புதன், 5 அக்டோபர், 2011

என்னமோ நடக்குது , மர்மமாய் இருக்குது .



நொரண்டு : வணக்கம் நண்டு

நண்டு : வாங்க நொரண்டு

நொரண்டு :  எப்படி இருக்கீங்க

நண்டு :  நல்லா இருக்கேன்

நொரண்டு :  எங்க 14  நாளா ஆளையே காணம்

நண்டு :  ம் ...

நொரண்டு : என்ன ... ம் ...

நண்டு : ம் ...

நொரண்டு : என்னமோ நடக்குது , மர்மமாய் இருக்குது .


நண்டு : மர்மம் எல்லாம் ஒன்னு இல்லை ,உடம்பு சரியில்ல அதான் வலைப்பக்கம் வரமுடியல் ...

நொரண்டு : நான் உன்ன சொல்ல்லப்பா ...உலகத்துல நடக்கறத சொன்னேன்

நண்டு : ஆமாம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது .

நொரண்டு : தமிழ்மணம் மிக நல்ல முடிவை எடுத்துள்ளது .

நண்டு : வரவேற்கத் தக்க முடிவு .

நொரண்டு : ஆமாம்...ஆமாம் ...

நண்டு : மர்மமாய் இருக்குனு எதை சொன்ன ?

நொரண்டு : வருமைக்கோடு .

நண்டு :ஓ...அதுவா....

நொரண்டு : நீ என்ன நினைக்கற ...

நண்டு :நான் முன்னமே சொல்லிட்டேன் ,புதிய பொருளாதார கொள்கை தோவைனு ?

நொரண்டு : யாரையா ... இப்ப அதப்பத்தி யோகிக்கராங்க .

நண்டு :நாம் தான் யோசிக்கனும் .

நொரண்டு : ஏன் ?

நண்டு :இல்லாட்டி தினமும் 10 ருபாய் சம்பாதிப்பவன் சூப்பர் டேக்ஸ் கட்டணும்னு இந்திய பொருளாதார மேதைகள் பாராளுமன்றத்துல சட்டம் இயற்ற ஆரம்பித்து விடுவாங்கப்பா ...

நொரண்டு : இந்திய பொருளாதார மேதைகளைப்பத்தி என்ன சொல்ல வர்ரா

நண்டு :வெங்காயம்.

நொரண்டு : அப்ப உலக பொருளாதார நிபுணர்களை என்ன சொல்லுவ

நண்டு :வெண்ணை வெட்டி சிப்பாய்கள்.

நொரண்டு : ஏன் இப்படி திட்டுகிறாய் .

நண்டு :இது திட்டுவதல்ல உண்மை.

நொரண்டு : என்ன சொல்ர

நண்டு :இவர்கள் ஏழ்மையைப்பற்றியோ,ஏழைகளைப்பற்றி சிந்திப்பதே யில்லை .அதான் ...ஆதங்கம் .

நொரண்டு : அதனால என்ன செய்ய சொல்ர.

நண்டு :முதலில் நாம் அனைவரும் நமது சுய எண்ணங்களை சீர்தூக்கி பார்க்கவேண்டும்.

நொரண்டு : ஏன்?

நண்டு :அப்பத்தான் நாம் நமது சொல்லிற்கும் செயலிற்கும் வாழ்விற்குமான இடைவெளியையும் உண்மைத்தன்மையையும் உணர்ந்து செயல்பட ஆரம்பிக்கமுடியும் .

நொரண்டு : எதற்கு ?

நண்டு :அப்பதுதான் நாம் ஒரு சமுக நோக்குள்ள மனிதனாக முடியும்,இல்லாது போனால் நாம் ஏழ்மையைப்பற்றி விவரங்கள் அறிந்த விலங்கினங்களாகவே இருப்போம் .

நொரண்டு : ஏழ்மைக்கும் ,இப்ப நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்குமான நீட்சிக்கும் உள்ள தொடர்பு ...

நண்டு :ஆம் ,இப்ப நமக்கு தேவை ஒரு தீர்வு .

நொரண்டு : புரியல ?

நண்டு :உலகில் பசியால் மனிதர்கள் இறப்பதை தடுப்பதற்கும்,லஞ்சம்,ஊழல் இல்லாத உலகை உருவாக்குவதற்கும் ,பயங்கரவாதம்,தீவிரவாதம் இல்லாத  சமுதாயமாக உலகை உருவாக்குவதற்கும் ,போர்களையே அறியாத மனிதர்களாக அச்சமின்றி வாழ்வதற்கும் ,ஏழை பணக்காரன்,உயர்ந்தவன் தாழ்ந்தவன்  என்ற நிலை இல்லாமல்  மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் இன்றைக்கு உலகிற்கு உடனடி தேவையாக இருப்பது புதிய கொள்கைகளும் கோட்பாடுகளுமே யாகும்.

நொரண்டு : அதனால் .

நண்டு :அதனால் புதிய கொள்கை உடனே உலகிற்கு தேவையாக உள்ளது .

நொரண்டு : இல்லைனா ...

நண்டு :புதிய கொள்கை உருவாகவில்லை எனில் இங்கு மனிதர்கள் மனிதர்களாகவே வாழமுடியாத நிலை ஏற்பட்டுவிடுவதோடு.அனைத்தும் மீறப்பட்டு உலக சமுதாயம் சொல்லவெண்ணா துயரத்திற்கு ஆளாகிவிடும் .

நொரண்டு : அதற்கு ஏதாவது எளிய தீர்வே இல்லையா ?

நண்டு :புதிய கொள்கையே எளிய தீர்வு . 

நொரண்டு : ஓ...

நண்டு :ஆனால் ,இதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தான் நமக்கு வேண்டும்

நொரண்டு : என்ன பக்குவம்.

நண்டு :முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு  சுயநலமில்லாமல் சிந்திக்கவும்வேண்டும்.



உலகிற்கு உடனடி தேவை

தொடரும் ...
Download As PDF

27 கருத்துகள் :

கூடல் பாலா சொன்னது…

உண்மையிலேயே இது உடனடி தேவைதான் ....

கூடல் பாலா சொன்னது…

எழுதிய நடை மிகவும் அருமை ராஜசேகர் சார் !

உணவு உலகம் சொன்னது…

சொல்ல வந்த கருத்து சுருக்.

தனிமரம் சொன்னது…

சுயநலம் இல்லாது தற்போது சிந்தீப்பார்களா?
மிகவும் காத்திரமான பதிவு !

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு சுயநலமில்லாமல் சிந்திக்கவும்வேண்டும்.//

இது நடக்குமா!!.. நடக்கணும்கறதுதான் எல்லோரோட ஆவலாயும் இருக்க முடியும்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

விழிப்புணர்வுப்பதிவு, ஈரோட்டுக்காரரா? கொக்கா?

குறையொன்றுமில்லை. சொன்னது…

முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு சுயநலமில்லாமல் சிந்திக்கவும்வேண்டும்.



ஆமா இதேதான் சரி

Unknown சொன்னது…

சரியா சொன்னீங்க ..

Unknown சொன்னது…

மாப்ள நச் பதிவு நன்றி!

கோகுல் சொன்னது…

இடைவேளைக்கு பிறகு பன்ச்-சோட வந்திருக்கிங்க

மகேந்திரன் சொன்னது…

அழகா சொன்னீங்க நண்பரே..
சிந்தித்தலில் சுயநலம் இருக்க கூடாதென்பது
மிக மிக அவசியம்...
நன்று.

cheena (சீனா) சொன்னது…

நல்லதொரு சிந்தனை நண்டு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

M.R சொன்னது…

நல்ல ஆரோக்கிய விவாதம் நண்பரே

நிரூபன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நிரூபன் சொன்னது…

இனிய மதிய வணக்கம் பாஸ்,

நலமா?

ஏழைகளைப் பார்த்தும், பாராமுகமாய் இருப்போருக்கு நல்லதோர் சேதியினைச் சொல்லி நிற்கிறது உங்கள் பதிவு.

Advocate P.R.Jayarajan சொன்னது…

//முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு சுயநலமில்லாமல் சிந்திக்கவும்வேண்டும்.//

ஒரு வரிதான். ஆனால் சாத்தியமா என்பது சந்தேகமே ! கொஞ்சம் கூட சுயநலமில்லாமல் வாழ முடியாது. ஆனால் சுயலமில்லாமல் சிந்திக்கச் செய்யலாம். ஆனால் அதை செயலில் காட்டுவது ?

நேற்று நான் மகாத்மா காந்தி பற்றிய சில விவரங்களை இணைய தளத்தில் படித்தேன். அதில் காந்தி ஆடையில்லாமல் வெற்று உடம்போடு எளிமையாக உலா வந்து வறியவர்களுக்கு சமமாக பழகினார். ஆனால் காலில் செருப்பு அணிந்து இருந்தார். தென் ஆப்ரிக்காவில் பயணம் செய்யும் போது மூன்றாம் வகுப்பில் இடம் இருந்தாலும் முதல் வகுப்பிலேயே பிரயாணம் செய்தார். அவர் தன்னை ஏழைப் பங்களானாக கட்டிக் கொண்டாரே தவிர உண்மையில் அவ்வாறு வாழவில்லை.

அஹிம்சையை போதித்த அவர் தன்னுடைய மனைவியை கண்டபடி அடிப்பாராம். அவருடைய அஹிம்சை, சத்தியாகிரகம் போன்ற மென்மையான வழிகளால்தான் இந்தியாவின் சுதந்திரம் தள்ளிபோனதாம். இந்தியர்களை அவர் தைரியமானவர்களாக அவர் உருவாக்கவில்லை. அவர் போஸ் போன்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தால் பிரிட்டன் அரசால் இந்திய உயிர்கள் நிறைய பலி ஆயிருக்காதம். எடுத்துக்காட்டாக ஜாலியன் வாலபாக் படுகொலை. வழக்கு போட மகாத்மாவிற்கு துணிச்சல் இல்லை. இப்படியாக விரிகிறது அந்தக் கட்டுரை. மகாத்மாவைப் பற்றி இன்னும் அதிர்ச்சிகரமான பல்வேறு தகவல்கள் அதில் ஆதாரங்களுடன் கூறப்பட்டுள்ளன.

எனவே சுயநலம் இல்லாது இருக்க வேண்டும் என்றால் தன்னிறைவு அடைய வேண்டும். தன்னிறைவை எப்படி அடைவது?

Selmadmoi gir சொன்னது…

சிந்திக்கவைக்கும் பதிவு பாஸ்

ஜோதிஜி சொன்னது…

ஒரு கட்டுரையின் நோக்கம் பார்வையிட வந்தவர்களை அவர்களின் கருத்துக்களை எழுத வைக்கும் அளவுக்கு இருக்க வேண்டும். ஜெயராஜன் எழுதிய கருத்து உங்கள் எழுத்துக்கு கிடைத்த வெற்றி.

முரண்நகை என்ற போதிலும் இது போன்ற விபரங்களை இணையம் பதிவு செய்தே ஆக வேண்டும்.

Unknown சொன்னது…

நண்பரே!
நல்தொரு பதிவு! சுவையான
விவாதத்திற்கு வித்திட்டுள்ளீர்
சுயநலமில்லாதவராக இருப்பதிலும்
ஒரு சுயநலம் தொக்கி நிற்கிறது என்றே
நான் கருதுகிறேன்
புலவர் சா இராமாநுசம்

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

முதலில் நாம் அனைவரும் நமது சுய எண்ணங்களை சீர்தூக்கி பார்க்கவேண்டும்.

உண்மைதான் நண்பரே..

பெயரில்லா சொன்னது…

இது உடனடி தேவைதான்...

RaThi Mullai சொன்னது…

Truthful post

Unknown சொன்னது…

ஒரே வரியில் தீர்வை நச்னு சொல்லிட்டீங்க.

பெயரில்லா சொன்னது…

முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு சுயநலமில்லாமல் சிந்திக்கவும்வேண்டும்./// ரொம்ப கஸ்ரமாசே சார் )

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு சுயநலமில்லாமல் சிந்திக்கவும்வேண்டும்.//

நமக்கு ஏன் என்று பேசாமல் இருந்துவிடாமல், எல்லோரும் சிறிதளவு முயற்சி செய்தாலே புதிய பாரதத்தை உருவாக்கலாம்.

அருமையான விழிப்புணர்வு பதிவு.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பக்குவமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

மாய உலகம் சொன்னது…

புதிய கொள்கை உருவாகவில்லை எனில் இங்கு மனிதர்கள் மனிதர்களாகவே வாழமுடியாத நிலை ஏற்பட்டுவிடுவதோடு.அனைத்தும் மீறப்பட்டு உலக சமுதாயம் சொல்லவெண்ணா துயரத்திற்கு ஆளாகிவிடும் .
//

முற்றிலும் முழுமையான ஆதங்கம்... அனைவரும் சிந்திக்க வேண்ட்டிய பகிர்வு... நன்றி சகோ!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "