ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

இராமர் கோவில் ,சேது சமுத்திரத்திட்டம் நாட்டிற்கு அவசியம் எது ?
 சேது சமுத்திரத்திட்டம் - ஆதி தமிழன் தோண்றிய இடமாக கருதப்படும் லேமூரியா கண்டம் என்ற குமரி கண்டம் கேள்விக் குறியாக போவதற்காக போடப்பட்ட சிறப்புத்திட்டம்.

தமிழனின் தொப்புள் கொடிஉறவுகளை பிரிக்கும் ஒரு உன்னத திட்டம்.

வரலாற்று உண்மைகளை மறைக்கப்பார்க்கும் அற்புத திட்டம்.

என்றென்றும் தமிழனும், தமிழினமும் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்க போடப்பட்ட சிறப்பு சதித்திட்டம் - என்பது கற்றறிந்த அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  இதனை ஒரு சுற்றுச்சூழல் படுகொலையாகவே பார்க்கின்றனர்.

அறிஞர் பெருமக்களின் கருத்துக்களையும் ஆய்வோம்.(இவை மிக நீண்ட விடயம ,ஆதலால் இதைப்பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்.)


நாம் ??????.


@@@@@@@@


திருவள்ளுவரை நாம் யாரும் பார்த்த்தில்லை ,அவர் எப்படி இருப்பார் என்பது யாருக்கும் தெரியாது,அவர் எத்தனை குறளை எழுதினார் என்பதும் யாருக்கும் தெரியாது,1330 குறள்களில் எத்தனை அவர் எழுதினார் ,அதில் எத்தனை இடைசெருகல்கள் என்பதும் யாருக்கும் தெரியாது,இப்படி பல தெரியாத திருவள்ளுவருக்கு சிலை வடித்தது எப்படி பகுத்தறிவுக்கு ஒப்பாகுமோ,அதே போன்ற பகுத்தறிவுக்கு ஒப்பாகும் விடயம் தான் இராமர் கோவில்.

இராமனுக்காவது குறிப்புகள் பல உண்டு ,திருவள்ளுவருக்கு ???.

திருக்குறளில் இல்லாத நெறிகள் இல்லை ,
அது போலவே
இராமன் வாழ்வு சொல்லும் நெறி போல் சிறந்தநெறி உலகில் வேறு இல்லை.

இராமனை போல் வாழ முடியாதவர்கள் தான் இராமனை எதிர்ப்பவர்கள்.

திருக்குறள் காட்டிய அனைத்து நெறிகளிலும்,காட்டாத நல்நெறிகளிலும்  வாழ்ந்தவன் இராமன்.

இராமன் இந்தியாவின் ஒருமைப்பாட்டின் சின்னம்.

இராமனிடம் இருந்துதான் இந்தியாவின் முழு ஆன்மா பிறக்கிறது.

இந்தியாவின் சுதந்திரத்தில் இராமனின் பங்கு அளப்பறியது,சொல்லி மாளாது .
என்பது படித்த பண்பேறிய தமிழறிஞர்களின் கருத்தாக உள்ளது .

தமிழறிஞர்களின் கருத்துக்களையும் ஆய்வோம்(இவையும் மிக நீண்ட விடயம் ,ஆதலால் இதைப்பற்றியும் பின்னர் விரிவாக பார்ப்போம்).நிலைப்பாடும்,உண்மையும் இங்கு இருக்க 


நமது நிலைப்பாடு  ??????.


  
படங்கள் உதவி நன்றி -இணையம் மற்றும் கூகுள்.
Download As PDF

Bloggers.com

Nandunorandu - Find me on Bloggers.com