நாடாளுமற்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வென்றால் ராகுலும்
பாஜகா கூட்டணி வென்றால் மோடியும் பிரதமராக 100 % வாய்ப்புள்ள நிலையில் ,இவர்கள் பிரதமராகும் பட்சத்தில் யார் சரியான பிரதமராக இருப்பார் என்ற பார்வையில் ,எனது ஆதரவினை 75% பெறும் நபருக்கே நான் வாக்களிக்க உள்ள நிலையில் சில பகிர்வுகள் இங்கே .
எனக்கு ராகுலா,மோடியா, காங்கிரசா ,பாஜகாவா என்ற பாகுபாடு கிடையாது.
ராகுல் என்ன செய்தார்,மோடி என்ன செய்தார் என்று குற்றம் பார்த்து விமரிசனம் செய்ய விரும்பவில்லை.
காங்கிரஸ் என்ன செய்தது,பாஜகா என்ன செய்தது என்றெல்லாம் நான் பார்க்க விரும்பவில்லை.
இனி வரும் காலங்களில் இவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் .
நாட்டின் பொருளாதார ஏற்றத்திற்கும்,
மக்களின் நலவாழ்விற்கும் இவர்கள் என்ன செய்ய உத்தேசித்துள்ளனர்.
இதுவே எமக்கு முக்கியம்.
சரி ,
யார் சரியான பிரதமராக இருப்பார் என்பதற்கு மதிப்பெண் கொடுக்க என்னை சொன்னால்
ராகுலுக்கு 49/100 ,
மோடிக்கு 51/100.
என மதிப்பிடுவேன்.
இது இன்றுவரையிலான ஒரு மதிப்பீடு தான்.
அடுத்தடுத்து நடக்கும் நடவடிக்கைகள் பார்த்து இதில் மாற்றம் வரலாம்.
கட்சிகளின் நிலை பற்றிய எனது பார்வை.
1.காங்கிரஸ் இன்னும் உறங்கிக்கொண்டுள்ளது ,ஏனென்று தெரியவில்லை,
ராகுல் இன்னும் சரியான முடிவிற்கு ( form மிற்க்கு) வரவில்லை,
அதனால் இன்னும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது .
ராகுல் சரியான முடிவெடுத்து ,மக்களை சரியாக அணுகினால்,நல்ல பலன் கிடைக்கும்.
2.பாஜகாவுக்கு மக்களை சென்றடைவதில் இன்னும் செறிவு தேவை.
மோடியின் வேகம் மற்றவர்களிடமும் வேண்டும்.
சரி ,யார் பிரதமர் என்பதனை அவர்அவர்களின் செயல்களின் மூலம் நிலைநிறுத்த வாழ்த்துக்கள்.
எமக்கு தேவை
வளமையான பாரதம்
வறுமையற்ற இந்தியா
இதனை உறுதிப்படுத்துபவருக்கே எமது ஆதரவு
வாழ்க பாரத மணித்திரு நாடு.
.
படங்கள் உதவி நன்றி கூகுள் மன்றும் இணையம்.
Tweet |
|
14 கருத்துகள் :
அனுபவம் இல்லாத ராகுலுக்கு மோடி எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது. தமிழ் நாட்டுக்கு ரெண்டு பேர்ல யாரு பிரதமரா வந்தாலும் பயன் இருக்க போரதுல்ல...
அப்படித்தான் நடக்கும் போல...
நமோ நமோ!
Namo is best
வணக்கம் சகோதரர்
ராகுல் இன்னும் மக்கள் நம்பும்படி எதையாவது செய்ய வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்கள் பற்றி இதுவரை ராகும் பேசியதாக நான் அறியவில்லை. மோடி அலை வீசுவதாகவே படுகிறது. பார்ப்போம். பாஸ் பிரதமர் போட்டியில அம்மாவை விட்டுங்களே! சாமி கண்ணைக் குத்திட போகுது பார்த்துங்கங்க..
.
திருடர்களில் 2 ரகம் , ஒருவன் திருடன் நமது அஜாக்கிரதையை பயன்படுத்தி நமது பொருளை நமக்கு தெரியாமல் திருடுபவன், மற்றவன் கொள்ளைக்காரன் நம் கண் எதிரிலேயே நமது பொருளை அபகரிப்பவன். நாம் தடுக்க நினைத்தால் நம்மையே கொல்ல தயங்காதவன். முதல் ரகம் காங்கிரசு, இரண்டாம் ரகம் பி.ஜே.பி.
பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இருக்காது. தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
தப்பித்தவறி அடுத்த வருடம் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில்வென்று சாபக்கேடாக மோடி பிரதமராகும் பட்சத்தில் நாய்க்குட்டிகள் அடிபட்டு இறந்தால் வருத்தப்படும் பிரதமரைக் கொண்டிருப்பதற்காக நாய்கள் வேண்டுமானால் சந்தோசப்படலாம்.
மோடியின் காசுக்கு கொஞ்சம் கூட மானம் சூடு சுரணையின்றி சுய அறிவை மொத்தமாக இழந்து துதிபாடும் பத்திரிகைகளும் ஊடகங்களும் பல கோடி ரூபாய் செலவில் வெளிநாட்டு நிறுவனமும் பொய்யான மோடி அலையை கொண்டு வந்திருக்கிறது.
---> உயரத்தில் பறக்குது மோடியின் கோவணம்.
.
சுருக்கமான நறுக்கான அருமையான அலசல்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 3
அருமையான அலசல்! நன்றி!
பதிவிட்டமைக்கு நன்றி. அன்பார்ந்த தமிழ் அன்பர்களுக்கு தமிழ் மூலமாக ஆங்கிலம் கற்க அற்ப்புத வலைப்பின்னல் http://aangilam.blogspot.in/ படித்து பயன் பெருக நன்றி வணக்கம்.
சிறப்பான கண்ணோட்டம் ! நாட்டை வளப்படுத்தத் துணியும் நபருக்கே
வாக்களிப்பதும் முக்கியம் என்று உணர்த்தியுள்ளீர்கள் .வாழ்த்துக்கள்
தங்களின் எண்ணமும் ஒட்டு மொத்த இந்தியர்களின் எண்ணமும் சரி வர
நிறைவேற .
இனி என்ன செய்யப் போகிறார்கள் என்பதே கேள்வி. சரியான கேள்விதான். காங்கிரசோ பாஜகாவோ யாரா இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு பயனில்லை வெற்றிவேல் சொன்னது உண்மை.
ரெண்டும் ரெண்டு ஆப்பை . ரெண்டும் கழன்ற ஆப்பை..
ராகுலை பிரதமவேட்பாளர் என்று அறிவித்து விட்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவினால் ராகுலுக்கு எதிர்காலமே அஸ்தமனம் என்பதால் காங்கிரசே முழித்துக் கொண்டு உள்ளது .49க்கு வாய்ப்பே இல்லை !
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "