ஞாயிறு, 5 ஜூலை, 2009

ஈரோடு, Mhow -ல் சுப்ரீம் கோர்ட் கிளை -அரசிடம் கோரிக்கை

முன்பு
நான் ஈரோடு சென்று
மதுரை திரும்பும்பொழுதெல்லாம்
எனது நண்பரும் ,'
'நவின ஊடகம் '' ஆசிரியரும் ,
வழக்கறிஞருமான எஸ் .இளங்கோவன் ,
என்ன இந்த முறையாவது '' பெரியார் இல்ல''த்தை கண்டுவந்தீரா? என்பார் .
இல்லை என்ற பதிலே எப்பொழுதும் .

பொதுவாகவே, ஒருவரின் பிறந்த இடத்தையோ,வாழ்ந்த இடத்தையோ,மறைந்த இடத்தையோ பார்ப்பதால்
என்ன பயன் ?
ஒன்றும் இல்லை என்ற கருத்து எனதாக இருந்தது .

ஒரு வழக்கு விசயமாக ஈரோடு காவல்நிலையத்திற்கு சென்ற பொழுது ஆய்வாளர் வெளியே
சென்றிருந்த படியால் சற்று காலாற நடந்து வரலாம் என நண்பர் கூற ,நடக்க அங்கே
''பெரியார் நினைவில்ல''த்தைக் கண்டு உள்ளே சென்றோம் .
பெரியார் பற்றிய ஒரு நல்ல புரிதல் மேலும் .
பகுத்தறிவினால் மனித குலத்தின் உயர்விற்கு உழைத்த அவரின் தொண்டு நேரடியான
பாதிப்பை ஏற்படுத்துயது .
ஓரு ஆகச்சிறந்த இலக்கிய படைப்பு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமே அத்தகைய பாதிப்பை
ஏற்படுத்தியது .
அதற்கெல்லாம் காரணம் எனது நண்பர் தான் .
இலக்கியச் சந்திப்புகள் ,பகுத்தறிவுக்கூட்டங்கள் ஆகியவற்றில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும்
அவர் ,நிறைய புத்தகங்களை இரவல் வாங்கிச்செல்வார்.
பின் நீண்ட கேட்பிற்குப்பின் திருப்பித்தருவார் .
நானும் நினைத்துக்கொள்வேன் ,படிப்பதற்கு வேண்டி காலம் தாழ்த்துகின்றார் என .
இருந்தலும் அவர் செறிவேறிய தன்மையில்லாமலே இருந்தார் .
குடும்பச்சூழல் என நினைத்துக்கொண்டேன் .
'' பெரியார் இல்ல''த்தை விட்டு வெளியே வந்த அவர் ,காவல்நிலையத்தின் பணிமுடிந்து
வெளியே வரும் வரை எதுவும் பேசவில்லை .
சரி ,கிளம்புகின்றேன் என்றேன் .
''பெரியார் மன்றம் '' இதற்கு பின்புறம்தான் இருக்கு சென்று வரலாம் என்றார் .
ஏன் என்றேன்.
நூலகத்தில் புத்தகம் எடுக்கலாம்னு ...என்றார் .
என்ன புத்தகம் வேண்டும் என்றேன்.
எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்றார் .
என் கையில் '' பெரியார் -ஆகஸ்டு 15'' மட்டும் தான் உள்ளது என்றேன் .
சரி கொடுங்கள் என்றார் .
இதை ஏற்கனவே தாங்கள் படித்தது தானே என்றேன் . மிகப்பெரிய தயக்கத்துடன் ,மன்னிக்கவும் ,
நீங்கள் கொடுக்கும் அனைத்துப்புத்தகங்களையும் வாங்கிச்சென்று அன்றே படிக்க நினைப்பேன் .
ஆனால் ,ஒரிரு பக்கங்கள் மட்டுமே படிப்பேன் அவ்வளவே .
ஆனால் ,
இன்று 'பெரியார் நினைவில்ல''த்திற்குச்சென்று பார்த்த பிறகு எனக்குள் ஒரு பொறி ஏற்பட்டது
போன்று உணர்கிறேன் .
எவ்வளவு பெரிய மனிதர் ''பெரியார் '' .
நம் காலத்தில் வாழ்ந்த அவரை தெரிந்துகொள்ளாமல் இருப்பது மூடத்தனமல்லவா ? என்ற எண்ணம்
ஏற்பட்டது என்றார் .
எனக்கு அப்பொழுது தான் ஒரு பொறி .
நாம் அப்படி இருக்கலாம் .
ஆனால்,சமுதாயத்தில் பலர் அப்படியில்லை .
அப்படிப்பட்டவர்களுக்கு ...???
அப்படிப்பட்டவர்களுக்காகவே ,
உயர்ந்த மனிதர்கள் தோன்றிய இடங்களில் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக்கூடிய
விதத்தில் மிகப்பெரிய அமைப்புகள் ஏற்படுத்துவதன் மூலம் அந்த அமைப்பிற்கு வருகை
தருபவர்கள் கட்டாயம் அந்த உயர்ந்த மனிதர்களைப்பற்றியும் ,அவராது கொள்கை கோட்பாடுகளையும்
அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் . மேலும் ,ஏன் இந்த அமைப்பு இங்கு வந்தது ? என்ற
கேள்விக்கு ,பகுத்தறிவும் ,மனித நேயமும் என்ற பதில் அந்த அமைப்பில்
பணிபுரிபவர்களிடமும் ,அந்த அமைப்பிற்கு வருகை தருபவர்களிடமும் , அந்த அமைப்பை
அலங்கரிப்பவர்கள் மத்தியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் .மேலும் , அந்த அமைப்பின்
பயன்பாடு மக்களை அந்த உயர்ந்த மனிதர்களை நினைத்துப்பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை
ஏற்படுத்தும் என்பது திண்ணம் என்ற எண்ணம் ஏற்பட்டது .

பொதுவாக ,ஒரு ஊரில் மிகப்பெரிய அமைப்புகளில் பணியாற்ற வருபவர்கள் அந்த ஊரின்
சிறப்பை அறிந்துகொள்வதும் ,சிறிதளவாவது அதனில் செயல்பட நினைப்பதும் ,மேலும்
,அவ்வவ்வூரில் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவ்வூரின் சிறப்பை பேசும் போதெல்லாம்
மனதில் அதன் தாக்கம் ஏற்பட்டு இயங்குவதும் இயல்பாகும் -இது உளவியல் .

இத்தருணத்தில் தான்
சுப்ரீம் கோர்ட் கிளைகளை
நாட்டின் முக்கிய நகரங்களில் அமைக்க
சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளதை படித்தேன் .
பிற நகரங்களில் சுப்ரீம் கோர்ட் கிளைகளை அமைப்பதற்கு பதிலாக
பெரியார் பிறந்த ஈரோட்டிலும் ,
அம்பேத்கார் பிறந்த *Mhow* விலும்
அந்த மனித நேய தலைவர்களுக்கு
நீதித்துறையின் மூலமாக கொடுக்கும்
சரியான மரியாதையாக இருக்கும் .
இதன் மூலம் அவர்களை பலதரப்பட்ட மக்கள் மேலும் அறிந்து கொள்வர் என்பது உண்மை .

ஆகவே ,
ஈரோடு
மற்றும்
Mhow -ல்
சுப்ரீம் கோர்ட் கிளைகளை
அமைக்க அரசிடம்
கோரிக்கை வைக்கிறேன் .
தாங்களும்
கோரிக்கைகள் வைக்க வேண்டுகிறேன் .


எனவே ,
பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணை , சட்டமேதை அம்பேத்கார் பிறந்த மண்ணை
மதிக்கவேண்டும் ,
அவர்களின் புகழினை பரப்ப வேண்டும் ,
அவர்களின் கொள்கை கோட்பாடுகளை வளர்க்கவேண்டும்
என்ற எண்ணமுள்ள
ஒவ்வொரு மனிதரும்
அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுகிறேன் .


காந்திக்கும் அப்படியே ...



என
நண்டு .


.


.


.

Download As PDF

3 கருத்துகள் :

thamizh சொன்னது…

பெரியார் வாழ்ந்த ஊரான ஈரோட்டுல ஏன் சுப்ரீம் கோர்ட் கிளை வேணும்னு சொல்றீங்கன்னுதான் எனக்கு புரியல.
மத்தபடி உங்கள் அனுபவம் என்றது அருமை.
காந்தியின் கொள்கைகள் சில பெரியாருக்கு ஒத்து வராதே அவரோட எந்த கொள்கைகளை பரப்ப சொல்றீங்க?

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

-சென்னையில்( லும்)
சுப்ரீம் கோர்ட்டின் கிளை அமைப்பதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளன .

அப்படியெனில் ,
அது தமிழ்நாடு ,ஆந்திரா ,கர்நாடகா ,கேரளா ,பாண்டிச்சேரி ஆகியவற்றிற்கான கிளையாக இருக்கும் .

ஆந்திராவிலிருந்து , கர்நாடகாவிலிருந்து , கேரளாவிலிருந்து
ஒருவர் வழக்கிற்காக
சென்னைக்கு செல்வது AS USUAL .
ஆனால் ,
வழக்கிற்காக ஈரோட்டிற்கு செல்லவேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு ஏற்படும்பொழுது ஏன் அங்கு சுப்ரீம் கோர்ட்டின் கிளை அமைத்தார்கள் ?
எதற்க்காக ?
என்ன காரணம் ?
என்ற கேள்விகள் அவர்களிடமிருத்து
வருமா? வராதா? .

''ஒன்றைப்பற்றிய கேள்வி ,
அதன் பதிலில் உள்ள
கருத்தில் குவியும் .''

எனக்கும்,எனது நண்பருக்கும் ஏற்பட்டது போன்றது
அப்படி ஈரோட்டிற்கு வரும் லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படலாம் அல்லவா . -

மேலும் விளக்கங்கள் பதிவிலே இருக்கிறது .

-//உங்கள் அனுபவம் என்றது அருமை// -இதில்
என்றது
என்ற வார்த்தை
தவறான அர்த்தத்தை
கொடுக்கின்றது .
அது உண்மைச்சம்பவம் .
'' பெரியார் இல்ல''த்திலுள்ள பார்வையாளர்களின் பதிவேட்டைப்பார்த்தாலே தெரியும் .-

- தாங்களும்
'' பெரியார் இல்ல''த்திற்கு சென்று வாருங்கள் .-

-//காந்தியின் கொள்கைகள் சில பெரியாருக்கு ஒத்து வராதே // .. இப்படி பார்க்கும் பார்வையே பிற்போக்குத்தனமானது
- தவறானது -திருத்திக்கொள்ளவேண்டியது -
ஒத்து வராத அந்த ''சில''தை விட்டுவிட்டு
மற்றதை பார்க்கலாமே .

பின்னுட்டத்திற்கு நன்றி .thamizh .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும்,
பின்னூட்டத்திற்கும்
நன்றி
ceekee.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "