திருக்குறளின் பேரால் திராவிட மக்களின் பெருமையை,திராவிடரல்லாத மக்களுக்கு உணரச்செய்ய
முடிகிறது ...
எவ்வளவோ ஆபாசமான நூல்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெருமையில் 100ல் 1 பங்கு பெருமைகூட
நமது திருக்குறளுக்குக் கொடுப்பதில்லை ...
திருக்குறளுக்கு அத்தகைய பெருமையில்லாமல் போனதற்குக் காரணம் .இது ஓர் திராவிட நூல்
என்பது தான் ...
இன்ன காரியங்களால் இன்ன வாஸ்துக்கு இன்ன குணம் ஏற்படும் என்று கூறுவதுதான் விஞ்ஞானம்
.விஞ்ஞானத்திற்கு ஏற்ற கருத்து தான் பிரத்யக்ஷ அனுபவத்திற்கும் பின்விளைவுக்கும் ஏற்றதாக
அமையக்கூடியது .தத்துவார்த்தம் கூறத்தேவையில்லாத கருத்துத்தான் விஞ்ஞானத்திற்கேற்ற
கருத்தாகும் .தத்துவார்த்தம் பேசுவதெல்லாம் பெரிதும் தம்முடைய
சாமர்த்தியத்தைக்காட்டிக்கொள்ளச் சிலர் செய்யும் பித்தலாட்டம் என்றுதான் நான்
கூறுவேன்.திருக்குறளில் அத்தகைய த்த்துவார்த்தப் பித்தலாட்டத்திற்கு இடமேயில்லை...
அதில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை நாம் பொது நெறியாகக் கொள்வது அவசியம் ...
நமக்கு வேண்டிய முழு அறிவையும் கொடுக்கக்கூடியதாக ஒரு நூல் வேண்டுமானால் அது
திருக்குறள் தான் என்பதை நீங்கள் தெளிவாக உணருங்கள் .உணர்வது மட்டும்மல்ல,நன்றாக மனத்தில்
பதிய வையுங்கள் ...
திருக்குறள் நூல் ஒன்றே போதும் இந்நாட்டு மக்களுக்கெல்லாம் அறிவை உண்டாக்க ...
100 ரூபாய்க்கும் ,200 ரூபாய்க்கும் 'டெக்ஸ்ட்' புத்தகங்கள் வாங்கிப் படித்து
மடையர்களாவதைவிட 3 அணாவுக்கு திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல்
என்றுதான் கூறுவேன் .திருக்குறள் ஒன்றே போதும் .உனக்கு அறிவு உண்டாக்க ;ஒழுக்கத்தைக்
கற்பித்துக் கொடுக்க;உலகஞானம் மேற்பட.அப்படிப்பட்ட குறளைத்தான் நாம் இதுவரை
அலட்சியப்படுத்தி வந்திருக்கின்றோம்...
அனைவரும் திருக்குறளைப்படித்து அறிவுள்ள மக்களாகி இன்புற்று வாழவேண்டும் என்பது தான்
எனது ஆசை.
..........
சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகம் சார்பில் 14.3.48-ல் நடைபெற்ற 3வது
திருவள்ளுவர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அருமைவாய்ந்த சொற்பொழிவிலிருந்து
... சில துளிகள் ... அவ்வளவே.
.
.
. Download As PDF
Tweet |
|
15 கருத்துகள் :
fine extract from Periyar>>>well done
அவசியம் செய்ய வேண்டியது....
என்னாட்டவர்க்கும் எம்மொழியினருக்கும் வயதினருக்கும் ஏற்ற ஒரு நூல் திருக்குறள்.
அன்பின் நண்டு
குறளின் பெருமை சொல்லவும் வேண்டுமோ - மனிதன் மனிதனுக்குச் சொன்ன வேதம் குறள் - தெய்வம் மனிதனுக்குச் சொன்ன வேதம் கீதை
கோமா கூறியது போல எந்நாட்டவர்க்கும் எம்மொழியினருக்கும் எவ்வயதினருக்கும் ஏற்ற நூல் குறள்
அருமையான திருக்குறள் விளக்கங்கள். நல்லாருக்கு நண்பா ராஜசேகர்.
என்னையையும் உங்கள் நண்பர் வட்டத்தில் சேர்த்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
நான் உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். தொடரை தொடர்ந்து எழுதி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தொடர்பதிவு
பதின்ம வயது நினைவுகள் - தொடர்பதிவு
எங்க தேடி பிடிச்சிங்க..,
குறளிலும் குறும்புத்தனம் உண்டு. திருவள்ளுவர் சொன்னதெல்லாம் முழுக்கமுழுக்க ஏற்றுக்கொள்ளும் தரமல்ல.
எனினும் ஒன்று செய்ய்லாம். ஒவ்வாதவற்றை விலக்கிவிட்டு இக்காலத்துக்கு ஒவ்வுவதை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
எக்காலத்துக்கும் பொது திருக்குறள் என்பது கப்சா. எந்த நூலுமே அப்படித்தான். மதவாதிகளும் நூலும் இன்று வாழ்க்கையில் ஒத்துவரவில்லை என்று ஒரே கூப்பாடு போடுகிறார்கள். மதவாதிகள், ‘கொல்லுவேன், குத்துவேன். வெடிகுண்டு வைப்பேன்’ என்ப் பதில் கூப்பாடு போடுகிறார்கள்.
வள்ளுவரைக் கடவுளாக்காதீர்கள்.
பெரியாரின் நோக்கம்: திருக்குறள் vs பார்ப்பனீய நூல்கள்.
ஒப்பீட்டில் அவர் சரியே. தனியாகபார்த்தால், திருக்குறளையும் விலாச அங்கு விடயங்கள் உள நண்பரே. அவர் பண்ணியிருக்கிறார் என நினைக்கிறேன்!!
குறள் வேதம் அல்ல
cheena (சீனா) அவர்களே
உண்மை ...
goma
ஆம் ,
செய்வோம்
அண்ணாமலையான் அவர்களே
மிக்க மகிழ்ச்சி
vimalavidya அவர்களே
மிக்க நன்றி
//குறளிலும் குறும்புத்தனம் உண்டு.//
எவை ,எவை என்று கூறினால் தெரிந்துகொள்வேன் .
//திருவள்ளுவர் சொன்னதெல்லாம் முழுக்கமுழுக்க ஏற்றுக்கொள்ளும் தரமல்ல.//
விளக்கமாக அவைகளை கூறும்படி கோட்டுக்கொள்கின்றேன் .
//எனினும் ஒன்று செய்ய்லாம். ஒவ்வாதவற்றை விலக்கிவிட்டு இக்காலத்துக்கு ஒவ்வுவதை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.//
நல்ல கருத்துத்தான் .
ஒவ்வாததையும் ,ஒவ்வுவதையும் பட்டியலிட்டு தாங்கள் தந்தால் நலமாக இருக்கும்.
உதவுவீர்கள் என எண்ணுகின்றேன் .
//எக்காலத்துக்கும் பொது திருக்குறள் என்பது கப்சா.//
அது கற்ற முறையைப் பொறுத்தது .
//வள்ளுவரைக் கடவுளாக்காதீர்கள்.//
இப்படி கூறுவது கூட தவறு .
//பெரியாரின் நோக்கம்: திருக்குறள் vs பார்ப்பனீய நூல்கள்.//
அது மட்டுமல்ல நண்பரே .
//தனியாகபார்த்தால், திருக்குறளையும் விலாச அங்கு விடயங்கள் உள நண்பரே. //
கூறுங்கள் தெளிவு பொருகின்றேன் .
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
Jo Amalan Rayen Fernando அவர்களே
மிக்க நன்றி .
ஈரோடு நுலகத்தில்
பேநா மூடி அவர்களே .
//நான் உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். தொடரை தொடர்ந்து எழுதி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். //
முதலாவதாக தங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றி.
நான் கடந்த வாரம் முழுவதும் சில தரவுகள் சேகரிக்க வெளியூர் சென்றுவிட்டபடியினால் என்னால் தங்களின் அழைப்பினைப்பார்க்க முடியாத சுழல் ஏற்பட்டுவிட்டது . இன்று தான் ஈரோடு வந்தேன் .தங்களின் அழைப்பைக்கண்டு மகிழ்ந்தேன்.தங்களின் அழைப்பினை ஏற்கின்றேன். ஆனால் சிறிது கால அவகாசம் கட்டாயம் தேவை.ஏனெனில் ,தரவுகள் சில சேகரிக்கவேண்டியுள்ளது .மற்றபடி வேறு ஒன்றுமில்லை .
மிக்க மகிழ்ச்சி
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே
மிக்க மகிழ்ச்சி .
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "