ஞாயிறு, 31 அக்டோபர், 2010

முட்டாள் மடையன் மூடன்களிடம் பொய்கூறாதீர்கள் மதவாதி்களே

நொரண்டு :  மதவாதி்களின் சேட்டைகள் வரவர தாங்க முடியல  .

நண்டு : ம் ...ம் ...

நொரண்டு : .இறைவனை நினைத்தலும், வாழ்த்துதலும் , அவன் நெறி நின்றலும் செய்தார் தான்  வீடு பெறுவர் எனகூறி  சமுதாயத்தை  ஏமாற்றி அவர்களை மடையர்களாக்கி, மதவாதிகளாக்கி கடைசியில்  அதித குணம் கொண்ட இளைஞர்களை தீவிரவாதிகளாக்கி சமுதாயத்தை சீரழிக்கின்றனர் ....

நண்டு : இப்பொழுது மட்டுமல்ல எக்காலத்திலும் அவர்கள் அப்படித்தான் .

நொரண்டு :ஓ ..

நண்டு : அதற்குத்தான் வள்ளுவர்

'' பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். ''


என்ற குறளில் சூடு போடுகின்றார்

நொரண்டு :அப்படியா .

நண்டு : ஆம்


நொரண்டு : உன் கருத்துரை

நண்டு :


'' பொறிவாயில் ஐந்தவித்தான் தான் நீடுவாழ்வார் என பொய் கூறாதீர்

ஒழுக்க நெறியில்  நின்பவர்கள்  தான்  நீடுவாழ்வார்கள்
''



நொரண்டு : பொருள் ..

நண்டு :  நீ ஏற்கன வே மதவாதி்கள் கூற்றாக சொன்னதுதான் 'பொறிவாயில் ஐந்தவித்தான் '  என்பதற்கு விளக்கம்.

நொரண்டு : சுருக்க கூறு ..

நண்டு : ''கடவுள் வழியிலே நின்றவர்கள் தான் நீடுவாழ்வார் என பொய் கூறாதீர் .''

நொரண்டு : அப்ப வள்ளுவர் ''பொய் கூறாதீர்கள் மதவாதி்களே '' என்கின்றார்

நண்டு : அதுமட்டுமல்லாமல்  ,இப்படி பொய் சொல்லியோ  நீங்க  ஒழுக்கம் கெட்டு  ,நீதி நெறி தவறி வாழரீங்க .சமுதாயத்தையும்  சீரழிக்கிறீங்க . அப்பாவிகளை பாடாய் படுத்திரீங்க .இனி இப்படிப்பட்ட பொய்யெல்லாம் கூறாது வாழ முயற்சி செய்யுங்க .எங்காளை விடுங்க என்கிறார் 

நொரண்டு : ஓ .ஆமா ,மடையர்கள் என்று யாரை சொல்கிறாய் .

நண்டு :  நம் தமிழர்களைத்தான்  .

நொரண்டு :  ....

நண்டு : மடத்தில் ஒழுகும் தமிழன் மடையன் .

நொரண்டு :  ஓ.

நண்டு : மட விசுவாசம் கொண்டு   மடத்தில் முடங்கிக்கிடப்பவன்   மூடன்.

நொரண்டு : அப்ப முட்டாள் என்பவன் .

நண்டு : இதையெல்லாம் அறிந்து ,புரிந்து ,தெரிந்து வாழாமல்  ,இனத்திற்குள்ளே முட்டிக்கொண்டு அடுத்தவனுக்கு காவு ஆகும் மந்தை போன்ற உன்னைப்போன்றவர்கள் .

நொரண்டு :  ம் ...

நண்டு :

மடையனும் மூடனும் மடத்திலே .

முட்டாள் மட்டும்  தெருவிலே .













. Download As PDF

வியாழன், 28 அக்டோபர், 2010

நாத்திக சொத்தைகளே கேளுங்கள் .





ஊரிலிருந்து வந்த தாத்தா ,
என்ன செய்யர? என படித்துக்கொண்டிருந்த என்னை கேக்க .
 தாத்தா திருக்குறளுக்கு உரை எழுதறத்துக்காக படிச்சிக்கிட்டிருக்கேன்னு சொன்னேன் .
அதுக்கு அவர் தம்பி ,நல்ல விசயம் தான் ;ஆனா,திருக்குறளை வள்ளுவர் எந்த சூழலில் எழுதினார் தெரியுமா. அதத்தெரிஞ்சுக்கோ முதல்ல .அதையும் அவர் குறளாக்கியுள்ளார் தெரியுமா   என புதிர்போட்டார் .
சொல்லுங்க என்றேன் .
செம்பான் ,செம்பானு ஒருத்தன் இருந்தான் அவன் வாழ்ந்த காலத்தே நாத்திகவாதம் தழைத்தெழ ஆரம்பித்திருந்தது. அவன் ஏதெச்சையாக அந்தக்கோஸ்டியில் சேர்ந்தான் .அது அவனுக்கு அனுகூலமான சில உபயங்களை அளித்தது .அவன் மெல்லமெல்ல பேமஸ் ஆனான் .பணமும் தாராளமாக கிடைத்தது. அதையோ பொழப்பாக்கிக்கொண்டான் . அதனால் ,அந்தக்கால கட்டத்தில், அரசனிடம் அவனுக்கு மரியாதை இருந்ததால் அரசனின் அபிமானத்தைப்பெற கடவுள் ஒருவன் உண்டு என புலம்ப ஆரம்பித்தான் .நாளாக ,நாளாக அரசனனுக்கு அனுக்கமாகி அவரவருக்கு ஒவ்வொரு கடவுள்கள் என்றான் .ஒரு நிலையில் தன்னை திரும்பிப்பார்த்தான் .எப்படி நம்மால் இவ்வளவு உயரமுடிந்தது ? என பகுத்தறிவேட சிந்தித்தான் .ஏதோ ஒன்று தான் இதற்குக்காரணமாக இருக்கமுடியும் என முடிவு செய்தான் .பின் கடவுளுக்கும் எமக்கும் பிரச்சினையில்லை என சற்று இழுத்தான். இப்படி நாத்திகத்தனத்தினால் உயர்ந்து பிறகு நாத்திகம் பேசியே ஆத்திகக்கூட்டத்தில் ஆத்திகநாத்திகனாகி ஆதாயம் பார்த்து அளப்பரிய ஆளாகிவிட்டான்.அவனை ஒரு நாள் திருவள்ளுவர்
சந்தித்தார்.அவனை தெரிந்துகொள்கின்றார் . உடனே அவனைப்பார்த்து அடே மடையா முதலில் பற்றற்றான் என்ற பற்றினை பற்றினாய் .உண்மையில் அப்பற்றினைப்பற்றுவது அதனை இது போல் விடுவதற்கு அன்று அது மடத்தனத்திற்கொல்லாம்  தலையான மடத்தனம் என நகையாடி

''பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு''

என பாடினார் தெரிஞ்சுக்கோ என்றார் .
நிலை உயரும்பொழுது ,தன் நிலை துறப்பவரை எவ்வாறு வள்ளுவர் சாடுகின்றார் பாத்தாயா .இப்ப எல்லா நாத்திகமும் இப்படித்தான் இருக்கு .திருவள்ளுவர் சொல்றத எவன் கோக்குரானுக .வாய் கிழிய திருவள்ளுவர் ,திருவள்ளுவருனு மட்டும் சொல்லுவானுங்க சொத்தப்பசங்க என்று குண்டைப்போட்டு  பொக்கைவாயில் நமட்டுச் சிரிப்புடன் என்னைப்பார்த்தார் .
என்னையும் உண்மை சுட்டது .
பற்றற்றான் என்று பகுத்தறிவுப்பற்றை பற்றவேண்டும் ,அப் பகுத்தறிவுப்பற்றைப் பற்றுவது மட்டும் சிறப்பல்ல அதனை விடாமல், மற்றவர்கள் பற்றுவதற்கும் முன்னேடியாகும் படி, பற்றவேண்டும் .




.


வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ....
மீள்வு ...தொடரும் ...
.










.
.
. Download As PDF

செவ்வாய், 26 அக்டோபர், 2010

இடைவெளிப்பயணம்


.




ஒன்றி லிருந்து

ஒன்றிற்கு தாவும்

நிதர்சன நேரம்

கடக்கும்

ஒழிந்த

மவுன தூரத்தில்

திசைமாறிப்போகும்

வெளிப்பாடு

எங்கும் தெரியாமல்

தட்டுத்தடுமாறி

மீண்டும் மீண்டும்

தோன்றும்

நிலைமாற்றத்தில்

ஒன்றும் தெரியாமல்

சமன்பாட்டிற் கடங்கா

வடிவம் உருவம் 

மாறி மாறி

முதலும் முடிவும் 

முடிவிலியாய்

என்

இடைவெளிப்பயணம்















.
Download As PDF

திங்கள், 25 அக்டோபர், 2010

எதிர்மறை எண்ணங்கள்




எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.

வளைந்து வளைந்து
பாதை சென்றாலும்
பாதை பாதையினின்று
வளைந்து சென்றதில்லை .

வளமான பாதையில்
சுழல நினைத்தாலும்
சுழலும் பாதையில் சுகம்கண்டதால்
வளமான வாழ்விற்கு வக்கில்லை.

எப்பொழுதும் எல்லோர்க்கும்
எப்பொழுதும்  வாய்ப்பதில்லை
எப்பொழுதென்பது  எப்பொழுது என்றாலும்
எப்பொழுதென்பது  எப்போதும் இங்கில்லை.

சோக ரேகை
மனதினில் தோன்ற
சோம்பல் ரேகை
முகத்தில் தொலைவதில்லை .

மறக்கும் எண்ணம்
நினைவினில் தோன்ற
நினைக்கும் எண்ணம்
மறப்பதை தொலைப்பதில்லை.

எதற்காகவோ வாழ்வு என்றாலும்
எதற்காக வென்பதே
நமக்காகும் போது
நமக்கா வென்பது ஏதும் இங்கில்லை.

இல்லை யென்பது
இங்கில்லை யென்றாலும்
இல்லை இல்லாமல்
இங்கொன்றும் இல்லை .

எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறை யென்றாலும்
எதிர்மறை எண்ணங்கள்
எண்ணாமல் முடிவதில்லை.











.





.
Download As PDF

சனி, 23 அக்டோபர், 2010

பாபிலோ ஆதிவாசியின் சிற்பங்கள் .

ஏற்காடு மலைப்பகுதியின் அடர்வின் மையத்தை நோக்கி நகர்ந்து சென்றுவிட்ட பாபிலோஆதிவாசிகளைப்பற்றியும் அவர்களின் மொழி பற்றியும் சிந்துசமவெளி நாகரீக மக்களைப்பற்றியஆய்வில் ஈடுபட்டிருந்த என்னிடம் கூறியபொழுது கட்டாயம் அவர்களைச்சந்தித்தே ஆகவேண்டும் என்றமுடிவிற்கு வந்தேன் .
...

நான் சந்தித்த பொழுது அவருக்கு அதிக மயக்கமருந்து கொடுக்கப்பட்டிருந்தது . நான் இது தவறு ,மனித உரிமை மீறல் எனக்கூறி அவரிடம் பேட்டி காண்பதை தவிர்த்தேன் . எனது எதிர்ப்பை சிறிதும் எதிர்பார்க்காத அந்த ஆய்வாளர் .உங்களுக்கு நாங்கள் உதவவேண்டிய அவசியமே இல்லை .அரசும் நீங்க என்னமோ சிந்து ஆய்வுபற்றி பேசி வருவதால் இருந்துட்டு போகட்டுமே ,கெட்டபேர் ஏதுக்குனு நினச்சு, முடிந்தால் உதவுங்கள் என்ற குறிப்புடன் தான் ஏதோ அனுமதி வழங்கியுள்ளது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் .நீங்கள் இதற்கான பட்டம் பெற்றவரும் அல்ல .இவ்வளவு அனுமதித்ததே அதிகம் போங்க போங்க என்றவரிடம், அப்படியல்ல தோழரே ,இது ஜனநாயக நாடு ,அரசு மக்களின் சேவகன் மட்டுமே .இதை நான் வெளியில் சொன்னால் நீங்க அரசு என நினைத்துக்கொண்டிருப்பதே ஆடிவிடும் ஆடி .முதலில்
அவருக்கு சரியான மரியாதை செய்யுங்கள் .இச்செயலுக்கு நீங்கள் கட்டாயம் தண்டனை அடைந்தே தீர்வீர்கள் எனக்கூறிவிட்டு புறப்பட்டேன்.

...
எங்கள் காடுகளை மட்டும் நாங்கள் இழக்கவில்லை . எம்மைச்சுற்றிய புல்லினங்களையும் சேர்ந்தே இழந்தோம் .ஆறுகளையும் அது கொடுக்கும்
பாதைகளையும் இழந்தோம் ...

எம்மால் என் தாயின் மடியில் தலைவைத்து படுக்கமுடிவதில்லை.நாளுக்கு நாள் அதிகம் சுகவீனப்படுகிறது அவளின் தேகம் .தன்னுடம்பில் தாதுக்கல் குறையக்குறைய அவள் பலவினமடைகிறாள் .இரவில் உறங்காமல் நடுங்கிக்கொண்டு .அனைவராலும் கைவிடப்பட்ட ஆதரவற்ற
முதியவளாக அவளும் .ஒளிந்து வாழும் மகனாக நானும் ...

என் அன்னை எனக்கு சொன்னால் மகனே மனிதனுக்கு மனிதன் உணவில்லை ஆதலால் மனிதர்களைத் தாக்குவது கூடாது ,பாவம் என ...

அவர்களுக்கு நான் என்ன உறவென்று தெரியவில்லை .ஆனால் அவர்கள் எனது உறவு ....

எதிர்க்க முடியவில்லை என்பதைவிட எதிராளியாய் பார்க்கவில்லை என்பதால் எதிர்க்கவில்லை.ஆனாலும் அவர்கள் எமது இரத்த சொந்தங்களை ...







----






தொடரும் ...

.



. Download As PDF

வெள்ளி, 22 அக்டோபர், 2010

O +ve இரத்தம் உடனடி தேவை





சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினரால்
கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடிவரும்
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள
ஒருவருக்கு அவசரமாக உயிர்காக்க O+ve பிரிவு இரத்தம் தேவை.மேற்கண்ட இரத்தப் பிரிவினர் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

செய்தியைப் படித்தவுடன் O+ve பிரிவினைச் சேர்ந்தவன் என்பதால் SMS அனுப்பிய சென்னை கோயம்பேடு இந்தியன் மருத்துவமனைக்கு விரைந்தேன்.

IC வார்டிற்குள் அழைத்துச் சென்று படுக்க வைத்தனர். வயதானவர் உடல் முழுவதும் கட்டுக்களுடன் மூக்கில் ஆக்ஸிஜன் ஏற, பல இணைப்புகளுக்கு மத்தியில் கிடத்தப்பட்டிருந்தார். டாக்டர் என்னிடம் இரத்தத்தை எடுத்தபொழுது பெரியவருக்குத்தான் தேவையாக இருக்கிறது.
தங்களின் உதவிக்கு நன்றி என கூறினார்.

பெரியவரின் தீட்சண்யமான கண்கள் என்னை மிகவும வசீகரித்தது.அவர் என்னை சைகை செய்து அழைத்தார். கைகளை மெல்ல வருடி அருகில் அமர்த்தினார். பாரத மாதாவே என்னை தன் மடியில் அமர்த்தியது போன்ற உணர்வு.

ஐயா, நலமாக உணர்கின்றீர்களா என்றேன்.

ம் ...என்றார்.

பின், பையா நாளிதழ்களும், பிற வார இதழ்களும், பேப்பரும் பேனாவும் கொண்டு வந்து உதவ முடியுமா என்றார்.

என்னால் மறுமொழி கூற முடியவில்லை.

எனது கை பலத்த அடிபட்டுள்ளது நான் கூறுவதை எழுத்தர முடியுமா என்றார்.

சரியென அவரின் முன் அமர்ந்தேன்.

பையா, அதற்கு முன் இவற்றைப் படியென இரண்டு துண்டு செய்திகளைக் கொடுத்தார்.

'' நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும்வரை சுட்டுக் கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங்கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாக படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் செத்தேரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலை நடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம தோன்ற வேண்டும்
என்றுதான் சுட்டுக் கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமைகாட்டி விட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை.
- ஜெனரல் டயர் ''

'' 1917 டிஸம்பரில் பரிட்டிஷ் அரசாங்கம் அமைத்தது ராஜத்துரோக விசாரணைக் குழுமம் Sedition Committee ரௌலட் கமிட்டி என்ற பெயரில் பின்னர் பிரசித்தமானது. 1918 ஜூலை, இக்கமிட்டி தன் ரிப்போர்ட்டை அச்சிட்டு வெளியிட்டது. இந்த ரிப்போர்ட்டின்படி,இந்தியாவில் நடந்து கொண்டிருந்த விடுதலைப் போராட்டம் ஒரு குண்டர்களின் கலகஆர்ப்பாட்டம்-குண்டர்கள் என்றால், கொள்ளை கொல்லை புரியும் தீயர்கள்! இவ்வறிக்கை மேலும் முயன்று நிலைநாட்டப் பார்த்த கண்டுபிடிப்புகள் - இந்திய தேசபக்தர்கள் யாவரும் அராஜக வாதிகள், கொள்ளை, தீ வைப்பு, அடிதடி கொலை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களால் சமூகத்துக்கு பேராபத்து தான் விளையும், நாட்டில் அமைதி குலையுமோ என்கிற அச்சத்துக்கு இடமுண்டு- என்பனவாம்!. இப்படிப்பட்ட குற்றவாளிப் புள்ளிகளை அடக்குவது மேன்மேலும் கடினமாகி வருவதால் அதற்கான புதிய சட்டங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்றும் இந்த ரிப்போர்ட் கூறிற்று. ''

படித்துவிட்டுப் பார்த்தேன்.

கம்பீரமான குரலில் எழுது என்றார்.

சென்னை ., 22..2.2009,

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எனது அன்பினிற்கினிய நண்பர் டாக்டர் அம்பேத்கார் அவர்களுக்கு, எப்படி உள்ளீர்கள், நாம் சந்தித்து, பேசி பல நாட்கள் ஆகிவிட்டது. நலமாக இருக்க இறைவணை பிரார்த்திக்கின்றேன்.

என் மனஅழுத்தம் காரணமாகவும், சொல்லவெண்ணா துயரத்தின் காரணமாகவும் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன். உங்களைத் தவிர இத்தருணத்தில் எனக்கு ஆறுதலும், ஜனநாயகத்திற்கு பாதுகாப்புத் தரும் உரிய அறிவுரைகளும் தருபவர்கள் உலகில் வேறுயார் இருக்கின்றார்கள். சுதந்திர நாட்டின் குடிமக்கள் தங்களின் சீறிய அறிவின் துணை கொண்டு மேலும் நாட்டை வளப்படுத்தி தாங்கள் உலகிலே தலைசிறந்த ஜனநாயக வாதிகளாக ஆக்கிக் கொள்வர் என்று நினைத்தோம். ஆனால் இன்று ஜனநாயகத்தை கேள்விக்குறியதாக ஆக்கிக் கொண்டிருப்பதனைப் பார்த்தால்
மிகவும் வேதனையாக உள்ளது.

சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது, நீதிபரிபாலணம் எப்படி நடக்கிறது. என்பதனை நேரில் கண்டுவர சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றேன். அன்று மாலை திடுதிடுவென்று எந்தவித அறிவிப்பும் கொடுக்காமல், முன்னெச்சரிக்கை எதுவும் செய்யாமல் அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் மீது கொடூர தாக்குதலை ஏற்படுத்தியதோடு நீதிமன்றத்தின் மீது தாக்குதல்களை நடத்தினர் காக்கி உடையணிந்த கும்பல் .. எனக்கு தூக்கிவரிப்போட்டது. யார் இவர்கள் எதற்காக இப்படிச் செய்கின்றார்கள் எனத் தெரியாமல் திகைப்புடன் நின்று கொண்டிருந்த என்னை டே கிழவா, நீ யாருடா?, வக்கீலா ?என்றார் ஒரு காக்கி உடையணிந்தவர். ஆம் என்றேன். எத்தனை பேர் எனறு தெரியவில்லை. சரமரியாக என்னைத் தாக்கினர் . என்னை கொலை செய்யும்பொழுது கூட இப்படிப்பட்ட வலியை நான் உணரவில்லை. பின் மயங்கி விழுந்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பத்திரிக்கைகள் மூலம் உலக நடப்பும் அதற்குப் பின்னிட்டு
நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் யாவற்றையும் தெரிந்து கொண்டேன். இதன் காரணமாகவும் பிறவற்றிற்கும் எனக்கு சில சட்டத்திற்கு சட்ட விளக்கம் வேண்டியிருப்பதாலும், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட யார் யாருக்கு கடிதம் எழுதுவது என்பது குறித்தும் தங்களின் மேலான ஆலோசனைக்காகவும், அறிவுறுத்தலுக்காவும் இக்கடிதத்தை
எழுதுகின்றேன். எனது கருத்தையும் தெரிவித்துள்ளேன். உரிய உயரிய பதில் கிடைக்கும் என்று நம்புகின்றேன். ஜனநாயகம் காக்க நமது பணியை தொடர வேண்டும என நினைக்கின்றேன். தங்களின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.


ஜனநாயக சுதந்திர நாட்டில் நாடு முழுவதும் Democratic Machine ஒரு விநாடி கூட நின்றுவிடாமல் இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி நாட்டின் எப்பகுதியிலாவது ஒரு பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகள் தடுக்கப்பட்டால்கூட அங்கு கொடுங்கோலாட்சி நடக்கிறது என்பதுதானே உண்மை.


மக்கள் தங்களின் ஜனநாயக உரிமைகள் பாதிக்கப்படும்பொழுது அதற்கு அவர்கள் நிவாரணம் கேட்கும் உரிமை உண்டு. ஒரு வினாடி கூட அது மறுக்கப்படவோ, தடுக்கப்படவோ கூடாது.எச்சூழலிலும் அப்படி எங்கேனும் ஒரு மூலையில் ஏதேனும் ஒரு பாமரனுக்கு மறுக்கப்பட்டிருந்தாலும் ஜனநாயக இயந்திரம் இயங்கவில்லையென்றே பொருள் கொள்ளலாம் அல்லவா?.

நீதிமன்றங்கள் என்பது ஜனநாயக இயந்திரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே வருகின்றது என்பதனை உறுதிசெய்யும் ஒரே அமைப்பாகும். நீதிமன்றங்கள் தனது நீதிபரிபாலணத்தை தொடர்ந்து 365 நாட்களும் 24 மணி நேரமும் 60 நிமிடங்களும் 60 விநாடிகளும் இடைவிடாது செலுத்திக்கொண்டே இருக்குமிடத்தில்தான் ஜனநாயகம் சிறப்பாக இயங்குகிறது, இருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு குடிமகன் தனக்கு பாதிப்பு ஏற்பட்டது குறித்து நீதிமன்றத்தில் பரிகாரம் தேடிக்கொள்ளலாம். அந்த உரிமையை யாரும் எப்பொழுதும் மறுக்கவோ, தடுக்கவோ கூடாது என்பதுதானேஉண்மை. இது குறித்து விரிவான விளக்கம் கூறவும்.

சென்னை மாகாணம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் 4 நாட்கள் குடிமக்கள் அனைவருக்கும் அவரவர் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது குறித்து தங்களின் பார்வைக்கு வைக்கின்றேன்.

சென்னை மாகாணம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களும் தாளிட்டு இருந்ததை அறிந்து வெட்கித் தலை குனிகின்றேன். என்னை மீண்டும் கொலை செய்ததாகவே உணர்ந்தேன். என்ன கொடுமை,என்ன கொடுமை. வெட்கம், வெட்கம். இந்தியா ஜனநாயக நாடு தானா, இல்லை வேறு எதுவுமா?
ஜனநாயகத்தைப் பற்றி சிறிதும் அக்கறையில்லாமல் அவர் அவர்கள் வேறு எதுஎதுவோ பேசிக்கொண்டும், விவாதித்துக் கொண்டும், விசாரணை செய்து கொண்டும் இருக்கின்றனரே.
ஜனநாயகம் என்றால் என்ன என்று ஒன்று இவர்களுக்குத் தெரியவில்லையா? அல்லது தெரிந்து கொண்டும் யாரையோ காப்பாற்ற ஓடுகின்றார்களா?

சட்டத்தின் பாதுகாப்பு தமிழக மக்களுக்கு மறுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 4 நாட்கள் சென்னை மாகாணம் முழுவதும ஜனநாயக உரிமை, குடிமக்களுடைய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, மூடப்பட்டுள்ளது. அதனை யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர் என்பதனை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். 'இந்த அரசியலமைப்பில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஷரத்தின் பெயரைக் கூறும்படி என்னிடம் கேட்கப்பட்டால், இச்சரத்து இல்லாமல் இருப்பின் அரசியலமைப்பே செல்லாத ஒன்றாகக் கூடிய ஷரத்தைத் தவிர வேறு எந்த ஷரத்தையும் நான் குறிப்பிட மாட்டேன். இது அரசியலமைப்பின் இருதயம் ஆகும். என ஷரத்து 32-யை குறிப்பிட்டீர்கள். ஷரத்து 32 மற்றும் 226 ஆகியவைகள் இரண்டும எவ்வளவு முக்கியமான ஒன்றாகும். அரசியலமைப்பின் உத்திரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படும்பொழுது, உச்ச நீதிமன்றம் நீதிப் பேராணை வெளியிட அதிகாரம் படைத்துள்ளது. 'அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்" என சிறப்பாக உச்சநீதிமன்றம் அழைக்கப்படுகிறது. அப்படியிருக்க மேற்கூறிய நான்கு நாட்கள் சென்னை மாகாணாத்தில் எந்த ஒரு குடிமகணும் அடிப்படை உரிமைகள் மற்றுமல்லாமல் சாதாரண உரிமைகள் மீறப்பட்டதற்கும்கூட நீதிமன்றத்தினை அணுகமுடியாதபடி அதனை அடைத்து, முடக்கி வைத்தது எச்சட்டப்படி என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி நீதிமன்றங்களை முடக்கி வைக்க அதிகாரம் உண்டா? அத்தகைய அதிகாரம் யாரிடம் உண்டு? அப்படி ஜனநாயக நாட்டில் நீதிமன்றங்களை எப்பொழுது, எக்காரணத்திற்காக மூடி வைக்க முடியும்? மூடிவைக்க முடியுமா? அப்பொழுது Democratic Machine இயங்கவில்லை என்றுதானே பொருள். அப்படி இயங்காதபட்சத்தில் அதற்கு பொறுப்பு யார் ஏற்க வேண்டும். மூடுவதற்கு ஜனாதிபதி (அ) ஆளுநரின் உத்தரவு உடனே பெற வேண்டுமா இல்லையா? நீதிமன்ற நிர்வாகத்திற்கு அத்தகைய அதிகாரம் எச்சட்டத்தின் வழி கொடுக்கப்பட்டுள்ளது? எவ்வாறு? யாருக்கு? அப்படியே கொடுக்கப்பட்டிருந்தாலும் அது சரியா? சட்டத்தின் பாதுகாப்பை முடக்க முடியுமா? அப்பொழுது பாதிக்கப்பட்ட நபர், ஜனநாயக உரிமை பாதிக்கப்பட்டதற்காக இழப்பீடு பெற முடியுமா? யாரிடம் இழப்பீடு கேட்பது? யார் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பதற்கு தாங்கள்தான் சரியான பதிலையும், ஆலோசனைகளையும், அறிவுறுத்தலையும் தர வேண்டும்.

நான் இங்கு அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வது என்னவெனில் சென்னை மாகாணத்தில் கடந்த சில நான்கு நாட்களாக நீதிபாரிபாலணம் நடைபெறவில்லை என்பதோடு, அங்கு மக்களுக்கு நீதிமன்த்தால் நீதி மறுக்கப்பட்டுள்ளது என்பதுவே. மேலும் இதுபோன்று இனி எப்பொழுதும்
நடைபெறக்கூடாது என்பதுவும் ஆகும். இது ஒரு ஜனநாயக அசிங்கம், கேவலம், இதற்கு தார்மீகப்பொறுப்பேற்று இந்த ஜனநாயக படுகொலைக்கு உரியவர்கள் தங்களின் பதவியினை ராஜீனாமா செய்ய வேண்டும் என்றும், ஜனாதிபதி இது சம்பந்தமாக இதுவரை எந்த கண்டனமோ, அறிக்கையோ மற்ற எதுவுமோ கூறாமல் மௌனம் சாதிப்பது கண்டனத்திற்குரியது. அதுபோலவே கவர்னாரின் செயலும்.நாட்டில் ஒரு பகுதியில் ஜனநாயகம் மறுக்கப்பட்ட சூழலில் அத்றகு தார்மீகப் பொறுப்பேற்று அவர்கள் ராஜீனாமா செய்தாலும் மகிழ்வேன். ஜனநாயகத்திற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையாக நினைத்து பெறுமைப்படுவேன்.

ஆனால் மிகவும் வருந்தத்தக்க விசயம் என்னவெனில் மிகப்பெரிய அரசியல் ஜனநாயகப் படுகொலை நடத்திவிட்டு, வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாகத்தான் இதுவெல்லாம் நடந்ததாகஒரு மாயையை ஏற்படுத்தி தப்பிக்கப்பார்ப்பதை என்னால் ஒத்தக்கொள்ள முடியவில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்றுக்கொள்ள முடியாதது. எனது வாழ்க்கையல் செளரி சௌரா நிகழ்ச்சியில் காவல் நிலையத்தை காவலர்களை உள்வைத்தே,ஆங்கிலேய ஏகாதிபத்தியம் போராட்டத்தை திசை திருப்பி நெருப்பிட்டு ,அடக்கு முறையை அப்பாவி இந்தியமக்களின் மீது போட்டதோடு நானும், எனது போராட்டத்தை விளக்கிக் கொள்ளும்படி செய்தனர். பின்னிட்டுத்தான் காவல்துறையின் சூழ்ச்சிகளைப்புரிந்துகொண்டு செயல்பட்டேன். பிட் நோட்டீஸ் அடிப்பது, வன்முறையை மறைமுகமாகத் தூண்டுவது போன்ற செயல்களுக்கு அவர்கள்தான் காரணம் என.

மேலும் ஒன்றை உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். விரைவான நீதி கிடைக்கத்தானே நாம் எவ்வளவோ சட்ட முன் வரைவுகளை வெளியிட்டோம். ஆனால் இன்று நீதிமன்றத்தில் அரசின் பேருந்துகள் ஜப்தி செய்து வைத்துள்ளதாக எனக்கு தெரிய வருகின்றது. இது என்ன நடைமுறை கலெக்டர் அலுவலகம் ஜப்தி, பேருந்து ஜப்தி என. ஏன் அரசிடம் நேரடியாக பெற எத்தனையோ வழிகள் இருக்க ஏன் மக்களுக்கு தாமதமாக நீதி வழங்க வேண்டும். இது குறித்து தாங்கள், மக்கள் விரைவாக நீதி கிடைக்க என்னென்ன வழிகள் உள்ளது, எது செய்யலாம் என்பது குறித்து தக்க ஆலோசனைகள் கூறவும்.

மேலும், பாகிஸ்தானில் பஞ்சாப் மாநில முதல் மந்திரி ஷபாஸ் ஷொரிப்பை அந்நாட்டு சுப்ரிம் கோர்ட் லஞ்ச ஊழலில் ஈடுபட்டதற்காக தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்றும், முதல்வர் பதவியில் நீடித்திருப்பதற்கு தடை வித்துத்துள்ளது.

இது குறித்து எனக்கு உள்ள சந்தேகம் என்னவெனில்,ஆங்கிலேயே நீதித்துறையைப் பற்றி எனது பார்வையை நான் கண்ட அவலத்தினின்று கூறிக்கொள்கின்றேன். ஆங்கிலேயே ஆட்சியில் பணிபுரிந்தவர்கள் சம்பளத்திற்காகவும், பதவி உயர்விற்காகவும் புகழிற்காகவும், அரசை மிகவும் சார்ந்து, அரசு சொல்வதை ,நினைப்பதை,இம்மி பிசகாமல் தங்களின் நீதிபரிபாலணத்தை காட்டிவந்தனர். உயர் பதவியே குறிக்கோளாகவும்,மிகவும் சொகுசுக்காகவும், அந்த சொகுசு நீடிக்க அரசுக்கு எது வேண்டுமானாலும் செய்து வரும் ஏஜெண்டுகளாகவும் இருந்து வந்தனர். மொத்தத்தில் அரசு வழக்கறிஞர்களாகவே இருந்து வந்தனர். நான் வாதாடிய வழக்குகளாகட்டும், எனது போராட்டங்களுக்கு எதிராக அவர்கள் போட்ட வழக்காகட்டும், அவர்கள் ஒருபொழுதும் அரசின்  விசுவாசத்தினின்று பிறழ்ந்ததே கிடையாது. எனது வாழ்க்கைப் பயணத்தின் நெடுக இவ்வாறே பார்த்திருந்தேன்.நியாயமும் ,மனிதாபிமானமும் அவர்களிடம் என்றும் நான் பார்த்தே இல்லை .

சுதந்திரத்திற்கு முன்பே நீதித்துறையில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வர நினைத்தேன். அதற்கு முடியாமல் போய்விட்டது. ஏனெனில் அந்த அமைப்புகள் அப்படியே தொடர்ந்தால் அந்த அந்த அமைப்புகளில் பதவியில் அமர்பவர்கள் அதே போன்று கட்டப்பஞ்சாயத்து மனோநிலையிலேயே நடந்து கொள்வார்கள் என்று எனது மனதில் ஒரு நமைச்சல் இருந்து வந்தது. விரிவாக செயல்படுத்துவதற்கு முன் என்னை படுகொலை செய்துவிட்டார்கள். நான் அப்பணியை சரியாக செய்யாததன் காரணமாகத்தான் என்னவோ, நாம் பெற்றுத்தந்த சுதந்திர நாட்டில் இன்னும் மக்கள் அதனை பூரணமாக அனுபவிக்க முடியாமல் அவதிப்படுகின்றார்கள் போலும்.

மேலும், அரசியல் சாசன உரிமைகள் குற்றவழக்கு பின்னணியால் எப்பொழுதும் பாதிக்கப்பவதில்லை. அரசியல் குற்றம் என்பது வேறு, சமூக குற்றம் என்பது வேறு. இவற்றை உணர்ந்து நீதிமன்றங்கள் செயல்படுவதாக தெரியவில்லை. சுதந்திரம் பெற்ற நாடுகளின் நீதிபதிகள் சர்வாதிகாரிகள் போல் செயல்படக் கூடாது என்பது எனது அழுத்தம் திருத்தமான கொள்கை. தங்களின் தீர்ப்பு தங்களுக்கு முன் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு மட்டுமே. மேலும் பொது நல் வழக்குகளின் தீர்ப்புகள் பொது நலத்தின் மீது மட்டுமே. மற்ற வழக்கு தீர்ப்பிற்கும், பொது நல வழக்கு தீர்ப்பிற்கும், அரசயில் சட்டம் குறித்த தீர்ப்பிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு என்பதை நீதிபதிகள் உணர வேண்டும்.

அரசியலமைப்பின் பாதுகாவலனாக நீதிமன்றங்கள் மட்டும் இருக்க அதில் அமர்ந்துள்ள நீதிபதிகள் அரசியல் வாதிகளின் பாதுகாவலனாக இருப்பதால் சுதந்திரமும் ஜனநாயகமும் கேலிக்கூத்தாகிக் கொண்டிருக்கின்றது என்பது எனது திடமான கருத்து. நாம் போராடி சுதந்திரம் பெற்ற நாட்டில் தேர்தலில் போட்டியிடக் கூடாது என ஒரு நபருக்கு அவரின் சமுதாயக் குற்றத்தினைக் காரணம் காட்டி ஆணையிட அதிகாரமில்லை என்பது எனது கருத்து.

ஷொரிப் எங்கு சென்று பரிகாரம் எப்படி பெறுவது என்று எனக்கு தாங்கள் சரியான அறிவுறுத்தலும், ஆலோசனைகளையும் வழங்கவும்.


மேலும் பங்களாதேசத்தில் இராணுவப் புரட்சி மற்றும் பல புரட்சியாளரைக் காணவில்லை என்பதை படித்து தெரிந்து கொண்டேன். அரசு தனி விசாரணைக்கமிஷன் அதற்கு வைக்கலாம் அல்லவா?

விசாரணையில் கமிசன் பற்றி எனது கருத்தை தங்களின் பார்வைக்கு வைக்கின்றேன். நான் ஆப்பிரிக்காவில் இருந்தபொழுது கோலோவில் நடந்த ஒரு போராட்டத்திற்கு விசாரணைக் கமிஷன் அமைக்க அரசு ஆணையிட்டது. அப்பொழுது அரசு தனக்கு தேவைப்பட்ட, அப்பொழுது நீதிபதியாக இருந்த சாம்சனை அமர்த்தியது. அவர் கோடா உயர்நதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். அப்பொழுது நான் ஆங்கிலேயே அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதனை தங்களின் பார்வைக்கு
வைக்கின்றேன்.

மேன்மை தாங்கிய இங்கிலாந்து பிரதமருக்கு கோலோ நிகழ்ச்சி பற்றி தாங்கள் அறிந்ததே அது சம்பந்தமாக தற்பொழுது கோடா உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி சால்மனை நியமித்துள்ளீர்கள். அடிமை அரசாக எங்களை ஆளும் நீங்கள் உங்களிடம் சம்பளம் வாங்கி வரும் ஒருவரை உங்களின் அரசு செய்த குறித்தினை விசாரணை செய்யும் தலைவராக அமர்த்துவது தங்களுக்கு சாதகமாகவே அமையும் என்பது தங்களுக்கே தெரியும். ஆதலால் ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியை அதற்கு அமர்த்துமாறும், அப்படி அமர்த்தாத பட்சத்தில் நாங்கள் அந்த அமைப்பிற்கு ஒத்துழைக்க மாட்டோம் என்றும், ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம் என்றும் உறுதிபடக் கூறியதோடு, போராட்டமும் தொடரும் என்பதனைக் கூறிக் கொள்கின்றேன். உரிய நடவடிக்கை வேண்டி . நான் அக்கடிதம் 1910-ல் எழுதியது என நினைக்கின்றேன். அது நம்மை அடிமையாக ஒரு அரசு ஆண்டபொழுது எழுதியது. ஆனால் சுதந்திரமான ஜனநாயக நாட்டில் மேற்குறிப்பிட்ட எனது கடிதத்தில் கூறியுள்ள எனது கருத்துக்கு எதிராகவே மாறிவிடும் என்பதுவே.

அதாவது சுதந்திரமான ஜனநாயக நாட்டில் அப்பொழுது பணியிலுள்ள ஒருவரைத்தான் விசாரணைக் கமிஷன் தலைவராக அமர்த்த வேண்டும். அப்பொழுது தான் சரியான முறையில் ஜனநாயகம் காக்கப்படும் என்பது எனது கருத்து. இது சரிதானே. தாங்கள் இதைப் பற்றியும் கருத்து கூறவும்.

இங்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் பற்றி பேச வேண்டும் என நினைகின்றேன் .

கட்டுப்பாடற்ற முழுச்சுதந்திரம் பற்றி பேச வரும்பொழுது நீதிமன்ற அவமதிப்பு பற்றி எனது பார்வையை தங்களின் முன் சமர்ப்பிக்கின்றேன்.

நீதிமன்ற அவமதிப்பு என்பது ஆங்கிலேயர்கள் தனது நீதிபதிகளின் தீர்ப்பின் மீது அடிமை நாடுகளின் மக்கள் எவ்விதமான கருத்தும் கூறக்கூடாது. அப்படி கருத்துக் கூறும் தகுதி சிறிதும் அற்றவர் அவர்கள்,  அப்படிப்பட்டவர்களிடமிருந்து ஜனநாயகக் குரல் ஒழிக்கக்கூடாது என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நயவஞ்சகச் சூழ்ச்சி.

இந்தியா ஒரு மக்களாட்சி நாடு, மக்களாட்சியில் மக்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது மக்களாட்சியாகாது. மாறாக சர்வாதிகார ஆட்சியாகிவிடும் (Tyranny) மக்களுக்கு கட்டுப்படாற்ற முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் . அதுதான் நான் விரும்பிய இந்தியா. நான் சுதந்திரம் பெற போராடியது அதற்காகத்தான். 60 ஆண்டுகள் ஓடிய பின்னும் இந்தியாமுதிர்ச்சியடையாமல் இருக்கிறது என்றால் கேவலம், வெட்கம். என்ன ஆட்சி ஆண்டு கொண்டு வருகின்றனர். எனது பெயரைச் சொல்லிக்கொண்டு. என்னை அவமானப்படுத்துவதாகவே
நினைக்கின்றேன். நமது இந்தியா சுதந்திர இந்தியா, உலகிற்கே உதாரணமாக இருக்க வேண்டும். நமது மக்களின் கருத்துச் சுதந்திரம் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு இந்தியா உலக அளவில் மிகச் சிறந்த நல்லரசாக விழங்கும் என்பது எனது கருத்து. அதை விடுத்து இந்திய மக்களின் கருத்துச் சுதந்திரத்தை தடுத்து நிறுத்துவது சுதந்திரப் போராட்டத்தையும், எமது தியாகத்தையும், எமது கனவையும், குழி தோண்டி புதைப்பதாகவே உணர்கின்றேன். கருத்துச் சுதந்திரத்திற்காகவே நாம் போராடினோம். சுதந்திரம் பெற்றோம். மறுப்பவர் யாராக இருந்தாலும் தூக்கியெறியப்பட வேண்டியவர்களே. கருத்துச் சுதந்திரம் உள்ள இடத்தில்தான் மிகச் சிறந்த சிந்தனைகளும், சீர்திருத்தங்களும் ஏற்படும். இது சரிதானே. தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கூறவும்.

மேலும் ,இந்தியாவிற்கு மிகச்சிறந்த வெளியுறவுக்கொள்கையை வகுத்துத்தரவேண்டும் என நினைக்கின்றேன் . தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தருமறு வேண்டுகிறேன் .

ஒன்றை நான் இப்பொழுது நினைத்துப்பார்க்கின்றேன் . 1927-ம் ஆண்டில் நான் இலங்கை சென்றிருந்தபொழுது யாழ்பாணத் தமிழர்கள் இந்தியாவைத் தங்கள் தாய் நாடாகப் போற்றிக் கூறினர். இந்திய நாட்டின் மீது அவர்கள் கொண்டருந்த பற்றினை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.அங்கு இப்பொழுது மிகவும் வருந்தத்தக்க சூழல் நிலவி வருவது எமக்கு வருத்தத்தை தருகிறது .

பொதுவாகவே விடுதலைக்காக போராடும் மக்களுக்கு எப்படிப்பட்ட வி்தத்தில் இந்தியா இருக்கவேண்டும் என்பது குறித்து எமது கருத்துக்களுக்கும் தங்களின் மேலான   ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கூறவும்.எமது கருத்து ,இது எமது கருத்து மட்டுமல்ல இந்தியாவிற்கான சுதந்திரத்திகாக போராடும் பொழுது நான் பிற நாடுகளிடம் எப்படிப்பட்ட உதவிகளை விரும்பினேன் ,எப்படியெல்லாம் அவைகள் உதவ வேண்டும் என நினைத்தேனே அப்பொழுது தோன்றியது இது என்பதுவே உண்மை . விடுதலைக்காக மக்கள் போராடி வரும் நிலையில் அவர்களின் சுதந்திரத்தை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் விதத்தில் நமது இந்தியாவின் செயல்பாடு இருக்க வேண்டும். எமது நாட்டிடமிருந்து எந்த ஒரு நாட்டிற்கும் விடுதலை இயக்கத்தையும், ஒடுக்குவதற்கு ஆலோசனைகளையோ, ஆயுதங்களையோ தருவதை
நான் ஒருபொழுதும் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏனெனில் நான் அப்படிப்பட்ட போராட்டத்தால் சுதந்திரம் வாங்கவில்லை. மேலும் ஒரு நாட்டின் சுதந்திரத்தை எவ்வழியில் அடைவது என்பதை அதற்காகக் போராடும் மக்களே தீர்மானித்க் கொள்ள வேண்டும். அதை மீறி யாரும மாற்று வழி கூறுவதை எம்மால் ஒத்துக்கொள்ள முடியாது. அது சரியானதும் அல்ல. யாரையும் நிர்பந்திக்கும் அரசாக எமது சுதந்திர ஜனநாயக இந்தியா இருப்பதை நான் விரும்பவில்லை. அதற்காக நான் சுதந்திரம் வேண்டி போராடவில்லை. சுதந்திரம் எங்கு தோன்ற எத்தணித்தாலும் அதற்கு முழு ஆதரவும் கொடுக்கவே யாம் விருப்பமுற்றுள்ளோம். அவர்கள் யாராக இருந்தாலும் எப்படி இருந்தாலும ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களாக அவர்கள் இருக்கும்பட்சத்தில் எனது ஆதரவு அவர்களுக்கு. இது சரிதானே.

தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் பற்றி எனக்கு சில விளக்கங்கள் தேவை.

எவைகளை தடை செய்யப்பட்ட இயக்கங்கள் என்று கூறலாம் என்பது பற்றி எனக்கு விரிவான விளக்கம் தரவும்.

எனது கருத்தை தங்களின் முன் பதிவு செய்கிறேன்.ஒரு சுதந்திர ஜனநாயக நாட்டில் நாடு என்ற அமைப்பிற்கே அச்சுறுத்தும் வகையில்,பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன்,பிரிவினையை துண்டவேண்டும் என்ற கருத்துடன் தேசத்திற்கே அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தும் தேசமக்களின் பாதுகாப்பிற்கும், உயிர் ,உடமைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயல்களை தொடர்ந்து அடிக்கடி பல்வேறு பெயர்ககளில் பல்வேறு இயக்கங்களாக பரிந்தோ, அல்லது ஒரே கோரிக்கையை பல்வேறாக பிரிந்தோ செய்யும் ஒரு இயக்கத்தை மட்டுமே தடை செய்யப்பட வேண்டும். அந்த இயக்கத்தின் செயல் தொடர்ந்து, பல்வேறு வழிகளில், நீடித்துக் கொண்டே பலரால் நடைமுறைப்படுத்திக் கொண்டே பின்பற்றிக்கொண்டே, ஆதரவளித்துக் கொண்டே வரும் வேலைகளில், அது தொடர் நிகழ்வாகிக் ண்டிருக்கும்பட்சத்தில் அவ்வியக்கத்தைப் பற்றி பேசவோ, எழுதவோ ,அதற்கு உதவவே தடை விதிக்கப்படலாம். இது தவிர்த்து ஏதோ ஓர் நிகழ்வினை மட்டும் காரணம் காட்டி ஒன்றை அல்லது ஒரு இயக்கத்தை தடை செய்வது கூடாது என்று நினைக்கிறேன்.


மேலும் , நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்நிலையங்கள் மற்றும் மதசம்பந்தமான நிறுவனங்கள் ஆகியவைகள் இருக்கலாமா என்பது குறித்து தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தருமறு வேண்டுகிறேன் .
.
எனது கருத்து,
நீதிமன்றம் என்பது அனைவருக்கும் பொதுவானது அங்கு ஜாதி, இனம், மதம், மொழி, பால் எனஎந்தவித வேறுபாடும் பாராட்டக்கூடாது. அங்கு மக்களுக்கான மனித நோயத்துடுன் மக்களின் நலத்தை மையமாக வைத்தே நீதி பரிபாலணம் மேற்கொள்ளப்பட வேண்டும். சுய விருப்பு,வெறுப்பற்று நடு நிலைமையுடன் நீதி கூறுபவரே அங்கு இருக்க வேண்டும். உயர்வு, தாழ்வின்றி அனைத்து குடிமக்களுக்கும் சமமான உரிமை, இடம், வாய்ப்புஅளித்து நீதி பரிபாலணங்கள்
மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடைபெற 100% உத்திரவாதம் தரப்பட வேண்டும். ஜனநாயகம் சிறிது குறைந்தாலும், அதற்கு பொறுப்பேற்று தங்களின் பதவியை துறப்பதற்கும்,அதற்கான தண்டனைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமானவர்கள் அங்கு இருக்க வேண்டும். நீதிமன்ற வளாகத்திற்குள்ளும், நீதிமன்றத்திற்குள்ளும் எந்தவிதமான மதச் சின்னங்களோ, அடையாளங்களோ,விளம்பரங்களோ, கோவில்களோ அது சம்பந்தமானவைகள் காட்சிப் பொருளாகவோ, நிலைபெற்ற அமைப்பாகவொ எவையுமே இருக்கக் கூடாது. மேலும் அரசியல் சார்புடைய சங்கங்களோ ,அமைப்புகளோ, கொடிமரங்களோ, பேனர்கள் போன்றவையோ மற்றும் அவற்றை பிரதிபலிக்கும் எவையும்
நீதிமன்றத்திற்குள்ளும், நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் அனுமதித்தல் கூடாது. ஒரு நீதிமன்றத்திற்குள் நீதி பாரிபாலண அவை, நீதிபதிகள் அறை, நீதிமன்ற பணியாளர்கள் அறை,நீதிமன்ற அலுவலகம், வழக்கறிஞர் கூடம் மற்றும் வழக்கிற்கு பயன்படும் பொருட்கள் விற்பனை அங்காடி, மற்றும் வழக்கறிஞர்கள் ஓய்வு அறை மற்றும் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் ஓய்வு அறை மற்றும் வழக்கறிஞர் சங்கம் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், வங்கிகள், கேண்டீன்கள் இது தவிர்த்து வேறு எதுவும் இருக்கக் கூடாது. மேலும் அவற்றில் அரசியல் தலைவர்களின் போட்டோக்கள், மதச் சம்பந்தமான போட்டோக்கள் ,விளம்பரம் தாங்கிய காலண்டர்கள் ஆகியவை இருக்கக்கூடாது.இப்படித்தான் ஜனநாயக நீதிமன்றம் இருக்க வேண்டும்.

இறுதியாக,
நீதிமன்றத்திற்குள் புகுந்து நிராயுத பாணியாக இருந்த எம்மை ஒரு ஜனநாயக நாட்டில்,நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பின் ஊழியர்கள், நீதியை நிலைநாட்ட நீதிபாரிபாலணம் செய்யும் உயாரிய இடத்திற்குள் புகுந்து நீதியின் பாதுகாவலர்களான ஜனநாயகவாதிகளான வழக்கறிஞர்களை காட்டுமிராண்டிகள்போல் தாக்கியதோடு மட்டுமல்லாமல்,நீதிமன்றத்தில் உள்ள வாகனங்களையும், நீதிமன்றக் கட்டிடத்தையும் வெறிகொண்டு தாக்குதல் நடத்தியது குறித்து தங்களின் மேலான கருத்தையும் ஆலோசனையையும் கூறவும். நான் இங்கு அழுத்தம் திருத்தமுமாக பதிவு செய்வது என்னவென்றால், மேற்கண்ட சம்பவம் வழக்கறிஞர்கள் மீது நடந்த தாக்குதல்களாக நான் கருதவில்லை. ஜனநாயகத்தின் மீது நடந்த ரடித்தாக்குதலாகவே
கருதுகிறேன் அரைவேக்காட்டு, தகுதியில்லாத உயர்பதவியில் உள்ளவர்களின் கைலாகாத தனத்தினால் ஜனநாயகத்தைப் பற்றி எந்த அறிவுமற்ற ஆணையினால்தான் நடந்த தாக்குதல் என்றே சொல்லுவேன். சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டு கொக்கரிக்கும் செயலாகவே கருதுகிறேன். எமது நாட்டில்  இப்படிப்பட்டவர்களை எமது மக்கள் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அவர்களின் செயல்களுக்கு மக்கள்தான் வழக்கறிஞர்களுடன் ஒன்றினைந்து
அவர்களுக்கு ஆதரவு தந்து ஜனநாயகத்தைக் காப்பதுடன், ஜனநாயக முறையில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

சுதந்திரம் பெற்று அயோக்கியர்களின் கைகளில் நாடு செல்லும் என நான் நினைக்கவேயில்லை. அப்படி நினைத்திருந்தால் அது நடைபெறாத வகையில் முன்பே வரைவுத் திட்டத்தை தயாரித்திருப்பேன். அதில் ஒன்றாக காவல்துறை முழுவதையும் நீதித்துறையின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் சட்டத்தினை வரைந்திருப்பேன். அப்பொழுதுதான் அரசியல்வாதிகளின் அபிலாசைகளுக்கு காவல்துறையினர் காவு ஆகாமல் காப்பாற்றுவதுடன் உண்மையான சட்டத்தின் ஆட்சி நடக்க ஏதுவாக இருக்கும். ஏனெனில் நீதிபதிகள்
தங்களது பாதுகாப்பினை அரசிடமிருந்தே பெறுவதால் அவர்கள் நேரடியாகவே ,மறைமுகமாகவே நிர்பந்தப்படுத்தப்படலாம்.

ஏற்கனவே காவல்துறையினர் மீது மக்களுக்கு   நம்பிக்கையில்லாது வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். அப்படி நாட்டை நாத்தமடித்து வைத்துள்ளனர் அரசியல்வாதிகள். இப்பொழுது காவல்துறையினர் இந்த அராஜகத்தைப் பார்க்கும் மக்கள் காவல்துறை கடுமையான அமைப்பு. அதனால் நாம் அவர்களின் அட்டூழியங்களுக்கும், அராஜகங்களுக்கும் வாயடைத்து, கண்மூடி செல்ல வேண்டும்.நீதிமன்றத்தையே இவர்கள் என்ன அட்டூழியம் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை. ஆதலால் ஜனநாயகத்தில் உரிமைகளை அவர்களிடம் அடமானம் வைத்து நடைபிணமாக அவர்கள் வாழ வேண்டியதுதான் என்று முடிவுக்கு சென்று விடுவார்கள் . இந்த லட்சணத்தில் அரசியல் அயோக்கியத்தை மேலும் அரங்கேற்ற புதிய சட்டத்தின் மூலம் அதிக அதிகாரம் காவல்துறைக்கு
கொடுக்கின்றனர் போலும். எம் பெயரில் ஆட்சி செய்யும் அறிவாளிகள். இப்பொழுதே காவல்துறையினர் இப்படியெனில், புதிய சட்டம் வந்த பிறகு நாடே கொடுங்கோலாட்சிக்கு உடனே சென்றுவிடும் என நினைக்கின்றேன். அப்படி ஒரு ஐடியா இருந்ததன் காரணமாகத்தான் என்னவோ அதனை எதிர்த்து போராடிய வழக்கறிஞர்களைத் தாக்க ஆரம்பித்து விட்டனர் போலும். அப்படித்தான் நினைக்கின்றேன். இனி நீதிமன்றங்களே தேவையில்லை என்ற முடிவுக்கு வந்ததன் காரணமாகத்தான் அவர்கள் உயர் நீதிமன்றத்திற்குள் புகுந்து வழக்கறிஞரைத் தாக்க ஆரம்பித்தனர் போலும். இப்படிப்பட்ட அராஜக செயலை அரங்கேற்றியவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. இனிமேல் வரலாற்றில் இதுபோல் என்றும் எந்தத்தவறும் நடைபெறாமல் ஏதாவது செய்ய வேண்டும். தண்டனை கொடுக்கவேண்டும் என்பது எனது நிலைப்பாடல்ல .அவரவர் செயல்களுக்கு மனிதாபிமானத்துடன் அவரவர்களே பொறுப்பேற்று அவரவர்கள் ஜனநாயகம் காக்க சட்டப்படி
நடந்துகொள்வதுதான் ஜனநாயக மாண்பு .அப்படிச்செய்வதுதானே சரி . இதற்கு தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கூறவும்.
இந்தியா முழுவதும் உங்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் எதிர்பார்த்தே காத்திருக்கின்றோம் .
தங்களின் மேலான பதிலை எதிர்பார்ப்பு .

......
என எழுதி முடித்த நான் அவரிடமிருந்து அடுத்த வார்த்தை வராததால் அவரை பார்த்தேன் .

சரி இன்னொரு கடிதம் எழுதவும் என்றார் .

ஒபாமா அவர்களுக்கு
முதலில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆம். உங்களின் மூதாதையர் பட்ட கஷ்டத்தை நேரில் பார்த்தவன் நான்.
மிக்க மகிழ்ச்சி ஒபாமா, மிக்க மகிழ்ச்சி!.
ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து மிகப் பெரிய உயரத்திற்கு உங்களை கொண்டு சென்றுள்ளதுமனிதாபிமானம்தான் .அதனால்தான் அமெரிக்கா, அமெரிக்காவாக இருக்கிறது. எமது இந்தியாவோ சுரண்டல்
சமூகத்தினரால் சிக்கித் தவிக்கிறது.எப்படித்தான் உயரப் போகிறதோ தெரியவில்லை.நல்ல தலைமை இல்லாமல் ஜனநாயகப் படுகொலையைக்கூட வேடிக்கைப் பார்த்துக்கொண்டு தேசம் நாசம்மாகிக் கொண்டிருக்கிறது.தங்களைப் போன்ற வழக்கறிஞரின் தலைமை தேவையாக உள்ளது இப்போது .இப்போது தான் O+ve ரத்தம் (ஒற்றுமையுடன் சேரும் பண்பு) அதிகமாக பாய்ந்துள்ளது ஜனநாயகத்திற்கு, வழக்கறிஞர்களால்.மேலும் மேலும் O+ve ரத்தம் சேர்ந்து ஒரு நல்ல தலைமையை உருவாக்கி நாட்டை நல்வழிக்கு கொண்டு செல்வார்கள் என எண்ணுகிறேன். இங்கு இப்பொழுது வழக்கறிஞர் சமுதாயத்தால் தான் ஒரு நல்ல தலைமையை உருவாக்க முடியும்.அவர்கள்தான் இனி நாட்டை நல்வழிக்கு கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
அதற்கு தங்களின் ஆதரவு உறுதியாக கிடைக்கும் என நம்புகிறேன்.
ஆதரவளிக்க வேண்டுகிறேன் .

தாங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்,
வணக்கம்.

பையா இந்த இரண்டையும் போஸ்ட் செய்துவிடு என்றார்.


ஐயா, தாங்கள் கையெழுத்து செய்யவில்லை என்றேன்.

இரண்டு கடிதத்தையும் வாங்கி

இப்படிக்கு
M.K.காந்தி

என கையெழுத்திட்டார்.

ஐயா,
நீங்களா !!!
மகாத்மாவா !!!
உங்களுக்கா !!!
நான் இரத்தம் ……!!!!…..

மெல்ல என்னை அருகில் அழைத்தார் .

பொற்கைகளால் அணைத்தார் .

அவருள் நான் கரைந்தேன் .









**************************************











கோர்ட்டுக்குள் புகுந்து வக்கீல்களை நொறுக்கியது போலீஸ் .
கேரளாவில் தடாலடி
இன்றைய  செய்தி .
இதைப்படித்ததும் எனக்கு பழையது ஞாபகத்துக்கு வந்துச்சு
அதான் இந்த மீள்வு .
அவ்வளவே . 





















.







.






















. Download As PDF

வியாழன், 21 அக்டோபர், 2010

அம்மா இரவு

 .












எனதறைக்கு பக்கத்தறை

அவள் படுக்கையறை

நித்தமும் இரவு முணுமுணுப்பாள்

ஏதாவதொன்றை

அவள் கண்ட கனவை

காலம் கடந்து விட்டதை

சமைக்க இயலாததை

வாழ்வில் வராததை

ஏற்றதை ஏற்காததை

உடம்பின் வலிகளை

இதனுடன்

என் இரவு கண்விழிப்பை

நித்தம் என்னை அழைத்து

'பகலில் படி கண்கெட்டுவிடும்" என்பாள்.

அவள் குரல் கேட்டு

பின் நகர்ந்து செல்லும் என் இரவு

அவள் குரலில்லை யென்றாள்

எனக்கிரவில்லை

ஆதலால்

அம்மா இறக்கக் கூடாதென

நித்தம் ஏங்குகிறேன்.

















.

 
Download As PDF

செவ்வாய், 19 அக்டோபர், 2010

நிமிர்ந்த நல் நடையராவோம் -பெண்களே உஷார் .


நிமிர்ந்த நடை ,நேர் கொண்ட பார்வை என நாம் படித்திருக்கிறோம் .
நிமிர்ந்த நடை -நல்ல எண்ணங்களுடன் சமுதாயத்தில் உயர்ந்த முதிர்ந்த பண்புடையவராக உலாவவேண்டும் என்பது .ஆனால்,நான் இங்கு சொல்லவந்தது நமக்கு நமது வாழ்வில் ஏற்படும் ஆஸ்ட்டியோபொரோஸிஸ் (Osteoporosis )என்னும் வியாதி பற்றியும் அதனை நாம் நமது பழக்கவழக்கத்தால் வெற்றிகொள்வதையும் பற்றியதுமே யாகும் .

நாம் அப்பப்ப கேட்டிருப்போம், எங்க பாட்டி பாத்ரூமில் விழுந்திட்டாங்க எலும்பு உடைச்சிருச்சு  ... சும்ம தடுக்கி விழுந்தார் எலும்பு சுக்கலா ஒடுஞ்சிருச்சுப்பா ..என .

இதற்கு காரணம் ஆஸ்ட்டியோபொரோஸிஸாக கூட இருக்கலாம் .

அதாகப்பட்டது நம்ம மனிதர்கள் வளர்ந்து வரும் காலங்களின் எலும்புகள் உருவாகியும் ,உதிர்ந்தும் கிட்டத்தட்ட 30-35 வயது வரை இருக்கும் .இதில் உதிர்வதை விட உருவாகுவது அதிகப்படி .அதற்கப்புறம் எந்தவித மாற்றமுமின்றி சில வருடங்கள் இருக்கும் .பிறகு 40-50 வயதுகளின் தேய ஆரம்பிக்கும் .அதனால் எலும்பு அதன் தன்மையை இழக்க ஆரம்பிக்கும் .அதன் காரணமாக எலும்பு தனது ஆதி வலுவை இழந்துவிடும் .

இவ்வாறு வலு இழந்த எலும்புகள் எளிதா உடையக்கூடிய நுண்துளைகள் உடையதாகவும் ,உடையக்கூடியதாகவும் ஆகி எலுப்பு முறிவை ஏற்படுத்துகிறது .

இது தான் ஆஸ்ட்டியோபொரோஸிஸ் என்னும் வியாதி .

இந்த வியாதி ஒருவருக்கு இருப்பது தெரியாது .இதனால் சிலருக்கு முதுகு வடத்தில பலமுறை முறிவு ஏற்பட்டு உயரம் குறையலாம் .கூனை விளைவிக்கலாம் .இது ஒரு Silent Disease .எலும்பு ஒடஞ்ச பிறகு தான் தெரியும் .

அதனால் இந்த நோயை வருமுன் காப்பது சாலச்சிறந்தது .

அதனால் தினமும்

கால்சியம் அதிகம் இருப்பதை சாப்பிடுங்கள் பால்,பச்சை காய்கறிகள் ,மீன் ,சோயா இப்படி ஏதோ ஒரு வடிவில் .

கால்சியம் நன்றாக வேலை செய்ய வைட்டமின் D தேவை அதனால் சூரிய ஒளி பட ஒரு 20 நிமிசம் இருங்க  .

வைட்டமின் C யும் தேவை அதனால்  நெல்லி ,கொய்யா... இப்படி ஏதாவதொன்றை சேர்த்துக்கொள்ளவும் .

கோலா ,ஜங்க் உணவுகளை தவிர்க்கவும் .

புகை பிடித்தல் ,மது அருந்துவதை தவிர்க்கவும் .

மேலும் 

சரியான உடற்பயிற்சி மிகவும் முக்கியம் .

அதனால் தினமும் குறைந்தது 30 நிமிட  முறையான வேக நடை (Brisk Walking ).

எடை தூக்குதல் (Weight Lifting).

இவற்றை செய்யவும் .அவ்வளவு தான் .நோய் அண்ட பயப்படும் .


சரி இந்த நோய் வந்துட்டா ...

மேற்கண்ட உணவுமுறைகளையும் ,உடற்பயிற்சியையும் தொடருங்கள் கீழ்க்கண்டவற்றை கடைப்பிடித்து .

நிறைய நார்ச்சத்து உள்ளவை ,நிறைய சோடியம் உள்ளவைகளை தவிர்க்கவும் .
சரியான காலணிகளை அணியுங்கள் .
பழவீனமானவர்கள் கைத்தடிகளை பயன்படுத்துங்கள் .
வழுக்கும் தரைகளில் நடக்காதீர் .
வீட்டில் குளியலறையை மற்றும் கழிவறைகளை உலர்ந்து இருக்கும் படியும் ,கைப்பிடிகள் இருக்கும் படியும் ,வெளிச்சம் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளுங்கள் .
கீழே விழுவதையும் ,எலும்பு முறிவுகள் ஏற்படுவதையும் தவிருங்கள் .
கண் பரிசோதனை செய்துகொள்ளவும் .
ஏரோபிக்ஸ் தவிர்க்கவும் .
ரோயிங் மெசினை தவிர்க்கவும் .

மேலும்  மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி கட்டாயம் நடந்துகொள்ளுங்கள் .

பெண்கள் கவனிக்க
பெண்கள் எலும்புகளின் உச்ச வளர்ச்சியை 18 வயதிலே அடைந்துவிடுகின்றனர் .(அது ஆண்களுக்கு 20 ல் நேருகிறது .)
மேலும் ,எஸ்ட்ரோஜென் பெண்களின் எலும்புகளில் கால்சியம் படிவதற்கு உதவுகிறது .மாதவிடாய் நின்று போகக்கூடிய நிலையில் இதன் அளவு குறைவதாலும் எலும்பு பலவீனம் அடைகிறது .அதோடு மாதவிடாய் நின்ற பிறகு எலும்பின் தேய்வு விகிதம் சாதாரணமாக ஓராண்டிற்கு இருக்கும் 0.4% தை விட 2.5% அதிகரிக்கிறது.அதனால் பெண்களுக்கு ஆஸ்ட்டியோபொரோஸிஸ் வாய்ப்புகள் அதிகம் .

அதனால் ,
64 வயதிற்கு மேலான பெண்கள் ,
எலும்பு முறிவுள்ள மாதவிடாய் நின்றுபோன பெண்கள் ,
சீக்கிரமே  மாதவிடாய் நின்றுபோன பெண்கள் ஆகியோர் முறையான மருத்துவப்பரிசோதனை மேற்கொள்வது மிகவும் நலம் .

வருமுன் காத்துக்கொள்வது நலம் பயக்கும் தானே .



அக்  20   World Osteoporosis Day 

இதனை முன்னிட்டு பொது நலன் கருதி

நண்டு @ நொரண்டு

















. Download As PDF

போதையும் இலக்கியமும் .

எனக்குத்தெரிஞ்சு  இலக்கியவாதிகள் எல்லாரும் பெரிய போதக்காரைங்க .
அவரு தண்ணியடிச்சுட்டார்னா கவிதைய அருவி மாதிரி கொட்டுவாறு  பாரு. அவருக்கு விஸ்கி சாப்பிட்டாத்தான் கவிதையே வரும் .கண்ணதாசன் கவிதை எழுத வேண்டிய ஒன்றுகளில் தண்ணியும் ஒன்னூ தெரியுமா?. விவேகானந்தர் சாப்பிடுவாராம் போதைக்கு .பாரதியாரை காந்தியடிகள் பாக்காததுக்கு இது தான் காரணமுனு செவிவழிச்செய்தி .அவனுக்கு அதச்சாப்பிட்டாத்தான் அது வரும்  ...அவன் என்ன எழுதி கிழுச்சான் .நீ டாப்புப்பூ . ஆமா ,நான் இருக்கேன் ,அருமையா வந்திருக்கு உனக்கு .நீ பெரியவன் .டாப்பாயிட்ட ...இப்படிப்பட்ட பேச்சுக்களுடன்  தண்டியடிச்சுட்டு தாறுமாறா தங்களை இலக்கிய வியாதியா பீத்திக்கிட்டு தம்பட்டம் அடித்துக்கொண்டு எழுதும்  ஜந்துக்களின் மத்தியில் எனக்கும் ஊத்திக்கொடுத்து  நானும்  அப்படியே எனது  மேதாவித்தனத்தை காட்டி  இலக்கியவியாதி  என  3/4 புல் காலி ...திடீர்னு வானு அவன் கூப்பிடுவான் .போனா ஒரு வாசகன் கிட்ட போய் 500 ருபாய் வாங்குவான் .அப்புறம் அதை நாங்க தண்ணியடிச்சு அவனை கேலி செய்து...அவன் மீட்டிங்க மரத்தில வச்சான் ஒருதடவை .கேட்டா புதுமையாம்.அதையும் ரசித்து தண்ணி வாங்கிக்கொடுத்தாங்க அவ்வளவு இலக்கிய ஆர்வம் ...என என தனது இலக்கிய பயணத்தில்  இலக்கிய கூட்டம் கூட்டமாய் போதையில் பயணித்ததை  நினைத்துப்பார்த்து  ஏமாத்துக்காரப்பசங்கப்பா  என இப்ப   மருந்தடிமை வியாதியுடன் புலம்பும் என்   இனிய நண்பரின் புலம்பலை என்ன சொல்ல .


சரி விசயத்துக்கு வருவோம் .போதைக்கும் இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு .

மனிதன் தனது மூளையை தன் வாழ்நாளில் முழுமையாக பயன்படுத்துவதில்லை.மிகவும் குறைவாகவே பயன்படுத்துகின்றான் .அவைகள் அப்படியே வாழ்க்கை முழுதும் இருக்கும் .ஆனால் மனித மூளையின் செயல்பட்டுவரும் பகுதிக்கு பாதிப்பு ஏற்படும்பொழுது மூளையின் பயன்படுத்தாத பகுதிகள் அவற்றை சரிக்கட்ட சில செயல்களை மேற்கொண்டு மூளையை ஒரே நிலையில் பதனப்படுத்துகிறது .இதற்கு ''தூதுவம் ''என்று பெயர்.

இவ்வாறுதான் போதையினால் மூளையில் சதாரணகாலங்களில்  செயல்படாத பகுதிகளில்  சில உள்கட்டமைகள் இயக்கம் ஆரம்பிக்கின்றன .ஏனெனில் போதை மூளையின் செயல்பாட்டை முடக்குகிறது .அதோடு மூளை தனது செயலை போதையால் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறது.ஒருவர் பயன்படுத்தும்போதைப் பொருளைப் பொறுத்து மூளையின் முடங்கும் பகுதிகள் மாறுபடும் .எனவே ,இதனைத்தடுக்க மூளை மனிதன் பயன்படுத்த தனது மீதி பகுதிகளை இயக்கி சரிசெய்ய முயற்சிக்கிறது .  அப்படி அது இயங்கும் போது உருவாகும் சுரப்புகளினால் புதிய வித்தியாசமான காட்சிகள், நினைவுகள் ,எண்ணங்கள் ,நிலைகள் ஆகியவை ஏற்படுகிறது .இந்த தூதுவ நிலை அவரவர் தொழில் ,உடல் ,மற்றும் மூளையைப்பயன்படுத்தியுள்ள அளவிற்கேற்ப மாறுபடும் .இந்த தூதுவ நிலை சில காலங்கள் மட்டுமே ,பிறகு மூளை தனது மையத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிடும் .( அதனைப்பற்றி விளக்கம் பிறகு பார்ப்போம் .)இந்த தூதுவ நிலையில் ஏற்படுபவற்றை எழுதும் யுத்தி கைவரப்பெற்றவர்கள்.தங்களின் இயல்பான நிலையில் அதனை தங்களின் எழுத்து வித்தையுடன் இயல்பில் புகுத்தி இலக்கியம் என்றாக்கி விடுகின்றனர் .

உண்மையில் அவைகள் இலக்கியங்களே இல்லை . அவைகள் இலக்கியம் என்னும் போர்வையில் எடுக்கும் வாந்தியாகும்.அவ்வளவே. கட்டுடைத்துப்பார்த்தால் அவைகளின் உண்மைத்தன்மை எளிதில் வெளிப்பட்டுவிடும்.

(தூதுவ நிலை சில காலங்கள் மட்டுமே என்பதால் தெடர்ந்து இயங்கமுடியாமல் ஒதுங்கிவிடுப்படி யாகிவிடுகின்றனர் .
இலக்கிய ஓய்வு எனக்கூறி . என் நண்பர் போல .)

இங்கு ஏன் இதனை தெரிவிக்கின்றேன் எனில் ,எனது வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தினால் .நான் பெற்ற அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே .ஏனெனில் ,இன்று இலக்கியத்தை நோக்கி வரும் இளைஞர்கள் இந்த தண்ணிவண்டி மற்றும் போதை இலக்கியவியாதிகளின் போதைக்கு ஊறுகாயாகி ,திசை மாறி மேற்சொன்ன எனது நண்பர் போன்று  ஆகிவிடாமல் இருப்பதற்கே.

வலைப்பதிவிற்கு வரும் புதியவர்களுக்கும் இதையே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவ்வளவே . 



போதை  தவிர்  .







.
Download As PDF

திங்கள், 18 அக்டோபர், 2010

என் பெயர் சேப்பா







நீ உருமாறி உள்ளாய் ?

இல்லை .

இல்லை,உன்னைப்பற்றியே உனக்கு தெரியாத வண்ணம் நீ ஆக்கப்பட்டுள்ளாய் .

நான் விவாதத்திற்கு வரவில்லை .எனக்கு பயமாக இருக்கிறது .நான் கொல்லப்பட்டுவிடுவேன் என.நான் எங்குள்ளேன்?.உங்களை நான் எங்கும் பார்த்ததில்லையே .நான் எந்த தப்பும் செய்யவில்லை.தவறு என்னுடையதும் இல்லை.ஆனால் , உங்களுக்கு அப்படி தெரிகிறது.எனக்கு ஒன்னும் தெரியாது.இது தான் உண்மை .

தம்பி ,யாரோ கேட்கப்போகும் கேள்விகளை ,இதாகத்தான்  இருக்கும் என ,கேள்விகளை நீயே உருவாக்கிக்கொண்டு ,அதற்கான பதிலை என்னிடம் சொல்லிக்கொண்டுள்ளாய் .நான் கேள்விகளை உன்னிடம் கேட்கவேயில்லையே.

அப்படினா நீங்கள் யார் ?

ம் ...இது தான் எனக்கான கேள்வி . எம்மை எங்கும் பார்த்ததில்லை என்று சொன்னாய் .அது தான் நீ உருமாறி உள்ளவன் என்பதன் அடையாளம் .சரி ,50 லட்சம் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்ட வரலாறு உனக்கு தெரியுமா ?.அதற்குப் பின்னிட்டும் மீதமிருந்த அந்த  இனத்திற்கு தொடர்ந்து ஊறு செய்துவந்தவர்களின் பட்டியலை பார்த்திருக்கின்றாயா ? .அந்த  இனம் யாரால் மீண்டது ,எவ்வாறு மீண்டது என்பதை நீ அறிவாயா ?  .உமக்கும் எமக்குமுள்ள வேற்றுமைகள் என்னவென்று உமக்கு தெரியுமா ?.இவைகளைப்பற்றிய உனது அறிதல் என்ன ? சொல் .அப்பொழுது தான்நான் யார் என உனக்கு செல்வதற்கு சரியாக இருக்கும் .

எனக்கு ஒன்றும் தெரியாது .

ம்.அவ்வளவு தூரம் சென்றுவிட்டார்களா ? .சரி என் கதை கேட்பது இருக்கட்டும் உன் நிலை பற்றி முதலில் சொல் .பிறகு நான் என்னைப்பற்றி சொல்லுகிறேன் .


என் பெயர் சேப்பா














.




எனது நாவலின் - டாலரன்ஸ்  பேச்சுவார்த்தை  என்னும் பாகத்தில் -
என்  பெயர்  சேப்பா 
அத்தியாயத்தின்-முதல் பக்கம் .


















. Download As PDF

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

மிருகம்- காட்டுமிராண்டி -மனநோயாளி

.


















சிந்திக்காத மனிதன்  மிருகம் .


சிந்திக்க மறுக்கும் மனிதன்  காட்டுமிராண்டி .


சிந்தனையை நிந்திக்கும் மனிதன்  மன நோயாளி .















.
Download As PDF

சனி, 16 அக்டோபர், 2010

ஆயுத சரிபார்ப்பு நாள் ஆயுத பூஜை .


இன்று நாடு முழுவதும்  ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது .

இந்த விழாவிற்கு பின் உள்ள வரலாற்று  நிகழ்வினை நினைத்துப்பார்த்தேன் .
அப்பொழுது எனக்கு Akira Kurosawa அவர்களின் Seven Samurai படம் தான் ஞாபகத்திற்கு வந்தது .



நன்றி .You Tube .

அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க போராடிய வரலாற்றில் .  ஆயுதங்கள் சரியாக,நல்ல நிலையில்,போருக்கு தயாராக உள்ளனவா என  கடைசி கட்ட ஆயுத சரிபார்ப்பு நாளாக . அதர்மத்தை அழிக்கும் போருக்கு தயாராகி  வந்தடைந்த  9 வது நாள் தான் ஆயுத பூஜை.


இது இப்படியிருக்க பலரால் பலவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொண்டாடப்படுவதற்கான நோக்கம் தெரியாமல்.














. Download As PDF

வெள்ளி, 15 அக்டோபர், 2010

கௌரவிக்கும் வலைப்பதிவர்களே உங்களுக்கு என் அன்பான மரியாதைகள்








நொரண்டு : என்ன செஞ்சிக்கிட்டிருக்க நண்டு ?.

நண்டு : வாங்க நொரண்டு ,நம்ம ப்ளாக்கிற்கு கூடு விட்டு கூடு பாய என்ற  மற்றும் என்னை கவர்ந்த LIFE IS BEAUTIFUL ஆகிய இடுகைகளுக்கு  வருகை தந்து பின்னூட்டமிட்ட அன்பர்களுக்கு நன்றி தெரிவித்து பின்னூட்டமிட்டுக்கொண்டுள்ளேன் .

நொரண்டு :ஓ ,அப்படியா .நல்ல செயல் .

நண்டு : மகிழ்ச்சி

நொரண்டு :ம்...அப்ப ஓட்டுப்போட்டவங்களுக்கு என்ன மரியாதை செலுத்தர ?

நண்டு :புரியல !!!!!!!!!! ??????????

நொரண்டு :உன் பதிவ படிச்சிட்டு அத மேலும் அதிகம் பேர் படிக்க ஏதுவாக ஓட்டுப்போடராங்களே அவங்களும்  முக்கியமில்லையா ?  அவர்களை கௌரவிக்கும் முகமாக மரியாதை செய்யமாட்டாயா ?

நண்டு : யாரும் அப்படி செய்யரதில்லை அதனால் .

நொரண்டு : யாரும் அப்படி செய்யல என்பதற்காக நீயும்  அப்படியே செய்வியா ?  இப்படிப்பட்ட பதில் உன்னிடத்திலிருந்து நான் எதிர்பார்க்கவில்லை ? உன் செயல் வெட்கக்கேடானது .அது கண்டு நான் வெதனைப்படுகிறேன் .

நண்டு : இல்ல .

நொரண்டு : என்ன இல்ல .

நண்டு : ம் ...

நொரண்டு :யாரும் ஒரு நல்ல காரியத்த  செய்யலைனா நீயும் செய்ய மாட்டாயா ? .
நீ என்ன ஆட்டு மந்தையிலா இருக்க ?  நீ சுதந்திரமானவன் . காற்று மாதிரி கூட அல்ல பிரபஞ்சம் போல் நீ . அப்படிப்பட்ட நீயா !?!

நண்டு : அது வந்து ?

நொரண்டு :எனக்கு பதில் தேவையில்லை .

நண்டு :சரி செய்கிறேன் .

நொரண்டு :நல்லது .நாம் நமக்கு மரியாதை கொடுப்பவர்களை கட்டாயம் மதிக்கவேண்டும் கௌரவிக்கவேண்டும்.

நண்டு : சரி செய்கிறேன் பாத்திட்டுப் போ .
.................
எனது வலைப்பூவிற்கு  வருகைபுரிந்து

கூடு விட்டு கூடு பாய இடுகைக்கு ஆதரவாக

thamizmanam & இன்ட்லி  ஆகிய இரண்டிலும்
வாக்களித்து சிறப்பித்த 

soundar @ soundar1987 &

yamsasi2003  &

radhakrishnanv & rkrishnanv &

krpsenthil  &

Starjan 

ஆகிய உங்களுக்கும்



thamizmanam த்தில்
வாக்களித்து சிறப்பித்த 

coral &

kanchana &

appanpalanisamy 

ஆகிய உங்களுக்கும்


இன்ட்லியில்
வாக்களித்து சிறப்பித்த 
   
karthikvlk &

bharani &

kousalya &

RDX &

cjothi &

Mahizh &

MVRS &

balak &

mounakavi &

nanban2k9 &

tharun &

subam &

vilambi &

ganpath &

paarvai &

mabdulkhader &

chitrax &

Riyas363 &

sorna &

sriramanandaguruji &

thomasruban &

suryakannan &

senthazalravi &

Jayanthig64

ஆகிய உங்களுக்கும் 


பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய

விடுத‌லைவீரா &

V.Radhakrishnan &

கே.ஆர்.பி.செந்தில் &

T.V.ராதாகிருஷ்ணன் &

cheena (சீனா) &

தமிழ்க் காதலன். &

Chitra &

நித்திலம்-சிப்பிக்குள் முத்து &

sakthi 

ஆகிய உங்களுக்கும்

என் மனமார்ந்த நன்றிகளையும் ,
வணக்கத்தையும்  தெரிவித்துக்கொள்கிறேன் .

மிக்க நன்றீங்க .


(குறிப்பு :இதில் யாராவது பெயர் தவறுதலாக இடம் மாறி இடம்பெற்றிருத்தாலோ அல்லது விடுபட்டிருந்தாலோ தயவுசெய்து தெரிவிக்கவும் திருத்திக்கொள்கிறேன் .)

பார்க்க



http://nanduonorandu.blogspot.com/2010/10/blog-post_12.html
--------------------

எனது வலைப்பூவிற்கு  வருகைபுரிந்து

என்னை கவர்ந்த LIFE IS BEAUTIFUL  இடுகைக்கு ஆதரவாக

thamizmanam & இன்ட்லி ஆகிய இரண்டிலும்
வாக்களித்து சிறப்பித்த 


krpsenthil

menaga @ menagasathia

yamsasi2003

ChitraSolomon @ chitrax

mathavaraj

jayanthi  @ Jayanthig64

ஆகிய உங்களுக்கும்



thamizmanam த்தில்
வாக்களித்து சிறப்பித்த 


kanchana &

geraldindia &


ஆகிய உங்களுக்கும்


இன்ட்லியில்
வாக்களித்து சிறப்பித்த 



soundar1987 &

veera &

ganga &

kousalya &

karthikvlk &

easylife &

jeyamaran &

suthir1974 &

tamilz &

nanban2k9 &

ambuli &

jntube &

mounakavi &

jegadeesh &

kiruban &

muthu04 &

winner &

sriramanandaguruji &

shruvish &

bharani &

pirasha &

thomasruban &

rajakanijes &

kaelango &

RDX

ஆகிய உங்களுக்கும் 


பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய

சௌந்தர் &

கே.ஆர்.பி.செந்தில் &

சிவாஜி &

சசிகுமார் &

Chitra &

cheena (சீனா) &

Jeyamaran &

ஜெரி ஈசானந்தன். &

மாதவராஜ் &

மதுரை சரவணன் &

அன்புடன் அருணா &

அருண் பிரசாத் &

Eeva &

வார்த்தை &

இளங்கோ

என் மனமார்ந்த நன்றிகளையும் ,
வணக்கத்தையும்  தெரிவித்துக்கொள்கிறேன் .

மிக்க நன்றீங்க .


(குறிப்பு :இதில் யாராவது பெயர் தவறுதலாக இடம் மாறி இடம்பெற்றிருத்தாலோ அல்லது விடுபட்டிருந்தாலோ தயவுசெய்து தெரிவிக்கவும் திருத்திக்கொள்கிறேன் .)

பார்க்க 

http://nanduonorandu.blogspot.com/2010/10/life-is-beautiful.html




நண்டு :இப்ப சரியா .

நொரண்டு :இப்ப சரியா என்பது சரியல்ல , இது தான் சரி .

நண்டு : நன்றி .

நொரண்டு : உன்னை கௌரவிக்கும் வலைப்பதிவர்களுடன்
உன் அன்பான  மரியாதைகள் நிரப்பிய தன்மையுடன் தொடர்க .

நண்டு : இதோ கூறிக்கொள்கின்றேன் .
என்னை கௌரவிக்கும் வலைப்பதிவர்களே உங்களுக்கு  என்  அன்பான மரியாதைகள்  இனி இப்படியே  .






. Download As PDF

வியாழன், 14 அக்டோபர், 2010

சுத்தமான கைகளுடன் வாழ்வோம் .

இந்தியாவுக்கு மருத்துவம் படிக்க ஏன் விரும்பி வராங்க தெரியுமா ? ஏன்னா இது  "LAND OF DISEASE "  அதனால தான் அப்பிடினு எங்க பேமிலி டாக்டர் சொன்னப்ப எனக்கு கோபம் வந்தது இந்தியாவ எவ்வளவு மட்டமா பேசரார்னு.ஆனால் ,சில விசயங்கள நாம ஒத்துக்காட்டி நாம பின்னதங்கிப்போவதோடு விழிப்புணர்வு இல்லாமல் வீழ்ந்து ,தாழ்ந்து போவோம் .

நம்ம நாட்ல பொதுவா காலைக்கடன் விசயத்தில் விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கு .
அதிலும் திறந்தவெளியில் மலம் கழித்தல் என்பது ரொம்ப சகஜமாக இருக்கு .ஒரு கிராம் மனித மலத்தில் கோடிக்கணக்கான வைரஸ்களும் ,லட்சக்கணக்கான பாக்டீரியாக்களும் இருக்கு .இவைகள் ஈக்கள் மூலமாக எளிதில் பரவுகின்றன .அதனால் நாம் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீங்கை தடுக்க அதனால் ஏற்படும் பாதிப்புகளை மக்களிடையே எடுத்துச்சொல்லி கழிவறைகளை பயன்படுத்தும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது மிக முதன்மையான கடமையாக நமக்கு இருக்கிறது .

அதோடு மலம் கழித்த பின் சுத்தமாக நமது கைகளையும் சோப்புப்போட்டு கழுவவேண்டும். இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.மலத்தை கழுவி விட்ட   
நமது கை விரல்களிலும் மலக்கிருமிகள் இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் 200% உண்டு .அதனால் கைகளை சோப்புப்போட்டு நன்கு கழுவவேண்டும்.அதனால் மல நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும் .

நம்ம நாட்ல தினமும் நூத்துக்கணக்கான குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறக்கின்றன.சுத்தமாக கைகளைக்கழுவி வந்தால் இத்தகைய இறப்பை 50% தடுத்துவிடலாம்.
அதுவும் குழந்தைகள் விசயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் தாய்மார்கள் .

பொதுவா
மலம் கழித்த பின்,
குழந்தைகள் மலத்தை கழுவி விட்ட பின் ,
சாப்பிடுவதற்கு முன் ,
உணவை கையாளுவதற்கு முன்,
சாப்பிட்ட பின் ,
தும்மல் ,சளி மற்றும் மூக்கு சிந்திய பின் ,
கையில அழுக்கு எப்போதெல்லாம் ஆகுதோஅப்போதெல்லாம்

நாம் நமது கைகளை சோப்பால் கழுவ வேண்டும் .


சோப்பு போட்டு எப்படி கழுவவேண்டும் என்பதை unicef இப்படி சொல்லுது.
சரியான முறையில் கை கழுவுவது எப்படி ?
1.உங்கள் கைகளை நீரினால் ஈரமாக்கிக் கொண்டு சோப்பைத் தடவவும் .
2.உள்ளங்கைகளை நன்கு தேய்த்துவிட்டுக் கொள்ளவும் .
3.விரல்களை ஒன்றினுள் ஒன்றாக செலுத்தி நன்கு தேய்க்கவும் .
4.வலது கை விரல் நுனிகளை இடது கை உள்ளங்கையில் வைத்து நன்கு தேயுங்கள் .இதே போல் இடது கை விரல் நுனிகளை வலது கை உள்ளங்கையிலும் தேயுங்கள் .
5.உங்கள் கைகளை நீரினால் சுத்தமாக கழுவுங்கள் -என .

திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள்,கழிப்பறைகளைப் பயன்படுத்துவதன் அவசியம் மற்றும் கைகளை கழுவுவதன் தேவையை மக்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக
உலக அமைப்புகள்
அக்டோபர் 15 ம் தேதியை
சர்வதேச கைகழுவும் தினமாகக்குறித்துள்ளது .

எனவே நாமும் இதனை கடைப்பிடித்து, நம்மை சுற்றியுள்ளவர்களையும் கடைப்பிடிக்க வைத்து, ஆரோக்கியமான சமுதாயமாக
முன்னேறுவோமாக சுத்தமான கைகளுடன் . 












நன்றி : unicef , SSA,த.நா.அரசு .









.


. Download As PDF

புதன், 13 அக்டோபர், 2010

என்னை கவர்ந்த LIFE IS BEAUTIFUL

நல்ல படம் பாக்கலாமுனு தோணுது
ஏதாச்சும் ஒரு படத்த சொல்லேனு நண்பர் கேட்டார் .
நான் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு.
கடைசியா அவதார் படம் தான் பாத்தேன் .
அதுவும் வால்பையன் கட்டாயத்தில ,
எந்திரன் நல்லாயிருக்குனு சொல்ராங்க போயேன் என்றேன்.
அதுக்கு அவர் எந்திரனை இன்னும் 10 நாள் கழிச்சுத்தான் பாக்கணும் ,கூட்டத்துல நம்மால முடியாது ,உங்கிட்ட பழைய படங்கள் ஏதாவது இருந்தா கொடேன் என்றதும், எனக்கு உடனே ஞாபகத்திற்கு வந்த படம்  
"LIFE IS BEAUTIFUL"

Roberto Benigni னின்  அருமையான படம் .
நான் மிகவும் இரசித்த
என்னை மிகவும் கவர்ந்த படம்  இது .
இந்தப்படத்தைப்பற்றி எழுத வரிகள் இல்லை .
எனினும் தங்களின் பார்வைக்கு இப்படத்தின் இறுதிக்காட்சிகளை இணைத்துள்ளேன். பாருங்கள் .
படம் பார்த்து முடித்ததும் டைடில் சாங்கை கண்முடி இரசியுங்கள்.
அந்த இசை வாழ்வின் உண்மையை பேசும் .



ஒரு முறை நீங்களும் இந்த படத்தை பாருங்கள்
LIFE IS BEAUTIFUL என புரியும் .

நன்றி Roberto Benigni .

நன்றி : YouTube.











.






. Download As PDF

செவ்வாய், 12 அக்டோபர், 2010

கூடு விட்டு கூடு பாய



கூடுவிட்டு
கூடுபாயத்தெரியாத
எந்தை
கூடுவிட்டு
கூடுபாய்ந்ததால்
கூடுவிட்டு
கூடுபாய்ந்து
பிறந்தவன் நான்
கூடுவிட்டு
கூடுபாயத்தெரியாதவனாய்















.
Download As PDF

திங்கள், 11 அக்டோபர், 2010

நாம் வாழ அழியும் உயிர்கள் .

வீட்டுக்கு வா வீட்டுக்கு வா என மிகவும் வற்புறுத்தி
நேற்று என் நண்பர் அவரின் வீட்டிற்கு அழைத்துச்சென்றார் .அவர் ஒரு இயற்கை ஆர்வலர் .அதோடு மட்டுமல்லாமல் கானுயிர்களை கலை நயத்துடன் புகைப்படம் எடுப்பதில் வல்லவர்.அதனால்,என்னமோ விசேசம் இருக்கும் போல என நினைத்துச்சென்றேன் .அதுபோலவே அவருக்கு சிறந்த புகைப்படத்துக்கான பரிசொன்றை அவர் எடுத்த புகைப்படத்திற்கு அளித்திருந்தனர் .அவருக்கு பரிசு வாங்கிக்கொடுத்த வனவிலங்குகளின்  புகைப்படத்தைக் காட்டினார் .உண்மையில் மிகவும் அழகாக கலைநயத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.அதிலும் யானைகள் என்னை மிகவும் கவர்ந்தது .படங்களை பார்த்த பின்னர் அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசைக் காண்பித்தார் .அழகிய சீல்டு ஒன்று .அதில் கலை அழகு வேலைப்பாடு.அது அரசின் விற்பனை நிலையத்திலிருந்து வாங்கப்பட்டதாம் .
யானையின் புகைப்படத்திற்கு யானையே பரிசு .

சிலர் தங்களை கலா ரசிகர்களாக பிறரிடம் காட்டிக்கொள்ள தங்களின் வீடுகளில் கலைவடிவமான இது போன்ற பொருட்களை வாங்கி அடுக்கி மகிழ்கின்றனர் .
அரசு நடத்தும் கதர் நிலையங்கள் மற்றும் பிற அரசு துணை நிறுவனங்களின் கலைப்பொருட்கள் விற்கும் அங்காடிகளில் இது போன்ற பொருட்களில் வன உயிர்களின் சிதைகளைக்காணலாம் .தனியார் அங்காடிகளிலோ கேட்கவும் வேண்டுமோ .
காந்தியின் பெயரால் நடத்தப்படும் அங்காடிகளிலும் இந்தகைய பொருட்கள் ஆக்கிரமித்து காந்தியத்தை கேலி செய்கின்றன .

செம்மொழி மாநாட்டிற்காக தஞ்சாவூர் ஓவியங்கள் வரைய தூரிகையாக அணில் வாலைப் பயன்படுத்தி உள்ளனர் என்பது செய்தி.

கலைப்பொருட்கள் தான் என்றில்லை .
நாம் அன்றாட  பயன்படுத்தும் அழகுப்பொருட்களும் எவ்வளவு தீங்கை பிற உயிரினங்களுக்கு அளித்து நம்மை அழகு பார்த்து  மகிழ்விக்கின்றன என்பதை அறிந்தால் உண்மையில் கண்ணீர் தான் வரும்


அழகிய இந்த மங்கையின் உதட்டுச்சாயம் ..
துப்பாக்கியால் கிட்டத்தட்ட 10 கூரிய அம்புகளை திமிங்கிலத்தின் மீது வேட்டையாடிகள் பாய்ச்ச,அதனால் உடல் காயமுற்ற அது ,பல மணிநேரம் இரத்தம் கொஞ்சம் ,கொஞ்சமாக வெளியேறுவது தாங்கமுடியாமல்  வேதனையுடன் அழுதுகொண்டே வலியுடன் துடிதுடித்து  உயிரிழக்க.அதற்காக காத்திருத்த வேட்டையாடிகள் அதன் உடலிலிருத்து "AMBERGRIS" என்னூம் பொருளை சேகரித்து  உதட்டுச்சாயம் தயாரிப்பதற்காக அனுப்பப்பட்டதிலிருத்து தயாரிக்கப்பட்டது .







முகச்சவரம் செய்து ,ஆவ்டர் சேவ் லேசன் போட்டு,தலைக்கு டை அடிச்சு,சாம்பு போட்டு ஜம்முனு இருக்கார் இந்த அழகிய ஆடவர். ஆனால் அதுக்காக முயலும் .குரங்கும் பட்டபாடு தெரியுமா .

கண்ணீர் சுரப்பி முயலுக்கு கிடையாது .அதனால் சாம்பை நாம பயன்படுத்தினால் ஏற்படும் பக்கவிளைவுகளை அறிய முயலின் கண்களில் விட்டுப்பார்ப்பர் .அதனால் கண்களில் எரிச்சல் தாங்கமுடியாமல் துடிதுடியென துடிக்குமாம்.நாளடைவில் இந்தகைய முயல்கள் குருடாகிவிடுமாம்.

அதோடு விட்டார்களா  ஆவ்டர் சேவ் லேசனை பரிசோதிக்க முயலின் தோல் உரிக்கப்பட்டு அதில் காயம் ஆற,ஆற லேசனை விட்டு விட்டு அது துடிதுடிக்க ...என்ன சொல்ல .

இந்த லிப்டிக் ,டை முதலியன மனிசனுக்கு  தெரியாம உடலுக்குள் போச்சுனா என்ன பாதிப்ப தருனு பாக்கறதுக்காக குரங்கின் தொண்டையில டியூப்ப வச்சு உட்செலுத்தி சோதிப்பார்களாம் . இந்த சோதனையில் பெரும்பாலும் வேதனையால் அனேகமாக இறந்துவிடுமாம் .

இது போலவே அனேக உயிர்கள் ...

புனுகு,கஸ்தூரி ,செல்போன் கவர்,பர்ஸ்,பெல்ட், கைப்பை,செருப்பு என  ...

இவ்வாறே நாம்
அழகிய உலகை
அழகு என்னும் மடமையில்
அழிக்கின்றோம் .

இந்த உயிர்களை நாம் உயிராக மதிப்போமானால் இப்படிப்பட்ட பொருட்களை நாம் நம் வாழ்வில் தவிர்ப்போமாக .











.
Download As PDF

சனி, 9 அக்டோபர், 2010

சே

சே என்றால் தோழர் என்று பொருள் .

புரட்சி என்னும் வார்த்தையில் மறுவடிவம் சே .

சே

புத்தரை ஆழ்ந்து வாசித்தவர் ,

நேருவின் எழுத்துக்களை விரும்பி படித்தவர் .

தனது கொள்கையில் பிடித்தமாக கடைசிவரை இருந்தவர் .

சாவைக்கண்டு அஞ்சாது வெற்றிகொண்டவர் .

இந்த நாளில் கொலை செய்யப்பட்டவர் .







. Download As PDF

வெள்ளி, 8 அக்டோபர், 2010

என் சுவாசக்காற்றே





நீ
என்
சுவாசக்காற்று

நான்
நாணல்
அல்ல
மூங்கில்

மூங்கிலின்
சுட்ட இடத்தை
சுரமாக்கும்
காற்று

வார்த்தை
விட்ட இடத்தில்
சுரமாகும்
இதயத்தின் வலி

நீ
கேட்க
என் தேவதையே











.
Download As PDF

வியாழன், 7 அக்டோபர், 2010

ஓடிய செருக்கு

புவி யிடம்
வளர்ந்த மரத்தடியில்
பாட்டாளி ஒருவன் அயர்ந்திருந்தான்

அவனைத் துரத்தும் சுதந்திரத்தில்
அகங்காரமாய் பார்த்து
அதிகாரமாய்
இங்கே வேலை
என்ன வென்றான் ? இவன்

இந்நிழல் வேண்டும்
எனக்கென்றான் அவன்
இவ்விடம்
எனக்கு சொந்தமென்றான் இவன்

நான் இட்ட உழைப்பு
மரமாச்சு
நீ சொல்லும் இடமோ
நிழலாச்சு
என் மரம் எனக்கு
சொந்தமாச்சு
உனது அதிகாரம் உனக்கு
பதவியாச்சு

என
எழுந்தான்
பறந்தான்
மரத்துடனே

ஓடியது
செருக்கெல்லாம்
அவன் பின்னே .






.




. Download As PDF

புதன், 6 அக்டோபர், 2010

ரகு ராமன் கதை கேளுங்கள் -குரு

வாழ்க்கையில் நமக்கு பாடம் நடத்துபவர்கள்,நம்மைச்சுற்றியிருக்கும் நபர்களே.இது தான் உண்மை.இதை யாரும் மறுக்கமுடியாது .
இதில் அதிகம் நல்லவர்களால் சூழப்பட்டவர்களில் அதிகமானவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்.

நான் எப்படிப்பட்டவன் என்று என்னைக்கேட்டால் எனக்கு அது தெரியாது. ஏனெனில், அதை என்னை சுற்றியிருக்கும் நபர்களே தீர்மானித்து பேசிவருவதால் எனக்குள் பல கேள்விகளை நானே என்னுள் கேட்டுக்கொண்டு தான் வருகிறேன் இன்றுவரை.
இருந்தாலும் எனக்கு மனிதம் மட்டுமே முக்கியமாகப்படுவதால் நான் அனைவரையும் விருப்புவெறுப்பற்று சகமனிதர்களாகவே பார்க்கின்றேன், பழகுகின்றேன்.

எனக்கு ,
அறிவு என்றால் எப்படி நல்லறிவு மட்டுமே இருக்கமுடியுமோ
அது மாதிரி மனிதர்கள் என்றால் நல்லவர்கள் மட்டுமே .
அப்ப கெட்டவங்க இருக்காங்கலானு என்னிடம் கேள்வி கேட்டால். அனுபவத்தில் நீங்கள் அப்படி உணரவில்லையெனில் ஏன் கேள்வி ஞானத்தால் மட்டுமே பதில் அறிந்துகொள்ள விரும்பி ,இல்லாத ஒன்றை கேட்கின்றீர்கள்,அதனை உணர முற்படுகின்றீர்கள் என்பது தான் எனது பதிலாக இருக்கும் .
ஏனெனில் ,இப்படிப்பட்ட கேள்விகள் தான் மனிதனைமூடத்தனத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் இட்டுச்சென்று கடைசியில் சிந்தனை செய்யமுடியாத படி அது தான் சிந்தனை என்ற மாயையில் அவனை அமிழ்த்தி விடுகிறது .

வாழ்வில் அனைவருக்கும் தேடல் இருக்கும் .
அதற்குக்காரணம் வளர்ச்சி அவ்வளவே .
வளர்ச்சியை தவிர்த்து  தேடல் என்ற வார்த்தையை மட்டுமே இங்கு அனைவரும் யோசிக்கின்றார்கள் .அதை மட்டுமே தேடுகிறார்கள் .அது தான் சிக்கலே .
தேடலில் வளர்ச்சியைப் பார்க்கவேண்டுமே தவிர தேடலில் தேடலை தேடக்கூடாது.
தேடலில் தேடினால் கிடைப்பது தேடல் மட்டுமே .
தேடலில் வளர்ச்சியை தொட்டவன் உயர்கிறான் .
அது அடுத்த தேடலுக்கு அவனை அழைத்து செல்கிறது .
அப்படியில்லாத மற்றவர்கள் வேடிக்கைப்பதுமையாக தேடிக்கொண்டே இருப்பர் தேடலில் தேடலை தேடிக்கொண்டே.

தேடலில் கேள்வி என்பது தலையானது .
அத்தகைய கேள்விகள் வளர்ச்சியை நோக்கியதாக இருக்கவேண்டும். வெற்றுச்சிந்தனையாக இருக்கக்கூடாது .
உனது தேடல் சரியானதாக இருந்தால் உனது சிந்தனையும் வளரும். இல்லையெனில் நீ உனது சிந்தனையுடன் குப்பையாவாய் .

என்ன செய்தால் இப்படி குப்பையாக போகாமல் நம்மை வடிவமைக்க முடியும் ? என்ற கேள்வியுடன் நான் எனது தேடலுடன் உலன்றுகொண்டிருந்த பொழுது தான்,ஒரு இனிய நகர்வில் அவரைச் சந்தித்தேன் .
மிக அற்புதமான இந்த வாழ்க்கையில் தேடலின் அர்த்தத்தை உணருவேன் என்று நான் நினைத்துக்கூடப்பார்க்கவில்லை அவரை சந்திக்கும் தருணம் வரை.
அவரை சந்தித்த பின் தான் தேடலின் அர்த்தமே எனக்கு  விளங்கிற்று .

வாழ்க்கை என்றால் இது தான் ,
வாழ்க்கையின் அர்த்தம் இது தான் ,
தேடல் என்றால் இது தான்
என மிக அழகாக உணர்த்திய
அவர் தான் ....







தொடரும் ...












. Download As PDF

செவ்வாய், 5 அக்டோபர், 2010

ரகு ராமன் கதை கேளுங்கள் .

இது இராமபிரானின் உண்மைக்கதை . 

இதை நான் மாதாமாதம் முதல் புதன் கிழமைகளில்
இராமபிரானின் உண்மைக்கதையான
ரகு ராமன் கதை கேளுங்கள் -ஐ தொடராக எழுதவுள்ளேன் .

நான் மதம் சார்ந்தவன் அல்லன் .

ரகு ராமன் கதை எழுதக்காரணம் எதுவென கூறுவதற்கு முன்
தாங்களிடம் இதற்கு எவ்வளவு ஆதரவு உள்ளது
என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்  .
ஏனெனில்,
தாங்களின் ஆதரவைப்பொறுத்தே இது சாத்தியமாகும் .
அதைப்பொறுத்துத்தான் நான் எழுத உத்தேசித்துள்ளேன் .
அதனால் தாங்கள் உங்களின் எண்ணங்களை கண்டிப்பாக தெரிவியுங்கள் .
இதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு மட்டுமே
பின்னூட்டமிட அனுமதிக்கப்படும் என்பதையும்
இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் .


நாம் அனைவரும் இணைந்து
இராமபிரானின் உண்மைக்கதையை ருசிப்போம் .

 



(நன்றி ; யூ ட்யூப்  ).

நாளை முதல் தங்களின் நல்லாதரவுடன்

ரகு ராமன் கதை கேளுங்கள் ஆரம்பம் .






. Download As PDF

திங்கள், 4 அக்டோபர், 2010

காந்தி ஜெயந்தி விடுமுறையும் ,அரசுக்கு வேண்டுகோளும் .


சட்டத்தை மதித்து நடக்கவேண்டியது அனைவரின் தலையான கடமையாகும் .

எனினும் ,

தலைவர்களின் பிறந்த தினங்களில் கடும்குற்றச்செயல்கள் செய்த குற்றவாளிகளைக்கூட விடுதலை செய்யும்பொழுது,தலைவர்களின் பிறந்த நாளில் அவர்கள் பிறந்த நாளை காரணமாக வைத்து ஒருவரை குற்றம் செய்தார் என குற்றவாளியாக்குவது மனதை நெருடுகிறது .

இது காந்தியின் தேசம் ,
தனது தேசத்தில்  தனது மக்கள்  தனது பெயரால் குற்றவாளிகளாக நிற்பதை  காந்தியார்  விரும்பவே மாட்டார் .


ஆதலால் ,

மகாத்மா காந்தி விசயத்தில் நடவடிக்கை எடுக்கும் தருணங்களில் சில விசயங்களை அரசு மிகவும் யோசனை செய்து முடிவெடுக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் .

அது தான் காந்தியார் அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும் என எண்ணுகிறேன்.


குற்றமற்ற சமுதாயத்தையே காந்தி விரும்பினார் .

குற்றமற்ற இந்தியாவையே படைக்கவிரும்பினார் .



மேற்கண்ட பத்திரிக்கை செய்தியை படித்ததும் எழுத்தோன்றியது இது அவ்வளவே.
















. Download As PDF

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

பிரிக்கப்பட்ட நேரங்கள்





தலையிலிருந்து மூளை ஒழுகிவிட்ட உணர்வுடன்
படுக்கையிலிருந்து எழுந்த சிவா பதற்றத்துடன்
அவசர அவசரமாக தனது கைக்கடிகாரத்தில்
10 p.m. என 4 a.m என்றிருந்ததை மாற்றம் செய்தான் .
இருக்காதாபின்னே 10 p.m . க்கு டான்னு எழுந்து விடும்
சிவாவை யார் ஏமாற்ற முடியும் .
ஏன் இவ்வளவு fast -ஆ ஓடுகிறது என்று நினைத்துக்கொண்டே
ஹாலுக்கு வந்தவனை ஹாலில் இருந்த கடிகாரமும் 4 a.m. என காட்ட
லேசா தலையை சுத்த  அதனுடனே
ஹாலில் இருந்த கடிகாரத்தை சரிசெய்து கொண்டிருந்தவனை
என்னப்பா , என்ன ஆச்சு? எனக்கேட்டவரிடம்
ஒன்னுமில்லை ,ஏன் இவ்வளவு fast -ஆ எல்லாம் ஓடுது .
சரியா வீட்டில் யாரும் எதையும் கவனிக்கறதே இல்லை .
எல்லாத்தையும் நான் தான் பாக்கனூமா  ?
என்னமோ ..... போங்க....
இப்போ 10 p.m. தான் ஆகுது ..ஷும் ..என்றான் கண்கள் சிவந்தபடி.
தனது கைக்கடிகாரம் 4 a.m . என காட்டியது கண்டு
சிலிர்த்து நின்றார் சுப்பிரமணி.

- - - - -

டாக்டர் ஜீவானந்தம்
தலைமை இயக்குனர்,
எஸ்ரா மனித அகழ்வாராய்ச்சி மையம் ,
ஈரொடு .

மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு ,

-தங்களின் மேலான பார்வைக்கும் ,
துரித நடவடிக்கை வேண்டியும் அனுப்பும் வருத்தத்திற்குரிய செய்தி -

ஐயா,

தற்பொழுது கணினித்துறையில் பணிபுரிபவர்களுக்கு ''சென்ரல் நர்வசிஸ் மெமரி எராஸ் '' ( CENAME ) எனும் நோய் வந்து கொண்டிருக்கின்றன .நோய் வருவதற்கு காரணம் , கணினித்துறையில் பணிபுரிபவருக்கு முறையான ஓய்வு அளிக்கப்படா நிலையில் , மிகக்குவிந்த செயல்பாட்டுக்கட்டளைகளுக்குட்பட்டு வேலைப்பளுவுடன் , மன அழுத்தத்துடன், நிரந்திரத்தன்மையற்ற பீதியுடன் ,இரவு பகல் என பாராமல் பணி் செய்யும் நிலைக்கு உட்படுத்தப்படுவதால் ,அவர்களின்
மூளையின் காலக்கணிப்பு நரம்பு தனது பிரிக்கப்பட்ட நேரங்களை
அழித்து,அழித்து முற்றிலும் பாதித்து முன்பின் முரண்பட்ட நினைவினிற்கு
அவர்களை கொண்டு சென்று விடுவதே .இதனை  நோய் முற்றிய நிலையிலே அறியப்படக்கூடியதாக இருப்பதால் . நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பல இன்னல்களுக்கு ஆளாவதோடு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப
பல வருடங்கள் ஆகலாம் அல்லது திரும்பாமலும் போகலாம் .நோய் மிகவும் முற்றிய நபர்களின் செயல்பாடுகள் வரையறுக்க முடியாதது .எனவே, கணினித்துறையில் பணிபுரிபவர்களுக்கு முறையான ஓய்வுடன்,வேலைப்பளுவற்ற ,உத்திரவாத்த்துடன் கூடிய பணிப்பாதுகாப்பான நாடைமுறையை ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற நோய்கள் வருவதை தடுக்க முடியும் . அதனால் நோய் வராமல் பார்த்துக்கொள்வதே சாலச்சிறந்தது. இன்று கணினித்துறையில் தான் அனேக இளைய தலைமுறையினர் பணிபுரிகின்றனர்.
எனவே, தாங்கள் உடனடியாக இது குறித்து துரித நடவடிக்கை மேற்கொள்வதன்மூலம் இளைய தலைமுறையினர் பலரின் வாழ்க்கையை
ஒளியோற்றி வைப்பதோடு '' CENAME '' எனும் நோயின் கொடுரத்தினின்று பலரை காப்பாற்றியவராவீர் .

எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமை அவ்வளவுக்கு அவ்வளவு
துரித நடவடிக்கையை வேண்டுகிறேன் .


என
வருத்தத்துடன்
டாக்டர் ஜீவானந்தம்
25.09.2019 .


(ஈமெயில் )
- - - - - - -

ச. சுப்பிரமணி,
326 ,கச்சேரி வீதி,
ஈரோடு -1.

மாண்பமை சுகாதாரத்துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கு ,


- ''சோப்லீஸ்''மருந்தைபயன்படுத்த அனுமதிகோரும் விண்ணப்பம் .-

ஐயா ,

ஈரோடு -1,326 ,கச்சேரி வீதியில் குடியிருக்கும் ச. சுப்பிரமணி
வேண்டும் அனுமதிகோரும் விண்ணப்பம்
எனது மகன் சிவா ,வயது 24 ,கம்யூட்டர் இஞ்சினியர் ,
கடந்த 3 மாதங்களாக '' CENAME '' எனும் நோயின் கொடுரத்திற்கு ஆளாகி
எஸ்ரா மனித அகழ்வாராய்ச்சி மையத்தில் மிகவும் ஆபத்தான நிலையில்
உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான் .அவனுக்கு உலகில் பயன்படுத்த தடைசெய்யப்பட்ட ''சோப்லீஸ்'' எனும் மருந்தை கொடுத்தால் ஒருவேலை அவன் பிழைத்துக்கொள்ள சாத்தியக்கூறுகள் 2% இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் . ஆனால் ,அந்த மருந்தையும் ,அதைப்பயன்படுத்த அனுமதியையும் தரப்பினர்களே அரசிடமிருந்து பெற்றுத்தந்தால் மட்டுமே மருத்துவ நிர்வாகம் ''சோப்லீஸ்'' எனும் மருந்தை பயன்படுத்தும் என கூறிவிட்டனர் .எனவே, எனது மகனைக் காப்பாற்ற கடைசி முயற்சியாக எனக்கு இதைத்தவிர்த்து வேறு உபயம் எதுவும்  தெரியவில்லை .இல்லாது போனால் அவன் இறப்பது 100% உறுதியாகிவிடும் .இம்மருந்தை என் மகனுக்கு மட்டுமே பயன்படுத்துவேன் , தவறாக வேறு எதற்குப் பயன்படுத்த மாட்டேன் என உறுதியும் கூறுகின்றேன் .

எனவே ,எனது மகனின் உடல்நிலை மிகவும் மோசமாகிக்கொண்டுவரும் இச்சூழலில் எனக்கு ''சோப்லீஸ்'' மருந்தையும் ,அதைப்பயன்படுத்த அனுமதியையும் பெற்றுத்தருமாறு மிகவும் பணிவுடன் தாங்களை வேண்டுகிறேன் .


இப்படிக்கு ,
உங்களின் அனுமதி வேண்டி நிற்கும் ,
ச. சுப்பிரமணி

இடம் : ஈரோடு ,
நாள் : 03.10.2019.



(பேக்ஸ் )










. Download As PDF

சனி, 2 அக்டோபர், 2010

இன்று உலக மனிதர்கள் தினம் .






இன்றைய தினத்தை
பலவேறு தினங்களாக பலபல பெயர்களில்

காந்தியார் பிறந்தநாள் ,
சாஸ்திரியார் பிறந்தநாள் ,
காமாராஜர் நினைவு நாள் ...

மற்றும்

சர்வதேச தீவிரவாத ஒழிப்பு நாள் ,
உலக முதியோர் தினம் ...

என கொண்டாடினாலும்

இதனை

''உலக மனிதர்கள் தினம் '' என்று கொண்டாடவே விரும்புகிறேன் .

உலகில் தோன்றி மறைந்த
மனிதர்களை ,
கருத்துக்களை
சிந்தையில் செழுத்தி
சுயமரியாதையுடன்
மனிதர்களாக வாழ்வோமாக .






. Download As PDF

வெள்ளி, 1 அக்டோபர், 2010

கரும்புள்ளிகள்

அழகிய குறையேதும் இல்லாத ஓவியத்தை வரைந்த ஓவியர் ஒருவர் அதனை மக்களின் பார்வைக்கு வைத்தார் .
திடீரென ஓவியருக்கு அதைப்பற்றி மக்களின் கண்ணோட்டத்தை அறிய அவா ஏற்பட ஓவியத்திற்குக்கீழ்

'ஓவியத்திலுள்ள குறைகளை கரும்புள்ளியிட்டு குறிப்பிடவும்'

என்ற அறிவிப்பை வைத்தார் .

அடுத்த நாள் வந்து பார்த்த ஓவியருக்கு பகீர் என்றது .
அங்கு இருந்த ஓவியத்தைக்காண முடியவில்லை ,
அந்தளவிற்கு  கருப்புள்ளிகளினால் நிறைந்திருந்தது அது.

சிந்தனையுடனே சென்ற ஓவியர் ஒரு யோசனையுடன் குறைகளேயான ஓவியத்தை ஒன்றை வரைந்து அதற்கு கீழ்

'ஓவியத்திலுள்ள குறைகளை திருத்தவும்'

என்ற அறிவிப்புடன் மக்களின் பார்வைக்கு வைத்தார் .
பல மாதங்கள் ஆகியும் ஓவியம் அப்படியே இருந்தது .

குத்தம் பாக்கறது ஈசி ,திருத்துவது ....




. Download As PDF