புதன், 14 ஏப்ரல், 2010

நீயும் மனிதன் ,நானும் மனிதன் .

.

மனிதனை மனிதனாக பார்ப்பதே கிடையாது மனிதன். மிகவும் கீழ்த்தரமாகவே தங்களுக்குள் நடந்துகொள்கின்றான்.மற்ற உயிரினங்கள் அனைத்தும், அதன்அதன் இனத்தினை அதன்அதன் இனமாகவே பார்க்கின்றது ; ஆடு ஆட்டை ஆடாக ,மாடு மாட்டை மாடாக ,சிங்கம் சிங்கத்தைசிங்கமாக இப்படி.இந்த முதன்மைப்பண்பு மனிதனுக்கு துளியும் கிடையாது .மனுசனை மனுசனா பார்க்கவேண்டும் . இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்போ தனது எளிய
சொல்லால் மக்களுக்கும் ,மன்னர்களுக்கும் உணர்த்தியுள்ளார் வள்ளுவர்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். - என்ற குறளில் .

திருக்குறள் உரைநூல்கள்
பெருமை 972
பரிமேலழகர் உரை

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் - பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான். (வேறுபாடு - நல்லனவும்,
தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக்
கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறினார்.)

மணக்குடவர் உரை

எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

தமிழ் மரபுரை - ஞா. தேவநேயப் பாவாணர்

(இ-ரை.) எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - மாந்தரெல்லார்க்கும் தாய்வயிற்றுப்
பிறத்தலாகிய பிறப்புமுறை ஒரு தன்மையதே; செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா - ஆயின், அவரவர் செய்யுந் தொழில்கள் வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் ஒரு நிகரானவல்ல.

தொழில் வேறுபாடுகள்; அதிகாரமுள்ளது, அதிகாரமில்லது ; வருமானம் மிக்கது; வருமானங் குறைந்தது; தற்சார்பானது, மற்சார்பானது; நிழலிற் செய்வது, வெயிலிற் செய்வது; மனவுழைப்புள்ளது; உடலுழைப்புள்ளது; துப்புரவானது,துப்புர வற்றது; ஒழுக்கக் கேட்டிற் கிடமுள்ளது, ஒழுக்கக் கேட்டிற் கிடமில்லது; இன்றியமையாதது. இன்றியமையாத தல்லாதது;
பிறரை இன்புறுத்துவது பிறரை இன்புறுத்தாதது; நல்லது தீயது என்பன. இவற்றுள் ஒவ்வோரிணைக்கும் இடைப்பட்ட நிலைமையுமுண்டு. தொழில்வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் உயர்வு, தாழ்வு, இடைநிகர்வு, மிகவுயர்வு, மிகத்தாழ்வு என்பன.

"வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதின் பயனனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கு மொத்தலிற் பிறப்பொக்கு மென்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற் பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கை தோறும் வேறுபடுதலிற் 'சிறப்பொவ்வா'
வென்றும் கூறினார். " என்பது பரிமேலழகரின் ஆரியச்சார்புத் சிறப்புரை.

.....

எனது கருத்துரை :

உலகில்,எல்லா உயிர்களின் பிறப்பும் போற்றக்கூடியதே.அப்படி போற்றக்கூடிய
பிறப்பில்,மனிதனாய் பிறந்து ,மனிதனை மனிதனாக பார்க்காமல் ,அவரவர் செய்யும் தொழிலை வைத்து, அது தான் பிறப்பொன்று கூறி,அதன் மூலம் வேற்றுமை பாராட்டுவது,மனிதனுக்கு சிறப்பானது அல்ல .முட்டாள் தனமானது .எல்லோரும் சக மனிதர்களே .மனிதர்களை மனிதர்களாக பார்க்கவேண்டும் .

.

.


.

Download As PDF

23 கருத்துகள் :

அகல்விளக்கு சொன்னது…

மனிதர்களை மனிதர்களாகப் பார்க்க வேண்டும்...

அழுந்தச் சொல்லியிருக்கிறீர்கள்...

வாழ்த்துக்கள்...

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அகல்விளக்கு அவர்களே
மிக்க நன்றி .

க.பாலாசி சொன்னது…

அந்த முட்டாள்தனத்தை விட்டொழிக்கும் பொழுது நானும் நீங்களும்கூட மனதர்களாவோம்....

சிறப்பான பகிர்வு... நன்றி....

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

//அந்த முட்டாள்தனத்தை விட்டொழிக்கும் பொழுது நானும் நீங்களும்கூட மனதர்களாவோம்....//
அவர்களுக்கு .
மிக்க மகிழ்ச்சி
க.பாலாசி அவர்களே
மிக்க நன்றி .

வானம்பாடிகள் சொன்னது…

தொழிலை வைத்து ஜாதி ஏற்றத்தாழ்வு மறைந்தாலும் ஜாதி எதுவானாலும் தொழிலை வைத்து வேறுபாடு பார்ப்பது மாறவே மாறாது போல:(

ராமலக்ஷ்மி சொன்னது…

//,அவரவர் செய்யும் தொழிலை வைத்து, அது தான் பிறப்பொன்று கூறி,அதன் மூலம் வேற்றுமை பாராட்டுவது,மனிதனுக்கு சிறப்பானது அல்ல .//

மிகச் சரி.

////எல்லோரும் சக மனிதர்களே .மனிதர்களை மனிதர்களாக பார்க்கவேண்டும் ...//

அப்படியான ஒரு காலம் எப்போது வருமென்றே தெரியவில்லை:(! நல்ல பதிவு.

பா.ராஜாராம் சொன்னது…

அருமை மக்கா!

அக்பர் சொன்னது…

உங்கள் விளக்கம் மிக அருமை.

என்னதான் ஜாதியை ஒழிச்சாலும். தொழில் அடிப்படையிலான ஏற்ற தாழ்வை ஒழிப்பது இன்று வரை முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. நாளை மாறும் என்ற நம்பிக்கை மட்டுமே மிச்சமிருகிறது.

அண்ணாமலையான் சொன்னது…

வெரி குட்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

நாம் தொடங்குவோம்
வானம்பாடிகள் அவர்களே
மிக்க நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
பா.ராஜாராம் அவர்களே
மிக்க நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ராமலக்ஷ்மி அவர்களே
மிக்க நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அண்ணாமலையான் அவர்களே
மிக்க நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அக்பர் அவர்களே
மிக்க நன்றி .

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அறிந்து கொள்ளவேண்டிய தமிழ்க்குறிப்புகள்.. நன்றி ராஜசேகர் சார்.

தாராபுரத்தான் சொன்னது…

சதியை புரிந்து கொள்ளாதவர்கள்.மிதித்திடுவோம்.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே
மிக்க நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
தாராபுரத்தான் அவர்களே
மிக்க நன்றி .

மணிஜீ...... சொன்னது…

சரிதான்..சென்னைக்கு வந்துட்டு, என்னை பார்க்காம போயிட்டிங்களே பாஸ்..

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

வருகைக்கும் ,பின்னுட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
மணிஜீ...... அவர்களே
மிக்க நன்றி .

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

சரிதான் நண்பரே..

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

இயற்கைக்கு முன்னே மனிதன் எந்த விதத்தில் உயர்ந்து போனான் என்பது தான் எனக்கு விளங்கவில்லை..

கடல் சீறினால்,
புயல் வீசினால்,
நிலம் நடுக்குற்றால்,

ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் போன்ற பாகுபாடுகள் என்னவாகும்?

cheena (சீனா) சொன்னது…

சிந்தனை நன்று நண்டு
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "