செவ்வாய், 21 ஜனவரி, 2014

டைரிகள்.
பக்கங்கள்
நாட்களாக
நாட்கள்
எண்களாக
நிரப்பப்பட்டு

பல
நிறங்களில்
வடிவங்களில்
நேர்த்திகளில்

பலப்பலரின்
கைகளில்
பலப்பல
காரணங்களுக்காக

வருடா வருடம்
வருடங்களைத் தாங்கி

வாழ்க்கை
கறைகளாக
பயணிக்கின்றன
டைரிகள்.எல்லோரும்
டைரிகள்
எழுதுவதில்லை
எல்லா
டைரிகளும்
எழுதப்படுவதும் இல்லை
ஆனால்
எல்லோரும்
டைரிகளை விரும்புகின்றனர்


எழுதும்
பக்கங்களைவிட
எழுதாத
பக்கங்களே
டைரியில்
மிகுதி

எழுதிய
டைரிகளைவிட
எழுதாத
டைரிகளே
மிக அதிகம்

டைரியில்
புதைந்த வாழ்வுகளும்
டைரியாக
புதைந்த வாழ்வுகளும்
உண்டு

ஒவ்வொரு டைரியின்
வாழ்வும்
முடிகிறது
ஒரு வருடத்தில்
எழுதப்பட்டோ
எழுதப்படாமலோ

எப்படியிருந்தாலும்

குதூகலமாகவே
ஆரம்பிக்கிறது
ஒவ்வொரு
டைரியின்
வாழ்வும்
மனிதனை  போல்
தனக்கு முன்பு  இருந்ததன்
வாழ்வு
எவ்வாறு முடிக்கப்பட்டது
என
அறியா
அறியாமையுடன்.


.


.
மீள்வு
படங்களை அளித்த கூகுள் மற்றும் இணையங்களுக்கு நன்றி.
Download As PDF

10 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான சிந்தனை... வரிகள் உண்மை...

ராஜி சொன்னது…

எழுதிய
டைரிகளைவிட
எழுதாத
டைரிகளே
மிக அதிகம்
>>
எங்க வீட்டுலயே நாலு டைரி எழுதாம இருக்கு. உண்மையை எழுதுனா வூட்டுல பிரச்சனை வரும். மனசறிஞ்சு பொய் எழுதவும் வரல

புலவர் இராமாநுசம் சொன்னது…

எல்லோரும்
டைரிகள்
எழுதுவதில்லை
எல்லா
டைரிகளும்
எழுதப்படுவதும் இல்லை
ஆனால்
எல்லோரும்
டைரிகளை விரும்புகின்றனர்
உண்மைதான்!

Bagawanjee KA சொன்னது…

மறக்க முடியாதவை ..எழுதப்பட வேண்டியதுமில்லை ...அந்தரங்கம் புனிதமானது ...மனதில் அசை போடுவதே ஆனந்தம் ...
என் சிந்தனையை தூண்டிய உங்கள் டைரி அருமை !
த .ம 5

s suresh சொன்னது…

டைரியில் எழுதி வைத்துக்கொள்ளக் கூடிய கவிதை! அருமை! நன்றி!

Ramani S சொன்னது…

அற்புதமான கவிதை
வாழாது வெறுமனே கழித்த நாட்கள்
நிறைய என்பதை சொல்லாமல் சொல்லிப் போகும்
கவிதை வெகு அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S சொன்னது…

tha.ma 6

G.M Balasubramaniam சொன்னது…

எழுதினால்தான் டைரி.இல்லாவிட்டால் வெறும் காகிதப் பக்கங்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு @ நொரண்டு - டைரி பற்றிய பதிவு அருமை - உண்மை நிலையினை விளக்கும் பதிவு - ஒவ்வொரு வரியும் உண்மை நிலையினை விளக்குகின்றன - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஜெயசரஸ்வதி.தி சொன்னது…

////வாழ்க்கை
கறைகளாக
பயணிக்கின்றன
டைரிகள்////

Nitharsanam...!!!

வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

தொடர வாழ்த்துக்கள் ...!!!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "