சனி, 20 ஆகஸ்ட், 2011

அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்?//அடுத்த 20 ஆண்டுகளுக்கு யாரும் வரி கட்டவேண்டிய அவசியமே இருக்காது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.25-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.15-க்கும், பால் ஒரு லிட்டர் ரூ.8-க்கும் தாராளமாக வழங்க முடியும். மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை. அனைவருக்கும் இலவசமாகவே மின்சாரம் கிடைக்கும்.

ரப்பர் சாலை

இந்திய எல்லையில் சீன பெருஞ்சுவரைவிட நீளமான, வலிமையான சுவரை எழுப்ப முடியும். உலக புகழ் வாய்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போல், 1500 பல்கலைக்கழகங்களை இந்தியாவில் தொடங்கலாம்.//

....................


அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்?
இளைஞர்கள் மத்தியில் பரவும் எஸ்.எம்.எஸ். செய்தி

சென்னை.ஆக .20 -


அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பது குறித்து, இளைஞர்கள் மத்தியில் பரபரப்பு எஸ்.எம்.எஸ். செய்திகள் பரவி வருகின்றன.

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு

வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கோரி போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரேவிற்கு, நாடு முழுவதும் எதிர்பாராத அளவு ஆதரவு பெருகி வருகிறது.

இந்த நிலையில், இளைஞர்கள் மத்தியில் எஸ்.எம்.எஸ். மூலம் பல வித்தியாசமான தகவல்கள் பரவி வருகின்றன. அதில், அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி பெற்று, வெளிநாட்டு வங்கியில் உள்ள கறுப்பு பணம் மட்டும் மீட்டு கொண்டுவரப்பட்டால், என்னென்ன ஆச்சரியங்கள் நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? என்று, ஒரு பரபரப்பு பட்டியலே வருகிறது. அதில், கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-

நிதி நிலைமையில் முதலிடம்

வெளிநாட்டு வங்கியில் உள்ள ரூ.1,456 லட்சம் கோடி கறுப்பு பணம் மீட்டு கொண்டுவரப்பட்டால், இந்தியா நிதி நிலைமையில் நம்பர் 1 இடத்தை பிடிக்கும். நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க முடியும். கிராமங்களுக்கு தலா ரூ.100 கோடி கிடைக்கும்.

அடுத்த 20 ஆண்டுகளுக்கு யாரும் வரி கட்டவேண்டிய அவசியமே இருக்காது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.25-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.15-க்கும், பால் ஒரு லிட்டர் ரூ.8-க்கும் தாராளமாக வழங்க முடியும். மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை. அனைவருக்கும் இலவசமாகவே மின்சாரம் கிடைக்கும்.

ரப்பர் சாலை

இந்திய எல்லையில் சீன பெருஞ்சுவரைவிட நீளமான, வலிமையான சுவரை எழுப்ப முடியும். உலக புகழ் வாய்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போல், 1500 பல்கலைக்கழகங்களை இந்தியாவில் தொடங்கலாம்.

பாரீஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ளது போல், 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரப்பர் சாலை அமைக்க முடியும். அனைத்து வசதிகளையும் கொண்ட 2 ஆயிரம் நவீன ஆஸ்பத்திரிகளை தொடங்கி, இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கலாம். 95 கோடி மக்களுக்கு சொந்த வீடு கட்டிக்கொள்ள முடியும்.

அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஒத்துழைக்க, ஒவ்வொருவரும் இந்த செய்தியை 10 இந்தியர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவியுங்கள். நான் என் கடமையை செய்து விட்டேன். ஜெய்ஹிந்த்.

இவ்வாறு அந்த தகவல் பரவுகிறது.............

இன்றைய செய்தி.
நன்றி : தினத்தந்தி .
பார்க்க : http://www.dailythanthi.com/article.asp?NewsID=668186&disdate=8/20/2011.


Download As PDF

22 கருத்துகள் :

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Cut and Paste???!!!!

தமிழ்வாசி - Prakash சொன்னது…

font தெரியல... தரவிறக்கம் செய்யணும் போல...

M.R சொன்னது…

தங்கள் பதிவில் எழுத்துகள் மாறியுள்ளது நண்பரே

வாசிக்க முடியவில்லை

M.R சொன்னது…

இப்பொழுது தெரிகிறது எழுத்துக்கள்

கண்டிப்பாக ஆச்சரியமான விஷயம் தான்

வெளியில் பதுங்கியுள்ள பணம் அவ்வளவா !

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

முதாலாளிகளை விட்டுவிட்டு ?. அரசியல்வாதிகளை??.. ஆட்சி மாறினாலும் முதலாளிகள் மாறப்போவதில்லை..ஊழல் ஒழியாது..

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

அப்ப கூட பெட்ரோல் டீசெல் இலவசமா குடுக்க மாட்டாங்களா அண்ணா?

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

நல்ல வேளை நீங்க பிறந்தா போதும் மீதி எல்லாம் plug and play மாதிரி உங்க டிரஸ் ல இருந்து பாக்கெட்மணி வரை எல்லாம் அரசு குடுக்கும்ன்னு சொல்லாம விட்டாங்களே

அருள் சொன்னது…

அண்ணா அசாரேவின் மறுபக்கமும் மேட்டுக்குடிகளின் வலிக்காத போராட்டமும்!

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_19.html

கோகுல் சொன்னது…

எஸ்.எம்.எஸ் வேகமாக பரவி வருகிறது.

மகேந்திரன் சொன்னது…

இவைகள் நடக்க வேண்டும்...
ஜனநாயகம் செழிக்க வேண்டும்..

Lakshmanan17 சொன்னது…

நமது அரசியல் கலாச்சாரம் அநாகரிகமானது. அரசியலை நடாத்துபவரும், பதவியில் இருப்பவர்களும் ஒர் புழுத்துப்போன மனரீதியில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு வெறும் சம்பளமோ அரசியலை நேர்மையாக நடத்துவோம் என்றோ கடந்த 50 ஆண்டுகளாக நம்பிக்கை இருந்ததில்லை. நீங்கள் சொன்ன மாதிரி லோக் பால் வந்தால்கூட இப்போது 30 வயதில் இருக்கும் தந்தையோ தாயோ திருடித்தின்னால் பெருமையில்லை - உழைக்காம்ல் பணம் சேர்ப்பது தீமை என்று மனசால் நம்பி தன் குழந்தைகளுக்கு மனதளவில் ஊட்டி வளர்த்தால் தான் அடுத்து வரும் சந்த்தியினர் நேர்மை என்னும் முறையை கையில் எடுக்கமுடியும். தமிழத்தலைவன் என்கிறானே 1,76,000 கோடி திருடியதுக்கு கொஞமேனும், நாணம், வெட்கம், சூடு, சொரணை எதுவும் உண்டா? 60 வருட பழுத்த அரசியல் வாதிக்கே இந்த கதி. பின்னே வாலெல்லாம் என்ன குதி குதிக்கும், குதிக்கிறது. பொய்களைக் கேட்டுக் கேட்டு இந்த அரசியல் வாதிகள், நீதிபதிகள், (கோடி கோடியாக அமுக்கிவிட்டு எதிர்த்து போராடுகிறானே இந்த சென்?- இவனெல்லாம் நீதிபதியா - தினகரன் - பாலகிருஷ்ணன் எல்லாம் வெட்ககேடு) வருமானத்துக்கு மேல் சொத்து சேர்க்கும் எல்லா கழிசடைகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். ஆகவே லோக்பால் வந்தால், ஸ்விஸ் கறுப்புப் பணம் வந்தால் கூட பாலும் தேனும் ஆறாக ஓடுவது என்பதெல்லாம் பகல் கனவு. உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்

DrPKandaswamyPhD சொன்னது…

நம் அரசியல்வாதிகள் சகல கலா வல்லுநர்கள். ஏழைகள் என்றும் புரட்சியைப் பற்றி எண்ண முடியாத நிலையில் வைத்துள்ளார்கள். பணக்காரன் அரசியல்வாதியுடன் கூட்டு. நடுத்தர, படித்த கோழைகள் எது நடந்தாலும் வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள். தாராளமாக கருத்துகளை அள்ளி வீசுவார்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - என்னதான் அன்னா ஹசாரே தலை கீழாக நின்றாலும் - லோக்பால் மசோதா சட்ட வடிவம் பெற்றாலும் - தற்பொழுது இருக்கும் நிலை மாறவே மாறாது. அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. என்ன செய்வது - நல்லதே நடக்கப் பிரார்த்திப்போம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கவி அழகன் சொன்னது…

ஆச்சரியமான விஷயம்

R.Elan. சொன்னது…

தங்கள் பிழைப்பில் மண் அள்ளிப்போடும் எதற்கும் முட்டு கட்டைகளை போடுவதிலும் திசைதிருப்புவதிலும் வல்லவர்கள் நமது அரசியல் வியாதிகள்.நம்பிக்கையுடன் சளைக்காது போராடினால் வெற்றி.

சேட்டைக்காரன் சொன்னது…

ஓஹோ, அண்ணாவின் ஜன்லோக்பால் சட்டத்தில் வெளிநாட்டிலிருக்கும் கறுப்புப்பணத்தைக் கொண்டுவருவதற்கும் வழிவகைகள் இருக்கிறதா? சொல்லவே இல்லே...? :-)))))))))

அண்ணாவுக்கு ஆதரவு தெரிவிக்கிற பலருக்கு ஜன் லோக்பால் சட்டம் என்றால் என்ன, அதன் வரையறைகள் என்ன என்பது கூடத் தெரியவில்லை என்பது இதிலிருந்தே தெளிவாகிறது. பாவம் அவர்கள்! :-)

தமிழா தமிழா சொன்னது…

ஜன லோக் பால் இருந்திருந்தால் 2G ஊழல் சுவான் டெலிகாம் 1661 கோடிக்கு வாங்கி 11000 கோடிக்கு வித்த உடனேயே கேஸ் போட்டு மொத்த ஏலத்தையும் கேன்சல் செய்திருக்கலாம். காமன் வெல்த் முறைகேட்டையும் அப்பொழுதே தடுத்திருக்கலாம்.

பத்து இருபது கோடி செலவு செய்து எம் பி ஆனவங்க ஜன லோக் பாலை எதிர்ப்பதில் நியாயம் இருக்கிறது. பிளாக் வைத்திருக்கும் சிலர் ஏன் எதிர்கிறார்கள் என்று தெரியவில்லை.

Jeyamaran $Nila Rasigan$ சொன்னது…

அண்ணா அந்த எஸ்.எம்.எஸ். செய்தி எனக்கும் வந்திருந்தது..........
நிலாரசிகன்

! சிவகுமார் ! சொன்னது…

வெகு அதிசயமாக இந்தியாவில் ஏற்படும் இத்தகைய மக்கள் எழுச்சி வெற்றி பெற்றே ஆக வேண்டும்!

ராஜ நடராஜன் சொன்னது…

//cheena (சீனா) said...

அன்பின் நண்டு - என்னதான் அன்னா ஹசாரே தலை கீழாக நின்றாலும் - லோக்பால் மசோதா சட்ட வடிவம் பெற்றாலும் - தற்பொழுது இருக்கும் நிலை மாறவே மாறாது. அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. என்ன செய்வது - நல்லதே நடக்கப் பிரார்த்திப்போம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

என்னோட ரத்தம் B positive:)

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! சொன்னது…

?

Meerapriyan சொன்னது…

poy piracharathukku neengalum paliyakiddingale-iyo
paavam-meerapriyan

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "