திங்கள், 13 ஜனவரி, 2014

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் -நடராஜர் நாட்டுக்கு சொல்லும் செய்தி -பகுத்தறிவு பார்வையில்









//தமிழக மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில், கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்த கதையாகி விட்டது. தமிழ் அரசர்கள் கோயிலாக்காக விட்ட தானங்களை, நிலங்களை தீட்சதப் பார்ப்பனர்கள் கபளீகரம் செய்து விட்டனர்.

இந்தப் பார்ப்பனர்கள் கைலாசத்திலிருந்து நேரே இறங்கி வந்தவர்களாம். மூவாயிரம் பார்ப்பனர்களில் தலைமை எண்ணும்போது ஒரு தலை குறைந்ததாம் அந்த ஒரு ஆசாமி நான்தான் என்று சிவனே சொன்னதாகக் கதையளந்து வைத்துள்ளனர்.

தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று பரமசிவன் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அடி எடுத்துக் கொடுக்க திருத்தொண்டத் தொகையை சுந்தரர் பாடினாராம். தில்லையில் வாழும் பார்ப்பனர்களின் அடியார்களுக்கும் அடியாராம் சிவபெருமான்!

வானம் முட்டும் கோபுரங்கள் கட்டியவர் யார்? அதன் உச்சிக்கெல்லாம் தங்க மூலாம் பூசியவர் யார்? தில்லை நடராசருக்குத் தங்கக்கூரை வேய்ந்து தந்தவர் யார்? சத்திரம், சாவடி கட்டியவர் யார்? அன்றாடம் ஆறுகால பூஜைக்கு உதவி வருபவர் யார்? எல்லாம் நாம் தானே? நாம் போட்டுக் கொடுத்த செல்வம் தானே இவை யாவும்? ஒரு பார்ப்பானாவது, ஒரு செல்லாக் காசாவது கோவில், குளம், தானம் தருமம் இவற்றிற்குக் கொடுத்திருப்பானா? அப்படியிருக்க இவ்வளவு செய்தும் நாம் ஏன் சூத்திரர்களாயிருக்க வேண்டும்? அவர்கள் மட்டும் ஒன்றும் செய்யாமலேயே நம்மை ஏமாற்றி உண்டு, பிராமணர்களாக வாழ வேண்டும். 


இந்தக் கோவிலே அந்த கோவில் பக்தர்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டுமே தவிர, அது சில பித்தர் களுக்கு சொந்தமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்காது - இருக்கக் கூடாது // .
என்பது ஒரு சாரார் வாதம் .

//மதச் சிறு பிரிவினரின் கோயில் (Religious Denomination) என்றும் இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 26 இன்படி, மதச் சிறுபிரிவினரின் உரிமைகளைப் பறிக்கக்கூடாது என்றும் நிருவாக அலுவலரின் நியமனம் தீட்சிதர்களின் மதச்சார்பான செயல்களில் குறுக்கீடு செய்வதாகும்// என்பது தீட்சிதர்களின் தரப்பு 



இது இப்படி இருக்க,

எனக்கு தெரிந்து ,

சிதம்பரம் என்பது கோவிலின் பெயர் .
ஊரின் பெயர் தில்லை.

சைவர்களுக்கு கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்கும்.

பாடல் பெற்ற தலம்.

சேக்கிழார் பெருமானுக்குத் திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துத்தந்து, அரங்கேற்றச் செய்யப்பட்ட  தலம்.

மாணிக்கவாசகர்  ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெரும்பதி .

இந்தக் கோவிலின் சிவன் மற்ற கோவில்களை போல் லிங்க வடிவில் இல்லை.


சிதம்பரம் கோவிலில் முக்கியமானது சிதம்பர ரகசியம்.
நடராஜர் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார்
.




இவ்வாறு  சில மற்றும் சில உண்மையான வரலாறு ,அவ்வளவே.

இது இருக்கட்டும் ,

இப்பொழுது  சிதம்பரம் நடராஜர்  கோவில் விவகாரத்தின் வழி பொதுவில் மக்களுக்கு  நடராஜர்  சொல்லும் செய்தி...


அரசியல்வாதிகளே,
நாடு மக்களுக்கு எப்படி சொந்தமோ அப்படி கோவில் மக்களுக்கு சொந்தம் .

அதனை தீட்சிதர்கள் நிர்வகித்து வந்தனர்,வருகின்றனர்,
எப்படி என்றால் சமய மக்களின் ஆதரவில்.
ஆனால் அரசியல்வாதிகளே  உங்களைப்போல் நாட்டு மக்களிடம்  என்ன என்ன பொய்  சொல்லி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தீர்களே,அது போல் தீட்சிதர்கள் வரவில்லை.

நீங்கள் உங்களை நம்பிய மக்களுக்கும் ,இனத்திற்கும் துரோகம் செய்துவிட்டு  எப்படி இன்னும் இன,மொழி காவலராக வேடம் போட்டு,
மக்களின் வாக்கையும்,அவர்களால் கிடைத்த வசதிகளையும்,அதனால் அடித்த பணத்தையும் வைத்துக்கொண்டு தன் பிள்ளை, தன் பெண்டு என மகிழ்ச்சியாக இருக்கின்றீர்களே ,அது போல இங்கு யாரும் இல்லை.

உங்களைப்போல் மக்களின் பணத்தை பல ஆயிரம் கோடி ஏமாற்றி உண்டு கொழுத்தவர்கள் இங்கு யாரும்  இல்லை.

நீங்கள் இங்கு யாரையும் காக்கவும்  இல்லை,காக்கப்போவதும் இல்லை.

உங்கள் குடும்பத்தை தவிர்த்து  நீங்கள் மற்ற யாருக்கும் காப்பாளரும் இல்லை.

என் மீது பக்தியும் இல்லை.எனது  பக்தனும் இல்லை.

நிர்வாகம் சரியல்ல அதனால் வெளியேற சொல்லும் நீங்கள்,
உங்களை நம்பியவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு  ,
இத்தனை நாள் தமிழர்களை சுரண்டி பிழைத்து,
இன்னும் அரசியலையும்,பொது வாழ்கையையும் ஒட்டிக்கொண்டு இருக்கின்றீரே. 

உருப்படியா ஏதாவது செய்துள்ளாயா ...சொல் ...?.

அப்படி இருக்க  ஏப்பா ... இத்தனை ஆர்ப்பாட்டம் ?.

என்னங்கையா உங்க தர்மம்.



முதலில்
தூய கரத்துடன் ,
தூய மனத்துடன்
பொது வாழ்க்கையை  இனி உங்களால நடத்த முடியுமா ?.

முடியாது   
அதனால
சுரண்டியதை வைத்து புள்ள குட்டி பேத்தி என இருங்க.

 



   








நன்றி : கூகுள் -படம்  மற்றும் இணைய பக்கங்கள்.
Download As PDF

10 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உணர வேண்டிய செய்தி... உணர்வார்களா...?

viyasan சொன்னது…

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகத் தமிழர்களின் சைவத்தில் எந்த பிரிவும் (denomination ) கிடையாது. ஆனால் தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த வழக்கறிஞரை வைத்து, அவர்களின் வாதத்தை எதிர்த்து வாதாடாததால், தமிழர்களின் முக்கியமான வரலாற்றுச் சின்னம் ஒரு குறிப்பட்ட சாதியினருக்கு தாரை மட்டும் வார்த்துக் கொடுக்கப்பட்டு விட்டது,

இதில் கவலைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், பெரும்பாலான தமிழ்நாட்டுத்தமிழர்கள் எனக்கென்ன போச்சு என்றிருக்கிறார்கள். இதைப் பற்றி கருத்துத் தெரிவித்த பதிவர்களையே விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்றவர்கள் எம்மை முற்போக்குள்ள, மதச்சார்பற்றவர்கள் என்று எண்ண வேண்டுமென்பதற்காக, தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களை மற்றவர்கள் அநீதியான முறையில் சொந்தம் கொண்டாடும் போது அமைதி காப்பது சரியான கோழைத்தனம்.

‘கோயில்’ என்று உலகமெங்கும் வாழும் தமிழர்கள் போற்றும் சிதம்பரம் தீட்சிதர்களுக்கு மட்டும் பாத்தியதையான கோயில் என்றால்,, தீட்சிதர்கள் ஏனைய தமிழ்ச்சைவர்களை விட வேறொரு Denomination என்றால், தமிழர்கள் சிதம்பரத்துக்கு எதற்காகப் போக வேண்டும். உண்மையில் சிதம்பரம் மீண்டும் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை “தீட்சிதர்களுக்குப் பாத்தியதையான”” சிதமபரம் கோயிலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். அப்படி அங்கு சென்றாலும் எந்தக் காணிக்கையும் செலுத்தக் கூடாது, தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை, அது தான் இதற்கெல்லாம் காரணம். அடுத்ததாக திருவரங்கம் போன்ற கோயில்களுக்கும் இப்படி நடக்காதென்று, என்ன நிச்சயம்?

G.M Balasubramaniam சொன்னது…

கோவில் பணிகளில் தீட்சிதர்கள் ஈடுபட்டு வருகிறார்களே தவிர அதிலிருந்து பணம் பண்ணுவதில்லை என்றே தோன்றுகிறது. கோவிலில் தட்டு உண்டியல் ஏதும் காண முடியவில்லை. 2010-ஆம் ஆண்டுதான் அங்கு உண்டியல் பார்த்தேன். பக்தர்களின் பூசனைகளை ஏதாவதொரு தீட்சிதர் செய்கிறார். பக்தர்கள் மனமுவந்து கொடுப்பதைப் பெறுகிறார்கள். இந்தமட்டில்தான் நான் உணர்ந்தது. முறைகேடுகள் நடந்தால் தட்டிக்கேட்க வழிகள் இல்லையா என்ன.?

raghs99 சொன்னது…

paarppanai thittuvadhu maatramdhan indha katturaiyin nokkam

viyasan சொன்னது…

//கோவில் பணிகளில் தீட்சிதர்கள் ஈடுபட்டு வருகிறார்களே தவிர அதிலிருந்து பணம் பண்ணுவதில்லை என்றே தோன்றுகிறது. பக்தர்களின் பூசனைகளை ஏதாவதொரு தீட்சிதர் செய்கிறார். பக்தர்கள் மனமுவந்து கொடுப்பதைப் பெறுகிறார்கள். //

என்னுடைய அனுபவம் உங்களிடமிருந்து வேறுபட்டது. நான் முதன்முதலில் 2008 இல் போயிருந்த போதே, தீட்சிதர் ஒருவர் ஒரு நீண்ட புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, எவ்வளவு தருவதாக அதில் எழுதினால் தான் சிவகாமியம்மன் கோயிலுக்குள் போகலாம் என்று கூறியது மட்டுமல்ல, வந்து எழுதுகிறேன் என்றதற்கே கோபத்துடன் முறைத்துப் பார்த்தார். இதுவரை நான் சிவகாமியம்மனைத் தரிசித்ததில்லை. சிதம்பரம் கோயில் ஒரு பிச்சைக்காரக் கோயில் அல்ல, சொத்துக்கள் நிறைந்த கோயில், இலங்கையிலேயே பல சொத்துக்கள் உண்டு. அவையெல்லாம் தீட்சிதர்களுக்குச சொந்தமானவையா? தீட்சிதர்கள் அனுபவிக்கவா, இலங்கைத் தமிழர்கள் “கோயிலுக்கு” எழுதி வைத்தார்கள்?

உங்களின் அனுபவமும் என்னுடைய அனுபவமும் எப்படியிருந்தாலும், தமிழர்களின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த, உலகத் தமிழர்கள் அனைவருக்கும், குறிப்பாக தமிழர்களின் பெரும்பான்மையினராகிய சைவத்தமிழர்களுக்கு மெக்காவாகிய சிதம்பரமும், அதன் கல்வெட்டுக்களும், சிலைகளும், தொல்லியல் சிறப்பு வாய்ந்த அந்தக் கோயிலும், நீங்கள் சொல்வது போல், “பக்தர்கள் மனமுவந்து கொடுப்பதைப்” பெற்று வயிற்றைக் கழுவும் அந்த ‘அப்பாவித்’ தீட்சிதர்களிடம் இருக்கக் கூடாது, ஏனென்றால் அவர்களால் அந்தப் பெரிய கோயிலை முறையாகப் பராமரிக்க முடியாது, அதனால் கோயில் நிச்சயமாக, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து முறையாகப் பராமரித்து காக்கப்பட வேண்டும்.


// முறைகேடுகள் நடந்தால் தட்டிக்கேட்க வழிகள் இல்லையா என்ன.?///

முறைகேடுகள் நடந்தது மட்டுமல்ல, அவர்களே ஆளுக்காள் குற்றம் சாட்டிக் கொண்டு போலீசுக்கும் போய்,, அடித்துக் கொண்டதால் தான் திமுக அரசு அறநிலையத்துறை ஆணையரை நியமித்தது என்பதை, தில்லைக்கோயில் பிரச்சனையை அவதானித்துக் கொண்டு வரும் யாவரும் அறிவர்.

Unknown சொன்னது…

முதலில் சிதம்பரத்தைப் பற்றிப் பேசுபவர்கள் நான் தான் தமிழன் என்று கூறிக்கோள்ளும் நாத்திகப் பகுத்தறிவுவாதிகள்.

இவர்கள் கூறுவது என்னவென்றால் :

தமிழகத்திலுள்ள

ஆற்று மணல்,
கடலோரத்
தாதுவளங்கள்,
க்ரானைட் வளங்கள்,
கோயில் சொத்துகள்
மற்றும் 2G அலைக்கற்றை

எல்லாமே தமிழனுக்கு சொந்தமில்லை.

திரு. வியாசன் சொல்லும் கருத்து சிந்திக்கத் தக்கது. தமிழர்கள் ஒட்டுமொத்தமாக சிதம்பரம் கோவிலைப் புறக்கணிக்கவேண்டும்.

அப்படியினும் சிதம்பரம் இவ்வளவு பிரபலமானபிறகு மற்ற மாநிலத்து மக்க்ள் அங்கு அதிகம் வரத்தொடங்கிவிட்டால் திருப்பதிபோல் ஆகிவிடுமே. இந்தக் கோவிலில் 100 ருபாய் டிக்கெட், உண்டியல் எல்லாம் கிடையாது என்கிறார்கள்.

கே. கோபாலன்

viyasan சொன்னது…

//முதலில் சிதம்பரத்தைப் பற்றிப் பேசுபவர்கள் நான் தான் தமிழன் என்று கூறிக்கோள்ளும் நாத்திகப் பகுத்தறிவுவாதிகள்.///

அவர்கள் நான் தமிழன் என்று பெருமைப்படுவதில் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டின் பழம்பெரும் கோயில்கள் எல்லாவற்றிலும், அதன் புகழிலும் பெருமையிலும், சாதி, மதம், மதநம்பிக்கைக்கு அப்பாற்பட்டு, எல்லாத் தமிழர்களுக்கும் பங்குண்டு, அது இந்துவாக, முஸ்லீமாக, கிறித்தவனாக இருந்தால் என்ன.

இன்று நாத்திகம் பேசுபவர்கள் மட்டும் கோயிலுக்காகப் போராடுவதை சிலர் திசை திருப்பி, தமக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள் . இதனால் தானோ என்னவோ, கடவுள் நம்பிக்கையுள்ள கோடிக்கணக்காண தமிழர்கள் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்க தயங்குகிறார்கள். சிதம்பரம் போராட்டத்தை, மத சம்பந்தமான போராட்டமாகப் பார்க்காமல். தமிழர்களின் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோயிலை முறையாகப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்ற கண்ணோட்டத்துடன், அதற்காக மத வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும் என்பதைத் தான் உலகத்தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதை விட, தமிழுக்கு தமிழ்நாட்டில் முன்னுரிமை கொடுக்காது விட்டால், எந்த நாட்டில் கொடுப்பார்கள். தமிழுக்கு முன்னுரிமை வேண்டி, ஈழத்தமிழர்கள் இத்தனை வருடம் இரத்தம் சிந்தியிருக்கிறோம், நீங்கள், தமிழ்நாட்டுத் தமிழர்களால், உங்களின் சொந்த மாநிலத்தில் ஒரு கோயிலில், தமிழுக்கு இடமில்லை என்கிறார்கள் சிலர் அதைக் கூட எதிர்ப்பதற்கு திராணியற்றவர்களா நீங்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. :(

அம்பாளடியாள் சொன்னது…

எழுத்திலே ஆதங்கம் புரிகிறது .எல்லோருக்கும் நன்மை பெயர்க்கும்
ஆண்டாக இவ்வாண்டு மலர வேண்டும் என்று கூறிக்கொண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தமிழர் புத்தாண்டு மற்றும் தைப் பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரா .

Yesa சொன்னது…

viyasan சொன்னது…

\\ தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை\\

இலங்கைத் தமிழர்கள் மிக ஒற்றுமையாக இருந்து போராடி ஈழத்தை பெற்றுவிட்டார்கள்.

Yesa சொன்னது…

viyasan....

\\தமிழுக்கு முன்னுரிமை வேண்டி, ஈழத்தமிழர்கள் இத்தனை வருடம் இரத்தம் சிந்தியிருக்கிறம்\\

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.க. viyasan

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "