திங்கள், 29 நவம்பர், 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல் யார் குற்றவாளி


This Report for the year ended March 2010 has
been prepared for submission to the President
under Article 151 of the Constitution என்று ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் தணிக்கை குழு அறிக்கை லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. 

இங்கு நாம் கவனிக்கப்படவேண்டிய மிக முக்கியமான விசயம் எது எனில் Article 151 of the Constitution . நாம் முதலில் இதனை விரிவாக பார்ப்போம் .

Article 148 ன் படி குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் இந்திய தலைமைத்தணிக்கையாளர் பதவி மிகவும் அதிகாரம் நிறைந்ததும் ,பொறுப்பு மிகவும் அதிகம் கொண்டதுமான ஒரு பதவி .அதனால் தான் இவரை எளிதில் பதவி நீக்கம்  செய்யமுடியாத படி அரசியல் சாசனம் எழுதப்பட்டது . ஒரு தேர்தல் ஆணையர் , ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோரை எவ்வாறு பதவி நீக்கம் செய்ய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதோ அத்தகைய நடைமுறைகள் கடைப்பிடித்து தான் இவரை பதவி நீக்கம் செய்ய முடியும் .நாடாளுமன்றத்த கூட்டி 2 சபையிலும் விவாதம் செய்து 3ல் 2 பங்குக்கு மேல் வாக்களித்து பிறகு குடியரசுத்தலைவரால் நீக்கப்படுவார் .அவ்வளவு முக்கியமான பொறுப்புள்ள பதவி .

இவரின் வேலை என்னானா  .மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவு கணக்குகளை ஒரு தணிக்கையாளர் என்ற முறையில் தணிக்கை செய்யவார் .Article 150 ன் படி மத்திய மற்றும் மாநில அரசுகளின் கணக்குகள் அனைத்தும் ,தலைமைத்தணிக்கையாளரைக் கலந்தாலோசித்துக் குடியரசுத்தலைவர் வகுத்துக்கொடுக்கும் படிவத்தில் வைத்து வரப்பட்டு அதனை Article 151 ன் படி குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் தாக்கல் செய்யவேண்டும் .

அவ்வாறு தாக்கல் செய்யப்படும் அறிக்கைகளில் ஏதாவது முறைகேடுகளோ அல்லது தவறுகளே இருந்தால் அவைகள் நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் விவாதிக்கப்பட்டு பின் சம்மந்தப்பட்ட துறையினரிடமும் ,அதற்கு பொருப்பு வகிக்கும் அமைச்சரிடமும் விளக்கம் கேட்டு முறைகோடோ ,தவறோ இருந்தால் துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்க நாடாளுமன்றம் தகுந்த ஆவன செய்யவேண்டும் .அதில் பிரச்சனைக்குறிய அமைச்சர் ராஜினமா மற்றும் பிற நடவடிக்கைகள் அடங்கும் .
இது முழுக்க முழுக்க  Article 77 கூறும் இந்திய அரசின் அலுவலக செயல்பாடுகளில் வரும் .Article 77(4) இந்திய அரசின் அலுவல்களைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளைத் தம் முன்னர் கொண்டுவரப்பட வேண்டும் என்று கேட்கும் அதிகாரம்  ,எந்த நீதிமன்றத்துக்கும் மற்றும் வேறு எவருக்கும் கிடையாது  என்கிறது .


இப்ப ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கு வருவோம் ...

அரசியல் சாசன நெறிமுறைகள் இதில் கடைப்பிடிக்கப்படவேயில்லை என்பது தான் எனது வாதமே .

முதலில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவு கணக்குகளை ஒரு தணிக்கையாளர் என்ற முறையில் இது சம்பந்தமாக இந்திய தலைமைத்தணிக்கையாளர்  வருடாவருடம் குடியரசுத்தலைவரிடம் தாக்கல் செய்திருக்க வேண்டும் .

இரண்டாவது அவைகள் நாடாளுமன்றத்தில் உடனே தாக்கல் செய்யப்பட்டு விவாத்த்திற்கு உட்படுத்தியிருக்க வேண்டும்

அதனை ஏன் 2003-04 இருந்து செய்யவில்லை .

நாட்டிற்கு இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது தானே அவரின் அரசியல் சாசனப்படியான கடமை .அதற்குத்தானே அவ்வளவு கவுரவம் .எந்த நிமிடம் நாட்டிற்கு இழப்பு ஏற்படுகிறதோ அந்த நிமிடமே அவர் செயல் படவேண்டியது அவரின் ஜனநாயகப்பொறுப்பள்ளவா ? நாட்டை இழப்பின்றி கொண்டு செல்லவேண்டியது அவரின் அரசியல் சாசன கடமையல்லவா ?.

அதை செய்யாமல் விட்டதால் தானே  இவ்வளவு இழப்பு
அதை விடுத்து 2010 ல் ராசா மீது குற்றம் சுமத்துவது எவ்வாறு ஏற்புடையது என்று  எனக்குத்தெரியவில்லை.

உண்மையில் இந்த விசயத்தில் ஜனநாயகத்தூண்கள் அனைத்தும் இந்திய ஜனநாயகத்தையும் ,நமது அரசியலமைப்புச்சட்டத்தையும் கேலி செய்து அசிங்கப்படுத்தி வருகிறதோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது .

முறையான நடைமுறைகள் பின்பற்றமல் ஜனநாயக்க்கடமையை செய்யாமல் இழப்பு ஏற்பட  காரணமாக இருந்துள்ளது இந்திய தணிக்கைத்துறை .அதனை சரிப்படுத்த  எந்த  நடவடிக்கைகளையும் எடுக்காமல் நாடாளுமன்றத்தை முடக்கி... வேதனையாக உள்ளது .இது நிதி சம்பந்தப்பட்ட விசயம் பொறுப்புடன் அரசியல் வாதிகள் நடந்துகொள்ளவேண்டும் .
அல்லாது போனால் இதுவே முன்னுதரணமாகி ...
நஷ்டம் அரசியல்வாதிகளுக்கு அல்ல நாட்டிற்குத்தான் .

இங்கு அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கிறது ஆனால் அது பற்றிய அறிவு இருக்கிறதா இல்லையா என்பதே எனது கேள்வியாக இப்பொழுது இருக்கிறது.

முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாத்தால் தான் இந்த இடுகை .

அதற்கு பலிகடா ஒரு அப்பாவித் தமிழன் என்பதோடு நமது ஜனநாயகமும் அரசியலமைப்புச்சட்டமும் என்பது தான் மிகவும் வேதனையாக உள்ளது . 




முறையான நடைமுறையின்றி யாரும் தண்டிக்கப்படக்கூடாது  .










. Download As PDF

ஞாயிறு, 28 நவம்பர், 2010

தமிழ்ச்சூடி.


வாழ்க நலத்துடன்

வளர்க  மொழியுடன்

சிந்தி  உணர்வுடன்

சிற  வளத்துடன்

சீர்படு  அறிவுடன்

செயல்படு மரபுடன்

ஒன்றுபடு இனத்துடன்

ஓங்கீயுயர்ந்த மாந்தனாய்

ஒல்காப்புகழ் தமிழனாய்.








 . Download As PDF

சனி, 27 நவம்பர், 2010

என் இன அவலம் அழ

.

ஓவியன்
நான்
வரையமுடியா
வேதனைகள் அவை.



கவிஞன்
நான்
எழுதமுடியா
வலிகள் அவை.



பாடகன்
நான்
பாடமுடியா
கண்ணீர் நதிகள் அவை.



எனக்கொரு இசைக்கருவி
கண்டுபிடித்து தாருங்கள்
மீட்பு குறிப்புடன்
பாணனாகி
என் இன அவலம் அழ.









. Download As PDF

வெள்ளி, 26 நவம்பர், 2010

கவிதையென்கிறார்கள் கவலையாய் போய்விடுகிறது

நான் எழுதும்
வார்த்தைகளை
கவிதையென்கிறார்கள்
கவலையாய் போய்விடுகிறது .

அடிபட்டு அடிபட்டு
சிதலமடைந்து
குக்கிப்போனதை
வார்த்தைகளில்
வெடித்து சிதறுகிறேன்
புதுப்பிக்க
உயிர்ப்பிக்க
இருப்பினும்
கவிதையென்கிறார்கள்
கவலையாய் போய்விடுகிறது .

உயிர்ப்பு
கவிதையாய்
மடிகிறதே  
என
கவலையாய் போய்விடுகிறது .








. Download As PDF

வியாழன், 25 நவம்பர், 2010

நீ மட்டும் ஏன் தமிழா இப்படி இறக்கின்றாய் ?

அந்த நீண்ட நெடுந் தெருவில்
துரத்திக் கொண்டு வந்த கும்பலின்
கோரப்பிடியினின்று  தப்ப
என்னை நோக்கி
ஓடி வந்தவளை
நினைத்துப் பார்க்கின்றேன்


உடைகளை கிழித்தன
வெறி கொண்ட நூறு கைகள் .
நிர்வாணமாகிக் கொண்டிருந்த அவள்
''ஐயோ... அம்மா... '' என்ற குரலுடன்
நிமிடத்தில் தீர்க்கப்பட்டாள் .

சகதியில் சொட்டும்
அவளின் இரத்தத்தில்
ஈக்கள் மொய்க்கும்
இன்னும் சில நிமிடங்களில்.

இதோ
காந்தி பாலத்தின் மேல் நான்
தமிழனைத் தேடி ஓடும்
கும்பலைப் பார்த்தபடி .

என்றென்றும்
என்றென்றும்
நீ மட்டும்
ஏன் தமிழா இப்படி இறக்கின்றாய் ?

...

என்றென்றும்
என்றென்றும்
நீ மட்டும்
ஏன் தமிழா இப்படி இறக்கின்றாய் ?

...

நான் மட்டும் எப்படி தப்பித்தேன் ?

முண்டங்களுக்கு 
என்றும்
வாழ்வுமில்லை
சாவுமில்லையே .





. Download As PDF

புதன், 24 நவம்பர், 2010

ஓர் இனத்தின் தீர்வென்பது


அழித்தொழிக்கும் எண்ணத்தை

அழித்தொழிக்கும்

பதரனைத்தும்  விதையாகும்

விதையில்லா

வீழ் நிலத்திலும்

நிறம் மாறி ஒலி மாறி

இடம் மாறி

வேறுவேறாகிலும்

இனமானம் மீதாகும்

வாழ்வாதாரம்

மொழியாட்ட நிறவாட்ட

போராட்ட

வெற்றியுடன்

அனைத்தும் அனைத்துமாய் 

மனித நேயமாய்

ஓர் இனத்தின் தீர்வென்பது .





. Download As PDF

திங்கள், 22 நவம்பர், 2010

மருத்துவபடிப்பு முற்றிலும் இலவசம் பெற்றோர்களே முன்பதிவுக்கு இன்றே முந்துங்கள்




நண்டு : என்ன நொரண்டு பையன எங்க கூட்டிட்டு போர .தறி ஓட்ட போலயா ? .ஓனர் ஒழுங்கா கூலா தர மாட்டேங்கராருனு சொல்லீட்டிருந்த ...

கூலி நொரண்டு :   அட உனக்கு விசயம் தெரியாதா .

நண்டு : என்ன ?

கூலி நொரண்டு : நீ பேப்பர் பாக்கலையா ...

நண்டு :என்ன செய்தி சொல்லு .

கூலி நொரண்டு : இனி +2 வரை ஆல் பாஸாம் .

நண்டு :அதனால

கூலி நொரண்டு :எப்படியும் எம்பையன பாஸ் ஆக்கீடுவாங்க

நண்டு :சரி

கூலி நொரண்டு : அவன் ஸ்கூலுக்கு போய் என்ன செய்யப்போரான் .

நண்டு : அதனால்

கூலி நொரண்டு : என் வேலையை பாத்துட்டு எனக்கு உதவியா இருக்கட்டுனு கூட்டீட்டு போரோன் .

நண்டு :அட நொரண்டு .+1 படிக்கும் பையன இப்படி ...நல்லா படிச்ச நம்மலாலே நாலு வார்த்தை தப்பில்லாமல் எழுத முடியல ...


------

சில நாட்கள் கழித்து

நொரண்டு :  எங்க நண்டு இவ்வளவு அவசரமா போற

நண்டு :அட விசயம் தெரியாத

நொரண்டு :என்ன ?

நண்டு :  நீ பேப்பர் பாக்கலையா ...

நொரண்டு :என்ன செய்தி சொல்லு .

நண்டு : மருத்துவபடிப்பு முற்றிலும்  இலவசம் பெற்றோர்களே முன்பதிவுக்கு இன்றே முந்துங்கள்  உடனே விரைக  ,உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை இன்றே முடிவு செய்யுங்கள் என கோல்மால் யுனிவர்சிடி அறிவிச்சிருக்கு

நொரண்டு :ஓ ...அப்படியா ...

நண்டு :முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமையாம் .

நொரண்டு :அட ...ஆமா  உன் பையன் இப்பத்தானே 3 வது  படிக்கரான் !!!! ????

நண்டு : அதனால தான்  முன் பதிவு செய்ய போரேன் .



-----



ஆசிரிய நொரண்டு : ஆல் பாஸ்னு யாரும் ஸ்கூலுக்கு வரமாட்டேங்கராங்க .

தலைமையாசிரிய நண்டு :  பள்ளிக்கு முதல் நாள் எல்லாரும் வந்தார்களே

ஆசிரிய நொரண்டு :  அவ்வளவு தான் இனி முழுப்பரிட்சைக்குத்தான் எல்லாத்தையும் பாக்க முடியும் .

தலைமையாசிரிய நண்டு :இப்ப வருகைப்பதிவு .

ஆசிரிய நொரண்டு : கல்வி அடிப்படை உரிமை .

தலைமையாசிரிய நண்டு : அதனால் .

ஆசிரிய நொரண்டு :  அது வருகைப்பதிவை கட்டாயப்படுத்தவில்லை .

தலைமையாசிரிய நண்டு : ஓ .

ஆசிரிய நொரண்டு : வந்தாலும் வராவிட்டாலும் கல்வி என்னும் அடிப்படை உரிமை காக்கப்படவேண்டும் .  

தலைமையாசிரிய நண்டு :  ?????


-------



நொரண்டு :இது எதுக்கு கொண்டு வராங்க ?

நண்டு :  சமுதாயத்தை நாசமாக்க .

நொரண்டு :....

நண்டு :  குலத்தொழிலை மறைமுகமாக வளர்க்க  .

நொரண்டு : ...

நண்டு : குட்டிச்செவரான இந்தியாவை உருவாக்க .








. Download As PDF

சனி, 20 நவம்பர், 2010

சீன நீர் ஓவியம் .

எவ்வளவு அழகான  கைவண்ணம்
காணெளியை கண்டு மகிழுங்கள் .



நன்றி  You Tube 




. Download As PDF

கலாச்சாரம் பண்பாடு மொழி



கலாச்சாரம் பண்பாடு பேசிவரும் இவ்வேளையில்

மொழியைப்பற்றி




மொழியில்

ஓசை  ஒரு கூறு ,

ஒலி  ஒரு கூறு ,

ஓசையின் ஒலி  ஒரு கூறு ,

எழுத்து  ஒரு கூறு ,

எழுத்தும் ஒலியும் ஓசையும் கொடுக்கும் கருத்து  ஒரு கூறு ,

கருத்து கொடுக்கும் பொருள்  ஒரு கூறு ,

பொருள் கொடுக்கும் இயக்கம் ஒரு கூறு ,

இயக்கத்தின் பொருண்மை ஒரு கூறு ,

பொருண்மையின் வெளிப்பாடு ஒரு கூறு ,

வெளிப்பாட்டின் தன்மை ஒரு கூறு ,

தன்மையில்  வடிவம்  ஒரு கூறு ,

வடிவத்தின் உரு ஒரு கூறு ,

உருவின் நிலைப்பாடு ஒரு கூறு ,

நிலைப்பாட்டின் அமைப்பு ஒரு கூறு ,

அமைப்பின் பயன்பாடு ஒரு கூறு ,

பயன்பாட்டின்  நீட்சி ஒரு கூறு ,

நீட்சியின் நிலைத்தன்மை  ஒரு கூறு ,

நிலைத்தன்மையின் செயல்பாடு ஒரு கூறு ,

செயல்பாட்டின் ஆக்கம்  ஒரு கூறு ,

ஆக்கத்தின் தொடர்ச்சி  ஒரு கூறு ,

தொடர்ச்சியில் பண்படுதல் ஒரு கூறு ,

பண்படுதலில் பழக்கம்  ஒரு கூறு ,

பழக்கத்தின் திரட்சி  ஒரு கூறு ,

திரட்சியின் ஆளுமை  ஒரு கூறு ,

ஆளுமையின் ஆதிக்கம் ஒரு கூறு ,

ஆதிக்கத்தின் எழுச்சி ஒரு கூறு ,

எழுச்சியின் மிச்சம்  ஒரு கூறு ,

மிச்சத்தின் எச்சம்  ஒரு கூறு ,

எச்சத்தின் வீரியம் ஒரு கூறு ,

வீரியத்தின் தேடல்  ஒரு கூறு ,

தேடலில் பயணம் ஒரு கூறு ,

பயணத்தின் பாதை ஒரு கூறு ,

பாதையின் பார்வை ஒரு கூறு ,

பாதையில் பார்வை ஒரு கூறு ,

பார்வையில் மாற்றம் ஒரு கூறு ,

மாற்றத்தின் மதிப்பு  ஒரு கூறு ,

மதிப்பின் வழிமுறைகள் ஒரு கூறு ,

வழிமுறைகளில் உண்மை  ஒரு கூறு ,

உண்மையின் தன்மை ஒரு கூறு ,

தன்மையின் மென்மை  ஒரு கூறு ,

மென்மையின் மேன்மை ஒரு கூறு ,

மேன்மையின் விரிவு  ஒரு கூறு ,

விரிவின் வாழ்வு ஒரு கூறு ,

வாழ்வின் உயிர் ஒரு கூறு ,

உயிரின் மொழி ஒரு கூறு .








.



(படங்கள் உதவி : Claudio Tomassini , நன்றி  )




. Download As PDF

வெள்ளி, 19 நவம்பர், 2010

நீ ஏன் கவிதை எழுதுகின்றாய் ?



நீ ஏன்
கவிதை எழுதுகின்றாய் ?

நீ ஏன்
கவிதை எழுதுகின்றாய் ?

வீழ்த்த துடிக்கும்
வீணர்களின்
வாயடைக்க

ஊறு செய்யும்
மரப்பதரை
உணர்ச்சியூட்ட

காயம்பட்ட
கண்ணிமைகளுக்கு
களிம்பாக

உதிர்ந்த
உயர் வித்துகளுக்கு
உரமாக

குருதியில் துடிக்கும்
இனமானத்திற்கு
தோள் கொடுக்க

வீழா இனம்
மீளாத்துயர்
துடைத்தெரிய

நான்
எழுதுகின்றேன்  கவிதை

நான்
எழுதுகின்றேன்  கவிதை

இது நமக்கான
மொழியன்று
நம் மொழி

இது நமக்கான
இனமன்று
நம் இனம்

இது நமக்கான
எழுத்தன்று
நம் எழுத்து

என
எழுச்சி யூட்ட

நான்
கவிதை எழுதுகின்றேன்

நான்
கவிதை எழுதுகின்றேன்








. Download As PDF

புதன், 17 நவம்பர், 2010

அசுவமேத யாகம் செய்யலாம் வாருங்கள்







தசரதர்  :
  எனக்கு வயதாகி விட்டது ,என் தோளாற்றலால் பல நாடுகளை வென்றுவிட்டேன் .எனக்கு பின் ... வாரிசு இல்லாமல் ...

வசிஷ்டர் :  தங்களின் வார்த்தை கவலையளிக்கிறது மன்னா .

தசரதர்  :  அதற்கு அசுவமேத யாகம்  செய்யலாம்  வாருங்கள்  .

வசிஷ்டர் :  மகிழ்ச்சி  மன்னா . நீண்ட நாட்களாக கூறலாம் என்றிருந்தேன். தாங்களின் வாயாலே அது வந்துவிட்டது . செய்யலாம் மன்னா .

தசரதர்  : இன்றே  .

வசிஷ்டர் : அது...அது ...முடியாது மன்னா .

தசரதர்  :ஏன்... ?...

வசிஷ்டர் : அது ஒரு உடன்படிக்கை .

தசரதர்  :தெரியும் ...

வசிஷ்டர் : அதோடு இதை செய்விக்க தக்கவர் இராஜரிஷி  கலைக்கோட்டு முனிவர்.அவர் அங்க நாட்டில் உள்ளார் .

தசரதர்  : ம் ...ஏற்பாடு செய்யுங்கள் .






.



ரகு ராமன் கதை கேளுங்கள் - தொடரும் ...

(நன்றி : You Tube)


.





. Download As PDF

ஞாயிறு, 14 நவம்பர், 2010

எங்கே போய் முன்தோன்றிய மூத்த குடியாவது தமிழன்



நொரண்டு :  காந்தியடிகள் தமிழ் கற்றாரா ? ...

நண்டு : ....


நொரண்டு :  திருக்குறளை கற்பதற்காக ....

நண்டு : .....

நொரண்டு : ஏன் அமைதியா இருக்க .???

நண்டு :  ....

நொரண்டு : சரி அது இருக்கட்டும் . திருக்குறளை அதன் உண்மையை
தமிழ் கற்றால் தான் அறிந்துகொள்ள முடியுமா ? . மொழி்பெயர்ப்பு அதனை வெளிப்படுத்தாதா ?

நண்டு :ஆம் . அதிக கலைச்சொற்களை பயிலுதல் அதிக ஆழத்திற்கு இட்டுச்சொல்லும் . மொழிபெயர்ப்பு ....

நொரண்டு :  ஏன் ?

நண்டு : நான் மொழிபெயர்ப்பில் குறளை படித்ததில்லை .யாரவது தங்களின் மொழியில் குறளைப்படித்து பின் தமிழ் கற்று குறள் படித்தவரிடம் கேட்க வேண்டிய கேள்வி .

நொரண்டு : ஓ ...

நண்டு :ஆனால் தமிழில் கற்பது பற்றி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

நொரண்டு : கூறு .

நண்டு :

''அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.''

என்ற குறளில்
தமிழ் தான் முன்தோன்றிய மொழி என்று கூறுவதன் மூலம்
அதனை கற்றபது தான் சிறப்பு என கூறுகின்றார் .

நொரண்டு :  ஓ...


நண்டு :மேலும் ,

''வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் தமிழ்தம் என்றுணரற் பாற்று.''

என்ற குறளின் மூலம்
தமிழ் கற்பதனால் உண்டாகும் பயனை கூறுகின்றார் .

நொரண்டு : என்ன பயன் ?

நண்டு :
தமிழ் , கற்றவருக்கு மழைபோல்
அனைத்தையும் கொடுக்கும் என்கின்றார் .

நொரண்டு : ஓ... இப்படியும் கூறியுள்ளாரா !!!


நண்டு :மேலும் ,

''தமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
''

என்ற குறளின் மூலம் ...

நொரண்டு : இதுக்கு



      

என்றும் ...


நண்டு :  சொல்லவருவதை சொல் .

நொரண்டு : அது வந்து
நான் பாத்த புத்தகத்திலெல்லாம்
''அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்'' னு போட்டுருக்கு
நீ
''தமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்'' னு
எடுத்திருக்க...

நண்டு :
அவர்கள் பார்வையே தவறு .திருவள்ளுவர் காலத்தில் சுத்தத்தமிழ் பயன்படுத்திவந்த பொழுது  அமிழ்து என்பது  ....பின்னாள் சேர்த்துக்கொண்ட ஒரு சொல் . சுருங்கக்கூறின் திருவள்ளுவர் காலம் தனித்தமிழ் காலம் . தனித்தமிழன் காலம் .


நொரண்டு : ஓ ...அப்படியா ..

நண்டு :
பின்னாள் சேர்த்தவர்கள் .அமிழ்து என்பது தமிழுக்கு முன்பு தோன்றியதுபோல் ஆக்கி . தமிழை பின்னுக்கு தள்ளினர் .அந்த ஒரு வார்த்தையைக்கொண்டே தமிழை கேவலப்படுத்திவிட்டனர் தமிழை ,தமிழனை ,தமிழ் பண்பாட்டை .அமிழ்து ,அமிழ்து,அமிழ்து ...என்று சொல்லிக்கொண்டே வந்தால்  தமிழ் என வருமென்றும் சொல்லி ஏமாற்றியதோடு . தமிழ் இனத்தையே  மடையர்களாக்குவதற்கு இலக்கியத்திலும் இதே கருத்தை புகுத்தி விளையாடிவிட்டனர் . எங்கும் . நீ அமிழ்தை ஏற்றுக்கொண்டால் தேவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் . தேவர்களை ஏற்றுக்கொண்டால் அவர்களின் அடிவருடிகளை உமக்கு முன்னவர்களாக ஏற்றுக்கொண்டுவிட்டாய் அவ்வளவே . இவ்வாறு ஒவ்வொன்றாய் ஏற்றுக்கொண்டு... எங்கே போய் முன் தோன்றிய மூத்த குடியாவது தமிழன். தெரிகின்றதா கபட நாடகம் .

நொரண்டு :  அட ...

நண்டு :
ஆனால் ,இடைச்செருகலுக்கு் குறள் மட்டும் மிகவும் கடினமாக இருந்ததால் மிகவும் கடினப்பட்டே ;ஆனால் ; அமைப்பை உடைக்கும் திறனற்று .அதனால் தான் இப்பொழுது நம்மால் எளிதில் அதனை அடையாளம் காணமுடிகிறது .குறளின் சிறப்பே இது தான் .இப்படியொல்லாம் நடக்கும் என நினைத்துத்தான் என்னவோ வள்ளுவர் குறள் வடிவத்தில் இயற்றினார் போலும் .

நொரண்டு : சரி ஏன் இத்தனை பீடிகை...குறளுக்கு விளக்கம் சொல் .

நண்டு :
தமிழ்தினும்
மிகவும் இனிமையான மகிழ்வைத்தரும்
தம் மக்கள் அதாவது தம்  குழந்தைகள்
இட்டும் ,தொட்டும் ,துழந்தும்
சிறு கையாள் அளாவப்பட்டு
குழைந்து எழு்தும் தமிழை பார்க்கும் பொழுது .

நொரண்டு : மழலை எழுத்தை கூழ் என்கின்றார் .

நண்டு :ஆம்

நொரண்டு : மழையை தமிழ் என்கின்றார்

நண்டு :ஆம்

நொரண்டு : 
இன்னைக்கு குழந்தைகள் தினம் ,
இது குழந்தைகளுக்கான குறள்  .
ஆகா..ஆகா



.


. Download As PDF

எனக்கு இதய நோய்

.




ஊரெல்லாம் புகை
மூச்சு விட முடியவில்லை
எனக்கு இதய நோய்




-----



ஒவ்வொரு கனவும் 
காண்பவன் கவலையறியாமல்
அதன் அதன் நகர்வில்




------



மிகப்பெரிய ஆறு
மிகப்பெரிய படகு
கடல் அறியா படகோட்டி




-----









. Download As PDF

வியாழன், 11 நவம்பர், 2010

மலர் படுக்கை

விரிந்த காரணத்திற்காக
எங்கும் சிதைக்கப்படும்
வதைபடும் வாழ்க்கையிலும்
எப்படி முடிகிறது
இவற்றால்
அழகாக
மணமாக
இருப்பிடம்
மறந்த பிரஞ்ஞையில்
சிரித்தபடி
மண்மீது
மலர்
படுக்கையாக.






.
. Download As PDF

வெள்ளி, 5 நவம்பர், 2010

புறக்கணிப்போம்



பட்டாசு  சத்தம் கேட்டு பயந்து நடுங்குது டோமி








நச்சு  காற்றில் பாடாய் படுது  நாரை 



நாம் தான் சுயநினைவில்லாதவர்களாக  மாறிவிட்டோம் .


இயற்கையுடன் இவைகளாவது   இயல்பாக வாழ

புகை கொண்டு  ஆடும்

இப் பண்டிகையை 
புறக்கணிப்போம்

மாந்த னாக .






சுற்றுச்சூழல்  மற்றும் பிற உயிரினங்கள்  பாதுகாப்பு மற்றும் நலத்தினை 
முன்னிட்டு  
நண்டு @ நொரண்டு 


.


.

. Download As PDF

வியாழன், 4 நவம்பர், 2010

வள்ளுவர் சமணர் என்பது மாபெரும் மடத்தனம்

.

நொரண்டு : வள்ளுவர் சமணரா ?

நண்டு :   வள்ளுவர் சமணர் என்பது
மாபெரும் மடத்தனம் . இதனை மக்களிடையே
இன்னும் மக்கள் மடையர்களாகவே நினைத்துக்கொண்டு வரலாற்றுபார்வை மற்றும் அறிவு சிறிதும் இல்லாமல் எப்படித்தான் எழுதிவருகின்றனரே தெரியவில்லை .
நீ நான் சொன்ன  குறள்களை படிச்சியா ?

நொரண்டு :நான் தான் சொன்னேன்ல ,
நீ பாட்டுக்க குறளைப்படினு நம்பரக்கொடுத்தினா .விளையாடுரையா .ஒன்னு புருஞ்சுக்க . நாங்க எல்லாம் பழத்தை உருச்சில்ல ஜிரணிச்சே கொடுக்க சொல்றவுங்க .

நண்டு :    அப்புறம் எதற்கு கேள்வி கேக்கற ?

நொரண்டு :சும்மாதான் ,திருவள்ளுவர் திருவள்ளுவர் னு பேசராங்க , பெரிய சிலையல்லாம் வச்சிருக்காங்க அதான் .
அத விடு வள்ளுவர் சமணரா ? பதில் சரியில்லையே .

நண்டு :   இதனை நான் பின்பு ஆதாரத்தோடு  நிருபிக்கிறேன் .
குறள்களை படினு சென்னேன் முதலில் படிச்சியா.

நொரண்டு :அந்த 3 மட்டும் போதுமா .

நண்டு :   அட அறிவுஜிவி , திருக்குறளை விமர்சிக்கவோ ,
பயன்படுத்தவோ , கேள்விகேட்கவோ விரும்பினால் முதலில்
நீ அதனை முழுமையாக , 1330 குறளையும் படிக்கவேண்டும் .

நொரண்டு :அவனவனுக்கு வேளையில்லையா . ஒரு குறளை பயன்படுத்தக்கூட எல்லாத்தையும் படிக்கச்சொல்லுவபோல .

நண்டு :   ஆம் .

நொரண்டு :அதான பாத்தேன் ,எங்கடா சொல்லலனு .

நண்டு :    அது தான் உண்மை .

நொரண்டு :அப்படி இல்லாது , எதையும் படிக்காம ஒரு குறளை விமரிசித்தால் ,பயன்படுத்தினால் ?


நண்டு :   4 குருடர்களும் யானையும் கதைதான் .

நொரண்டு :அப்ப ,இப்போ எல்லாம் அப்படித்தான்  பயன்படுத்தராங்கனு  சொல்லவர ,அது தானே?

நண்டு :    உன் கருத்திலும் உண்மை உண்டு .

நொரண்டு : சரி , நீ சொல்ற மாதிரியே படிக்கலாமுனு இருக்கோன் . அதுக்கு உரை நிறையாப்பேர்  எழுதியிருக்காங்களாம் . யாரை படிக்க .

நண்டு :   யாரைவேணாலும் படி . ஆனால் குறைந்தது 9 உரைகளையாவது படித்தல் நலம் .

நொரண்டு : வா..வா..ஒரு குறலே படிக்கமுடியல ..
9 உரையா ...என்ன ஆராய்ச்சி பண்ணி விருதா வாங்கப்போரேன் . இல்ல எனக்கு வேலைவெட்டித்தான் இல்லையா , எங்குடும்பத்தையார் பாப்பா... இதனால் எனக்கென்ன ஆகப்போது . இனி கேள்வியே இவன் கேக்கக்கூடாதுனு ப்ளான் பண்ணிட்டயா ?. இப்படி வெளியில சொல்லாத , திருக்குறளை எவனும் படிக்கவும் வரமாட்டான் , உன்னையும் ஒரு மாதிரி பாப்பாங்க .

நண்டு :  அதப்பத்தி எனக்கு கவலையில்லை .ஆனால் ,
முழுமையாக படித்தவரால் மட்டுமே திருக்குறளினையும்,
திருவள்ளுவரையும் ஓரளவிற்காவது தெரிந்துகொள்ள முடியும் .

நொரண்டு : அப்படினா திருக்குறளினை
முழுமையாக படித்தவர்களெல்லாம் முழுமைவாதிகளா ?

நண்டு :   .....

நொரண்டு : சரி அதவிடு  இன்னைக்கு எந்த  குறளுக்கு  விளக்கம்  தர்ரா ,அதையாவது  சொல் கேட்டுக்கரேன் .

நண்டு : 

"ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் ".


நொரண்டு :இதுக்கு எனக்கு அர்த்தம் தெரியும் .அது அரசன் ஒழுங்கா ஆளளைனா பசு பால் கொடுக்காது ,அந்தணர் ஓதுவதை மறப்பர் ...ஹ..ஹா..ஹ...சரிதானே ..எப்படி எங்களுக்கும் தெரியுமில ....நாங்க யாரு ...ஹ..ஹ..ஹா...

நண்டு :   போடா மடையா .போய் நூல் போட்டுக்க .

நொரண்டு : இதா திட்ரத  விடு  . பிரச்சனையாப் போகும் .
ம்... சரி உன் விளக்க உரை சொல்லு பார்க்கரேன் .


நண்டு : 

காவலன் காவான் எனின்
அரசு அரசாக உயர்வடையும் தன்மையும் ,
அதனால்  சிறப்படையும் நன்மை குறையும் ,
மக்கள் அரசுடன்  ஒத்துப்போகும் தன்மையில்  ,
தாங்கள் பின்பற்றும் ஒழுக்க நெறியில் குன்றுவர் .
ஒரே இடந்தில் தங்கி  தொழில் பார்க்கும் நிலை  இல்லாமல் போவதால்
தொழில் செய்பவர்கள் அதன் நுட்பமான வழிமுறைகளையும்,
தாங்கள் வழிவழியாக சேர்த்துவைத்து வந்த அறிவினையும்,
படிப்பினைகளையும்   மறப்பர் ,  என்கிறார் .

அதோடு இன்னும்  சொல்கிறார் அதிகமாக .




.







.


.......

வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் ...தொடரும் .


.








. Download As PDF

புதன், 3 நவம்பர், 2010

இதெப்படி இருக்கு ...





.

நன்றி :You Tube




. Download As PDF

மிலோ என்னும் மாயை




 

நன்றி : You Tube


. Download As PDF

செவ்வாய், 2 நவம்பர், 2010

தமிழில் தமிழர்கள் கற்றது

நொரண்டு  :
''எனக்குத்தெரிந்து தமிழில் ஒன்னும் இல்லை '' என என் நண்பன் சொன்னான் ...

நண்டு : எதுக்கு இதப்பேசினிங்க ...

நொரண்டு  :ஏன்?

நண்டு : அப்பத்தான் அதுக்குத்தகுந்த விளக்கம் கொடுக்க முடியும் .

நொரண்டு  : தமிழ் மொழியின் சிறப்பு பத்தி நான் சொன்னதுக்கு ...அறிவார்ந்த விசயங்கள் தமிழில் இல்லை,அறிவை தமிழ் பிரதிபலிக்கவில்லை . தமிழில் அறிவியல் பார்வையில்லை ....

நண்டு : அப்படியில்லை , உண்மையும் அதுவல்ல . அப்படி ஆக்கப்பட்டு விட்டது பக்தி இயக்கங்களால் . தமிழ் மொழியே பக்தி இயக்கமாக ஆக்கிவிடப்பட்டுவிட்டபடியால் . அப்படி ஒரு மொழி பக்தி இயக்கமாகும் பொழுது அந்த மொழியில் பக்திப்பரவசம் மட்டுமே இருக்கும் .

நொரண்டு  : அப்படியா ?

நண்டு : இதைத்தான் வள்ளுவர்

> அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
> பிறவாழி நீந்தல் அரிது.

என்றார் .

நொரண்டு  :அப்படினா?

நண்டு :
''அறவாழி அந்தணன் என்பவனால் பிறவாழி நீந்தல் முடியாது
அவன்தாள் சேராமல் ''


நொரண்டு  : புரியல ...

நண்டு : அறத்தை மட்டுமே போதிக்கும் அந்தணர்களால்  அறக்கருத்துக்களைத்தவிர்த்து பிறவற்றை
போதிக்க முடியாது .


நொரண்டு  : இதிலிருந்து அவர் கூறும் செய்தி .

நண்டு : பிறவற்றையும் கற்கவேண்டும் .


நொரண்டு  : ஓ,
தமிழன் தமிழை இப்படித்தான் கற்றானா?. மற்றவற்றை கற்காமல் .


நண்டு : இப்படித்தான் கற்பிக்கப்பட்டு வந்துள்ளது .

நொரண்டு  : இப்பத்தான் எல்லாத்தையும் கற்கின்றானோ? .


நண்டு : இது   ஆங்கிலேயர்கள்    தந்தது .

நொரண்டு :  ஓ ,
அவ்வளவு அறிவுப்பசி தமிழர்களுக்கு...

நண்டு : அதனால் தான் ஆங்கிலத்தின் மீது தமிழனுக்கு அவ்வளவு ஆர்வம் .

நொரண்டு : ஆங்கிலேயர்கள் நமக்கு உருவாக்கிய கல்வி முறை குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி முறைனு சொல்றாங்களே ...

நண்டு :
இப்பவும் அப்படித்தான் கற்றுவருகின்றான் தமிழன் தமிழை .


நொரண்டு : அதனால் ?

நண்டு :நாம் உருவாக்குவோம் அறிஞர்கள்  கல்வி முறையை தமிழில்  .







.





.




. Download As PDF

திங்கள், 1 நவம்பர், 2010

புத்திசாலி தமிழனுக்கு அனுபவம் அவசியம் தேவை .

அனுபவம் அனைவருக்கும்  அவசியம் தேவை . ஏனெனில் அது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்று ; அது வாழ்க்கை அர்த்தத்தை புரியவைக்கும்;
நிபுணர் ஆக்கும் ; பயத்தை போக்கும்; பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ;
முக்கியமாக பிரமிக்கத்தக்க வகையில் உபயோகமாகி புத்திசாலி என பிரபலப்படுத்தும் . சரித்திரத்தில் நல்ல அனுபவசாலிகள் தங்களின் லட்சியங்களை சிரமம் இல்லாமல் முழுதிருப்தியுடன் நினைத்தபடி அடைந்துள்ளனர்  இதில் சந்தேகமேயில்லை . அதனால் தான் புத்திசாலி தமிழனுக்கு அனுபவம் அவசியம் தேவை . எனவே ,
அனைத்துத் தமிழர்களும் கரம் சேர்த்து சபதம் ஏற்ப்போம் ;
அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவேம்
நிச்சயம் உயர்வோம் புத்திசாலிகளாக .


நொரண்டு : எப்படி எனது பீடிகை ?

நண்டு : நன்றாக உள்ளது .இருந்தாலும் .....

நொரண்டு : என்ன இருந்தாலும் ...

நண்டு :இப்ப புத்திசாலிகளாகத்தான் நாம் அனைவரும் இருக்கின்றோம் .
தமிழர்களாகவும் ,தமிழ் உணர்வாளர்களாகவும் இருக்கின்றோம் .இதில் என்த வித மாற்றுக்கருத்துமில்லை . ஆனால் , தமிழைத்தான் செம்மைப்படுத்தாமல்
ஏதே சுயநலத்திற்காக நமது விருப்பம்போல் பயன்படுத்திவருகின்றோம் .

நொரண்டு :என்ன ... ?...

நண்டு :ஆம் ,மிகவும் கவலையாக உள்ளது .

நொரண்டு : என்ன கவலை ...

நண்டு :
அடுத்தவர்களை சொல்கின்றேன் .தமிழை தமிழாக பயன்படுத்து என்று . ஆனால்,நான் என்ன செய்கின்றேன் . அம்மா என்பதைக்கூட AMMA என்று தட்டச்சு செய்து ... எமது எண்ணங்களை ,ஆக்கங்களை வெளிப்படுத்த பிற மொழியினின்று தமிழை பிறப்பிக்கவைப்பதாகவே நினைக்கின்றேன் . அதுவும் ஒரு வழியில் சீரழிவாகவே ...

நொரண்டு : அப்படி ஏன் நினைக்கின்றாய் . அதை ஒரு கருவியாக பயன்படுத்துவதில் என்ன தவறு .

நண்டு : ஆம் ,மொழியை கருவியாகத்தான் பயன்படுத்துகின்றோம் . தமிழ் நமக்கு ஒரு கருவி தான் மொழியன்று என்ற நினைப்பில் வாழ்வதால் தான் இத்தகைய இடர் .கேடு .

நொரண்டு : ஓ...

நண்டு :நீ இந்த உரையாடலுக்கு முன் பீடிகை என்று ஒன்றை சொல்லியுள்ளாயல்லவா அதுவே மெய்ப்பிக்கும் தற்பொழுதைய தமிழின் நிலையை .

நொரண்டு :என்ன சொல்ற ..

நண்டு :

உனது ''பீடிகை'' யில்
அனுபவம் ,
அவசியம் ,
அத்தியாவசியமான,
அர்த்தத்தை ,
நிபுணர் ,
பயத்தை ,
பிரச்சினை,
பிரமிக்கத்தக்க ,
உபயோகமாகி ,
புத்திசாலி,
பிரபலப்படுத்தும் ,
சரித்திரத்தில் ,
அனுபவசாலிகள் ,
லட்சியங்களை ,
சிரமம் ,
முழுதிருப்தியுடன் ,
சந்தேகமேயில்லை ,
கரம் ,
சபதம் ,
நிச்சயம் ,
பீடிகை  ...
இவைகள் எல்லாம் வட சொற்கள் இவைகளை நீக்கிப்பார்
தமிழால் தமிழர்களுக்கு நீ சொல்ல வந்ததை ...

நொரண்டு :
இவைகள் தமிழ் இல்லையா ? ...என்ன சொல்ர

நண்டு :
அப்படி நான் சொல்லவில்லை .
தமிழ் இலக்கணம் , வரலாறு கூறுகின்றது .

நொரண்டு :
என்னப்பா ஒன்னுமே புரியவில்லை .இப்படியே பாத்தா எப்படிப்பா ...


நண்டு:சில குழப்பங்கள் உள்ளன .

நொரண்டு : ஆமாம் ,ஆமாம் ... அனுப்புனர் ,பெருநர் ,மடப்புரம் , பழனி,நடத்துனர்,இப்படி ற,ர,ன,,ஞ,ந,ல,ள,ழ,ண- க்கள் பயன்படுத்தும் போது ....

நண்டு : அட கருவியாக பயன்படுத்துகின்றாய் .இதில் என்ன பிழைகள் காணும் பிழைப்பு ,புத்திசாலி தமிழன் தான் நீ .

நொரண்டு : அட போப்பா ....:

நண்டு:  இருந்தாலும் தமிழை சரளமாக பயன்படுத்துவதில் சில இடர்கள் ...

நொரண்டு :
''ஸரல்'' என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து வந்ததுதேனே சரளமாக ...

நண்டு :
நீ சென்ன ''ஸரல்'' என்பது சமஸ்கிருத சொல் ,''சரளமாக ''என்பது
தமிழ் சொல் .

நொரண்டு :என்ன ?

நண்டு :
வட சொல் வேறு , சமஸ்கிருத சொல் என்பது வேறு .

நொரண்டு : எப்படி ?...

நண்டு :தொல்காப்பியர்
'' இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே
.'' -என்றும் ,
''வடசொற் கிளவி ,வடவெழுத்து ஒரிஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
சிதைந்தன வரியினும் இயைந்தன வரையர்
'' -என்றும் ,
மிக அழகாக கூறியுள்ளார் .
சமஸ்கிருதம் இங்கு வந்ததிலிருந்து இன்றுவரை செழுமையாகத்தான் உள்ளது .அப்படியிருக்க தொல்காப்பியர் ''சிதைந்தன வரியினும் இயைந்தன வரையர் '' என்கின்றார் .

நொரண்டு : ஓ....அப்படியா ?

நண்டு : காமம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம் .

நொரண்டு : ஆமாம் ,காமம் .

நண்டு : அது தமிழ் சொல் .

நொரண்டு : ஓ ... சரி அதவிடு .
கடந்த 30 ம் தேதி சின்னாளப்பட்டி கடந்த பொழுது உன் ஞாபகம் வந்தது .

நண்டு : ஏன் ?

நொரண்டு : இல்ல ,நமக்காக பல சிரமங்கள் பட்டு நமது தேசத்துக்கு சுதந்திரம் வாங்கித்தந்த மகாத்மா அவர்களின் பெயரால் இயங்கிவரும் பல்கலை சின்னாளப்பட்டியில் உள்ளது .

நண்டு : அது காந்தியாரின் கட்டளையல்ல ..

நொரண்டு : என்ன ?

நண்டு : காந்தியத்தை ஊட்டாமல் ,காந்தியை உணவாக மட்டுமே ஊட்டும் எதிலும் காந்தி இருக்கப்போவதில்லை .

நொரண்டு : என்ன உளருகின்றாய் ?

நண்டு : உண்மை உடனே புரியாது .

நொரண்டு : எது ....

நண்டு : அனைத்து கல்வி நிலையங்களும் வியாபார நோக்கத்தில் செயல்படுகிறது . அதில் கற்றுத்தரும் கல்வியும் உணவுக்கான கல்வியாக உள்ளது .எங்கும் அப்படியே .

நொரண்டு : அப்படித்தானே இருக்க முடியும் .'' தாயும் சேயுமே யானாலும் வாயும் வயிறும் வேறு வேறு தானே ''இந்த பழமொழி தெரியும் தானே .

நண்டு : ஆம், தாயால் பேசும் மொழியும் பயிலும் மொழியும் புத்திசாலி தமிழனுக்கு வேறு வேறு தான் .










                   
. Download As PDF