வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மரணதண்டனை சரியா ?.




மேற்கு உலகில் அறியப்பட்ட முதல் சிந்தனைச்சூரியன்

சாக்கிரட்டீசு.

மேற்குலகு அவரிடம் பெற்ற சிந்தனைச்சுரம் இன்னும் தீரவில்லை.

அது இன்னும் கனன்றுகொண்டிருக்கிறது .

ஆனால் ,

அரசு  பற்றி சிந்திக்கவைத்த சிந்தனையாளருக்கு  அரசு கொடுத்த பரிசு என்ன?

மரணம்.




அன்பால் உருவான மாமனிதர்

இயேசு கிறித்து .

அனைவரின் மீதும் பாகுபாடின்றி பிதாவாக பாசம் காட்டிய பண்பாளர் .

இவர் விட்டுச்சென்ற அன்பின் பாதை இன்னும் நீண்டுகொண்டே இருக்கிறது.

ஆனால்,

பண்பை போதித்த  அன்பாளருக்கு அதிகார உலகு  கொடுத்த பரிசு என்ன ?.

மரணம்.



அறிவை,அன்பை போதித்தவர்களுக்கு அதிகார வர்க்கம் கொடுக்கும்
பரிசு தான் மரணதண்டனை .

மரணதண்டனை கொடுக்குமளவிற்கு
அவர்கள் செய்ததென்ன என சிந்தித்தால்
அவர்கள் மனிதகுல உயர்வுக்காகவும் ,மனித குல உரிமைக்காகவும் போராடினார்கள்  .
அதற்கான தங்களின் கருத்துக்களை  மக்களிடையே எடுத்துவைத்தனர் .
இது தான் அவர்கள் செய்தது.

இதை குற்றம் என்றது அரசு , இது எப்படி குற்றமாகும் ?.
மக்கள் உரிமையில்லாதவர்களாகவே இருக்க விரும்பினர் ஆள்பவர்கள்.

அதற்கு எதற்கு மரணதண்டனை ?

அவர்களின் கருத்துரிமையை,அவர்களின் குரலை அடக்குவதன் மூலம்
மனித குலம் உரிமை பெறுவதை தடுத்துவிடலாம் என நினைத்தது அரசுகள்.
அதற்கு அவர்களை ஒரேயடியாக அழித்துஒழித்துவிட்டால்
அவர்களின் குரல் ஒழிக்காது என்ற தப்பான எண்ணத்தில்
கருத்துரிமையை கொல்ல தனிமனிதனின் உயிரைப்பறித்தலின் மூலம் சாத்தியமாகும் என்ற முட்டாள்தனமான நினைப்பில்  மனித உயிர்களின் மகத்துவம் தெரியாத மட அரசுகளால் செய்யப்பட்ட மனிதகுல படுகொலைகள் தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரணதண்டனை .


எங்கெல்லாம் பேச்சுரிமை,எழுத்துரிமை பறிக்கப்படுகிறதோ,
அங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகிறது என்பதையும்,
அங்கு மிகப்பெரிய மனிதகுல மோசடிகள் நடந்துவருகிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம் .

எங்கெல்லாம் உரிமைகள் பறிக்கப்படுகின்றதோ
அங்கு மரண தண்டனைகள் கட்டாயம் இருக்கும்.

எங்கெல்லாம் மனித உரிமைகளை மதிக்காதவர்களே உள்ளார்களே
அங்கெல்லாம் மரணதண்டனையை ஆதரிப்பவர்கள் இருப்பார்கள் .

மனிதகுல மோசடிகளை அரசுகள் செய்யாத பட்சத்தில்
தண்டனைகள் என்ற பேச்சுக்கே  அங்கு இடமிருக்காது .
குற்றங்களும் நிகழாது.


என்னைக்கேட்டால் ,

மரண தண்டனை என்பது முதலில் ஒரு தண்டனையே இல்லை என்பது தான்.

சாவே வராத நிலையில் சாவை கொடுத்தல் என்பதை ஒரு தண்டனையாக எடுத்துக்கொள்ளலாம்.

இங்கு அப்படியா இருக்கிறது .

மரணத்திப்போகும் மனிதனுக்கு
அதனை தண்டனை எனக்கொடுத்தல் என்பது
மிகவும் முட்டால்தனமன ஒன்றல்லவா.

என்றோ சாகப்போரான்,
அது இன்றாயிருந்தால் என்ன ? .
நாளையாய் இருந்தால் என்ன ?.

மேலும்,
இது இயற்கை விதிகளுக்கு முற்றிலும் முரணான ஒன்றாகும்.

எனக்குத்தெரிந்து எந்த விலங்கினமும்
தங்களுக்குள் மரணத்தை தண்டனையாக தந்து கொள்வதில்லை .

ஆனால் ,படித்து ,பண்பேறிய,நாகரிக மனிதன் செய்வதென்ன ? .

















தொடரும் ...
.
Download As PDF

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

முதல் முதலாய்... என்னை காமெடியன் ஆக்கிய ...சென்னை பதிவர் சந்திப்பு ...


அதிக வேலைப்பளுவினால் கடந்த மூன்று  நாட்களாக இணையத்திற்கு வரமுடியவில்லை.அதனால் உடனே சென்னை பதிவர் சந்திப்பு பற்றி பதிவிடவும் முடியவில்லை.

சென்னை பதிவர் சந்திப்பால் தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட  சில மறக்கமுடியாத அனுபவங்களை இங்கு  பகிர்கிறேன்.

சில நிகழ்வுகள் இந்த பதிவர் சந்திப்பால்  தான் எனக்கு  முதல் முதலாய் ... என் வாழ்வில் ஏற்பட்டது .அவைகள்,

சென்னை ரயில் நிலையத்தில் இறங்கியதும்,நாங்கள் எங்களுக்கு நிகழ்ச்சியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த அறைக்கு  ஆட்டோவிலோ அல்லது பஸ்ஸிலோ தான் செல்வோம் என நினைத்திருந்தேன்.ஆனால்,சிபி எலக்ரிக் ட்ரெயினில் போகனும்னு சென்னதும்,எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.ஏன் எனில் நான் எலக்ரிக் ட்ரெயினில்  பயணம் செய்யதே கிடையாது. இப்பத்தான் முதல் முதலாய் எலக்ரிக் ட்ரெயினில்  பயணம்.

அறையில் முதல்முதலாய்  சந்தித்தது  திண்டுக்கல் தனபாலன் அவர்களை.
சந்திப்பு மிகவும் தித்திப்பாக இருந்தது.

பிறகு ,

மதுமதி ,வீடு திரும்பல் மோகன் குமார்,ஆரூர் மூனா செந்தில்,பட்டிகாட்டான் பட்டணத்தில்-ஜெய் , ஷர்புதீன்,மேட்ராஸ் பவன் சிவா, பாலகணேஷ் , செல்வின்,சீனு ,பிலாசபி பிரபாகரன்,கேபில்,நாய் நக்ஸ்,கோகுல் ,வலைச்சரம் சீனா,தமிழ்வாசி  பிரகாஷ் ,புலவர் சா இராமாநுசம் ,கவிதை வீதி-சௌந்தர்,தீதும் நன்றும் பிறர் தர வாரா-ரமணி , வேடந்தாங்கல் - கருண் , தென்றல் - சசிகலா, சேட்டைக்காரன், சுரேகா,வேடியப்பன்,நடன சபாபதி,பலாபட்டறை ஷங்கர், மக்கள் சந்தை - சீனிவாசன்,வாக்க பிளாக்கலாம் அனந்து,ஆயிரத்தில் ஒருவன் மணி , சிராஜுதீன்,ரஹீம் கஸாலி,ஆஷிக் முகமது,வசந்த மண்டபம்-மகேந்திரன், சென்னைப்பித்தன்,ரோஸ்விக்,மணிஜி,ஜாக்கிசேகர், உண்மைத்தமிழன், பாட்டர்பிளை சூர்யா, பாகீரதி எல்.கே - என  பலரை நேரில் கண்டு கருத்துக்களை பரிமாறிக்கொண்டேன்.

இவர்களில்  வலைச்சரம் சீனா,கேபில்ஜி,மணிஜி,ஜாக்கி சேகர் ஆகியோரை தவிர்த்து மற்றவர்களை முதல்முதலாய் இங்குதான் சந்திக்கிறேன்.


முதல் முதலாய் நண்பர் கும்மாச்சி அவர்கள் தான்
மூத்த பதிவர்களை ஏன்  பாராட்டவேண்டும் என நான் பேசியதை
நேரலையில் கண்டு உடனே தனது வாழ்த்தினை தெரிவித்தது எனக்கு மிக்க மகிழ்வை அளித்தது.

கும்மாச்சி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

மிக்க மகிழ்ச்சி,மிக்க நன்றி கும்மாச்சி அவர்களே.



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



 இந்த பதிவர் சந்திப்பில்  நண்டு@நொரண்டு வாகிய என்னை காமெடியன் ஆக்கிய நிகழ்ச்சியினை ... கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.




நான் விழா நடக்கும் மண்டபத்திற்கு வெளியில் மக்கள் தொலைக்காட்சி உரையாடலுக்காக நின்றுகொண்டிருந்தேன்.அப்பொழுது நீங்க தான் நண்டு@நொரண்டா  ஹா...ஹா...ஹா...என சிரித்தபடி நான் -காணாமல் போன கனவுகள் -ராஜி என்றார்.அட ,நீங்க என்ற ஆரம்பத்துடன் எங்களின் பேச்சு தொடர்ந்தது.அங்கு இருந்த ராஜியின் மகன் எனது கழுத்து பட்டைய பார்த்து , நண்டு@நொரண்டு ...ம் ...எனக்கும் இது மாதிரி ஒரு காமெடியான பேரு சொல்லுங்க,நானும் ஒரு ப்ளாக்ஆரம்பிக்கிறேன்...என்றாதும்,
நான்கேட்டேன், ஏப்பா  இந்த பெயர் உனக்கு காமெடியாவா தெரியுதா என்றேன், அதுக்கு,விளையாடாதீங்க , நல்லா யோசிச்சு கட்டாயம் இது மாதிரி ஒரு  நல்ல காமெடியான பேரா சொல்லுங்க ... புரியுதா... என்றதும்,நானும் சொல்ரேனு சொல்னேன்.ஆனா,என்னால இது மாதிரி காமெடியான பேர யோசிக்க முடியல.அதனால,யாராவது இது மாதிரியான, காமெடியான பேரு தெரிஞ்சா சொல்லுங்கப்பா.சின்ன பையன் பொக்குன்னு போயிருவான்.


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


சென்னை பதிவர்  சந்திப்பு  ... 

முதலில் சென்னை தமிழ்வலைப்பதிவர்கள் திருவாழாவின்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு எனது முதற்கண் வந்தனங்கள் .




மிகவும் சிறப்பாக  தமிழ் வலைப்பதிவர்கள் திருவாழாவை நடத்தினீர்கள்  தமிழ் வலைப்பதிவர்கள் குழும -சென்னை பதிவர்களே.

உங்கள் அனைவரின் உழைப்பிற்கும்,அர்ப்பணிப்பிற்கும் பணிவான என் வணக்கம் கலந்த மரியாதைகள் உரித்தாகுக.

தமிழ்வலைப்பதிவர்கள் திருவாழா  மிகவும் மனநிறைவான
ஒரு நிகழ்வாகவே அமைந்தது என்றால்அது மிகையன்று.
மிகமிக சிறப்பாக அனைத்து நிகழ்வுகளும் நடந்தது.
அதனை நேரலையாக வெளியிட்டது பாராட்டும்படியான ஒன்றாகும்.

தமிழ் வலைப்பதிவர்கள் குழும -சென்னை பதிவர்களின் உபசரிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது .அதற்கும் எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் வலைப்பதிவர்கள் குழும-சென்னை பதிவர்களே  தொடரட்டும் உங்களின் இந்த சீரிய பணி.வாழ்த்துக்கள்.





வணக்கங்கள் பல - தமிழ் வலைப்பதிவர்கள் குழும-சென்னை பதிவர்களே, வணக்கங்கள் பல .




Download As PDF

சனி, 25 ஆகஸ்ட், 2012

சென்னையில் நடக்கும் பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு

அன்பான வலையுலக நண்பர்களே.

சென்னையில் நடக்கும்  வலைப்பதிவர் திருவிழாவினை கண்டு மகிழுங்கள்.







என 
அன்புடன் 
நண்டு @  நொரண்டு .



Download As PDF

லிவிங் டுகதர்







என்னில்
தத்தித் சென்ற
வார்த்தைகள்
கவிதையாய்
வேறொரு குடையில் .

எட்டிப்பார்த்து
வாசிக்கும்
திறனியில்லை
என்றாலும்
அது
என் கவிதை .







.
Download As PDF

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

தண்டவாளம் கடக்கும் கண்கள்


 சென்னை பதிவர்  திருவிழாவிற்கு  தொடர்வண்டியில் பயணிக்க  இருப்பது  எனக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது .இன்று இரவு நானும் ,நண்பர் சிபியும் தொடர்வண்டியில் பயணப்படவுள்ள நிலையில், நான்  சென்னைக்கு தொடர்வண்டியில்  பயணிப்பது  இது என் வாழ்வில் 2 வது முறை ஆகும்,என்பதனையும் நினைவுகூர்கின்றேன்,என்னிடமே. அதுவும் 16 வருடங்கள் கழித்துதான இப்பயணத்தை.

முதல் முறை  சென்றது வழக்கறிஞராக என்னை பதிவு செய்ய .
தற்பொழுது என் அன்பை  உங்களிடம் பதிய .

தொடர்வண்டியை நான் பார்வையாளனாக பார்த்து வந்த காலத்தில் நான் எழுதிய கவிதை தான் தண்டவாளம் கடக்கும் கண்கள் .உங்களின்  பார்வைக்கும் .


.

தண்டவாளம் கடக்கும் கண்கள் - கவிதை .


தினம் தினம்
வருகி்றது
தினம் தினம்
செல்கி்றது
யாரும் யாரையும்
தவறுவதில்லை
ஒருவரை ஒருவர்
கடக்க .
தெரிந்தோ
தெரியாமலோ
கையில்  ஃப்ரஷுடன்
படியில் அமர்ந்து
பேப்பர் படித்து
எதையோ தேடி
சன்னல் பார்த்து
கையத்து
சிரித்து
கைகளை நீட்டிய
முகங்கள்
முகங்களாக
அப்பிக்கொள்கிறது
மனக்குகையில்
கடந்து போகையில்.
ஏனே
இரயிலில் போக
முடியவில்லை
இன்றுவரை
என்றாவது ஒருநாள்
என்ற நினைவுடன்
அனுதினம்
தண்டவாளம்
கடக்கும் கண்கள் .

.


.



.
.
Download As PDF

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

நகரிய பயணம் .




சத்திர உக்கிரத்தில் நட்சத்திர நாட்டியம்
சிறுசும் பெரிசுமாய் எதிர்மறையாய்
தெரித்தும் தெரியாமலும் தெரிய வைத்தும்
கூடவரும் முன் பின் கை நடுக்கத்தில்
உரசுமுன் மின்னல் மூளையில்
மழை முகத்தில் உடல் சிலிர்ப்பு.
பாடும் பொருள் தெரியாத பாம்பு
ஆட்டியின் காலசைவை நோக்கி
ஹெலிகாப்டருக்கு கை காட்டும்
எண்ணம் விரலில் சிக்கி.
நிற்பது பிரோ லெட்சுமி .. இரு கதவிடுக்கில்
திறந்து மூடப்பட்ட மூச்சுத் திணறல்
நேர்ந்துவிட்ட நிகழ்வுகள் சில இதயத்தில்
தடக் தடக் தடைகளின் மத்தியில்
அழுத்தி அழுத்தி உயிர் கொடுக்கும் மனம்
எரிமலை சிதறலூடே தகிக்கும் கண்கள்
கத்தும் பேய் கூவும் மனம்
கடிக்கப்பட்டு தடித்து குறையும் குரல்
ஆண்டனா பிம்பங்கள் ஏரியல்
அரட்டல்கள் அங்குமிங்கும் ஓடும்
கருவின் வளர்ச்சி பல ஓட்டத்தில் .
தொங்க, தொங்கி கொண்டிருக்கும்
மனித உறுப்புகள் கழற்றி வைக்கப்பட்ட
பிரிக்கப்பட்ட மூல , சேர்ம தொகுப்புகள்.
தெரிந்த முகங்கண்டு தெரிக்கும் புன்னகை.
கண் பார்த்து கை அசைக்கும் ஜாடைமொழி.
ஊடே ஏகும் கரிமச் சேர்க்கையின் பயணம் .
சூரிய முகத்தில் மஞ்சளுக்குள் கருப்பு
காக்கியின் கவனத்தில் கதவை தொடும்வரை
முன்னே பார்த்து பின்னே விடும்
கரிமச் சேர்மத்துடன் என் பயணம்.





இது  கணையாழி   ஜீலை 1993 இதழில் வெளியான என் கவிதை அவ்வளவே .



Download As PDF

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

அழகால் அழியும் அழகிய உலகம்




வீட்டுக்கு வா வீட்டுக்கு வா என மிகவும் வற்புறுத்தி
நண்பர் அவரின் வீட்டிற்கு அழைத்துச்சென்றார் .
அவர் ஒரு இயற்கை ஆர்வலர் .அதோடு மட்டுமல்லாமல் கானுயிர்களை கலை நயத்துடன் புகைப்படம் எடுப்பதில் வல்லவரும் கூட.
அதனால்,என்னமோ விசேசம் இருக்கும் என நினைத்து சென்றேன். அதுபோலவே அவருக்கு சிறந்த புகைப்படத்துக்கான பரிசை அவர் எடுத்த புகைப்படத்திற்கு அளித்திருந்தனர் .
அவருக்கு பரிசு வாங்கிக்கொடுத்த வனவிலங்குகளின்  புகைப்படத்தைக் காட்டினார் .
உண்மையில் மிகவும் அழகாக கலைநயத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அதிலும் யானைகள் என்னை மிகவும் கவர்ந்தது .படங்களை பார்த்த பின்னர் அவருக்கு கொடுத்த பரிசையும் காண்பித்தார் .
அது அழகிய கலை வேலைப்பாடுகளுடன்  கூடிய யானை சீல்டு . .
யானையின் புகைப்படத்திற்கு யானையே பரிசு .



சிலர் தங்களை கலா ரசிகர்களாக பிறரிடம் காட்டிக்கொள்ள தங்களின் வீடுகளில் கலைவடிவமான இது போன்ற பொருட்களை வாங்கி அடுக்கி மகிழ்கின்றனர் .
அரசு நடத்தும் கதர் நிலையங்கள் மற்றும் பிற அரசு துணை நிறுவனங்களின் கலைப்பொருட்கள் விற்கும் அங்காடிகளில் இது போன்ற பொருட்களில் வன உயிர்களின் சிதைகளைக்காணலாம் .தனியார் அங்காடிகளிலோ கேட்கவும் வேண்டுமோ .
காந்தியின் பெயரால் நடத்தப்படும் அங்காடிகளிலும் இந்தகைய பொருட்கள் ஆக்கிரமித்து காந்தியத்தை கேலி செய்கின்றன .

தஞ்சாவூர் ஓவியங்கள் வரைய தூரிகையாக அணில் வாலைப் பயன்படுத்தி உள்ளனர்,செம்மொழி மாநாட்டிற்காக என்பது செய்தி.

கலைப்பொருட்கள் தான் என்றில்லை .

நாம் அன்றாட  பயன்படுத்தும் அழகுப்பொருட்களும் எவ்வளவு தீங்கை பிற உயிரினங்களுக்கு அளித்து நம்மை அழகு பார்த்து  மகிழ்விக்கின்றன என்பதை அறிந்தால் உண்மையில் கண்ணீர் தான் வரும் .


அழகிய இந்த மங்கையின் உதட்டுச்சாயம் ..

துப்பாக்கியால் கிட்டத்தட்ட 10 கூரிய அம்புகளை திமிங்கிலத்தின் மீது வேட்டையாடிகள் பாய்ச்ச,அதனால் உடல் காயமுற்ற அது ,பல மணிநேரம் இரத்தம் கொஞ்சம் ,கொஞ்சமாக வெளியேறுவது தாங்கமுடியாமல்  வேதனையுடன் அழுதுகொண்டே வலியுடன் துடிதுடித்து  உயிரிழக்க.அதற்காக காத்திருத்த வேட்டையாடிகள் அதன் உடலிலிருத்து "AMBERGRIS" என்னூம் பொருளை சேகரித்து  உதட்டுச்சாயம் தயாரிப்பதற்காக அனுப்பப்பட்டதிலிருத்து தயாரிக்கப்பட்டது .






முகச்சவரம் செய்து ,ஆவ்டர் சேவ் லேசன் போட்டு,தலைக்கு டை அடிச்சு, ஷாம்பு போட்டு ஜம்முனு இருக்கார் இந்த அழகிய ஆடவர். ஆனால் அதுக்காக முயலும் .குரங்கும் பட்டபாடு தெரியுமா .



கண்ணீர் சுரப்பி முயலுக்கு கிடையாது .அதனால் ஷாம்பை நாம பயன்படுத்தினால் ஏற்படும் பக்கவிளைவுகளை அறிய முயலின் கண்களில் ஷாம்பை விட்டுப்பார்ப்பர் .அதனால் கண்களில் எரிச்சல் தாங்கமுடியாமல் துடிதுடியென துடிக்குமாம்.நாளடைவில் இந்தகைய முயல்கள் குருடாகிவிடுமாம்.



அதோடு விட்டார்களா  ஆவ்டர் சேவ் லேசனை பரிசோதிக்க முயலின் தோல் உரிக்கப்பட்டு அதில் காயம் ஆற,ஆற லேசனை விட்டு விட்டு அது துடிதுடிக்க


...என்ன சொல்ல .

இந்த  உதட்டுச்சாயம் ,டை முதலியன மனிசனுக்கு  தெரியாம உடலுக்குள் போச்சுனா என்ன பாதிப்ப தருனு பாக்கறதுக்காக

குரங்கின் தொண்டையில டியூப்ப வச்சு உட்செலுத்தி சோதிப்பார்களாம் . இந்த சோதனையில் பெரும்பாலும் வேதனையால் அனேகமாக இறந்துவிடுமாம் .



இது போலவே பன்றி,மீன்,பூனை,நாய்,எலி எனஅனேக உயிர்கள் ...

புனுகு,கஸ்தூரி ,செல்போன் கவர்,பர்ஸ்,பெல்ட், கைப்பை,செருப்பு ,



சலவை தூள் (washing powder ),  பற்பசை (toothpaste), DISH SOAP  என  ...



அழகிய விலங்கின உலகை
அழகு என்னும் மடமைக்காக
அழிக்கின்றோம் .

அந்த உயிர்களை நாம் ஒரு உயிராக மதிப்போமானால் இப்படிப்பட்ட அழகு சாதன பொருட்களை நாம் நம் வாழ்வில் தவிர்ப்போமாக .






.


படங்கள் உபயம் இணையம்.
.

Download As PDF

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

வசதிகள்


.

.

மொழியில்லா மொழி பேசி

மோதிச்செல்லும் மௌனங்கள்

ஒன்றிலிருந்து ஒன்றிற்கு தாவி

ஒன்றும் நிலைக்காது

கற்பனையாய் ஓடிச்செல்லும்

கலைந்து திரியும் பிம்பங்கள்

சிதறிக்கிடக்கும் முகங்கள்

திணறிச்செல்லும் மூச்சுகள்

ஏற்றத்தாழ்வுகள் தோன்றி தோன்றி

ஏற்றம் பெற்று நிற்கும் தாழ்வுகள்

ஏங்கித்தவிக்கும் மனதிற்கு

ஏராளமான வசதிகள்

எதைப்பற்றியும் சிந்திக்க

.
.

.
Download As PDF

சனி, 18 ஆகஸ்ட், 2012

நாம் பிணங்களாக இருக்கும் வரை















கண்ணீரை துடைக்க வேண்டிய
மதங்கள்
ரத்தத்தை ஓட வைக்கின்றன



.............................................................



நரிகள்
சும்மா இருந்தாலும்
சூழ்ச்சியே செய்யும்


.............................................................


சில சமயம்
தர்மத்திற்கே
தர்ம சங்கடம

.............................................................




தலைகள் எண்ணப் படுவதுதான்
ஜனநாயகமாம்
சொல்கின்றன முண்டங்கள்


.............................................................

இல்லாதவர்களுக்கு
வளையாத சட்டம ;
இருப்பவர்களுக்கு
ஒடிந்தே விடுகிறது


.............................................................



பகலிலும் நாங்கள
இருட்டிலே வாழ்கிறோம்
அந்த இருட்டிலும்
நாங்கள் பகல கனவுகளே காண்கிறோம்


.............................................................

மக்கள் முதிரும் போது
அரசாங்கம் உதிரும்




.............................................................


அகப்பட்டால் திருடன்
தப்பினால் பிரமுகர்

.............................................................



திருடர்கள் சில இடங்களில்
மட்டும்
திருட்டுத்தனம்
எல்லா இடங்களிலும


.............................................................


குற்றவாளிகளிடம் சட்டம்
நெருங்குவதில்லை
நிரபராதிகள் சட்டத்திடம்
நெருங்க முடிவதில்லை


.............................................................

புள்ளிக்கு உள்ளேயும்
வட்டங்கள் உண்டு

.............................................................

இந்தியாவில்
எல்லாமே தலை கீழ்
வெளவாலைத் தவிர


.............................................................


தொண்டன் கெட்டால
தெருதான் கெடும
தலைவன் கெட்டால்
நாடே கெடும


.............................................................



மேடையில் தலைவர்கள்
ஏறுவதற்கு முன்பே
கொள்கைகள் இறங்கி
விடுகின்றன




.............................................................


நாக்கு கூர்மையாக இருந்தால்
முதுகு அகலமாக வேண்டும


.............................................................



தனி நபர்கள் விதைப்பதை
சமுதாயம் அறுவடை செய்யும்


.............................................................



நாம் பிணங்களாக இருக்கும்
வரையில்
அவர்கள் கழுகுகளாகத் தான்
இருப்பார்கள்


.............................................................






மேற்கண்டவைவழக்குரைஞர் யு.கே.செங்கோட்டையன் அவர்களின்
தெருவாசகம்   என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது .
நன்றி ; யு.கே.செங்கோட்டையன் ,
படங்கள்   இணையம்  .நன்றி  .


 இதையும் பார்க்க தெருவாசகம்


.
Download As PDF

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

புகைப்பட மழலை


.

அம்மா அரவணைப்பில்
அப்பா அன்பில்
அம்மாயி செல்லத்தில்
உடையில்லா
துள்ளிய மனத்தில்
கைகால்களை ஆட்டி
ஆர்பாரித்த
ஆர்ப்பாட்டத்தில்
புகைப்படமான
மழலை
எங்கோ தொலைந்து விட்டது
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
வீடு மாற்றியபொழுது
மழலைப்புகைப்படம்
ஒன்று

.

Download As PDF

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

தேவகுமாரனை நோக்கி


.


முன்னோர்களின்
வடு உடல்
நிறமாய்
நீங்காத பாவமாய்

கண்கள் முழுதும்
காட்சி கலக்கமாய்
பளிங்கு செவியாய்

மடையனாய்
மூடனாய்
முட்டாளாய்
சமுதாயத்தில்
சமூகத்தில்
சாதியால்

எப்பொழுதும் எப்பொழுதும்

உடல் வெம்பி
நாக்கு உள் இழுத்து
மொழி பேசா வாய்
வெளிச்சொல்லா
பயத்தில்
தடிமனாய்

அச்சத்தில்
போதை மிதந்து
பிதற்றி

ஓலை சுவற்றுக்குள்
நித்தம் நித்தம்
தவம் தவம்
பெண் மீதேறி
தேவகுமாரனை நோக்கி.





.

Download As PDF

புதன், 15 ஆகஸ்ட், 2012

தமிழனால் அரை நிர்வாணப்பக்கிரியான காந்திஜி


.

நண்டு :  இன்று சுதந்திர தினம் .

நொரண்டு  ஆம் ,மிகச்சிறந்த ஜனநாயக நாடான இந்தியா, உலகிலே மிகச்சிறந்த மக்காளாட்சிக்கு எடுத்துக்காட்டாய் ,மணி மகுடமாய் திகழ நாமெல்லாம் உறுதுணையாக இருக்க வேண்டும் .

நண்டு :  எப்படி எவ்வாறு ?

நொரண்டு  நாம் நமது தலைவர்களின் எண்ணங்களை நிறைவு செய்யவேண்டும் .

நண்டு :   புரியவில்லை உதாரணத்திற்கு எதாவது ....?

நொரண்டு   ஐயா , நண்டு நான் எதச்சென்னாலும் நீ  ஏத்துக்கப்போறதில்லை .நான் ஒருவரைப்பத்தி ஒன்றைச்சொல்ல அவரைப்பத்தி ஏதோ எங்கொங்கோ அவ்வப்போது படித்ததைவைத்து. அய்யகோ அவர் அப்படிச்சொல்லவில்லை , அதற்காக அவர்அப்படிச்செய்யவில்லை .அவர்அப்படிப்பட்டவரும் இல்லை . எனக்கு நல்லா தெரியும் . ஏன்னா எனது அறிவுக்கு இன்றுவரை நீங்கள் கூறும் விசயம் எட்டாமலே இருக்குது . அது எப்படி எனக்கே தோன்ற நல்ல
சிந்தனைகள் வரமுடியும். அப்படியே வந்தாலும் அதை எப்படி ஏத்துக்கறது
என உம்மைப்போன்றவர்கள் திரிகின்றீர் .உங்க புத்தி ஏந்தான் இப்படி ஆகிவிட்டதோ தெரியவில்லை .

நண்டு : நான் எதச்சொல்லவர்றேன் கூட தெரியாம  ,நீங்க எதயோ நெனச்சுக்கரீங்க ,மெத சொல்லவந்ததை கேளுங்க .அப்படி என்னை  உண்மை தெரியாமல் பேசினால்,அது  சுயநலம்.அதுவும் உண்மையை மறைத்து பேசும் சுயநலம்.

நொரண்டு  சுயநலம்னு ஏன் பேசிக்கிட்டு இருக்கே .  செல்லவர்ரத சொல்லுப்பா ...கேக்கிறேன் .

நண்டு :   காந்தியடிகளை ''அரைநிர்வாணப்பக்கிரி '' னு யார் கீண்டல் செய்தார்கள்  தெரியுமா ?

நொரண்டு  சர்ச்சில் தானே .

நண்டு :   .ம்...

நொரண்டு   ஏன் அரைநிர்வாணப்பக்கிரியானார்னு சொல்லு ...

நண்டு :  தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் மனிதன் மனிதனை அடிமைப்படுத்தும் நிலையினை , மனிதனை மனிதனாக பார்க்காதன்மையை , அதனின்று மனிதனாக விடுதலை பெற துடித்து க்கொண்டிருந்த தமிழக ஒப்பந்தக்கூலிகளைக்கண்டார் . மற்றவர்களைப்போல் அல்லாது அவர்கள் கொள்கைப்பிடிப்புடனும் , அதே நேரத்தில் அகிம்சை வழிப்போரட்டத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் வைத்து இயங்கிவந்தனர் .மேலும்,அவர்கள் மனிதனை மனிதனாகப்பார்க்கும் மக்களாகவும் இருந்தனர் . அவர்களின் தியாகம் , உண்மை,உறுதி,விடுதலை உணர்வு ஆகியவற்றைக்கண்டு ஆச்சரியப்பட்டார்.   இது அவரை மிகவும் கவர்ந்தது . அவர்களின்பால் மிகுந்த அன்பும் ,பாசமும் கொண்டார் . அகிம்சைப்போராட்டம் இங்கு தான் இப்படித்தான் ஆரம்பமானது .
தென்னாப்பிரிக்காவிலிருந்த தமிழர்களின் ஆதரவு எப்பொழுதும் காந்திக்கும். அவரின் போராட்டத்திற்கும் உந்து சக்தியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் கடைசி வரை உறுதுணையாகவும் இருந்தது . இது தான் காந்தியை இந்திய விடுதலைப்போராட்டத்திற்கே உந்திச்செல்லும் சக்தியாகவும் ஆனது .


பிறகு, இந்திய சுதந்திரப்போராட்டத்திற்கு தன்னை முழுமையான  ஈடுபடுததிக்கொள்ள காந்தியடிகள்  இந்தியா முழுவதும் பயணம் செய்கின்றார்.

தமிழர்கள்  தென்னாப்பிரிக்காவிலேயே அப்படியெனில் ,தாயகத்தில் சிறப்புடன் மிகுந்த வேட்கையுடன்  இருப்பர் என்று ,தனது போராட்டத்திற்கு தென்னாப்பிரிக்காவில் எப்படி தமிழர்கள் உந்து சக்தியாக இருந்தார்களே .அது போலவே இங்கும் தமிழர்கள் தனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள் என்ற எண்ண ஓட்டத்தில் இருந்த காந்தி தமிழகம் வருகின்றார் .

இங்கு அவர் பார்த்த தமிழனின் நிலை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .
மிகப்பெரிய மனித நேயம் கொண்ட இவர்களின் நிலை இதுவா என மிகவும் மன வேதனை அடைந்தார் .தங்களின் பண்பாடு ,கலாச்சாரம் இன்ன பிற அடையாளங்களை தொலைத்துவிட்டு இருக்கின்றனறே இப்படி என மனமொடிந்தார் .( சிந்து சமவெளிப்பரப்பில் பிறந்த காந்திக்கு தமிழனின் பண்பாடும் ,நாகரிகமும் இரத்தத்தில் கலந்த ஒன்றாகத்தானே இருக்கமுடியும்).தங்களின் அடையாளங்களை என்று இந்த மனித நேயர்கள் முழுமையாகப் பொறுகின்றார்களே ,அது வரை அவர்களைப்போல தானும் ஆடை உடுத்துவேண்டும் என்று உறுதி பூண்டார் .கத்தியவார் ஆடைகளான (KATHIAWARI DRESS) வேட்டி, நீண்ட குர்த்தா,தலைப்பாகை ஆகியவற்றைத் துறந்து  அரை வேட்டிக்கும் மேல் துண்டுக்கும் மாறினார் தமிழனால் மனித நேயத்திற்காக .

கதராடைக்கு முக்கியத்துவம் கொடுத்தார் .கையில் ராட்டையுடன் கடைசி வரை தனது  எண்ணத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார் .

இதனாலேயே ''அரை நிர்வாணப்பக்கிரி '' என்ற ஏச்சுக்கும் ஆளானார் .

நொரண்டு  அப்ப ,தமிழனால்தான் அரை நிர்வாணப்பக்கிரியானார்னு சொல்ற

நண்டு :  நான் சொல்லவில்லை இது உண்மை ,வரலாறு .

முடிவுக :தமிழன் ,இந்தியன் தன்மானத்துடன் ,தனித்துவத்துடன் தனது நிலையில் உயர்ந்து விளங்கும் காலம் வரை காந்தி ''அரை நிர்வாணப்பக்கிரி '' யாகவே அறியப்படுவார் என்பதுவே உண்மை  .





.
Download As PDF

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

அவளின் இதயத்தில்


.




.
நான்  கடந்ததொலைவை
எவனோ  எடுத்து

எனக்கிட்ட  கட்டளை
யாருக்கோ  சென்று

எனக்காக அளந்த அளவில்
எவனோ   உடைதைத்து

எனக்கான மீன்
யார் வலையிலோ சிக்கி

இருந்தாலும்

எனக்குப்பிடித்த ரோஜா
அவளின் இதயத்தில்

.
.






.
மீள்வு
Download As PDF

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

செய்வோம் அல்லது செத்துமடிவோம்

"இனி சுதந்திரம் அடையும் வரை நாங்கள் ஓய மாட்டோம்அதை அடையும் முயற்சியில் எங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கத் தயங்க மாட்டோம்' ...

உயிரைத் தியாகம் செய்யத் துணிபவர் உயிர் பெறுவர்உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிபவர்கள் அதனை இழப்பர்கோழைகளும் மன உரமற்றவர்களும் சுதந்திரத்திற்கு சற்றும் அருகதை அற்றவர்கள்.
இதுவே இந்நாடு முழுவதற்குமான எனது அறைகூவல்! ...


போரிட்டுத்தான் சுதந்திரம் அடைய முடியும்;
அது வானத்திலிருந்து தானாக வீழ்ந்து கிடைக்கக்கூடியதல்ல...

அடிமை வாழ்வு தொடர்வதைக்காண நாம் உயிருடன் இருக்க மாட்டவே மாட்டோம்...


"செய்வோம் அல்லது செத்துமடிவோம்'' ...

/////////////////////////



Lakshmanan Marimuthu
to  me
Subject: Re: செய் அல்லது செத்து மடி!

வீட்டில் உட்கார்ந்துகொண்டு மக்களை உசுப்பிவிடும் தலைவரல்ல மோகன்தாஸ் காந்தி. 
''டூ ஆர் டை'' என்று அவர் கூறவில்லை.
 கரேங்கே யா மரெங்கே (செய்வோம் அல்லது செத்துமடிவோம்) தான் அவரது அறைகூவல்.

காந்தியின் பேச்சுக்கள் சுருக்கமாகவே இருக்கும். 

விதி விலக்குகள் இரண்டு.


முதலாவது 1916இல் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரை.



இரண்டாவது ஆக 8  1942  வெள்ளையனே வெளியேறு முழக்கம். 

...


செய் அல்லது செத்து மடி!

ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே நாளில்தான் பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மகாத்மா காந்தி "வெள்ளையனே வெளியேறு' (குவிட் இந்தியா) தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அதோடு தேசமக்கள் அனைவருக்கும் ஓர் எழுச்சிமிகு அதிரடி மந்திர வாசகத்தையும் வழங்கினார். "செய் அல்லது செத்து மடி' என்று அந்த கொதிப்புமிக்க வீர வாசகமே நாடெங்கும் ஆகஸ்ட் புரட்சியைப் பீறிடச் செய்தது.

1942
ஜூன் இறுதியில் இரண்டாம் உலக யுத்த நெருக்கடி நிலை பிரிட்டிஷ் இந்திய நிர்வாகத்தைத் திக்குமுக்காடச் செய்தது.

பர்மாவை ஆக்கிரமித்துத் தலைநகர் ரங்கூனைக் கைப்பற்றிய ஜப்பானியப் படைகள் இந்தியா - பர்மா எல்லை நோக்கி விறுவிறுவென முன்னேறிக் கொண்டிருந்தன.

ஏற்கெனவே சிங்கப்பூர் ஜப்பானியரிடம் சரணடைந்துவிட்டது. மேற்கே, வட ஆப்பிரிக்காவில் ஜெனரல் ரோமல் தலைமையிலான ஜெர்மானிய நாஜி ராணுவம் எகிப்தைக் கைப்பற்றி கிழக்கு நோக்கி முன்னேறியவண்ணம் இருந்தது.

ஜெர்மன்-ஜப்பான் படைகள் இந்தியாவில் சந்தித்து கைகோத்து வெற்றிகொண்டாடும் என யுத்த விமர்சகர்கள் ஹேஷ்யம் கூறினர்.

மலேயா, பர்மா நாடுகளிலிருந்து இந்திய அகதிகள் சாரிசாரியாக இந்தியாவுக்கு ஓடிவந்த வண்ணமிருந்தனர்.

ராஜஸ்தான் மற்றும் குஜராத் பிரதேசங்களில் கொள்ளைக் கூட்டத்தினரின் அட்டகாசம் பெருகிற்று. பஞ்சாப், ராஜஸ்தான், வங்காளம் வட்டாரங்களில் தானியப் பற்றாக்குறையால் கடும் பஞ்சம் உருவாகி வந்தது. இந்தியாவில் சட்டம்-ஒழுங்கு நிலைகுலையும் அபாயம் நிலவியது.

இந்த இறுக்கமான நெருக்கடிச் சூழ்நிலையிலேதான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ""இந்தியாவை விட்டு வெளியேறு'' - பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவை விட்டு உடனடியாய் விலக வேண்டும் என்கிற தீர்மானத்தை ஆராய்ந்து நிறைவேற்றுவதற்காக பம்பாயில் ஆகஸ்ட் 7, 8 (1942) தேதிகளில் கூடியது.

அந்தத் தீர்மானத்தை முன்வைத்து மகாத்மா காந்தி முதலில் இந்தியிலும், பின்னர் ஆங்கிலத்திலும் ஆற்றிய நீண்ட, உணர்ச்சிகரமான உரை, நம் நாட்டு மக்களை உலுக்கி உறைய வைத்தது. அவ்வுரையின் சில வாசகப் பகுதிகள்:

""
உங்களைச் சோர்வினின்றும் தட்டி எழுப்பி, உண்மையான ஜனநாயக ஆட்சி பெறுவதற்கான வழிமுறையை நான் இன்று உங்கள் முன் பிரஸ்தாபிக்கிறேன்.

போரிட்டுத்தான் சுதந்திரம் அடைய முடியும்; அது வானத்திலிருந்து தானாக வீழ்ந்து கிடைக்கக்கூடியதல்ல. இயன்ற அளவு தியாகங்களால் உங்களது உறுதி படைத்த வலிமையை நிரூபித்தால் பிரிட்டிஷார் வேறு வழியின்றி நமக்கு சுதந்திரம் அளிக்கத்தான் வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை அகிம்சை ஓர் அசைக்கவொண்ணா கோட்பாடு. ஆனால், நீங்கள் அகிம்சையை ஓர் அரசியல் கொள்கையாக மட்டுமே ஏற்கக்கூடும். கட்டுப்பாடான போர் வீரர்கள் போன்று நீங்கள் அந்தக் கொள்கையைக் கடைப்பிடித்து, அதனின்றும் சிறிதும் பிறழாமல் இந்த இறுதிப் போராட்டத்தில் செயல்படுவீர்களாக.

இம்முறை நான், இந்திய சுயாட்சி, மந்திரிசபை போன்றவற்றிற்காக வைஸ்ராயுடன் பேரம் பேசப் போவதில்லை. பூரண சுதந்திரத்திற்கு எள்ளளவும் குறைவான வேறெதும் என்னைத் திருப்திப்படுத்தாது.

ஒருக்கால் "உப்புவரி நீக்கப்படும், மதுவிலக்கு அமலாகும் மாகாண மந்திரிசபைகளுக்கு அதிக அளவு அதிகாரம் வழங்கப்படும்' என்றெல்லாம் கூறி வைஸ்ராய் இறங்கி வரலாம். ஆனால், நான் பிடிவாதமாய்ச் சொல்வேன், "பூரண சுதந்திரத்திற்குக் குறைவான வேறெதும் வேண்டாம்' என்று.

"
இதோ, இத்தருணத்தில் ஒரு மந்திரம், சுருக்கமான தாரக மந்திரம், வழங்குகிறேன். அதனை நீங்கள் இதயத்தில் பதியுங்கள். உங்களது ஒவ்வொரு மூச்சும், செயலும் அந்த மந்திரத்தின் வெளிப்பாடாக அமையட்டும். அந்த மந்திரம் இதுதான்.

""
செய் அல்லது செத்துமடி'' .

இந்தியாவை விடுவிப்போம், அன்றி அம் முயற்சியில் செத்து வீழ்வோம்! அடிமை வாழ்வு தொடர்வதைக்காண நாம் உயிருடன் இருக்க மாட்டவே மாட்டோம்.

நமது தேசம் அடிமைத்தளையில் கட்டுண்டு அவலப்படுவதைக் காண கணமேனும் பொறுக்க மாட்டோம் என்கிற அசைக்கவொண்ணா வைராக்கியத்துடன், ஒவ்வொரு காங்கிரஸ்காரனும், காங்கிரஸ்காரியும் இந்தப் போராட்டத்தில் குதிக்க வேண்டும். அதுவே உங்களது சபதமாக இருக்கட்டும்.

"
இனி சுதந்திரம் அடையும் வரை நாங்கள் ஓய மாட்டோம்; அதை அடையும் முயற்சியில் எங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கத் தயங்க மாட்டோம்' என்று கடவுளையும் உங்கள் சொந்த உளச்சான்றையும் சாட்சியாகக் கொண்டு பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளுங்கள்.

உயிரைத் தியாகம் செய்யத் துணிபவர் உயிர் பெறுவர்; உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிபவர்கள் அதனை இழப்பர், கோழைகளும் மன உரமற்றவர்களும் சுதந்திரத்திற்கு சற்றும் அருகதை அற்றவர்கள்.

இதுவே இந்நாடு முழுவதற்குமான எனது அறைகூவல்!

""
சுதந்திர இந்தியாதான் தன்னிச்சையாக நேச நாடுகளுடன் இணைந்து ஜப்பானிய ஆக்கிரமிப்பு அபாயத்தை முழு வீச்சுடன் எதிர்த்து முறியடிக்க முடியும். ஆனால், இன்றோ இந்தியர்கள் அடிமைத் தளையில் பிணைபட்டு நடைப்பிணங்களாக ஆகிவிட்டனர். மக்கள் பிழிந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள்.

இந்திய மக்கள் ஒளி வீசும் கண்படைத்தவர்களாகப் புத்துயிர் பெற வேண்டுமாயின் சுதந்திரம் இன்றே, இப்போதே வேண்டும்; நாளை அல்ல. ஆகவேதான் உடனடியாய் சுதந்திரம் பெற நாம் உடனடியாய் முனைவோம். அல்லது அம் முயற்சியில் செத்துமடிவோம் என்று சூளுரைப்போம்...''அலைமோதிய ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரம் வானைப் பிளந்தது.

ஆகஸ்ட் 8 முன்னிரவில் திரும்பவும் கூடிய காங்கிரஸ் மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு காந்திஜி இவ்வாறு அறிவுறுத்தினார்:

"
நமது இறுதிப் போராட்டம் இக் கணமே தொடங்கிவிட்டதாகக் கருதக் கூடாது. நீங்கள் அனைவரும் என் கையில் போராட்ட அதிகாரத்தை ஒப்படைத்து விட்டீர்கள். மேன்மை தங்கிய வைஸ்ராயைச் சந்தித்து காங்கிரஸின் உரிமைக் கோரிக்கையை ஏற்கும்படி மன்றாடுவதே எனது முதல் நடவடிக்கை. அதற்கு இரண்டு - மூன்று நாட்களாவது ஆகும். அதுவரை காத்திருங்கள்''.

ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கம் காத்திருக்கவோ காந்திஜிக்கு அவகாசமோ சந்தர்ப்பமோ அளிக்கவோ விரும்பவில்லை.

மறுநாள் (1942 ஆகஸ்ட் 9-ம் தேதி) விடியற்காலை ஐந்து மணி அளவில் காந்திஜியும், பம்பாயிலிருந்த மற்ற காங்கிரஸ் தலைவர்களும் படுக்கைகளிலிருந்து எழுப்பப்பட்டு கைது செய்யப்பட்டனர். முன்னதாகவே ரகசியமாக நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு இட்டுச் செல்லப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

விடியற்காலையில் காந்திஜி கைதாகும்போது ஒரு சில பத்திரிகையாளர்களே அவ்விடத்தில் இருந்தனர். அவர்கள் மூலம் காந்திஜி இந்திய நாட்டு மக்களுக்கு அறிவித்த சிலவரிச் செய்தி இதுதான்:

""
அகிம்சை அடிப்படையில் அனைவரும் ஒன்றுதிரண்டு அரசாங்கத்திற்கு எதிராக அவரவர் இஷ்டப்படி மனதொத்த அளவில் செயல்படுவீர்களாக!

ஒட்டுமொத்தமான வேலை நிறுத்தம் போன்ற இதர அகிம்சை முறைகளைக் கையாளலாம்.

சத்தியாக்கிரகிகள் சாவுக்குத் துணிந்து வெளிவர வேண்டும்.
உயிர் வாழ்வதற்காகப் பின்வாங்கக் கூடாது.

தனிநபர்கள் தம் உயிரைத் துச்சமாக மதித்துப் போராடினால்தான் தேசம் உயிர் வாழும்.

"
கரேங்கே யா மரேங்கே' (செய்வோம் அல்லது செத்துமடிவோம்).''

பூனாவுக்கு அருகில் ஆகாகானுக்குச் சொந்தமான ஓர் தனித்த பழைய அரண்மனையில் ஒரு பகுதியில் மகாத்மா காந்தி காவலில் வைக்கப்பட்டார்.

சரோஜினி நாயுடு, மீராபெஹன், காந்திஜியின் செயலர் மகாதேவ் தேசாய் ஆகியோரும் அதே அரண்மனையில் காந்திஜியுடன் காவலில் வைக்கப்பட்டனர்.

அன்று மாலை பம்பாயில் காந்திஜி பேசவிருந்த பொதுக்கூட்டத்தில் தான் பேசப் போவதாக அறிவித்த காந்திஜியின் மனைவி கஸ்தூர்பாவும் கைது செய்யப்பட்டு ஆகாகான் அரண்மனையில் காந்திஜியுடன் சிறைவாசம் தொடங்கினார். (கைதான மறுவாரமே, ஆகஸ்ட் 15 அன்று மகாதேவ் தேசாய் மாரடைப்பால் மரணமடைந்தார்).

அன்றைய தினமே (1942 ஆகஸ்ட் 9) நாடு முழுவதும் போலீஸார் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு, மாகாண, மாவட்ட, நகர்ப்புறங்களில் உள்ள முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழியர்களைக் கைது செய்து விசாரணையின்றி சிறையில் அடைத்தனர்.

அனைத்துக் காங்கிரஸ் குழுக்களும் சட்டவிரோதமானவை எனத் தடை செய்யப்பட்டது; அவற்றின் நிதிகள் முடக்கப்பட்டன. பத்திரிகைகளும் அச்சகங்களும் காங்கிரஸ் இயக்கங்கள் பற்றியோ அதற்கெதிரான அரசாங்க அதிரடி நடவடிக்கைகள் பற்றியோ செய்திகள் வெளியிடக் கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தலைவர்களைக் கைது செய்து சிறையிலடைத்து, அதைத் தொடர்ந்து படுகள அடக்குமுறையை அரசாங்கம் அவிழ்த்துவிட்டதை எதிர்த்து நாடெங்கும் மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் படித்த வகுப்பினர்களும் கொதித்தெழுந்தனர்.

வன்முறை வெடித்தது. காவல் நிலையங்கள், அரசுக் கட்டடங்கள், தபால் நிலையங்கள் தீக்கிரையாயின.

ஆங்காங்கே தந்திக் கம்பிகளை அறுத்தல், ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்தல், பாலங்களுக்கு வெடிகுண்டு வைத்துத் தகர்த்தல், ஆங்கிலேய அதிகாரிகளைத் தாக்குதல் போன்ற அராஜகச் செயல்கள் தலைவிரித்தாடின.

அரசாங்கம் போலீஸ் அடக்குமுறையை மென்மேலும் முடுக்கிவிட்டது. துப்பாக்கிப் பிரயோகத்தில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். கைதுகள், தடியடிகள், விசாரணையின்றி சிறைவாசம் மலிந்தன.

அரசாங்கம் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளால் ஆகஸ்ட் புரட்சி வலுவிழந்து, அடுத்த இரண்டே மாதங்களில் பிசுபிசுத்துவிட்டது. தலைமறைவான இடதுசாரி காங்கிரஸ் தலைவர்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடத்திய ரகசிய இயக்கமும் 1943-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ஒடுக்கப்பட்டுவிட்டது.

1943
நவம்பரில் உடல்நலம் மிகக் குன்றி, படுத்த படுக்கையாக இருந்த கஸ்தூர்பா காந்தி, 1944 பிப்ரவரி மாதம் உயிர்நீத்தார். அன்னாரது உடல், ஆகாகான் அரண்மனை மைதானத்திலேயே தகனம் செய்யப்பட்டது. அதற்கு ஆறு வாரங்களுக்குப் பின், காந்திஜி கடும் மலேரியா ஜுரத்தால் பீடிக்கப்பட்டார். அத்துடன் ரத்த சோகையும், குறைந்த ரத்த அழுத்தமும் அவரை வாட்டின.

""
மிஸ்டர் காந்தியின் உடல்நிலை மிகவும் குன்றிவிட்டது. இனி தீவிர அரசியலில் ஈடுபடும் நிலையில் அவர் இல்லை. சிறைக் காவலில் அவர் மாண்டு போனால் மக்களிடையே அரசாங்கத்திற்கு விரோதமான உணர்வு மேலோங்கும்,'' என்று வைஸ்ராய் லண்டனுக்கு அறிக்கை அனுப்பினார்.

அதன் விளைவாக, காந்திஜியை "உடல்நிலை காரணமாக' விடுவிக்க, 1944 மே 6-ஆம் தேதி வைஸ்ராய் உத்தரவிட்டார்.

மகாத்மா காந்தி மிக்க மன - உடல் சோர்வுடன் வெளியே வந்தார். அதுவே அவரது கடைசி சிறைவாசம். அதற்கு ஓராண்டுக்குப் பிறகு, 1945 ஜூன் 14 அன்று காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டனர்.

1944
ஜூலை 28 அன்று காந்திஜி வெளியிட்ட அறிக்கையில் அவர் பின்வருமாறு கூறினார்:

""...
பொதுச் சொத்துக்கு நாசம் விளைவிப்பது உட்பட நாச வேலைகள் அனைத்துமே வன்முறைச் செயல்களே ஆகும். "நடந்து போன அத்தகைய செயல்கள் மக்களின் மனத்தையும் ஆர்வத்தையும் உணர்ச்சிகரமாக உத்வேகித்தன' என்றெல்லாம் என்னிடம் பலர் எடுத்துக்காட்டுகிறார்கள். எவ்வாறாயினும் அந்த நடவடிக்கைகள் நமது தேசிய இயக்கத்திற்கு தீங்கு விளைவித்துவிட்டன என்பதில் எனக்குச் சந்தேகமில்லை''.

ஆம்! ஆகஸ்ட் புரட்சியின் சில விளைவுகள் அரசியல் களத்தில் காங்கிரஸிக்குப் பாதகமாகவே அமைந்தன.

ஏறத்தாழ மூன்றாண்டு காலம் (1942-1945) காங்கிரஸ் தடை செய்யப்பட்டுச் செயலிழந்து கிடந்தது. தலைவர்கள் சிறையில் இருந்தனர். அதன் நிதிகள் முடக்கப்பட்டுவிட்டன. நடைமுறையில் காங்கிரஸ் ஸ்தாபனம் நிலைகுலைந்து ஸ்தம்பித்துவிட்டது எனலாம்.
...


 M.Lakshmanan.



நண்பர் லட்சுமணன் மாரிமுத்து அவர்கள் எனக்கு அனுப்பிய மின் மடலில்  சில வாசகப் பகுதிகள் உங்களின் பார்வைக்கு  ... சுதந்திர தின நினைவாக ... அவ்வளவே...

நன்றிகள் : Lakshmanan Marimuthu  மற்றும்  Sankara Narayanan அவர்களுக்கும்.






.
Download As PDF