சனி, 17 ஆகஸ்ட், 2013

மோடியின் சுதந்திரதின உரையை விமர்சிப்பவர்களே சற்று நினைத்துப்பாருங்கள் .




நொரண்டு : வணக்கம் நண்டு .

நண்டு :  வாங்க ... வாங்க ...

நொரண்டு : வாங்க வாங்க கடன் தான் .

நண்டு :  என்ன ?.
 
நொரண்டு : வாங்க வாங்க கடன் தானே .

நண்டு :ம் ,அரசியல் பேசர .
 
நொரண்டு : என்ன நான் பேசக்கூடாதா ,என்னப்பா ...  

நண்டு :  உனக்கு விசயமே தெரியாதா .

நொரண்டு : என்ன விசயம் .

நண்டு :  நம்ம சுதந்திர இந்தியாவில் சுதந்திர தின உரை  கூட சுதந்திரமாக பேச முடியாது . உனக்கு இது தெரியுமா .

நொரண்டு : என்ன கொடுமையட இது .யாருப்பா சொல்ரா இப்படி.

நண்டு : இது  சுதந்திர நாடு என்பதை கூட அறியாத சில அறிவுசீவிக்கள் அப்படித்தானய்யா பேசிக்கிராங்க.

நொரண்டு  : ,  மோடியின் சுதந்திரதின உரையைப்பத்தி  சொல்ரயா.

நண்டு :  ஆமாம்பா , ஆமாம் . 


நொரண்டு : அவருடைய பேச்சு....

நண்டு :  ஓ ...அதுவா .அவர்  இந்தியர்கள் அனைவருக்காகவும் பேசினார்.அவரின் குரல் ஒட்டுமொத்த இந்தியர்களின் குரலாகவே இருந்தது .

நொரண்டு :ஓ ..அப்படியா .... அதனால தான் இந்தனை ஆர்ப்பாட்டமா ?.

நண்டு :  ஆமாம்பா ,ஆமாம் . மோடியை விமர்சிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா . அவர்கள் தாங்களும் கேக்க மாட்டார்கள்,கேட்பவரையும் குறை சொல்வார்கள் ...இப்படிப்பட்டவர்களால் தான் நம்  நாடு 1947லிருந்து நாசமா போச்சுப்பா .நாசமா . 

 நொரண்டு :ஆமாம்பா ...அதுதான் உண்மை . 

நண்டு :  இவங்களுக்கு நாடு நல்லா இருக்கிறதும் பிடிக்காது.நாடு நல்லா இருக்கவேண்டும் என நினைப்பவர்களையும் பிடிக்காது.இவங்க தான்  ஆட்சியாளர்களின் பலம்.

நொரண்டு :சரி,சுதந்திர உரை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஏதாவது வரைமுறை  இருக்காப்பா.

நண்டு :  ஹா...ஹா...ஹா... 
தவறை சுட்டிக்காட்டாத எந்த உரையும் ஒரு சுதந்திரமான உரையாக இருக்கவே முடியாது.
மேலும் ,சுதந்திர உரை இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது ஒரு சுதந்திரமானது அல்ல.
அப்படி எதாவது இருந்தால் ,அவைகள்  சுதந்திரத்தையும்,கருத்து சுதந்திரத்தையும் நசுக்கும் அம்சங்களாகும்.

நொரண்டு :ஆம் ...சரிதான். 

நண்டு : மோடியை விமர்சிப்பவர்களே,

தற்பொழுது நாடுள்ள நிலையை சற்று   நினைத்துப்பாருங்கள் .
உங்களின் சுய நலத்திற்காக நாட்டை மறந்துவிடாதீர்கள். 

நொரண்டு :ஆம்...நமக்கு நாடு தான் முக்கியம்.

நண்டு : நாட்டை காக்க நல்லவரிடம் அதனை ஒப்படைப்போம் . 
அது தான் நாட்டிற்கு நாம் செய்யும் தொண்டாகும்.

 நொரண்டு : இது வரை நான் நாட்டிற்காக ஒன்றும் செய்யவில்லை.
இனி நாட்டை நல்லவரிடம் ஒப்படைக்கும் தொண்டை சிறுதொண்டனாக இருந்து செய்கிறேன்.
















நன்றி ; படங்கள் உதவி இணையம்
Download As PDF

5 கருத்துகள் :

Saha, Chennai சொன்னது…

நண்டு : மோடியை ஆதரிப்பவர்களே,

குஜராத் கலவரத்தை சற்று நடுநிலையோடு நினைத்துப்பாருங்கள், மோடி அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருந்த மாயா கோட்னானி உள்ளிட்ட பலரின் கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனையும் பெற்றுள்ளனர். நாட்டை துண்டாட நினைக்கும், மக்களை பிளவுபடுத்தும் இத்தகைய கயவர்களா உத்தமர்கள்?
உங்களின் சுய நலத்திற்காக நாட்டை மறந்துவிடாதீர்கள்.

நொரண்டு :ஆம்...நமக்கு நாடு தான் முக்கியம்.

நண்டு : இவங்களுக்கு இரண்டு வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக இருந்தாலே பிடிக்காது. நாடு நல்லா இருக்கவேண்டும் என நினைப்பவர்களையும் பிடிக்காது.

நொரண்டு :ஆமாம்பா ...அதுதான் உண்மை . இது வரை நான் நாட்டிற்காக ஒன்றும் செய்யவில்லை.
இனி நாட்டை நல்லவரிடம் ஒப்படைக்கும் தொண்டை சிறுதொண்டனாக இருந்து செய்கிறேன்.

ராவணன் சொன்னது…

மோடி பேசியதில் என்ன தவறு?

இத்தாலி கும்பலை விரட்ட என்ன வழி?

சக்தி கல்வி மையம் சொன்னது…

மைனஸ் ஒட்டா?

suvanappiriyan சொன்னது…

குறிப்பிட்ட ஒரு சில மேல் சாதி இந்துக்களைத் தவிர வேறு எவரும் மோடியை திரும்பிக் கூட பார்ப்பதில்லை.

ananthu சொன்னது…

நம் நாட்டை பெரும் அபாயத்திலிருந்து காக்க இப்பொழுதிருக்கும் ஒரே தீர்வு மோடி மட்டுமே , அதை உங்கள் பதிவு தெளிவாக காட்டுகிறது ...

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "