திங்கள், 20 ஆகஸ்ட், 2012

அழகால் அழியும் அழகிய உலகம்
வீட்டுக்கு வா வீட்டுக்கு வா என மிகவும் வற்புறுத்தி
நண்பர் அவரின் வீட்டிற்கு அழைத்துச்சென்றார் .
அவர் ஒரு இயற்கை ஆர்வலர் .அதோடு மட்டுமல்லாமல் கானுயிர்களை கலை நயத்துடன் புகைப்படம் எடுப்பதில் வல்லவரும் கூட.
அதனால்,என்னமோ விசேசம் இருக்கும் என நினைத்து சென்றேன். அதுபோலவே அவருக்கு சிறந்த புகைப்படத்துக்கான பரிசை அவர் எடுத்த புகைப்படத்திற்கு அளித்திருந்தனர் .
அவருக்கு பரிசு வாங்கிக்கொடுத்த வனவிலங்குகளின்  புகைப்படத்தைக் காட்டினார் .
உண்மையில் மிகவும் அழகாக கலைநயத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அதிலும் யானைகள் என்னை மிகவும் கவர்ந்தது .படங்களை பார்த்த பின்னர் அவருக்கு கொடுத்த பரிசையும் காண்பித்தார் .
அது அழகிய கலை வேலைப்பாடுகளுடன்  கூடிய யானை சீல்டு . .
யானையின் புகைப்படத்திற்கு யானையே பரிசு .சிலர் தங்களை கலா ரசிகர்களாக பிறரிடம் காட்டிக்கொள்ள தங்களின் வீடுகளில் கலைவடிவமான இது போன்ற பொருட்களை வாங்கி அடுக்கி மகிழ்கின்றனர் .
அரசு நடத்தும் கதர் நிலையங்கள் மற்றும் பிற அரசு துணை நிறுவனங்களின் கலைப்பொருட்கள் விற்கும் அங்காடிகளில் இது போன்ற பொருட்களில் வன உயிர்களின் சிதைகளைக்காணலாம் .தனியார் அங்காடிகளிலோ கேட்கவும் வேண்டுமோ .
காந்தியின் பெயரால் நடத்தப்படும் அங்காடிகளிலும் இந்தகைய பொருட்கள் ஆக்கிரமித்து காந்தியத்தை கேலி செய்கின்றன .

தஞ்சாவூர் ஓவியங்கள் வரைய தூரிகையாக அணில் வாலைப் பயன்படுத்தி உள்ளனர்,செம்மொழி மாநாட்டிற்காக என்பது செய்தி.

கலைப்பொருட்கள் தான் என்றில்லை .

நாம் அன்றாட  பயன்படுத்தும் அழகுப்பொருட்களும் எவ்வளவு தீங்கை பிற உயிரினங்களுக்கு அளித்து நம்மை அழகு பார்த்து  மகிழ்விக்கின்றன என்பதை அறிந்தால் உண்மையில் கண்ணீர் தான் வரும் .


அழகிய இந்த மங்கையின் உதட்டுச்சாயம் ..

துப்பாக்கியால் கிட்டத்தட்ட 10 கூரிய அம்புகளை திமிங்கிலத்தின் மீது வேட்டையாடிகள் பாய்ச்ச,அதனால் உடல் காயமுற்ற அது ,பல மணிநேரம் இரத்தம் கொஞ்சம் ,கொஞ்சமாக வெளியேறுவது தாங்கமுடியாமல்  வேதனையுடன் அழுதுகொண்டே வலியுடன் துடிதுடித்து  உயிரிழக்க.அதற்காக காத்திருத்த வேட்டையாடிகள் அதன் உடலிலிருத்து "AMBERGRIS" என்னூம் பொருளை சேகரித்து  உதட்டுச்சாயம் தயாரிப்பதற்காக அனுப்பப்பட்டதிலிருத்து தயாரிக்கப்பட்டது .


முகச்சவரம் செய்து ,ஆவ்டர் சேவ் லேசன் போட்டு,தலைக்கு டை அடிச்சு, ஷாம்பு போட்டு ஜம்முனு இருக்கார் இந்த அழகிய ஆடவர். ஆனால் அதுக்காக முயலும் .குரங்கும் பட்டபாடு தெரியுமா .கண்ணீர் சுரப்பி முயலுக்கு கிடையாது .அதனால் ஷாம்பை நாம பயன்படுத்தினால் ஏற்படும் பக்கவிளைவுகளை அறிய முயலின் கண்களில் ஷாம்பை விட்டுப்பார்ப்பர் .அதனால் கண்களில் எரிச்சல் தாங்கமுடியாமல் துடிதுடியென துடிக்குமாம்.நாளடைவில் இந்தகைய முயல்கள் குருடாகிவிடுமாம்.அதோடு விட்டார்களா  ஆவ்டர் சேவ் லேசனை பரிசோதிக்க முயலின் தோல் உரிக்கப்பட்டு அதில் காயம் ஆற,ஆற லேசனை விட்டு விட்டு அது துடிதுடிக்க


...என்ன சொல்ல .

இந்த  உதட்டுச்சாயம் ,டை முதலியன மனிசனுக்கு  தெரியாம உடலுக்குள் போச்சுனா என்ன பாதிப்ப தருனு பாக்கறதுக்காக

குரங்கின் தொண்டையில டியூப்ப வச்சு உட்செலுத்தி சோதிப்பார்களாம் . இந்த சோதனையில் பெரும்பாலும் வேதனையால் அனேகமாக இறந்துவிடுமாம் .இது போலவே பன்றி,மீன்,பூனை,நாய்,எலி எனஅனேக உயிர்கள் ...

புனுகு,கஸ்தூரி ,செல்போன் கவர்,பர்ஸ்,பெல்ட், கைப்பை,செருப்பு ,சலவை தூள் (washing powder ),  பற்பசை (toothpaste), DISH SOAP  என  ...அழகிய விலங்கின உலகை
அழகு என்னும் மடமைக்காக
அழிக்கின்றோம் .

அந்த உயிர்களை நாம் ஒரு உயிராக மதிப்போமானால் இப்படிப்பட்ட அழகு சாதன பொருட்களை நாம் நம் வாழ்வில் தவிர்ப்போமாக .


.


படங்கள் உபயம் இணையம்.
.

Download As PDF

15 கருத்துகள் :

Sasi Kala சொன்னது…

வேதனையாக இருந்ததுங்க இப்படி வாயில்லா உயிரினங்களை வதைத்து காசு பார்க்கும் ஆறறிவு மக்களை என்ன சொல்வது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கொடுமையா இருக்கு சார்... ரொம்ப வருத்தப்பட வைக்குது... சில தகவல்கள் தெரியாதது...
நன்றி... (3)

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அழகு சாதன பொருட்கள் தவிர்த்தால் உடல் நலம் காக்கப்படுமே!

சிந்திக்கவைக்கும் சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள் !

கும்மாச்சி சொன்னது…

கொடுமை, வியாபாரத்திற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்.

பகிர்விற்கு நன்றி பாஸ்.

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
நமது அலங்காரத்திற்காக எத்தனை வதைகள்.
மிக்க நன்றி.

ரமேஷ் வெங்கடபதி சொன்னது…

படிக்கும் அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் ஆதங்கப் பதிவு!
நன்று!

ஹேமா சொன்னது…

ஒன்றின் அழிவில்தான் இன்னொன்றின் ஆக்கம் என்பதுபோல...ஆனாலும் உண்மையைச் சரிவர உணரும்போது மனதிற்குக் கஸ்டமாயிருக்கு !

கோவை நேரம் சொன்னது…

படித்தவுடன் மனம் கனக்கிறது....

T.N.MURALIDHARAN சொன்னது…

அழகுப் பொருட்கள் பின்னாடி இவ்ளோ கொடுமையா!
சிந்திக்க வேண்டிய விஷயம். மிக நல்ல பதிவு சார்!

வரலாற்று சுவடுகள் சொன்னது…

ஹேமா அக்காவின் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்!

ஒன்றின் அழிவில்தான் இன்னொன்றின் ஆக்கம்! மனிதர்கள் தங்கள் தேவைகளை குறைத்துக்கொண்டால் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகள் குறையும்!

அருமையான ஆக்கம் ராஜா சார்!

s suresh சொன்னது…

ஓவ்வொரு பொருளின் பின்னாலும் ஒரு உயிரின் வேதனை இருப்பதை அறிந்து வேதனை கொண்டேன்! சிறந்த தகவல் பகிர்வு! இனி இத்தகைய பொருட்களை தவிர்க்க முயற்சிக்கிறேன்! நன்றி!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html

ப.பிரகாஷ் சொன்னது…

இது உண்மை...
மனதினுள் பல கேள்விகளை எழுப்புகிறது.
அனைவரும் ஒருகணம் இதை சிந்தித்து பார்க்க வேண்டும்.மாதேவி சொன்னது…

மனத்துக்கு கஷ்டமாக இருக்கின்றது.

சிந்திக்க வைக்கிறது பகிர்வு.

N.H.பிரசாத் சொன்னது…

too bad. so sad. Thanks For Sharing.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - நாம் பயன் படுத்தும் அழகுச் சாதனங்கள் எத்தனை உயிர்களையும் - வன விலங்குகளையும் பறவைகளையும் சோதனைக்கு உட்படுத்துகின்றன. என்ன செய்வது - நாம் குறைத்துக் கொள்ள வேண்டும் - இயலுமா - முயல்வோம். தகவலுக்கு நன்றி நண்டு - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "