ஞாயிறு, 22 டிசம்பர், 2013

''ராம ராஜ்யம் '' நல்லதா ,கெட்டதா ? இராமன் எப்படிப்பட்டவன் ?

 

இராமரின் ''ராம ராஜ்யம் ''தான் காந்தியின் விருப்பம் .
அத்தகைய இராமரின் இராமாயணங்கள்  அவனின் பட்டாபிசேகம் வரையிலானவைகள் பற்றி மட்டுமே மிக அதிகம் பேசுகின்றன.பேசப்படவும் செய்கின்றன.

ஆனால் ,''ராம ராஜ்யம் '' இராமன் இராமர் ஆனதிலிருந்து ஆரம்பிக்கிறது  .


இராமரின்  ''ராம ராஜ்யம் '' பற்றி  விசயங்கள் இங்கு அனேகருக்கு போய் சேரவில்லை.அதனால் தான் ''ராம ராஜ்யம் '' பற்றி பேசுவோர் மீது மத ரீதியிலான சாயம்  பூசப்பட்டு விடுகிறது.அதற்கு காந்தியும் விலக்கல்ல.
காந்திக்கே அப்படினா ?.நம்மை போன்றவர்களுக்கு...இராமன் அடைந்த இடத்திற்கு  இராமர் கொண்டு செல்லப்பட வில்லை. 
காரணம்,மக்கள்  இலக்கியத்தில் மிக அதீத நாட்டம் கொண்டவர்களாக இருந்ததாலும்.
அரசியலில் பங்கெடுக்காமல் '' இராமன் ஆண்டால் என்ன ,இராவணன் ஆண்டால் என்ன ''என்று முதுமொழி ஏற்படும் அளவிற்கு தாங்கள் அதனின்று ஒதுங்கி வந்ததாலுமே ஆகும்.அது இன்றுவரை தொடர்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற இராமர் எவ்வாறு உதவினார்  என்று எண்ணிப்பார்த்தோம் என்றால் அது மிகவும் விசித்திரமான படிப்பினையை நமக்கு தருகிறது.இது பற்றி இங்கு யாரும்  பேசுவதில்லை.தங்களின் கதைகளையே கதைக்கின்றனர்,சுய விலாசத்திற்காக.

''ராம ராஜ்ய'' த்தில் தான் உண்மையான இந்திய ஆன்மா உள்ளது.இது மறுக்க முடியாத  உண்மை.அதனால் தான் காந்தியாரும்  ''ராம ராஜ்யம் '' அமைய வேண்டும் ,அது தான் நமக்கு நல்லது என்ற நிலைப்பாட்டுடன் இருந்தார்.

மகாபாரதம் போன்று பல புராண கதைகளும் இதிகாசங்களும் இருக்க  கம்பன் என் இராம காதையை தேர்ந்தெடுத்தான் என்ற கேள்வி என்னுள் எழுந்தபோது , கிடைத்த பதில் தான் இராமன் எப்படிப்பட்டவன் ? என்பதற்கான பதில்.சுருக்கம செல்லனும்னா இராமன் மிகநல்லவன் அதைவிட இராமர் மிகவும் உயர்ந்தவர்.அதுபோலவே  ''ராம ராஜ்யம் '' .


தொடரும்...

படங்கள் உதவி ; நன்றி கூகுள் .
Download As PDF

3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லது...

வாழ்த்துக்கள்...

naveen kumar duraisamy சொன்னது…

வண்ணக்கம் தங்கள் மகாபாரத கருத்தில் எனக்கு ஆட்சபனை உள்ளது.முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது இத்திகசம் என்பதன் பொருள் 'இப்படி தான் நடந்தது' என்பது ஆகும்.பெண் ஒருவள் விருப்பட்டு ஐந்து ஆண்களை மணக்கலாம் கூடலாம் ஆனால் விருப்பம் இல்லாமல் ஒருவன் கூட தொடகடாது.அப்படி தொட்டால் தண்டிக்க படவேண்டியவன்

devadass snr சொன்னது…

இராம ராஜ்ஜியம் நல்லதா கெட்டதா என்ற விவாதத்தை விட அதில் சொல்லப்பட்டுள்ள விசயங்கள் நல்லவையா கெட்டவையா என்ற விவாதமே அதனை புரிந்துகொள்ள இயலும்.எதனையும் மதத்துவேசத்துடன் அணுகாதீர்கள்.
அனைத்து விசயங்களிலும் நல்லவையும் உண்டு.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "