தமிழ்ப்புத்தாண்டு கூடல் நிகழ்வில் கலந்துகொண்டு இலக்கியவாதியாக,மாந்தரின வரலாற்று ஆய்வாளருமாக தன்னை அறிமுப்படுத்திக்கொண்டு பேசிய சகோதரர் திருக்குறளை எழுதியவர் நக்கீரர் என்பது எனது சமிபத்திய ஆய்வின் முடிவு என கூறக்கேட்டபொழுது நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.அதனை கண்டடைந்த முதல் நபர் தான் தான் என்பதில் பெருமை அடைவதாகவும்,அவ்வுண்மையை தான் புத்தகமாக வெளியிடும் வரை இங்கு தான் வெளியிடும் தரவுகளையும்,கண்டடைந்த உண்மைக்கூறுகளின் மெய்மைத்தன்மைகளையும் யாரும் தயவுசெய்து வெளியே கசியவிடவேண்டாம் என்றும் ,இது சம்பந்தமாக வெளியிடவோ,பொதுவில் பேசவோ வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாங்கள் அவ்வாறே செய்வதாக உறுதியளித்தோம்.
தமிழை காக்க எத்தனை நெற்றிக்கண்களையும் சந்திக்கத்தயார். ஆனால்,நெற்றிக்கண்ணுடையான் நேர்மையை உலகிற்கு உணர்த்துவதுவே எமது வாழ்வு என்பது எவ்வளவு ஏற்புடையது என்பதனை "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கூறிய தீரரின் எழுத்துக்களை ஆய்வதன் மூலம் அறிவோம் என்ற அவரின் அறைகூவல் எம்மை மிகவும் ஈர்த்தது.
அவரின் ஆய்வு அவரின் தனி .ஆனால்,திருவள்ளுவரும்,நக்கீரரும் பொது என்பதால் நாங்கள் இது பற்றி மேலும் விவாதங்களை தொடர்ந்தோம்.நாங்கள் இது ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பற்றி விவாதித்தோம்.
தமிழ்ப்புத்தாண்டு,திருவள்ளுவராண்டு மட்டும் இது சம்பந்தமாக எழுந்துவரும் சர்ச்சைகளுக்கு இப்புத்தகம் ஒரு முடிவான முற்றுப்புள்ளி வைக்குமானால் அது தமிழை நல்லுலகை நோக்கி இட்டுச்செல்லும் என்பதுவே உண்மையிலும் உண்மை.
நாம் மிகவும் பின்தங்கித்தான் போயுள்ளோம்,தமிழை ஏட்டில் பகுத்தறிந்த அறிஞர் பெருமக்களால்.
தமிழனம் எவ்வளவோ பயணம் செய்யவோண்டியுள்ளது.
நாமாவது சரியான பாதையை நாமே ஏற்படுத்தி பயணிப்போம்.
இதையும் பார்க்க .
தொடரும் ....
Tweet |
|
21 கருத்துகள் :
பெரும் அதிர்ச்சியாக உள்ளது. உண்மையாக இருக்காது என்றே கருதுகிறேன். இருந்திருந்தால் இத்தனை காலமும் அறிஞர்கள் கண்ணில் படாமலா இருந்திருக்கும். உண்மையாக மட்டும் இருந்தால்... சரி போகட்டும் நண்பர் நிரூபிக்கட்டும். பார்க்கலாம்.
பதிவைப் படித்தேன்.
நன்றி.
niroobikattum parkalaam..
ஹி..ஹி திருக்குறளை எழதியது சாலமன் பாப்பையானு ,ஒரு தமிழ் அகழ்வாராய்ச்சியாளர் ஆய்வு செய்து சொல்லி இருக்கார், அதை யார் கிட்டேயும் சொல்லக்கூடாதுனு சொன்னதால் நானும் யாரிடமும் சொல்லவில்லை.நீங்களும் யாரிடமும் சொல்லாதிங்க,அடிச்சுக்கேட்டாக்கூட சொல்லாதிங்க பாஸ்!
ஒரு வேளை நக்கீரர்ரா இருக்குமோ. அப்போ இரண்டு கட்சிகளுக்கும் புத்தாண்டை வைத்து கும்மியடிக்க இன்னும் நிறைய விஷயம் இருக்கிறது.
வண்க்கம் சகோ
அருமையான் தகவல்,
நக்கீரரின் வழி வந்தவன் என்பதல் பெருமையாக் இருந்தாலும் உண்மையாக் இருக்குமா என அவரின் வழியிலேயே கேட்கிறோம்.
எப்படி வழி வந்தவன் என்கிறீர்களா .தாத்தா நகீரர் இறைவன் எழுதி அனுப்பிய பாட்டில் குற்றம் கண்டு பிடித்தார் .நாமும் இறைவன் அனுப்பியதாக் சொல்லப்படும் புத்தகங்களில் குழப்பங்கள் கண்டுபிடிக்கிறோம்.
திருவள்ளுவர் காலம் பொது ஆண்டு முதல் நூற்றாண்டு என்கிறர்கள்.நக்கீரர் காலம் தெரியவில்லை.யாரேனும் தமிழ் அறிஞர்கள் கொஞ்சம் விவரம் பகிருங்கள்!
நம் மொழி ,வரலாறு பர்றி ஒன்றுமே நமக்கு தெரிவது இல்லை!
விவரங்கள் வரும்போது பார்க்க்லாம்.
நன்றி
திருவள்ளுவர் பற்றிய பல்வேறு குழப்பங்களில் இப்போ இதுவும் ஒன்றா? உண்மையோ, பொய்யோ நிஜம் வந்தால் நன்றாக இருக்கும்.
அன்பரே நலமா!நீண்ட இடைவெளி!
இருக்கிற குழப்பங்கள் போதாத? இது வேறா?
நடக்கட்டும்! இன்னும் பல இதுபோன்று வரும்,
தொல்காப்பியமே துரோணாச்சாரியார் என்று
கூட சொல்வார்கள்! இன்றைய நாட்டு நடப்பு அப்படி!
சா இராமாநும்
என்னது நக்கீரரா சொல்லவேஇல்லை
இது என்ன புதுக்கதையா இருக்கு?
என் தாத்தாவின் தாத்தாவுக்குக் கொள்ளுத் தாத்தாவின் எள்ளுத்தாத்தாவுக்குத் தாத்தாவின் தாத்தாவுக்குத் தாத்தா எழுதியது திருக்குறளாக்கும்.
எரவானத்தில் சொருகியிருந்ததை யாரோ திருடி விட்டார்களாம்.
இந்த சோகச் செய்தி எங்கள் பரம்பரையினரிடம் செவி வழியாக அறியப்பட்டு வருகிறது.
இதை நீங்கள் யாரிடமும் சொல்லலாம்.
கொஞ்சம் விளக்கி சொல்லுங்க நண்டு..:-))
நல்லா கிளப்புறாய்ங்கய்யா பீதியை
படித்தேன் ! சிரித்தேன் ! நன்றி சார் !
Appadiye KAPILAR, BARANAR,ILANGOVADIGAL,.......,BHARATHIAR varai parthu oru mudivukku vanga. Ippa nakirar appidinuttu, summa mathikitte irukathikappa. Mudivukku vantha, Kalagnar ( Ex.Tamil nadu C.M )ikku pottiya Ms.Jaya (current Tamilnadu C.M ) silai vaipanga. Valluvar Kottatha mental hospitala mathuvanga. seekiramma sollugappa.
விளம்பரம் தேடிக்கொள்ள ஒரு சிலர் இப்படி முன்னுக்குப் பின் முரணாக எதையாவது சொல்லிவைப்பர்கள்.
ஹி ஹி .., நாளைப்பின்ன ஆத்திசூடியை எழுதுனது பறவை முனியம்மான்னு சொல்லாம இருந்தா சரி ..!
வியப்பான தகவல் பகிர்வுகள்..
Ulagam ourundai nu sonnavana uthaikka poonavanga thaana neenga,
eanna solla varranga nu kealunga pa, nakkerara iruntha eanna ippa.
Nakkerara iruntha nallathu thaana..
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "