வியாழன், 17 ஏப்ரல், 2014

365 எம்.பி க்களுடன் நரோந்திர மோடி பிரதமர் ஆகிறார்.வருக,வருக,வாழ்த்துக்கள் மோடிஜி.



நொரண்டு :  வணக்கம் நண்டு.

நண்டு :  வாங்க நொரண்டு.

நொரண்டு : இன்றைய செய்தி.

நண்டு : நமோ மோடிஜி ஈரோடு வருகிறார்.

நொரண்டு :   வருக,வருக  மோடிஜி அவர்களே.வருக,வருக .

நண்டு :  எனது சார்பிலும் வரவேற்கிறேன்.

நொரண்டு :  சென்ற தேர்தலில் உனது  கணிப்புப்படிதான் தேர்தல் முடிவுகள் இருந்தது.இந்த தடவை உனது கணிப்பை இப்பவரை சொல்லவேயில்லையே.

 நண்டு : ம்...சற்று குழப்பம் தான் அதனால தான் இன்னும் தீர்மானிக்க முடியல.

நொரண்டு :   உனக்கே குழப்பமா !!!! என்னப்பா !!!

நண்டு :  ஆமாப்பா ....ஆமாம்.

நொரண்டு :   என்ன குழப்பம்  சொல் .

நண்டு : இந்திய மக்கள் மோடியை பிரதமரா ஏத்துக்கிட்டாங்க.
ஆனால், தமிழகத்தில் மக்கள் மோடியை பிரதமரா ஏத்துக்கிட்டாளும்,
அவங்க கட்சிக்காரங்களின் செயல்பாடுகள் மக்களை குழப்பி உள்ளது.

நொரண்டு :   நீலகிரி தொகுதி விவகாரத்தை சொல்ல வரையா.

நண்டு :  அதுவும் தான்,மேலும் ஆரம்பத்திலிருந்தே தமிழக பாஜகவின் நிலைப்பாடு சரியில்லாமல் தான் இருந்துவந்துள்ளது.

நொரண்டு :   வலுவான கூட்டணி அமைத்துள்ளனரே.

நண்டு : உண்மை தான் ,ஆனால்,அதற்கு முழுக்க முழுக்க தமிழக பாஜக காரணமல்ல என்பதை முதலில் தெரிந்துகொள்.

நொரண்டு :    ஓ....

நண்டு :  அரசியல் .

நொரண்டு :  அரசியலை விடு ...உனது கணிப்பு என்ன ?.
தேசிய ஜனநாயக கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றிபெறும்.
 
நண்டு :  

365 எம்.பி க்களுடன் நரோந்திர மோடி பிரதமர் ஆகிறார் 


நொரண்டு : குழப்பமா இருக்குனு சொன்ன,ஆனா, இவ்வளவு சீட் வாங்குவாங்னு சொல்ர.

நண்டு :  ஆம்,கட்டாயம் 365 எம்பிகளுடன் மோடி பிரதமராக வேண்டும்.இல்லையெனில்..

நொரண்டு :   இல்லையெனில்..

நண்டு : இல்லையெனில்.. அது அவங்க  தவறுனு சொல்லுவேன்.


நொரண்டு :   என்ன தவறு ?

நண்டு :  என்ன தவறுனு தேர்தலுக்கு பின் சொல்ரேன்.



@@@@@@@@@@@@@@@@@@@@




நண்டு @ நொரண்டு

எங்கள் ஊருக்கு
முதல் முதலாக வருகைதரும்
மோடிஜி அவர்களை 
வருக,வருக  
என வரவேற்பதில் மிக்கமகிழ்ச்சி கொள்கிறேன்.

365 எம்.பி க்களுடன் தாங்கள் பிரதமராக
எனது மனங்கனிந்த நல்வாழ்த்துக்களையும்
இந்த நேரத்தில் மிக்கமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


வாழ்க பாரதம்.



@@@@@@@@@@@@@@@@@@@@@



நன்றி ; படங்கள் கூகுள் மற்றும் இணையம்
Download As PDF

20 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இல்லையெனில்... புரிகிறது...

Unknown சொன்னது…

365என்பது ஒரு வருடத்தின்நாட்களின் எண்ணிக்கை யாச்சே !
த ம 3

பொன் மாலை பொழுது சொன்னது…

ஆஹா........... !! காண்பது கனவா நினைவா????? ராஜசேகர் சார்....நீங்க ரொம்பத்தான் கிண்டலடிகிறீங்க... :))

Yaathoramani.blogspot.com சொன்னது…

பிரதமர் அவர் தான் எனத் தெரிகிறது
365 தான் கொஞ்சம் பேராசையாகப்படுகிறது
பார்ப்போம்

G.M Balasubramaniam சொன்னது…

அப்படிநடக்குமானால் இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்

P.S.Narayanan சொன்னது…

எவ்வளவு கூட்டிக் கழித்தாலும் 230க்குமேல் வரவில்லை: இது காவிக்கும்பல் கவைலையோடு சொன்னது. ஆனால் நீங்கள் இஷ்டம் போல 365 என அவிழ்த்து விடுகிறீர்கள்.

565 எம் பிக்களோடு பதவி ஏற்பேன் என மோதி கூறினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அவருக்கு சரித்திரம், பூகோளம், புள்ளி விவரம் ஆகியவற்றில் உள்ள பாண்டித்தியம் நாடே அறிந்தது. கணக்கிலும் தகராறோ - நமது மக்களவையில் 565 எம்பிக்கள் இல்லையே என்று எந்தப் புண்ணாக்காவது கேட்டால் நான் ஆட்சிக்கு வந்தவுடன் 565 ஆக்கிவிடுவேன் என்று Pheku கூற வாய்ப்புள்ளது.

Unknown சொன்னது…

அட மதச்சார்பற்ற வேசம் போடும் புளுகுணிகளா, நான் மதம் பிடித்த மதவாதி இல்லை என்று மோதி நிரூபிக்கும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு இந்தியன்..

கோபாலன்

தனிமரம் சொன்னது…

கொஞ்சம் பேராசைதான்!

கும்மாச்சி சொன்னது…

இதில் ஏதோ உள்குத்து உள்ளதுபோல் தெரிகிறதே. 365 மோடியே எதிர்பார்க்கமாட்டார்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

உங்கள் ஆசை நிறைவேறுதா என்று பார்ப்போம்! வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

கனவு காண்பது என்று முடிவெடுத்த பின்னால் எதுக்கு ஒரு கஞ்சத் தனம்? சும்மா ஒரு 500 தொகுதின்னு அடிச்சி விட வேண்டியது தானே. காசா, பணமா..... :))

சென்னை பித்தன் சொன்னது…

272 போதும் சார்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

எண்ணிக்கை அதிகமாகப் படுகிறதே.
நண்பரே தங்களின் ஆசை நிறைவேறட்டும்

karai ks vijayan சொன்னது…

அதுமட்டும் நடந்துவிட்டால் பாரதம் மிகப்பெரிய வல்லரசாகிவிடும்

Unknown சொன்னது…

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

gurumoorthy சொன்னது…

vilankipogum

Tech Guru சொன்னது…

வருங்கால பிரதமருக்கு வாழ்த்துக்கள். :)

தொழில்நுட்ப செய்திகளுக்கு: தகவல்குரு செய்திகள் பக்கம் வாருங்கள்.

Unknown சொன்னது…

பகல் கனவு பலிக்காது பார்போம் ?????????????

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வெற்றி ,வெற்றி,வெற்றி

Unknown சொன்னது…

மோதி தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் சுமையை அப்படிக் கையாளப்போகிறார் என்று பார்ப்போம். எப்படியும் ஊழல் தலையெடுக்காமல் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பிரதமராகக் கனவு கண்டு 40 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தவர் ஓய்வெடுக்கச் சென்றார். இந்தியா முழுதும் சென்றவர் ஓடி கொண்டிருக்கிறார்.

கோபாலன்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "