சனி, 29 டிசம்பர், 2012

டைரிகள் .
பக்கங்கள்
நாட்களாக

நாட்கள்
எண்களாக

நிரப்பப்பட்டு

பல
நிறங்களில்
வடிவங்களில்
நேர்த்திகளில்

பலப்பலரின்
கைகளில்
பலப்பல
காரணங்களுக்காக

வருடா வருடம்
வருடங்களைத் தாங்கி

வாழ்க்கை
கரையாக
பயணிக்கின்றன
டைரிகள் ...


எல்லோரும்
டைரிகள்
எழுதுவதில்லை
எல்லா
டைரிகளும்
எழுதப்படுவதும் இல்லை
ஆனால்
எல்லோரும்
டைரிகளை விரும்புகின்றனர்


எழுதும்
பக்கங்களைவிட
எழுதாத
பக்கங்களே
டைரியில்
மிகுதி

எழுதிய
டைரிகளைவிட
எழுதாத
டைரிகளே
மிக அதிகம்

டைரியில்
புதைந்த வாழ்வுகளும்
டைரியாக
புதைந்த வாழ்வுகளும்
உண்டு

ஒரு டைரியின்
வாழ்வு
முடிகிறது
ஒரு வருடத்தில்.
எழுதப்பட்டோ
எழுதப்படாமலோ


எப்படியிருந்தாலும்

குதூகலமாக
அழகாக
ஆரம்பிக்கிறது
ஒவ்வொரு
டைரியின்
வாழ்வும்


தனக்கு முன் இருந்ததன்
வாழ்வு
எவ்வாறு முடிக்கப்பட்டது
என
அறியாமலே ...

மனிதனை போல...
.
.

Download As PDF

25 கருத்துகள் :

T.N.MURALIDHARAN சொன்னது…

//ஒரு டைரியின்
வாழ்வு
முடிகிறது
ஒரு வருடத்தில்.
எழுதப்பட்டோ
எழுதப்படாமலோ//

நல்ல கவிதை.

Lakshmi சொன்னது…

ரொம்ப சரியா சொன்னீங்க.

தங்கம் பழனி சொன்னது…

கரெக்ட்.. நீங்க சொல்றது சரிதான்.

சின்னப்பயல் சொன்னது…

எல்லோரும்
டைரிகள்
எழுதுவதில்லை
எல்லா
டைரிகளும்
எழுதப்படுவதும் இல்லை
ஆனால்
எல்லோரும்
டைரிகளை விரும்புகின்றனர் ////

அருமை

jk22384 சொன்னது…

wrong Diary doesn't die even if not written. It is reused.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எழுதும்
பக்கங்களைவிட
எழுதாத
பக்கங்களே
டைரியில்..

சிறப்பான பகிர்வுகள்..

நல்ல நேரம் சதீஷ்குமார் சொன்னது…

இப்பல்லாம் பெஸ்புக்லியே எழுதிடுராங்க..டைரியெல்லாம் எழுதி ஆதாரத்தை யாரு விட்டுட்டு போக போரா

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - அருமையான் சிந்தனை - கவிதை அருமை - உண்மை நிலை இதுதான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கும்மாச்சி சொன்னது…

நல்ல கவிதை

"எழுதாத பக்கங்களே டைரியில் மிகுதி".

ஒரு வேளை என் டைரியைப் பார்த்திருப்பாரோ.

வரலாற்று சுவடுகள் சொன்னது…

நல்ல கவிதை ராஜா சார்.!

G.M Balasubramaniam சொன்னது…


ஒரு காலத்தில் டைரி எழுதும் பழக்கம் இருந்தது. டைரி என்றால்நோட்டுப் புத்தகம்தான். இன்று அந்த டைரியின் பக்கங்கள் நிறையவே உணர்த்துகின்றன. ஆண்டு துவக்கத்தில் டைரியின் நினைப்பு எதார்த்தம். அருமை. வாழ்த்துக்களுடன்.

Rathnavel Natarajan சொன்னது…

அருமை. நன்றி.
எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Jeyamaran .A சொன்னது…

/*
எழுதும்
பக்கங்களைவிட
எழுதாத
பக்கங்களே
டைரியில்
மிகுதி
*/


அண்ணா என்னோட டைரில பெற தவிர எதுவும் எழுதலா அண்ணா............--
என்றும் நட்புடன்
$ஜெயமாறன் நிலாரசிகன் $

நாமக்கல் சிபி சொன்னது…

டைரிகளின் வாழ்க்கை அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது! அருமை!

பழனி.கந்தசாமி சொன்னது…

//எழுதும்
பக்கங்களைவிட
எழுதாத
பக்கங்களே
டைரியில்
மிகுதி //

உண்மை. என் டைரி அப்படித்தான் இருக்கிறது.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

குதூகலமாக
அழகாக
ஆரம்பிக்கிறது
ஒவ்வொரு
டைரியின்
வாழ்வும்


தனக்கு முன் இருந்ததன்
வாழ்வு
எவ்வாறு முடிக்கப்பட்டது
என
அறியாமலே ...

மனிதனை போல...

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

// தனக்கு முன் இருந்ததன்
வாழ்வு
எவ்வாறு முடிக்கப்பட்டது
என
அறியாமலே ...

மனிதனை போல...//

முத்துப் போன்ற முடிவு! ஆம்! முத்தான கவிதை!

s suresh சொன்னது…

அருமை! அருமை! என்னிடமும் எழுதாத டைரிகள் குவிந்து விட்டன!

கவியாழி கண்ணதாசன் சொன்னது…

அருமையான்ன பதிவு வாழ்த்துக்கள்

DiaryAtoZ.com சொன்னது…

என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்நாடு LIST OF HOLIDAYS

ganesamoorthy சொன்னது…

sollathathum unmai... nice!
Happy 2013!

Sasi Kala சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வால்பையன் சொன்னது…

//ஒரு டைரியின்
வாழ்வு
முடிகிறது
ஒரு வருடத்தில்.
எழுதப்பட்டோ
எழுதப்படாமலோ //

நான் எப்பவும் பழைய டைரி தான் யூஸ் பண்றது :)

குட்டன் சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Avargal Unmaigal சொன்னது…


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "