ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

இராமர் கோவில் ,சேது சமுத்திரத்திட்டம் நாட்டிற்கு அவசியம் எது ?




 சேது சமுத்திரத்திட்டம் - ஆதி தமிழன் தோண்றிய இடமாக கருதப்படும் லேமூரியா கண்டம் என்ற குமரி கண்டம் கேள்விக் குறியாக போவதற்காக போடப்பட்ட சிறப்புத்திட்டம்.

தமிழனின் தொப்புள் கொடிஉறவுகளை பிரிக்கும் ஒரு உன்னத திட்டம்.

வரலாற்று உண்மைகளை மறைக்கப்பார்க்கும் அற்புத திட்டம்.

என்றென்றும் தமிழனும், தமிழினமும் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்க போடப்பட்ட சிறப்பு சதித்திட்டம் - என்பது கற்றறிந்த அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  இதனை ஒரு சுற்றுச்சூழல் படுகொலையாகவே பார்க்கின்றனர்.

அறிஞர் பெருமக்களின் கருத்துக்களையும் ஆய்வோம்.(இவை மிக நீண்ட விடயம ,ஆதலால் இதைப்பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்.)


நாம் ??????.


@@@@@@@@


திருவள்ளுவரை நாம் யாரும் பார்த்த்தில்லை ,அவர் எப்படி இருப்பார் என்பது யாருக்கும் தெரியாது,அவர் எத்தனை குறளை எழுதினார் என்பதும் யாருக்கும் தெரியாது,1330 குறள்களில் எத்தனை அவர் எழுதினார் ,அதில் எத்தனை இடைசெருகல்கள் என்பதும் யாருக்கும் தெரியாது,இப்படி பல தெரியாத திருவள்ளுவருக்கு சிலை வடித்தது எப்படி பகுத்தறிவுக்கு ஒப்பாகுமோ,அதே போன்ற பகுத்தறிவுக்கு ஒப்பாகும் விடயம் தான் இராமர் கோவில்.

இராமனுக்காவது குறிப்புகள் பல உண்டு ,திருவள்ளுவருக்கு ???.

திருக்குறளில் இல்லாத நெறிகள் இல்லை ,
அது போலவே
இராமன் வாழ்வு சொல்லும் நெறி போல் சிறந்தநெறி உலகில் வேறு இல்லை.

இராமனை போல் வாழ முடியாதவர்கள் தான் இராமனை எதிர்ப்பவர்கள்.

திருக்குறள் காட்டிய அனைத்து நெறிகளிலும்,காட்டாத நல்நெறிகளிலும்  வாழ்ந்தவன் இராமன்.

இராமன் இந்தியாவின் ஒருமைப்பாட்டின் சின்னம்.

இராமனிடம் இருந்துதான் இந்தியாவின் முழு ஆன்மா பிறக்கிறது.

இந்தியாவின் சுதந்திரத்தில் இராமனின் பங்கு அளப்பறியது,சொல்லி மாளாது .
என்பது படித்த பண்பேறிய தமிழறிஞர்களின் கருத்தாக உள்ளது .

தமிழறிஞர்களின் கருத்துக்களையும் ஆய்வோம்(இவையும் மிக நீண்ட விடயம் ,ஆதலால் இதைப்பற்றியும் பின்னர் விரிவாக பார்ப்போம்).



நிலைப்பாடும்,உண்மையும் இங்கு இருக்க 


நமது நிலைப்பாடு  ??????.


  




படங்கள் உதவி நன்றி -இணையம் மற்றும் கூகுள்.
Download As PDF

10 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பின்னர் விரிவாக பார்ப்போம்...

பொன் மாலை பொழுது சொன்னது…

ராமர் கோவில் இரண்டாம் நிலைதான். முதலில், தற்கால சூழலுக்கு ஏற்ப நாட்டை கொண்டு செல்வதே முறை. அந்நிலையில் சேது சமுத்திரம் திட்டம் பொருளாதார வகைளில் தென்பகுதி மேல் நிலை அடைய பெரிதும் பயன் படும் என்றால் அதற்கே முதல் நிலை. ஆனால் சேது சமுத்திரம் திட்டத்தால் அதில் இதுவரை கொட்டப்பட்ட முதலீடுகள் எல்லாமே எங்கோ சென்று பெரும் ஊழலுக்கும் வழியிட்டது என்ற உண்மையும் நம்மை குழப்பி எடுகிறதே?

suvanappiriyan சொன்னது…

ராமன் கடவுளா? மனிதனா? கடவுளுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. ராமன் கடவுளாக இருந்தால் பிறந்திருக்க முடியாது. பிறந்திருந்தால் அவன் கடவுள் கிடையாது. அயோத்தியில் அவன் பிறந்திருந்தால், அவன் மனிதன். மனிதனுக்கு எதற்கு கோயில்? இல்லை அவன் கடவுள் என்றால், அப்புறம் அவன் எப்படி அயோத்தியில் பிறந்திருக்க முடியும்? ஆக, ராமனுக்கு அயோத்தியில் கோயில் தேவையில்லை, என்று கவிஞர் வைரமுத்து பாபர் மசூதி இடிப்பதற்கு முன் சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதீய வித்யாபவனில் பார்ப்பனர்கள் நிறைந்த சபையில் இப்படிப் பேசினார். அதில் உள்ள தர்க்கம் ரசிக்கும்படி இருந்தது.

ஆனால் இந்துத்வா வெறி ஏற்றப்பட்டிருக்கும் உங்களிடம் இந்த விளக்கங்கள் எல்லாம் எடுபடாது என்பதும் தெரியும். பாபர் மசூதி இடத்தில் ராமனுக்கு கோவில் கட்டும் உங்கள் எண்ணம் இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் நிறைவேறப் போவதில்லை என்பதும் நமக்கு தெரியும். ஒவ்வொரு தேர்தலிலும் ராம பக்தி பிஜேபியினருக்கு வருவது வழக்கம். அது போல் உங்களுக்கும் வந்திருக்கிறது. இதை எல்லாம் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. :-)

Unknown சொன்னது…

சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழகத்திற்கு ஏற்படும் நன்மைகள் பற்றிய நடுநிலையான ஆய்வுகளை வெளிக்கொண்டு வரவும். இந்த விசயத்தில் மிக்க வேறுபாடுகள் தெரிகின்றன.

கோபாலன்

suvanappiriyan சொன்னது…

//இராமன் வாழ்வு சொல்லும் நெறி போல் சிறந்தநெறி உலகில் வேறு இல்லை.

இராமனை போல் வாழ முடியாதவர்கள் தான் இராமனை எதிர்ப்பவர்கள்.

திருக்குறள் காட்டிய அனைத்து நெறிகளிலும்,காட்டாத நல்நெறிகளிலும் வாழ்ந்தவன் இராமன்.

இராமன் இந்தியாவின் ஒருமைப்பாட்டின் சின்னம்.

இராமனிடம் இருந்துதான் இந்தியாவின் முழு ஆன்மா பிறக்கிறது.

இந்தியாவின் சுதந்திரத்தில் இராமனின் பங்கு அளப்பறியது,சொல்லி மாளாது .
என்பது படித்த பண்பேறிய தமிழறிஞர்களின் கருத்தாக உள்ளது .//


இந்த பதிவர் சொல்வதுபோல் அவ்வளவு உயர்ந்த தரத்தில் வைத்து பார்க்கப்படுபவனா ராமன்? ராமனை தெரிந்து கொள்ள வால்மீகி ராமாயணத்தைத்தான் நம்மால் பார்க்க முடியும். அந்த ராமன் யார்? அவனது குணாதிசியங்கள் என்ன? என்பதை அம்பேத்கார் ஆய்வு செய்து தனது கருத்துக்களை வைத்துள்ளார். அதனை இனி பார்ப்போம்.

http://suvanappiriyan.blogspot.com/2014/04/blog-post_20.html

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கருத்தில வாங்கிக்கிட்டேன் கவனமா!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

///இராமனுக்காவது குறிப்புகள் பல உண்டு ,திருவள்ளுவருக்கு ???.////
தங்கள் கருத்துடன் மாறுபடுகிறேன் நண்பரே

சார்வாகன் சொன்னது…

வணக்கம் நண்பரே
/////இராமனுக்காவது குறிப்புகள் பல உண்டு ,திருவள்ளுவருக்கு ???.//////

திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் என ஏற்கிறோம்.

இராமாயணத்தை எழுதியவர் வால்மீகி எனவும் ஏற்கிறோம்.

திருவள்ளுவருக்கு ஆதாரம் என்றால் அவருக்கு பிறகு சில நூற்றாண்டுகளுக்கு பின் எழுதப் பட்ட திருவள்ளுவ மாலை.

http://www.oocities.org/nvkashraf/kur-trans/Kural-Int.htm
ஒரு வேளை திருவள்ளுவர் என்பவர் பலரைக் குறிப்பிடுகிறது,திருக்குறள் என்பதும் பலரால் தொகுக்கப்பட்ட நூல் என்றாலும் ,பிரச்சினையில்லை. திருக்குறள் காட்டும் வாழ்வுமுறை சிறந்தது என்பதே முக்கியம்.

திருவள்ளுவத்திற்கு ஆதாரம் கேட்கும் திரு நண்டு வால்மீகிக்கு அல்லவா ஆதாரம் கேட்க வேண்டும்!! அதை விட்டு இராமனுக்கு கேட்பது என்ன நியாயம்?
http://en.wikipedia.org/wiki/Valmiki
The Vishnudharmottara Purana says that Valmiki was born in the Tetrayuga as a form of Vishnu who composed the Ramayana, and that people desirious of earning knowledge should worship Valmiki.[8]
வால்மீகி விஷ்னு அவதாரம்.ஆனால் வால்மீகியின் வழித்தோன்றல்களாக கருத்தப்படும் பால்மீகி சாதியினர் தாழ்த்தப்பட்டவர்களாம்.
Balmiki or Valmiki (Nepali: बाल्मिकी, Vālmīki) where modern Hindu's see this as a Dalit sect of Hinduism centered on the sage Valmiki. Infact Valmiki pre-dates Hinduism and the followers of the teachings of Bhagwan Valmki Ji are regarded as the true indigenous people of India. The community is found in Punjab, Rajasthan, and Gujarat and worship Valmiki as their ancestor and God.
Valmiki was a Brahmin[1] by birth.[2] Valmikis believe that he was an Avatar of God, and they consider his works, the Ramayana and the Yoga Vasistha, as their holy scripture.The titles of the Boyas are said to be Naidu or Nayudu, Naik, Dora, Dorabidda (children of chieftains), and Valmiki.[3]

இருந்தாலும் வால்மீகி பிராமணன் என்றும் சொல்கிறார்கள். இராமயன உத்தர காண்டத்தில் வால்மீகி திருடனாக இருந்து மனம் திருந்தியவர் என்கிறார்கள். எதை ஏற்பது விளக்கவும்.
ஆசியாவில் பல இடங்களில் இராமாயணக் கதை உண்டு. புத்த இராமாயணத்தில் சீதை இராமனின் தங்கை, இதற்கு எதிராக எப்படி ஆதாரம் காட்டுவீர்கள்??
அண்னல் அம்பேத்கார் இராமன் மீது வைக்கும் விமர்சனம் படியுங்கள்!!1
http://www.raceandhistory.com/worldhotspots/riddlerama.htm
According to Buddha Ramayana, Sita was the sister of Rama, both were the children of Dasharatha

இராமனைப் (அல்லது எந்த சனாதன தர்ம கடவுள்) பற்றி ஏன் திருக்குறளில் குறிப்பு இல்லை??

சிந்திக்க மாட்டீர்களா?
நன்றி!!

P.S.Narayanan சொன்னது…

ராமர் கோவில்: ராமன் பேரில் ஓட்டுப்பொறுக்க.

சேது திட்டம்: தேவையின் அடிப்படையில் அல்ல- பேராசையே இதன் அஸ்திவாரம். இயற்கை நாசத்துக்கு. செலவுக்கும் பயனுக்கும் தொடர்பில்லை. பணப்பேய்கள் - கான்றேக்டர்கள் காட்டில் மழை பெய்ய இந்தத்திட்டம் இன்றி அமையாதது.

suvanappiriyan சொன்னது…

பாஜக வைப் பற்றி சிறந்த அலசலோடு வந்துள்ள கட்டுரை. அதனை நான் இன்று பதிந்துள்ளேன். நேரமிருப்பின் படித்துப் பார்க்கவும்.

http://suvanappiriyan.blogspot.com/2014/04/2014.html

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "