செவ்வாய், 25 ஜூன், 2013

மீட்பாளர் மோடியால் வந்த தடை .



புனிதயாத்திரை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தாமல்,
பாதிக்கப்பட்டவர்களைப்பற்றி கவலைப்படாமல்,
காப்பாற்ற சென்றவர்கள், செல்பவர்களைப்பற்றி  கதைப்பது என்ன புத்தியோ,சுயநல அச்சத்தில் உழலும் அற்பங்களுக்கு. 

 குஜராத் பக்தர்களை மோடி மீட்டதிலிருந்து காங்கிரசுக்கும் மற்றவர்களுக்கும் இப்ப அதிகம்  நமோனியா பிடித்துவிட்டதாக சமுக பார்வையாளர்கள் கூற்றாக உள்ளது.


குஜராத் பக்தர்கள் 15ஆயிரம் பேரை நரேந்திர மோடி மீட்டதோடு ,மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் பா.ஜ.க. தொண்டர் படை மூலம் 1000-த்துக்கும் மேற்பட்ட முகாம்களை அமைத்து ,அதன் மூலமும் பலர் காப்பாற்றப்பட்டு வருவதும் தெரிகிறது .

அதனால் மத்திய அரசு  


முக்கிய  பிரமுகர்களுக்கு தடை விதித்துள்ளது.
இது மீட்பாளர் மோடியால் வந்த தடை  என்றும் 
அவரால் 15ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டதால் தான் இந்த தடை என்றும் சில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

எது எப்படியோ மக்கள் காக்கப்படவேண்டும்.














Download As PDF

செவ்வாய், 18 ஜூன், 2013

மோடியை எதிர்ப்பவர்களுக்கு எனது ஆதரவு.





சென்ற எனது பதிவை படித்த எனது வழக்கறிஞர் நண்பர் இளங்கோவன் மற்றும் சில நண்பர்களின் கேள்விகளுக்கான விளக்கமாக,எனது பதிலாக என் இந்த பதிவு.

முதலாவதாக எனது முந்தைய பதிவுகளை படித்துப்பார்க்குமாறு எனது நண்பர்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.படித்துப்பார்க்கவும் இளங்கோவன் படித்துப்பார்க்கவும். 

மோடி பற்றிய பதிவுகளை ,தகவல்களை அனுப்பிய நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வணக்கத்துடன் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியல் அறிவு என்பது நாம்மவர்களுக்கு இருக்கிறதா என்பதே எனக்கு முதலில் சந்தேகமாக உள்ளது.

படித்தும் வளராத பாமரர்கள் தான் இங்கு அதிகம் உள்ளனர்.

நம்மவர்கள் கரும்பலகையில் கல்வி கற்பதால் ,
பலகை மூளையுடன் கருமை எண்ணத்தவர்களாக அலைகின்றனர்.

ஆடுகளை விட அதிகம்மந்தைகளாக இங்கு அனைவரும் இருக்கின்றனர்.

2014-பாராளுமன்ற தேர்தலில் மிகசிறந்த நல்லவரையே பிரதமராக மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற எண்ணத்தால் என் இந்த எழுத்துக்கள் .

அதன் முதல் படியாக

மோடியை எதிர்ப்பவர்களுக்கு எனது ஆதரவை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏன் எனில்  ....


தொடரும்.....








படங்கள் உதவி  நன்றி   இணையம்.
Download As PDF

திங்கள், 10 ஜூன், 2013

இந்தியாவின் அடுத்த பிரதமர்-நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.



ஒவ்வொரு இந்தியரும் தனது அடுத்த பிரதமரிடம் மட்டுமே மிகஅதிக நல்லவைகளை எதிர்பார்க்கின்றனர் .

என்னைப்பொறுத்தவரை நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வெறும்கட்சிகளுக்கிடையேயான தேர்தல் அன்று.

நல்ல தலைவனுக்கும் நாட்டு மக்களுக்குமிடையேயான நேரடியான தேர்தல் ஆகும்.

இந்த தேர்தல் இந்திய வரலாற்றை மாற்றியமைக்கும் தேர்தலும் ஆகும் .

இந்நிலையில் பிரதமர் தேர்தலுக்கான தனது பக்க நகர்வை நரேந்திர மோடியை களம் இறக்கி ஆரம்பித்துள்ளது பா.ஜ.கா.அதற்காக முதற்கண் பா.ஜ.காவிற்கு எனது வணக்கங்கள், நரேந்திர மோடி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

என்னைப்பொறுத்தவரை இந்த தேர்தல் வெறும்கட்சிகளுக்கிடையேயான தேர்தல் அன்று.

நல்ல தலைவனுக்கும் நாட்டு மக்களுக்குமிடையேயான நேரடியான தேர்தல் ஆகும்.

இந்த தேர்தல் இந்திய வரலாற்றையே  மாற்றியமைக்கும் தேர்தல் ஆகும் .


முந்தைய தேர்தல் வரை தனது எண்ணத்தை,எதிர்பார்ப்பை ஓட்டுப்பெட்டியில் மட்டுமே காட்டிவந்தவர்கள்.தற்பொழுது தாங்கள் ஓட்டுப்பெட்டிக்கு போவதற்கு முன் தங்களின்  எண்ணத்தை,எதிர்பார்ப்பை அனுதினம் வலைத்தளங்களின் காட்டி,அதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்திவிடுவர்.

என்னைக்கேட்டால்  மக்களின் கருத்தை,எண்ணத்தை,எதிர்பார்ப்பை அங்கிகரிக்கும் ஒருவரே மிக நல்ல தலைவராக இருப்பார்.இருக்க முடியும்.அத்தகைய ஒரு அரசியல் தலைவரை அடுத்த பிரதமராக பார்க்க நான் விரும்புகிறேன்.மக்களின் கருத்தரிய முதலில் கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கவேண்டும்.அப்படிப்பட்ட ஒரு வெளிப்படையான தலவரையே நான் விரும்புகிறேன்.

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதனை  இணையமும் தீர்மானிக்கும் என்றே நினைக்கிறேன்.ஒவ்வொரு மனிதரும் தனது கருத்தையும், எண்ணத்தையும்,எதிர்பார்ப்பையும் அங்கிகரிக்கும் தலைவரையே மதிக்கின்றனர். எனவே இந்த தேர்தலில் இணைய பயணிகள் மிக முக்கிய பங்கு வகிப்பர் என்பது திண்ணம்.




அடுத்த பிரதமரிடம் எனது எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது அடுத்த பதிவில்.











.

படங்கள் உதவி  நன்றி  THE HINDU .
.
Download As PDF

திங்கள், 3 ஜூன், 2013

நூற்றாண்டு கால வரலாற்று ஆசிரியனின் உறக்கம் - முதல் பலி தமிழன்.





சரியாக கணித்து கூற முடியவில்லை ,
சுதந்திரம் பெறுவதற்கு சற்று முன்பிருந்து என எடுத்துக்கொள்ளலாம் .
இது எவ்வளவு சரி என்பதை விட ,இதனுள் பல சரிக்கள் இருப்பதால்,
இதனை சற்று நோக்கவேண்டியுள்ளது.

ஒரு ஒழுங்கமைவை நோக்கிய மனித குழுமத்தில் வரலாற்று ஆசிரியனின் கடமை என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று .ஆனால், கடந்த சில நூற்றாண்டுகளை நோக்க அத்தகைய கடமைகள்  எதையும் எந்த வரலாற்று ஆசிரியனும்  செய்ததாக அறியப்படவில்லை . இது வேதனையான விடயம் என்பதை விட ,இது மிகவும் விடமான விடயமும் ஆகும்.
இதனை விட  இதனால் யாருக்கு என்ன பாதிப்பு என்பதனை நோக்கும் பொழுது, இதனால் பாதிக்கப்பட்ட இனம் தமிழினம் என்பதனை அறியும் பொழுது ,இது பற்றி சிந்தித்து ,செயல்படாமல் முடங்கிப்போக சுயம் விடாமல் நச்சறித்து , விடியல் வழிகளை தேடி ,கிடைத்த  பதில்களில் ஒன்று நூற்றாண்டு கால வரலாற்று ஆசிரியனின் உறக்கம் இது என்பது.

வரலாற்று ஆசிரியன் உறங்க முடியுமா என்பது தான் எனது முதல் கேள்வியாக நூற்றாண்டு கால வரலாற்று ஆசிரியனின் உறக்கத்திற்கான பதிலுக்கு நான் கேட்டது .ஏனெனில்,உண்மையில் ஒரு வரலாற்று ஆசிரியன் எப்பொழுது உறங்குவான் என ஆய்ந்தால் ,அவன் தனது வரலாற்று மறைப்பில் தான் உறங்குவான் என்பது தெளிவான உண்மை .ஆனால்,அப்படி இல்லாத ஒரு வரலாற்று படிவத்தை நமக்கு முன் வைத்துவிட்டு சென்றுள்ள நமது கடந்த காலத்தை நாம் எப்படி சுவாசிப்பது என்பதற்கு ஒரு பதிலும் இல்லை . இப்படியான ஒன்று எப்படி, ஏன், எதற்காக,யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பது மிகவும் கவனமாக ஆய வேண்டிய முக்கியமான ஒன்றாகும் .இந்த ஆய்வு இல்லை எனில் நாம் நம்மை மாயையில் மடித்து வீணாய் போவோம் .
ஏதோ இது நமக்கு மட்டும் ஏற்பட்ட ஒன்றல்ல ,அனைவருக்கும் ஏற்பட்டது . முதல் பலி தமிழனும் ,தமிழினமும் என்பதுவே நிதர்சனமான உண்மை .

சரி இந்த உறக்க வரலாற்றை யார் கட்டமைத்தது ,எதனால் இவ்வாறு கட்டமைத்தார்கள் ,ஏன் , இதற்கான அவசியம் என்ன ,அதனால் யாருக்கு என்ன பயன் என ஆய.அவைகள் தெள்ளத்தெளிவாக எடுப்பார் கைப்பிள்ளையாகி விட்டிருப்பது தெரியவந்தது .தமிழன் அதனை எடுக்க முயற்சிக்கவே இல்லை என்பதை முந்தைய படிம வரை வரலாறு கூறுகிறது.அப்படியெனில் தமிழனுக்கு எதிராக யார் எடுத்தார்கள் என்பதனை நோக்க ,அது மிகவும் நீண்ட எண்ணிக்கை கொண்டது.அதில் காழ்ப்புணர்வு,காட்டுமிராண்டித்தம் மற்றும் சுரண்டல் மனே நிலையில் பிறந்து அடுத்தவரை ஏய்க்கும் ஓநாய் குரல் தீவு மனிதன்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது.அவர்களை பிறித்துப்பார்க்க முடியாதபடி அவர்கள் நல்லவர்களாக மிகவும்  லாவகமாக தங்களை படியவைத்திருப்பது  தெரியவரும் பொழுது , உண்மை மிகவும் கசப்பாகவும் , கடினமாகவும்,ஏற்க முடியாததாகவும் ,அதிலும் அறிவு சிறைபட்டும்,சிறுமை பட்டும் ,அழுத்தப்பட்டு அழுத்தப்பட்டு அமிழ்ந்துள்ளது  ....
















.
படங்கள் உதவி நன்றி . இணையம்  .



Download As PDF