண்டு : ஆம். அப்படித்தான்.

நொரண்டு : சித்து தெரியுது ,சுத்து என்ன ?.

நண்டு :  பல உண்டு.


நொரண்டு : என்ன பலதா.

நண்டு :  ஆமாம்.

நொரண்டு :சரி சிலத சொல்லு.

நண்டு :  முதல ,எனக்கு  தெரிஞ்சத சொல்ரேன்.

நொரண்டு :ம்...

நண்டு : நந்தவனத்தில் ஓர் ஆண்டி- நந்தவனத்தில் இருக்கும்  ஆண்டியை ஏன் பாடனுங்கரது என் முதல் கேள்வி ?.

நொரண்டு சரிதான் .ஆமாம்,ஏன் சுடுகாடு,கோயில் இப்படியான இடத்தில இருக்கிற ஆண்டிகளை பாடாம ஏன்  நந்தவனத்தில் உள்ள ஆண்டிய வைத்து பாடினார் ?.

நண்டு :பாடல் படி குயலனை வேண்டினால் தோண்டி கிடைக்கும் ,ஒரு தோண்டி போனால் என்ன ?.அடுத்து வேண்டவேண்டியது தானே அடுத்த நாலாறு மாதம்?.

நொரண்டு :ம்.

நண்டு :  தோண்டி கிடைத்ததற்கு கூத்தாடியதும் ,உடைந்ததற்கு வருத்தப்பட்டதும் ஆண்டிகளின் இயல்பில்லையே ?.

நொரண்டு : ஆமாம்,ஆண்டிகளில் இயல்பில்லை தான் .

நண்டு : ஆண்டிகள்  மகிழ்ச்சி,துக்கம் எதுவும் இல்லாதவர்கள்.

நொரண்டு :ஆமா இல்ல ! ?.

நண்டு :   ''பிச்சையென் றொன்றுங்கே ளாதே '' என பாடி தோண்டி மேல் பற்று வைக்க காரணம்.

நொரண்டு :ஓ
 
நண்டு : இது தமிழின் நிலையையும்,மக்களின் நடவடிக்கையையும் நகைப்பதோடு ,தமிழ் அரசுகளை ஏளனம் செய்தும் ,தமிழ் அரசுகள் தமிழுக்கு செய்யும்  துரோகத்தை சுட்டிக்காட்டியும் செல்வதை உணர்ந்தேன்.

நொரண்டு :எப்படி சொல்ர.
 
நண்டு :  ஒரு சின்ன சோதனை.


நொரண்டு : சொல்லு செஞ்சரலாம்.

நண்டு :  எந்த காலத்துக்கு இந்த பாடலை பொருத்திப்பார்க்களாம்.

நொரண்டு :எப்படி பொருந்தும்.

நண்டு :  ம்.ஒரு  சிறு விளக்கம் மட்டும் தரேன்.நீ பொருத்து பார்.அப்புறம் தெரியும் ,சித்தர்களின் சித்துக்கள்.

நொரண்டு :சரி சொல்லு முயற்...சிக்..கிறேன்.

நண்டு :நன்று.

இப்பாடலில்,


நந்தவனம் என்பது  அனைத்து விதத்திலும் செழுமையாக இருந்த தமிழ் தேசத்தை  குறிக்கிறது.

 நொரண்டு : சரி .

நண்டு : ஆண்டி என்பவர் இங்கு தமிழ் மூதாதைகளை குறிக்கிறது.

 நொரண்டு : சரி . 


நண்டு : குயவன் என்பவர்   இங்கு  உருவாக்கும் புலமை பெற்றவர் தமிழ் ஆதைகளை குறிக்கிறது .  

நொரண்டு : சரி .

நண்டு : தோண்டி என்பது இங்கு அள்ள அள்ள குறையாது ,புதுப்புது கருத்துக்களை உற்பத்தி செய்து வரும் மெருகேற்றப்பட்ட இலக்கியமும் ,அதன் பால் வளமான இலக்கணத்தையும் கொண்ட  தமிழ் மொழியை குறிக்கிறது .

நொரண்டு : சரியாக சொல்லப்போனால்.

நண்டு : வழக்கு மொழியினின்று  மேன்மையாக்கப்பட்ட தமிழ் மொழியை குறிக்கிறது .

நொரண்டு : சரி .
 
மெத்த கூத்தாடி மற்றும்  கூத்தாடி  என்பது ஆளும் நபரையும்,மக்களிடம் எப்படி நடிப்பது என்பதனை சரியாக தெரிந்த  நபர்,நடனம் ஆடிகளையும் குறிக்கிறது என எடுத்துக்கொண்டு .சமீப காலத்திற்கு பொருத்திபார்.  

நொரண்டு : சரி .
 
நண்டு :சரி சொல்லிக்கிட்டு இருக்காத .பொருத்திப்பார்.

நொரண்டு :நீயே சொல்லப்ப,எனக்கு புரியல.

நண்டு :செழுமைப்படுத்தி  நமக்கு நமது முன்னோர்கள்  விட்டுச்சென்ற நமது தமிழ் மொழியை தமிழகத்தை ஆண்ட அரசர்கள் மேலும் செழுமைப்படுத்தாமல் தமிழுக்கு துரோகம் செய்து தமிழை நடுக்காட்டில் விட்டுவிட்னர் .

நொரண்டு   :சரியா சொன்ன .எப்படி இந்த முடிவுக்கு வந்த?.

நண்டு : திருவள்ளுவர்,அகத்தியர்,தொல்காப்பியர்,சித்தர்கள் இவர்கள் போன்றவர்கள்  எல்லாம் அரசர்கள் அல்ல.

நொரண்டு : அரசர்களால் போற்றப்பட்டவர்கள்.

நண்டு :அது ஒரு பார்வை.ஆனால்,தூரத்து பார்வை.

நொரண்டு :ம்...
 
நண்டு :தனிப்பட்ட தமிழர்களால் தான் தமிழ் என்றும்  வளர்ந்து வந்துள்ளது என்பது வரலாறு.

நொரண்டு : இப்ப கூடவா.

நண்டு :  எப்பவும் ,
இப்ப கூட  சமீப காலத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பத்திரிக்கைகள் , சிறு பத்திரிக்கைகள் செய்த சேவைகள் சில மிகவும் சிறப்பாக இருந்து வந்தது. இவைகள் தனிநபரால் இயக்கப்படுபவைகள்.
ஆனால் ,அப்படிப்பட்ட ஒரு சேவையைக்கூட  அரசு செய்யவில்லைனு தான் சொல்லனும்.


நொரண்டு :ம்.

நண்டு :துரோகங்களை சொல்லனும்னா ,சொல்லிக்கிட்டே  போகலாம்.

நொரண்டு :
 
நண்டு : ஆனால்,தமிழன் ஒன்றே ,ஒன்றை புரிந்துகொண்டு நடக்கவேண்டும் .
 
நொரண்டு : எதப்பா.

நண்டு : அதையும் சித்தரே சொல்ரார்.

நொரண்டு :என்னானு ?

நண்டு : 
 
"நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு"

நொரண்டு : ஓ...சரி தான் .ஆனா  'பரமனை நத்தியே' னா ?.
 
நண்டு : இதுவும் சித்தின் சுத்து தான் .

சித்தர் பாடலில் மறைத்துள்ள இரகசியம்
 இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

படங்கள் உதவி கூகுள்.


Download As PDF

21 கருத்துகள்:

இக்பால் செல்வன் சொன்னது…

உண்மை தான் தமிழை வளர்க்க அரசுகள் செய்தவை இம்மியளவு தான் .. தமிழ்நாட்டு அரசு தமிழை வளர்க்க எவ்வளவோ செய்யக் கூடியதாக இருந்தும் செய்யத் தவறிவிட்டார்கள் ... ஆனால் தனி நபர்கள் பலர் சொந்த முயற்சியில் செய்த செய்துக் கொண்டிருக்கும் பணி அளவில்லாதது எனலாம் ... !!! இலங்கையில் தமிழரசு ஏற்பட்டு இருக்குமாயின் அங்கு தமிழ் மேலும் வளர்ந்திருக்கும் ஆனால் கெட்டநேரம் அங்கு ஒரு தமிழரசு அமையவே இல்லை ... !!! மலேசியா, சிங்கப்பூரில் அரசு ஆதரவு ஓரளவு தமிழ் வளர்க்கப் பயன்பட்டாலும் தாய் தமிழகத்தின் மந்த நிலையில் அங்கும் வளர்வதில் இடர்பாடுகளே அதிகம் எனலாம்.

இன்னொன்று தமிழை செம்மையாக வளர்த்ததில் சமணர்களின் பங்கு மிக மிக அதிகம். அவர்கள் அரசோ அரசினையோ சாரவில்லை .. தாமாகவே தமிழ் வளர்த்தனர் .. ஆரம்ப கால சங்கங்கள் அனைத்துக்கும் வித்திட்டவர்கள் ... !!! சமணர்களை அடியொற்றியே பிற்கால பௌத்த, சைவ,வைணவங்கள் தமிழ் வளர்த்தன ... !!!

Ramani சொன்னது…

பதிவின் கருத்தும்
பாடலுக்குக்கான
வித்தியாசமான
அருமையான
புதுமையான
விளக்கமும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

ரெவெரி சொன்னது…

வேதனை...

வரலாற்று சுவடுகள் சொன்னது…

ஆழ்ந்த கருத்துக்கள்! அருமையான என்று சொல்வதை விட எளிமையான விளக்கம்!

மதுமதி சொன்னது…

அருமையானதொரு கருத்தை தாங்கி வந்த பதிவு.சித்தர் பாடலின் மூலம் புதியதொரு விளக்கம் சாலப் பொருந்தியது.தற்குறிப்பேற்ற அணி எனக்கு ஞாபகம் வந்தது.

s suresh சொன்னது…

சித்தர் பாடலைக் கொண்டு சிறந்த புதிய கருத்தினை சிறப்பாக பகிர்ந்தமைக்கு பாராட்டுக்களும் நன்றியும்!

HOTLINKSIN.COM திரட்டி சொன்னது…

டயலாக்கை நன்றாகவே ரசித்தோம்... துரோகம் செய்தால்தானே அது அரசு...

மகேந்திரன் சொன்னது…

மறுக்க
மறைக்க முடியாத உண்மை...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை தான்.
நன்றி. (த.ம. 5)

Doha Talkies சொன்னது…

மிகவும் நன்றாக இருந்தது நண்பரே.

ஹேமா சொன்னது…

விதி வலியது .... உண்மையோ !

Seshadri e.s. சொன்னது…

மிகவும் அருமை! தொடர்க!
-காரஞ்சன்(சேஷ்)

koodal bala சொன்னது…

அருமை!

tamilodupayanam சொன்னது…

நன்று..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்லாவே அரசு நடத்துறாங்க துரோகங்களுக்கு குறைவில்லாமல்...!

வெங்கட ஸ்ரீநிவாசன் சொன்னது…

உடம்பையும் மனதையும் சரியாகப் பேணிக்காக்காமல் விட்டுவிடுவதைக் குறிப்பதாகத் தான் பொதுவாகக் கருத்துச் சொல்வார்கள். தங்களின் கருத்து மேலும் ஒரு படி மேலே போய் வேறு வேறு விளக்கங்களைத் தருகிறது. நல்லதோர் வீணை நலங்கெட புழிதியில் வீழ்ந்திருப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

T.N.MURALIDHARAN சொன்னது…

நண்டு நொரண்டு சொல்வது சரிதான்.

E.B.Mohan B.A.,B.L., Advocate Erode-11 சொன்னது…

thamil valha Board vaithathe periya thamil thondu

rajukannanbalasubramaniam சொன்னது…

எந்த பொருளும் வளர ஒரு ஊடகம் தேவை அது போல தமிழ் வளர தமிழர்கள் தேவை.பிற மொழி மக்கள் கலப்பால் தமிழ் மெல்ல மெல்ல தன்னையே இழந்த்து வருகிறது.நானோ க்கு கீழேயும் ஆயிரம் கோடிக்கு மேலேயும் எண் இலக்கத்திற்கு பெயர் வைத்துள்ள நம் முன்னோர்கள் கொடுத்துள்ள தமிழ் எண்களையே நாம் மறந்துவிட்டோம்.தமிழ் மேல் பற்று கொண்ட அரசு வந்து தமிழை மீட்டெடுக்கும் என்பது கண்வே

பெயரில்லா சொன்னது…

arasai nambinaal maanaada mayilaada alladhu karnataka kachcheri dhaan nammal mudindhadhai seivom nichchyam nanmai payakkum
nandri
surendran

புலவர் சா இராமாநுசம் சொன்னது…


தமிழ், தன்னை வளர்ப்பதே கொள்கை யெனச் சொல்லி வந்த தமிழக அரசுகள், தமிழ் அன்னையை வளர்ப்பதற்குப் பதிலாக,தன்னை(தம்மை) வளர்த்துக் கொண்டார்கள் என்பதை மிக அழகாக பழைய பாடலுக்கு
புதிய விளக்கம் தந்து விளக்கிய தங்களுக்குக் கோடான கோடி நன்றி! நன்றி!

கருத்துரையிடுக

தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு;
மானம் பெரிதென உயிர் விடுவான்; மற்றவர்க்காக துயர்படுவான்;
தானம் வாங்கிட கூசிடுவான்; தருவது மேலென பேசிடுவான்;

Bloggers.com

Nandunorandu - Find me on Bloggers.com