செவ்வாய், 24 மார்ச், 2009

கைதிகள் சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வேண்டுகோள்.

.

எனக்குத் தெரிந்து
சிறையில்அடைக்கப்பட்டுள்ளவர்கள் எந்தத்தேர்தலிலும்
ஓட்டுப்போட்டதாகத்தெரியவில்லை. தேர்தலில்
நிற்கஅனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால்
அவர்களின்
ஜனநாயக உரிமையான ஓட்டுப்போடும் உரிமையானது இன்றுவரை கிடைக்கப்பெறவில்லை.
ஏன் இந்த பாரபட்சம் என்று தெரியவில்லை.
ஒரு வாக்கிற்காக
ஒரு வாக்குச் சாவடி அமைத்துள்ளதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் தேர்தல் ஆணையம்
லட்சக் கணக்கான நபர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பினை கொடுப்பதில்லை?
அவர்களும் பிரஜைகள் தானே. மற்றவர்களைப் போல் அவர்களுக்கும்
ஓட்டுப்போட உரிமையுள்ளதுதானே. அப்படியிருக்க
ஏன் அந்த வாய்ப்பினை
தேர்தல் ஆணையம் தருவதில்லை?

ஒவ்வொரு பிரஜையும் கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும். ஓட்டுப் போடாதவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றெல்லாம் கூறும்
தேர்தல் ஆணையம்
ஓட்டுப்போடதயாராகஇருக்கும்அவர்களை ஏன் கண்டுகொள்ளவில்லை.

அனைத்து பிரஜைகளையும் வாக்காளர்களாகச்சேர்க்க
கடும் நடவடிக்கை எடுத்து வரும் தேர்தல் ஆணையம்,
எத்தனை கைதிகளை இன்றுவரை வாக்காளர்களாகச் சேர்த்துள்ளது. அதற்கு என்ன முயற்சி எடுத்துள்ளது.
அனைத்து பிரஜைகளுக்கும்
வாக்கு உத்தரவாதம்
தருவது
தேர்தல் ஆணையத்தின்
தலையான கடமையல்லவா?

வெளிநாட்டில் உள்ளவர்கள்கூட ஓட்டுப்போடும்போது,
உள் நாட்டில் இருந்து கொண்டு வேடிக்கை பார்க்க வைப்பது சரியான ஜனநாயக நெறிமுறையா?

எனவே,
இப்பதிவின் மூலம்
தேர்தல் ஆணையத்திடம்
நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால்,
இந்த தேர்தலாவது
சிறையில்அடைக்கப்பட்டவர்களுக்கு, அவர்களுக்கும் உரிமை உண்டு என்பதனை கருத்தில் கொண்டு,
அவர்களுக்கும்
ஓட்டுப்போட வாய்ப்பினை ஏற்படுத்தி,
அவர்களையும்
தேர்தலில் பங்குபெற
வழி வகைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-இப்படிக்கு நண்டு.

ஒரு ஜனநாயக நாட்டில்
தேர்தல் என்பது
அனைத்து தரப்பினரின் எண்ணங்களின்
பிரதிபலிப்பாகவே
இருக்கவேண்டும்.

இம்மண்ணில்
பிறந்த
எந்த குடிமகனுக்கும்
அவனின்
ஜனநாயக உரிமைகள்
எச்சூழலிலும்,
எப்பொழுதும்,
எங்கேனும்,
எவராலும்
பாதிக்கப்பட்டாலும், மறுக்கப்பட்டாலும், சுரண்டப்பட்டாலும்,
அதற்காக
ஜனநாயக வாதிகள் ஒருமித்து குரல் கொடுப்பர்
என்பது திண்ணம்.

எனவே,
இப்பதிவினைப் படிக்கும் ஒவ்வொருவரும்
தங்களின்
ஜனநாயக குரலினை
தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பீர்கள்
என்ற உறுதியில்
நண்டு.

.

Download As PDF

10 கருத்துகள் :

கிருஷ்ண பிரபு சொன்னது…

நல்ல யோசனைதான். இருந்தாலும் சரிப்பட்டு வருமா என்றுதான் தெரியவில்லை. ஒருகால் சில சட்ட திட்டங்கள் ஏதாவது இருக்குமோ?

இது பற்றி ஏதாவது புத்தகம் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்....

நல்ல பதிவு....
கிருஷ்ண பிரபு.

ஆதவன் சொன்னது…

nalla pathivu..thodarndhu ezhuthungal..

nanri,
arun m.

மந்திரன் சொன்னது…

இதை என்னால ஏற்றுக்கொள்ள முடியாது ...
சிறையில் இருப்பது என்பது தண்டனை ...
அவர்களுக்கு மிக பெரிய தண்டனை என்பதே சமுகத்தில் இருந்து தனிமைபடுத்தல் என்பதுதான் ...
அவர்களுக்கும் எல்லா உரிமைகளை கொடுத்தால் எதற்கு சிறைசாலை ?...
இப்பவே சிக்கன் , மட்டன் எல்லாம் போடுறாங்களாம் ...
நீங்க வேற என்னங்க ?

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சி
Enathu Payanam
அவர்களே

//இருந்தாலும் சரிப்பட்டு வருமா என்றுதான் தெரியவில்லை. //

சரிப்படவைக்கவேண்டும்
அது தான் ஜனநாயகம்

நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

உங்களால்
ஏற்றுக்கொள்ள முடியாது
என்பதற்காக
மக்களாட்சித்தத்துவத்தை
ஜனநாயகத்தை
தூக்குமேடைக்கு
அனுப்ப முடியாது
மந்திரன்
அவர்களே.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் கருத்துரைக்கு
மிக்கமகிழ்ச்சி
ஆதவன்
அவர்களே

நன்றி

மந்திரன் சொன்னது…

மக்களாச்சி -- யாருடைய மக்கள் ஆட்சி இங்கு நடைபெறுகிறது ?...
அது சரி நான் சொல்ல வந்தது என்ன வென்றால் , சிறையில் இருப்பவர்கள் மக்களே அல்ல ..
அவர்கள் மாக்கள் (விலங்குகள் )....
அவர்களின் மனித உரிமைகள் மட்டும் தான் காக்கப் பட வேண்டும் ..
அவர்களின் சமுதாய உரிமைகள் அல்ல ..

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மந்திரன் அவர்களே

மாக்கள் என்று இங்கு எதுவும் இல்லை.

விலங்கினங்களை
சிறையில்இருக்கவேண்டிய,
தண்டிக்கப்படவேண்டிய
லிஸ்டில் வைத்துள்ளீர்கள்
போலும் .
தவறான பார்வை .

அடுத்தவர்
தமது அடிப்படைகள் பாதிக்கப்படும்பொழுது
அது பற்றி கோரிக்கை
வைக்கும்பொழுது ,
அது கொடுக்கக்கூடாது
என்று தடுக்கும்படி
பேசுவது ,எழுதுவது
10 வருடம் கடுங்காவல்
சிறைதண்டனை கொடுக்கக்கூடிய குற்றமாகும்,
மேலும்
மக்கள் ஆட்சி த்த்துவத்தையோ ,
கருத்தையோ,மற்றவர்களையோ,
எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல்
கேலி செய்வது
7 வருடம் கடுங்காவல்
சிறைதண்டனை கொடுக்கக்கூடிய குற்றமாகும்,
என்று
இருக்கும்
ஒரு சூழலில்
உங்களின் நிலையை
நினைத்துபாருங்கள் ,
இந்நிலையில் நீங்கள் .

சிந்திப்பீர்

மந்திரன் சொன்னது…

//தவறான பார்வை .//
மக்களின் உயிர்களை வேட்டையாடும் , உடைமைகளை கொள்ளை இடும் விலங்குகள் தான் சிறையில் இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து ..
//எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல்
கேலி செய்வது //

சொத்து மதிப்பு
கருணாநிதி - 48 கோடி
ஜெயலலிதா -36
லல்லு - 28

இவை எல்லாம் தேர்தல் ஆணையத்தால் கொடுக்க பட்ட மதிப்புகள் ...

கையில் காசு இல்லாமல் சென்னைக்கு வந்த கருணாநிதி கொண்டுள்ள சொத்து மதிப்பு எவ்வளவு ?
ஈலத்தில் நடப்பது மக்களாச்சி .. அங்கே கொல்லப் படுவது என் இன மக்கள் ..அவர்களின் சகோதரர்கள் ..
கொஞ்சம் சிந்திப்பீர் .

//7 வருடம் கடுங்காவல்//10 வருடம் கடுங்காவல்//
என்னை மிரட்டி ,எனது எழுத்துரிமையை நீங்கள் பறிக்கிறீர்கள் .. இதுக்கு எத்தனை வருட கடுங் காவல் சிறை தண்டனை ?

Anonymous சொன்னது…

yes>.what you are said is correct.It is not a sympathetic issue.Voting is their "Right"..Somebody may try to get information under RTI before the election and with that represent the matter to Election commission.it can be effectively done by LAWYERS..let them consider this point and do something before the commencement of the election.---R.Selvapriyan-Chalakudy

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "