செவ்வாய், 4 செப்டம்பர், 2012

தவளைகள் உறங்கா மாரிக்காலம்









.
எதை எதையோ வெளித்தள்ள
வெளித்தள்ளி வெடிக்கும்
ஏக்கப்பெருமூச்சு
ஊர்ந்து செல்லும் தூரம் கடந்த
நீர்மப்பெருக்கம்
எழுப்பிவிடும் மரணபீதி
எல்லை நீண்டு வரம்புதெரியா
நாக்குசுருதி
எக்களிக்கும்
மாரிக்கால
வதனசூடு
பிய்த்துக்கொண்டோடும்
சொட்டுச்சொட்டாய்
சூத்திரம்
தவிர்த்த
இயக்கமாய்
நெளிநெளியாய் சுருள்சுருளாய்
நீட்டமாய்
கோணலாய்
திடீர் திடீரென மாறிச்செல்லும்
ஒளியினுடே
சுற்றித்திரியும்
தவளைகள் உறங்கா மாரிக்காலம்.






படங்கள் உதவி : கூகுள் இமேஜ் மற்றும் இணையம் ,நன்றி.
Download As PDF

20 கருத்துகள் :

Admin சொன்னது…

அருமை..

ADMIN சொன்னது…

ஆகா.. ஆகா.. ஆகா.. இதுவல்லவா தவளைகள் உறங்கா மாரிக்காலம்..!

ADMIN சொன்னது…

அருமையான கவிதை..!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

வித்தியாசமான கவிதை

MARI The Great சொன்னது…

ரசிக்க வைக்கிறது!

Unknown சொன்னது…

ஆழமாகப் படிக்கத் தூண்டும் கவிதை!

Jeyamaran சொன்னது…

nalla irukku anna

ஹேமா சொன்னது…

இதுதான் தவளைகள் உறங்கா மாரிக்காலமா.அப்படியே காட்சி கண்ணில்.தவளையாரைக் கண்டு கனகாலம் !

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான கவிதை
தவளைக்கோ மாரிக்காலம் மட்டும்
நமக்கோ எல்லா காலமும் என எண்ணத் தோன்றுகிறது
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 7

சின்னப்பயல் சொன்னது…

எல்லை நீண்டு வரம்புதெரியா
நாக்குசுருதி எக்களிக்கும்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அசத்துறீங்க சார்... வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

கவிதை நல்லாருக்குங்கோ....

vels-erode சொன்னது…

ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது ..................aamaamaam.....

கும்மாச்சி சொன்னது…

அண்ணே கவிதை நல்லா இருக்குங்க.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான மாரிக்காலம்! அருமை!

இன்று என் தளத்தில்
பழஞ்சோறு! அழகான கிழவி!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

Unknown சொன்னது…


மாரிக்கால கவிதை ! தவளைகள் சத்தம் காதால் ஒலிக்க என்னுடைய கிராம்ம் நினைவில் வந்து விட்டது

ராஜி சொன்னது…

ஐயோ மழைக்காலம் வந்தாலே, இந்த தவளைகள் ஏந்தான் இப்படி சத்தம் போடுதோன்னு நினைப்பதுண்டு. ஆனா, கவிதையா வடிக்க எனக்கு தெரியலையே.

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான வரிகள் .தொடர வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி பகிர்வுக்கு .

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - கவிதை அருமை - புரிய சற்று நேரம் பிடிக்கும் - வழக்கறிஞர் எப்பொழுது கவிஞர் ஆனார் - தொடர்க கவிதை இயற்றும் கவிஞராக. நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "