சனி, 15 பிப்ரவரி, 2014

அரவிந்த் கெஜ்ரிவாலின் தப்பு கணக்கும் பாஜகா காங்கிரசின் தப்புக்கணக்குகளும் ,





டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா ஒரு எதிர்பார்ப்பு நகர்வின் தோல்வியையே காட்டுகிறது.

ஆம் ஆத்மியின் வெற்றியை பயன்படுத்தி பாஜகாவின் வெற்றியை மறைக்கப்பார்த்தது  காங்கிரஸ்.அதை காங்கிரஸ் தனது வெற்றியை கண்டு பணிந்ததாக நினைத்து தப்புக்கணக்கு போட்டார் அரவிந்த் கெஜ்ரிவால் .
இம்முறையும் முன் போலவே , காங்கிரஸ்பணியும் என எண்ணி ,பல காய்களை நகர்த்த திட்டம் போட்டார்.ஆனால்,அவசரப்பட்டு ராஜினாமா செய்துவிட்டார் .இந்த வாய்ப்பு இனி கிடைக்குமா என்பது சந்தேகமே.


யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் ,பாஜகாவும் காங்கிரசும் எப்படி ஒன்றிணைய முடியாதோ  ,அதுபோலவே ஆம் ஆத்மியும் இருக்கும் ,ஆதாலால்,ஆம் ஆத்மியும் ஒருபொழுதும் காங்கிரஸ்  ஆதரவில் ஆட்சி அமைக்க முன்வராது என  பாஜகா  நினைத்தது.ஆனால் நடந்து ....
ஆதலால் , இது பாஜகா  எடுத்த தப்புக்கணக்கு என்றே சொல்லுவேன்.
இனி வரும் காலங்களில் இப்படி ஒரு முடிவை எடுக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்.

 காங்கிரஸ்  இப்பவரைக்கும் போட்டுட்டு வர அனைத்து கணக்குகளுமே     தப்புக்கணக்குகளாகவே இருக்க ,அதை உணராமல் இன்னும் மேலும் பல கணக்குகளை தப்புக்கணக்கு ஆகும் என தெரியாமலே போட்டுகிட்டுவராங்ளே,இவை தான் அவர்கள் போடும் தப்புக்கணக்கு(கள்) .


@@@@@@


அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களே , நீங்க காங்கிரசுக்கு உம்மாண்டி காட்ட நினைச்சீங்களா ...

ஹா ... ஹா ... ஹா ...

அவங்க காந்திக்கே  உம்மாண்டி காட்டினவங்கனு உங்களுக்கு தெரியாதா.


@@@@@


ம் ...நடக்கட்டும் ...நடக்கட்டும் ... நாடு காட்டும் உண்மையை.





 படம் நன்றி கூகுள் மற்றும் இணையம்.
Download As PDF

7 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

அரவிந்த கேஜ்ரிவாலிடம் வேகம் இருக்கும் அளவுக்கு இன்னும் விவேகம் இருக்கவில்லை. அண்ணா அசாரே சொன்னது போல மறு தேர்தலை சந்திருக்க வேண்டும், மாறாக அரைகுறையாக ஆட்சியேற்று அஞ்சே மாசத்தில் கவிழ்ந்ததே மிச்சம். காங்கிரசு தான் இந்த விடயத்தில் ஜெயித்திருக்கின்றது என தோன்றுது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனி "அனுபவம்" வந்து விடலாம்...!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சரியாச் சொன்னீங்க! நன்றி!

Kasthuri Rengan சொன்னது…

ஆதரவுகோரியதே தவறு..

G.M Balasubramaniam சொன்னது…

மக்களின் தப்புக் கணக்குகளின் பலனே இவர்களின் விஸ்வரூபத் தோற்றம்.

Unknown சொன்னது…

எல்லா கட்சிகளுமே தப்புக் கணக்கே போடுகிறார்கள்! வரும் தேர்தலில்
மக்களும் தப்புக்கணக்குப் போட்டு விடுவார்களோ என்பதுதான் என்னுடைய அச்சம்! பார்ப்போம்!

Unknown சொன்னது…

அடுத்து வரும் தேர்தலில் ஆம் ஆத்மி தனி பெரும்பான்மை பெரும் என நம்புகிறேன் !
த ம 5

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "