திங்கள், 17 ஆகஸ்ட், 2009

நீதித்துறையில் மறைக்கப்படும் ஜனநாயகத்தத்துவம் .

.


.
நண்டு : டெல்லியில்
நேற்று (16.8.09)நடந்த முதல்-மந்திரிகள்
மற்றும்
ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் மாநாட்டில்
பிரதமர் பேசியதை படித்தாயா ? .


நொரண்டு : உண்மையில் ஆச்சரியப்பட்டுவிட்டேன் .
அழகான ,
அர்த்தம் பொதிந்த பேச்சு. எதிர்பார்க்கவில்லை
இப்படி ஒரு அற்புதமான பேச்சை அவரிடமிருந்து .
வாழ்த்துக்கள் பிரதமர் வாழ்த்துக்கள் .


நண்டு : என்ன ஆச்சரியமா இருக்கு ,
நீ வாழ்த்துவது என்றால் ?
என்ன காரணம் ?


நொரண்டு : கோர்ட்டின் மீது மக்கள் நம்பிக்கை
வைக்கும் அளவிற்கு நீதித்துறை
செயல்படவேண்டும் ,விரைவு நீதிமன்றங்கள்
விரைவாக தீர்ப்பு வழங்கவேண்டும் ,
தண்டனைக்காலத்தைவிட ஜெயிலில்
பெருமளவினர் அதிக காலம் தண்டனை
அனுபவித்து வருகின்றனர் .
வருத்தம் அளிக்கின்றது - என கூறியுள்ளாரே
அதனால்தான் .

நண்டு : இது எல்லாத்துக்கும் தெரிந்ததுதானே .


நொரண்டு : ஆம் ,
ஆனால் ,இதைக்கூட கூறத் தயங்கினவர்களைத்தான்
அல்லது
இவ்விசயத்தில் தலையிடாதவர்களைத்தான்
பார்த்திருக்கின்றேன் .


நண்டு : எப்படி ?


நொரண்டு : 'கோர்ட்டின் மீது மக்கள்
நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
நீதித்துறை செயல்படவேண்டும் '
என்ற அவரின் பேச்சிற்கு
நீ என்ன அர்த்தம் புரிந்துகொண்டாய் சொல் .


நண்டு :'கோர்ட்டின் மீது மக்கள்
நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
நீதித்துறை செயல்படவேண்டும் ' அவ்வளவே .


நொரண்டு : அட நண்டு
வெளிப்படையான பாமரப்பார்வை அது .
அதற்கு அர்த்தம் -நீதித்துறை
மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
செயல்படவில்லை,
நீதித்துறையின் மீது
மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் .
மக்கள்
நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
செயல்படாத நீதித்துறை
நமது ஜனநாயக நாட்டில் உள்ளது .
இனி அப்படி செயல்படக்கூடாது
'கோர்ட்டின் மீது மக்கள்
நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
நீதித்துறை செயல்படவேண்டும் ' என்பதுவே .


நண்டு : அப்படியா ...?
உண்மையில் அப்படித்தான் உள்ளதா ..


நொரண்டு : நான் ,நீ
பேசிக்கொண்ட பேச்சுல்ல இது ,
முதல்-மந்திரிகள்
மற்றும்
ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள்
முன்னிலையில்
பிரதமர் பேசியது .
ஆதாரங்கள் இல்லாமல்
பிரதமர் அவ்வாறு பேசியிருக்க மாட்டார் .


நண்டு : நீதித்துறையின் மீது
மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் எனில் ?


நொரண்டு : ஜனநாயகம்
குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றது
என அர்த்தம் .


நண்டு : நீ என்ன சொல்ற ?


நொரண்டு :பிரதமரே பேசியிருக்கும் பொழுது
நான் என்ன சொல்ல .
அவர் கூற்றில் உண்மை இல்லாமல இருக்கும் .
அரசு தான் உரிய நடவடிக்கை
துரிதமாக மேற்கொள்ள வேண்டும் .
எடுக்கும் என நம்புகின்றேன் .

நண்டு : எப்படிப்பட்ட நடவடிக்கைகள்
இருந்தால் நலமாக இருக்கும் என எண்ணுகின்றாய் .


நொரண்டு : நண்டு ,
மன்னராட்சியில் ,
அரசர் கேள்விக்கு அப்பாற்பட்டவர் .
அரசர் தவறே செய்யாதவர் ,
அரசர் செய்யும் தவறுகள் எதுவும் தவறுகள் அல்ல,
அரசன் என்ன நினைக்கின்றனே
அதை
அப்படியே
நீதிமன்றம் பிரதிபலிக்கவேண்டும் ...
இப்படியான கோட்பாடுகளினால்
நீதித்துறை முழுக்கமுழுக்க கட்டமைக்கப்பட்டது .
மிகவும் மிகவும் கவனமாக.
அரசனிடமிருந்து ,
அரசரின் பிரதிநிதிகளுக்கு ,
நீதி - நீதித்துறையாக மாற்றப்பட்டபொழுது .
அதனால்,
மன்னராட்சியில்
நீதிபதிகளும்
எக்கேள்வி்க்கும் அப்பார்ப்பட்டவர்கள் .
அதனால் , அவர்களிடம் நான்
என்ற எண்ணம் அழுத்தம் திருத்தமாக இருந்தது .
அவ்வாறு
இருக்கும் படியே திட்டமிட்டு
அமைக்கப்பட்டிருந்தது .
ஆனால் , ...


தொடரும் ...

.
.

.

Download As PDF

3 கருத்துகள் :

சித்தூர்.எஸ்.முருகேசன் சொன்னது…

பார்த்துங்கண்ணா ! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்ற போறாங்க. நான் நம் நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் திட்டம் தீட்டி அரசியல் வாதிகளுக்கு அனுப்பி அலுத்து சென்னை, ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி்களுக்கு புகார் கடிதம் அனுப்பினேன். சுப்ரீம் கோர்ட்டுக்கும் அனுப்பினேன். பலன் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

என் திட்டத்தின் முழு விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டியை க்ளிக்கவும்

http://kavithai07.blogspot.com/2007/09/blog-post_6761.html

Anonymous சொன்னது…

dly write a detailed article on this subject--vimalavidya@gmail.com

Maximum India சொன்னது…

மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் பெறும் அனைவருமே மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

பதிவுக்கு நல்வாழ்த்துக்கள்!

நன்றி.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "