ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

எதிர்மறை எண்ணங்கள் .எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.

வளைந்து வளைந்து
பாதை சென்றாலும்
பாதை பாதையினின்று
வளைந்து சென்றதில்லை .

வளமான பாதையில்
சுழல நினைத்தாலும்
சுழலும் பாதையில் சுகம்கண்டதால்
வளமான வாழ்விற்கு வக்கில்லை.

எப்பொழுதும் எல்லோர்க்கும்
எப்பொழுதும்  வாய்ப்பதில்லை
எப்பொழுதென்பது  எப்பொழுது என்றாலும்
எப்பொழுதென்பது  எப்போதும் இங்கில்லை.

சோக ரேகை
மனதினில் தோன்ற
சோம்பல் ரேகை
முகத்தில் தொலைவதில்லை .

மறக்கும் எண்ணம்
நினைவினில் தோன்ற
நினைக்கும் எண்ணம்
மறப்பதை தொலைப்பதில்லை.

எதற்காகவோ வாழ்வு என்றாலும்
எதற்காக வென்பதே
நமக்காகும் போது
நமக்கா வென்பது ஏதும் இங்கில்லை.

இல்லை யென்பது
இங்கில்லை யென்றாலும்
இல்லை இல்லாமல்
இங்கொன்றும் இல்லை .

எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறை யென்றாலும்
எதிர்மறை எண்ணங்கள்
எண்ணாமல் முடிவதில்லை.

எப்படி யென்றாலும்,

எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.
.

.

மீள்வு..
Download As PDF

17 கருத்துகள் :

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான, அழகிய கவிதை. நண்பர் ஈரோடு வழக்கறிஞர் இராஜசேகர் அவர்களின் கவிதை. வாழ்த்துகள் திரு இராஜசேகர்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான, அழகிய கவிதை. நண்பர் ஈரோடு வழக்கறிஞர் இராஜசேகர் அவர்களின் கவிதை. வாழ்த்துகள் திரு இராஜசேகர்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிந்திக்க வைக்கும் கருத்துள்ள வரிகள்...

மிகவும் பிடித்த வரிகள் :

/// எப்பொழுதும் எல்லோர்க்கும்
எப்பொழுதும் வாய்ப்பதில்லை
எப்பொழுதென்பது எப்பொழுது என்றாலும்
எப்பொழுதென்பது எப்போதும் இங்கில்லை. ///

பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 3)

வரலாற்று சுவடுகள் சொன்னது…

நல்ல கவிதை ராஜா சார்!

அதிலும் இந்த வரிகள் அழகு எனக்கு பிடித்திருக்கிறது

//எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறை யென்றாலும்
எதிர்மறை எண்ணங்கள்
எண்ணாமல் முடிவதில்லை///

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

வளைந்து வளைந்து
பாதை சென்றாலும்
பாதை பாதையினின்று
வளைந்து சென்றதில்லை .

அருமை அன்பரே..
ஏனோ இந்தப் பாதையில் நீண்ட நேரம் நின்றுவிட்டது மனது..

Lakshmi சொன்னது…

நல்ல கவிதை. வாழ்த்துகள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - அருமை அருமை கவிதை அருமை - நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் _ நட்புடன் சீனா

சின்னப்பயல் சொன்னது…

எப்பொழுதும் எல்லோர்க்கும்
எப்பொழுதும் வாய்ப்பதில்லை/// கருத்து போட்டுத்தாக்றீங்களே வக்கீல் சார்...நடத்துங்க இது உங்க கோர்ட்.!

துரைடேனியல் சொன்னது…

அருமை சகோ.

ரமேஷ் வெங்கடபதி சொன்னது…

இருப்பதை இழக்க விரும்பாமை சந்தர்ப்பங்களை சக்தி இழக்க செய்துவிடுகிறது!


வித்தியாசமான சிந்தனைகள்!

நன்று! வாழ்த்துகள்!

HOTLINKSIN தமிழ் திரட்டி சொன்னது…

வாழ்வின் நடைமுறை கவிதையாக உருவெடுத்திருக்கிறது...

G.M Balasubramaniam சொன்னது…

நிதர்சன எண்ணங்கள் அழகு கவிதையில். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

T.N.MURALIDHARAN சொன்னது…

கருத்துகளோடு வார்த்தை ஜாலங்களும் இணைந்து கவிதைக்கு அழகு சேர்க்கிறது.

s suresh சொன்னது…

வித்தியாசமான சிந்தனையோடு சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில்
இதோ ஒரு நிமிஷம்!
மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
http://thalirssb.blospot.in

FOOD NELLAI சொன்னது…

//சோக ரேகை
மனதினில் தோன்ற
சோம்பல் ரேகை
முகத்தில் தொலைவதில்லை .//
சோகத்தை விரட்டச்சொல்லும் வரிகள் அருமை.

வேடந்தாங்கல் - கருண் சொன்னது…

யதார்த்தம்...

Doha Talkies சொன்னது…

மிக அருமை நண்பா...

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "