வெள்ளி, 21 செப்டம்பர், 2012

என் ரோஜாத் தோட்டம்  

                                                   என் ரோஜாத் தோட்டம்
                                                   மலரும் மணக்கும்
                                                   நானில்லாவிட்டாலும்.
.======
                                                    கனவு ...
                                                    கதை எழுதுகிறேன் ...
                                                    நிஜம்  ...? .======


                                         படிந்தவைகளை  அகற்ற அகற்ற
                                         மீண்டு மீண்டும்  படியும்  தூசுகள்
                                         சோகம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@நொரண்டு :   ம் ....ம் ....ம் .... ஆகா ..ஆகா....காஆககா ....
வணக்கம் நண்டு . 

நண்டு :வாங்க நொரண்டு ,என்ன  முனகல் . 

நொரண்டு :அது ஒன்னுமில்லை ,கவிதை ஒன்னு புரியல அதான் . 

நண்டு :ம் ... 

நொரண்டு :நீ பாட்டுக்க   ம் ....போட்டுட்டே போ . 

நண்டு :சரி விசயத்துக்கு வா 

நொரண்டு :நீ சிற்பா னு சொல்லுவியே அது ஹைக்கூ தானே. 

நண்டு : இல்லை. 

நொரண்டு :அப்ப என்ன 

நண்டு : இது சிற்பா அவ்வளவே . 

நொரண்டு :சரி ...சரி...சரி...எனக்கு சில ஹைக்கூவிற்கு ,
மன்னிக்கவும் ...மன்னிக்கவும் ... அப்படியே வாய் வருது, சரிப்பா சிற்பாவிற்கு அர்த்தம் சொல்லவும். 

நண்டு : கவிதைக்கு அர்த்தம் கேட்பது அபத்தம் நொரண்டு. 

நொரண்டு :ஓ...ஓ...ஓ...எனக்கு புரியலையே நான் என்ன செய்ய ?. 

நண்டு : எனக்கு புரிந்ததை  சொல்ரேன் ,இது சிற்பா எழுதியவருக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை  தெரிஞ்சு புரிஞ்சுக்கோ. 

நொரண்டு :சரிப்பா. 

நண்டு : சரி சிற்பாவை சொல். 

நொரண்டு : ம் ...
 
படிந்தவைகளை  அகற்ற அகற்ற
மீண்டு மீண்டும்  படியும்  தூசுகள்
சோகம் 

நண்டு : ம் ...தூசுகள் படிய படிய வரும் ,அது போல சோகம் . 

நொரண்டு :இது தெரியாத.வேற ... 

நண்டு :  ம்...

சோகம் என்பது ஒரு உணர்வு .அது பல வகையினால் ஏற்படும்.
தூசுகள் படிய படிய ஏற்படும்.

தூசுகள் படியாமல் இருக்கவேண்டும் என்றால் நாம் மட்டும் அல்ல நமது சுற்றமும்,சூழலும் சுத்தமாக இருந்தால் தான் தூசு படிய வாய்ப்பில்லாமல் போகும்.அது போலத்தான் சோகமும் .சுற்றம் சரியல்லை என்றால் ....

தூசுகள் இங்கு படிமம். அதன் படிமம் சோகம்.

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்,
ஆனால் ,எழுதினவன் ,என்ன நினைச்சு எழுதினானோ ,
நமக்கு என்ன தெரியும். 

நொரண்டு : சரி ....

என் ரோஜாத் தோட்டம்
மலரும் மணக்கும்
நானில்லாவிட்டாலும்.

இதுக்கு  

நண்டு : இதில் பெரிய விசயம் அடங்கியிருக்குப்பா .ஆளைவிடு ....
நன்றி : படங்கள் உதவி கூகுள் மற்றும் இணையம் .Download As PDF

16 கருத்துகள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

அனைத்தும் மிக மிக அருமை .......உங்கள் பகிர்வுக்கு நன்றி.....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சோகம் - விளக்கம் அருமை...

பெரிய விசயம் (அப்புறம் என்கிட்டே மட்டும் சொல்லிடுங்க... ஹா.. ஹா...)

குட்டன் சொன்னது…

சித்தப்பா,சாரி, சில்பா,சாரி,சிற்பா நல்லாருக்குங்கோ!

குட்டன் சொன்னது…

த.ம.3

கும்மாச்சி சொன்னது…

எஸ்.ரா. எல்லாவற்றிக்கும் நீங்களே விளக்கமும் கொடுத்துவிட்டீர்கள். அருமை.

தொழிற்களம் குழு சொன்னது…

இதுதான் நண்டு நொரண்டா..?

Sasi Kala சொன்னது…

அருமை அருமை.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அசத்தல்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உரையாடல் அருமை...

சோகத்திற்கான விளக்கம் அருமை...

நான் இதை துளிப்பா என்பேன்...

மாதேவி சொன்னது…

அருமை.

Doha Talkies சொன்னது…

//என் ரோஜாத் தோட்டம்
மலரும் மணக்கும்
நானில்லாவிட்டாலும்.//

இதற்க்கு விளக்கம் கொடுங்களேன் ப்ளீஸ் அண்ணா

ஹேமா சொன்னது…

மூன்றுமே அருமை !

வரலாற்று சுவடுகள் சொன்னது…

கலக்கல் தல!

G.M Balasubramaniam சொன்னது…


சில நேரங்களில் எழுதியதற்கு விளக்கமும் கொடுக்க வேண்டியவையே சிற்பாவோ.?

ராஜி சொன்னது…

ஹைக்கூ க்கு தமிழ் பேரு ”சிற்பா”வா? நல்லா இருக்கே.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ந்ண்டு - மூன்று குறுங்கவிதைகளும் அவற்றின் விளக்கங்களும் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "