சனி, 24 டிசம்பர், 2011

உங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா ? ,பதில் சொல்லுங்கள்




  அடர்ந்த மலையினுடே பயணத்திக்கொண்டிருந்தது கூட்டம் .
மலையின் அழகையும் அற்புதத்தையும் வியந்தபடி சென்றது.

பாதி மலை தான் இருக்கிறது,மீதி அழிந்துவிட்டது என ஆதங்கத்துடன் பேசிச்சென்ற கூட்டத்தின் கவனத்தை திருப்பியது காட்டுமலர்கள் நிறைந்த பள்ளத்தாக்கு.

அதனைப்பார்த்து அதிசயத்தனர் கூட்டத்தார்.

அப்பொழுது கூட்டத்தின் சூத்திரதாரி ,என்ன அழகான பூக்கள் ,எவ்வளவு அழகு ,இவைகளின் பெயர்கள் தான் என்ன ? யாருக்கு தெரியும் ? என்ன  இருந்தாலும் இவைகளால் உலகிற்கு என்ன பயன் ? என ஆதங்கப்பட்டுக்கொண்டு கூட்டத்தினை தனது மாயவலையில் சுற்றிக்கொண்டிருந்தபொழுது,
திடுமென பள்ளத்தாக்கினின்று ஒரு பூ வெளிப்பட்டு ,
வந்தனங்கள் தங்களுக்கு ,வார்த்தைகளை கேட்பார்கள் இருப்பதற்காக சிந்தாதீர்.
முதலில் எமது பெயர் உமக்கு தேவையில்லை .உமது பெயரும் எமக்கு தேவையில்லை.
அடுத்து ,எங்களால் உலகிற்கு என்ன பயன் ?என்று எம்மைப்பார்த்து நகைக்கும் உம்மைப்பார்த்து கேட்கிறேன் .இங்கிருந்து நான் பார்க்கும் நகரில் பல லட்சம் மனிதர்கள் உள்ளீர்கள் .இருந்தும்  உங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா ? ,பதில் சொல்லுங்கள்,உங்களால் உலகிற்கு என்ன பயன் ?சொல்லுங்கள்  என பல முறை கேட்டது .
யாரிடமும் பதில் வராததால் சிரித்துவிட்டு மறைந்துவிட்டது.

..........

நான் எங்க டோமியோட இன்று வாக்கிங் போன போது,என் பெயர் தெரியுமா ?என் பெயர் தெரியுமா ?




என பாதையோர  பூக்கள் கேள்விகள் கேட்பது போல ஒரு உணர்வு .
எனக்கு சரியா தெரியல.சிரித்தபடி,நம்மை சுற்றியுள்ளதையே அறியாமல் வாழும் ஒரு பிறவி என நொந்துகொண்டு வீட்டிற்கு வந்தேன்.


பிறகு வீட்டிற்கு வந்து எமக்கு இது நாள் வரை தெரிந்த மலர்களையும் அதன் தோற்றத்தையும் மனதினில் எண்ணிப்பார்த்தேன். ரோஜா,கனகாம்பரம்,மல்லிகை ,ஜாதி மல்லி ,நெருஞ்சி, சாமந்தி, செவ்வந்தி, செம்பருத்தி.....
                                                                 

                                                                   குறிஞ்சி
முல்லை
 மருதம்
 

                                                                   பாலை
                                                                 
                                                                   தேமா

                                                                  புளிமா 
                                                                     கூவிலம் 
                                                                  கருவிளம்




கரந்தை

 காஞ்சி
                                                                          வெட்சி




                                                                      வாகை


                                                                      கொன்றை  
                                                                         வாழை 
ஆம்பல்

                                                                   மணிக்குலை
                                                                           நாகப்பூ
 
 செங்கொடுவேரி
                                                                          டணக்கம் 







                                        தாழை 


                                         வழை 

                                                                    ஆவிரை 
                                                                   எருவை

                                                                 குறுநறுங்கண்ணி 
                                                 பாரம்
                                                                                பீரம்
   ஆரம்
 
காந்தள் 
 குவளை





புன்னை

 ஈங்கை 

 ஆத்தி

 சேடல் 

 செம்மல்

தளவம் 

 தில்லை 

 குளவி
  புழகு 


 தும்பை

இலவம் 


  அவரை
    
                                         சண்பகம்  
                                          செங்கருங்காலி   


                                         தாமரை



ஏன்,எனக்கு இப்படி ஒரு நினைவு தோன்றியது என எண்ணிப்பார்த்தேன்.மலைவாழ் மக்களிடமிருந்து வாங்கிவந்த மெழுகுவர்த்தி தான் இத்தனைக்கும் காரணம் என்பதனை உணர்ந்துகொண்டேன்.ஆம்,2 ருபாய்க்கு மலையில் கிடைக்கும் தேன்ஆடை மெழுகினால் செய்த இயந்திரமில்லாமல் கையில் தயாரித்த மெழுகுவர்த்தி இத்தனை கற்பனைக்கும் வித்திடவைத்துவிட்டது.அதைவிட அதன் தயாரிப்பு நுணுக்கமும்,அதன் பயன்பாடும் நாம் இங்கு பயன்படுத்தும் மெழுகுவர்த்தியை விட மிகவும் உன்னதமாக இருந்ததை  நேற்றைய இருளில் அனுபவித்ததால் வந்துள்ளது என்பதனின்று அதன் உயர்வை சொல்லவும் வேண்டுமோ.  










இந்த மெழுகிற்கான எத்தனை தேனிகள் எத்தனை மலர்களை சுவைத்தனவையோ?.அவைகளின் பெயர்கள் தான் என்னென்னவோ ?.

இப்ப எனக்கு மாயப்பூ கேட்ட பல லட்சம் மனிதர்கள் உள்ளீர்கள் .இருந்தும்  உங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா ? ,பதில் சொல்லுங்கள்,உங்களால் உலகிற்கு என்ன பயன் ? . சொல்லுங்கள் ? 
 என்ற கேள்வி மீண்டும்  மீண்டும் ஞாபகத்திற்கு வருகிறது . 















படங்கள் உதவி ; flowersofindia.in ,கூகுள் , விக்கிபீடியா மற்றும் பிற இணையதளங்கள் இவைகளுக்கு நன்றி
.   .
Download As PDF

55 கருத்துகள் :

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை

த.ம 2

Mahan.Thamesh சொன்னது…

சிந்திக்க வைத்துவிட்டீர்கள் சார் ; அருமையான படைப்பு ; சில பூக்களை பற்றி தெரிந்தும் கொண்டேன் ;

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - அருமை அருமை - இத்தனை பூக்களுக்கும் பெயர் வைத்தீர்க்ளா ..... பலே பலே - சிந்தனை அருமை - ஆமாம் - ஈரோடு சங்கமத்தில பார்க்க இயலவில்லையே ......ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

மகேந்திரன் சொன்னது…

ஆஹா சங்கத் தமிழ் மலர்களெல்லாம்
காணக் கிடைத்தது இங்கல்லவோ???

அரிய புகைப்படங்கள் நண்பரே.
பகிர்வுக்கு நன்றி.

chandrasekaran சொன்னது…

nandri nanpare

ப.கந்தசாமி சொன்னது…

வக்கீல் எப்போது கவிஞனானார்?

சசிகுமார் சொன்னது…

//பல லட்சம் மனிதர்கள் உள்ளீர்கள் .இருந்தும் உங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா ? ,பதில் சொல்லுங்கள்,உங்களால் உலகிற்கு என்ன பயன் ?//

பயனா???? கார்பன் அது இதுன்னு உலகத்தை அழித்து கொண்டு தான் இருக்கிறோம்....

shanmugavel சொன்னது…

தாவரங்கள் நல்ல தொகுப்பு! தலைப்பு ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விஷய்மாக இருக்கிறது.

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல தொகுப்பு. நல்ல முயற்சி.
மனப்பூர்வ வாழ்த்துகள்.

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணா,
கலக்கலான பதிவு, பூக்களினூடே புது அரசியல் சொல்லியிருக்கிறீங்க.

ADMIN சொன்னது…

பதிவு பூப்பூவாய் மலர்ந்திருக்கிறது...!!!

சின்னப்பயல் சொன்னது…

வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எந்தப் பயனும் இல்லை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!

Unknown சொன்னது…

நல்ல கேள்வி மட்டுமல்ல யாரும் பதில்
சொல்ல முடியாத கேள்வி!
படங்களும் அருமை பெயர் சூட்டியுள்ள
பாங்கும் மிகமிக அருமை!

புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இங்கிருந்து நான் பார்க்கும் நகரில் பல லட்சம் மனிதர்கள் உள்ளீர்கள் .இருந்தும் உங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா ? ,பதில் சொல்லுங்கள்,உங்களால் உலகிற்கு என்ன பயன் ?சொல்லுங்கள் என பல முறை கேட்டது .யாரிடமும் பதில் வராததால் சிரித்துவிட்டு மறைந்துவிட்டது.

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "தான்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பூக்களாய் பூத்து நிறைந்த பகிர்வுகளுக்கு
மனம் நிறைந்த பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இந்த மெழுகிற்கான எத்தனை தேனிகள் எத்தனை மலர்களை சுவைத்தனவையோ?.அவைகளின் பெயர்கள் தான் என்னென்னவோ ?.

மாயப்பூ மனதில் நிறைந்து மணக்கிறது..

மெழுகாய் உருகி வெளிச்சமும் அளிக்கிறதே!

K.s.s.Rajh சொன்னது…

வணக்கம் பாஸ் கலக்கலான பதிவு.அருமையாக இருக்கு

G.M Balasubramaniam சொன்னது…

அப்படிப் பார்க்கப் போனால் யாராலும் ஏதாலும் யாருக்கும் எதற்கும் எந்த பலனும் இல்லை. தொந்தரவாக இல்லாமல் இருந்தால் சரி. இந்தப் பதிவைப் படிக்கும்போது நடிகர் சிவகுமார் நினைவுக்கு வந்தார். காரணம் தெரிந்திருக்குமே. எனக்கு ஏழெட்டு மலர்களின் பெயர்கள் தவிர வேறெதுவும் தெரியாது.

சசிகலா சொன்னது…

அருமை

சக்தி கல்வி மையம் சொன்னது…

நல்ல படைப்பு..

மாய உலகம் சொன்னது…

இன்று தான் இந்த பூக்களையும், அதன் பெயர்களையும் அறிந்துகொள்ள முடிந்தது... பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ!

Admin சொன்னது…

இலக்கியங்களில் மேற்கண்ட பூக்களைப் பற்றி படித்ததோடு சரி இதுவரை பாதியை பார்க்காமல் இருந்தேன் அவற்றின் படங்களை போட்டு இனம் காட்டியமைக்கு நன்றி..அருமை..

மாய உலகம் சொன்னது…

என்னால் குறைந்தது 5 காக்கை,குருவிகளுக்கு தினமும் ஒரு நேரம் உணவு கிடைக்கிறது.... ஹி ஹி... அதான் தற்போதைய பயன்.. எதிர்காலத்தில் நிறைய எண்ணம் இருக்கிறது... இறைவன் மனது வைத்தால்...

lcnathan சொன்னது…

NALLA PATHIVU!! NANTRI!!!

Advocate P.R.Jayarajan சொன்னது…

சபாஷ்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நடிகர் சூர்யா, கலைஞர் முன்பு சொல்லிகாட்டிய பேரை போல சொல்றீங்க, யப்பா சத்தியமா நிறைய பூக்கள் பெயர் தெரியாமதான் இருந்தேன் இப்போ தெரிஞ்சிகிட்டேன் நன்றி...!!!

பால கணேஷ் சொன்னது…

யப்பா... இத்தனை பூக்களின் படங்களையும் எப்படித் திரட்டினீர்க்ள். அந்தப் பெருமுயற்சிக்கு ஒரு சல்யூட்! நிறைய மலர்களின் பெயர்கள்தான் தெரியும். உங்கள் புண்ணியத்தில் இப்போது பார்க்க முடிந்தது. பூக்கள் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. யோசிக்கிறேன்... அதுசரி... அந்தப் புத்தகம் எதுவென்று எப்போது சொல்வதாக உத்தேசம்? (வக்கீல் மேலயே கேஸ் போட்ருவேன், ஆமா...) புத்தாண்டிலா? உங்களுக்கு என் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

KARUPPANAN PALANISWAMY சொன்னது…

An excellent and a thought provoking presentation.

KARUPPANAN PALANISWAMY சொன்னது…

A spontaneous out come of emotions. An excellent thought provoking presentation.

பெயரில்லா சொன்னது…

இது வரை பார்த்திராத பூக்களின் அரிய படங்கள் நண்பா!

தினேஷ்குமார் சொன்னது…

அழகான ஆழமான பதிவு சார் ...

ஹேமா சொன்னது…

நிறையப் பூக்கள் எனக்குப் புது அறிமுகம்.சில புற்கள் பூக்களை எல்லாம் இங்கு அழகுபடுத்த நம் நாடுகளிலிருந்து அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள்.இது நம் நாடுகளில் சாதாரணமாகக் கிடைக்குமென்று சொல்லி பூக்களைவிட நான் பெருமைப்பட்டுக்கொள்வேன்.அழகான தொகுப்பு !

rajamelaiyur சொன்னது…

இவ்வளவு பூக்களா ?

rajamelaiyur சொன்னது…

இன்றய ஸ்பெஷல்


நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல பகிர்வு. பூக்களின் பெயர்கள் அறிந்துகொண்டோம்.

Franklin சொன்னது…

தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்ற பூக்களின் வகைகளைக் கண்டதில் மகிழ்ச்சி.“கோவை- தமிழ் செம்மொழி” மாநாட்டில் இது போன்ற தொகுப்பினைப் பார்த்த நினைவிருக்கிறது.அற்புதமான பகிர்வுகளுக்கு வாழ்த்துக்கள்.தொடரட்டும் நின் பணிகள்.
- பிராங்கிளின்.

ananthu சொன்னது…

மனிதனால் உலகிற்கு என்ன பயன் என யோசிக்க வைக்கும் பதிவும் , வித விதமான பூக்களின் படங்களும் அருமை...

passerby சொன்னது…

அந்தப்பூக்களைப்பார்த்து நீங்களாகவே உங்களுக்கு வேண்டிய கற்பனைகளை பண்ணிக்கொண்டீர்கள். பூக்களால் உலகுக்குப் பயன் என்பது உங்கள் பார்வையில். அவை பார்வையில் இல்லை. அவைகளுக்குப் பார்வையில்லை. அவைகள் தாமாகவே நினைத்து எதையும் செயவதில்லை. இறைவன் அவைகளை எப்படிப்படைத்தானோ, அப்படி அவை வாழுகின்றன‌. எனவே அவைகளைப்பொறுத்தவரை கடமை கட்டுப்பாடு என்றெல்லாம் கிடையா. தானாகவே அவை மணக்கின்றன. பூக்கின்றன. நீர் எம்மை நுகர்ந்து இன்பமடைக; எம்மைத் தொடுத்து உம் கடவுளரைப் பூசனை செய்க; உம் பெண்டிரின் தலைகளில் சூடுக என்றெல்லாம் அவை உம்மிடம் சொல்லவில்லை. எல்லாமே உம்மின் வெட்டிக்கற்பனைகள். உமக்கு வேண்டிய நீவிர் செய்பவை. பூக்களின் மேல் ஏன் அவைகளைத் திணிக்கிறீர்கள்?

இப்படியிருக்கும்போது நீங்கள் மனிதர்களின் மேல் கற்பனையான சுமையொன்றை வைக்கிறீர்கள். உம்மால் உலகுக்கு என்ன பயன் என்ற கேள்வி.அதன் மூலம் இறைவன் வகுத்த விதியை அல்லது இயற்கை வகுத்த விதியை மீறுகிறீர்கள்.

என்ன விதி?

மனிதன் ஜீவராசிகளில் ஒருவன். கண்டு களித்து உண்டு உறங்கி வாழ்பவனே அவன். அவனாகவே சிந்தித்து தன் இயற்கை ஆதிமனிதன் வாழ்க்கையிலிருந்து விலகிக்கொண்டு, இன்றைய நாகரிக மனிதனாக மாறிவிட்டான். அப்படி மாறிய பின்னரே இப்படி, என்னால் உலகுக்கு என்ன பயன் எனக்கேட்கத் தொடங்கி விட்டான். இறைவனோ, இயற்கையோ அவனை அப்படிக்கேட்கவில்லை!

உங்களால் உலகுக்குப்பயன் ஒன்றும் வேண்டுவதில்லை. நணபரின் இக்கேள்வியால் எவரும் குற்றவுணர்ச்சி கொள்ளத்தேவையில்லை. உங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழுங்கள். அவ்வாழ்க்கையை வாழும்போது பிறரின் மகிழ்ச்சியைப்பறித்து வாழாதீர்கள். மற்றபடி நீங்கள் யாதொரு பயனையும் உலகுக்கு அளிக்கத்தேவையில்லை. இங்கொருவர் சொன்னதுபோல, உபத்திரவம் இல்லாமல் வாழ்ந்தால் போதும்.

அப்படியே ஏதாகினும் நன்மை நாம் செய்தோமோ என உறுத்தல் உமக்குண்டாயின், அது, நீங்கள் உங்கள் வயிற்றுக்கும் போக உம்பார்யாளுக்கும் குழந்தை குட்டிகளுக்கும் முதிய பெற்றோருக்கும் வறுமையில் வாடியோர் வந்து கேட்கும் போது உமக்கு வேண்டியதற்குப்பின் மிஞ்சியிருப்பதை அளித்தலும் செய்வீராயின், போதும்.

N.H. Narasimma Prasad சொன்னது…

இவ்வளவு பூக்களை எங்கே பிடித்தீர்கள்? மிக அருமையாக இருக்கிறது. பகிர்தலுக்கு நன்றி சார்.

Tamil Virtual Forum சொன்னது…

தொகுப்பு நன்று.
சரியான பெயர்களுடன் சரியான மலர்கள்.
தொண்டு மகிழ்வைத் தருகிறது.
வாழ்த்துக்கள்.
அன்புள்ள

Mohamed Faaique சொன்னது…

Superb collection....

Nothing is useless. What's the use, We don't know. that's the problem.

ceekee சொன்னது…

Excellent.
I was just grieving that we are unable to name the plants and trees we see around us daily and we call ourselves educated ! !
We Thamizhs are so far behind the rest of the world that we do not have even our basic and primary education in our own mother tongue !

To the best of my knowledge, we have not yet translated the enthralling and mind-boggling book by David Attenborough 'The Secret Life of Plants' or the stupendous 'Animalwatching' by Desmond Morris in Thamizh !

vimalanperali சொன்னது…

நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்.பூக்களை கண்டுபிடித்து அதற்கு பெயர் வைத்ததே மனிதன்தானே?

ராஜி சொன்னது…

பல லட்சம் மனிதர்கள் உள்ளீர்கள் .இருந்தும் உங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா ? ,பதில் சொல்லுங்கள்,உங்களால் உலகிற்கு என்ன பயன் ? . சொல்லுங்கள் ?
>>>>

M.R சொன்னது…

அழகான பூக்கள் அவைகளின் பெயர்களுடன் பகிர்வுக்கு நன்றி நண்பரே

முத்தரசு சொன்னது…

இவ்வளவு பூக்களா?

சில பூக்களை பார்த்து இருக்கிறேன் பெயர் தெரியாது, சில பூக்கள் பெயர் தெரியும் பார்த்தது இல்லை.

நன்றி உங்களின் பதவு மூலம் தெரியாதவைகளும் பார்க்காதவைகளும் விவரமாக தெரிந்து கொண்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அற்புதம்.........!

Kanchana Radhakrishnan சொன்னது…

அருமையாக இருக்கிறது. பகிர்தலுக்கு நன்றி.

Selmadmoi gir சொன்னது…

அருமை

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அடேங்கப்பா, அபாரமான உழைப்பு சார்

குறையொன்றுமில்லை. சொன்னது…

”உங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா?”- ஒன்னுமே இல்லைதான் சாப்பிட்டு தூங்கி எழுந்து ஒரு இயந்திரமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கோம்.. இதுவரை தெரிந்திராத எவ்வளவு விஷயங்கள் சொல்லி இருக்கீங்க. மலர்களில் இத்தனை வகைகளா? நன்றி, நன்றி

மாலதி சொன்னது…

மிகவும் சிறப்பாக தேடி உண்மையில் பாராட்ட வேண்டிய பதிவு சிறப்பனவைகள் எல்லாவற்றிற்கும் தனியான மருத்துவ குணம் உண்டு என்பது இனிமையான செய்தி தொடர்க ...

kowsy சொன்னது…

ஒரு மெழுகுவர்த்தி இப்படி ஒரு சிந்தனையை எப்படி வரவைத்திருக்கின்றது. மெழுகு தேன் மலர். மலரின் மணத்தை நுகர்ந்திருக்கின்றோம். அழகை ரசித்திருக்கின்றோம். இம்மலர்கள் இப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கின்றது என்றால் வெட்கப்படுகின்றோம். எமது வாழ்க்கை என்ன கல்வி தொழில் கல்யாணம் பிள்ளை பிள்ளையின் வளர்ச்சி என்று தொடரும் வாழ்க்கை எல்லோருடையதும். ஆனால் அதுகூட உலகுக்கு அவசியம் உலகு உருப்பட மனிதர்கள் தேவை . அம்மனிதர்களை உருவாக்கும் பெரும் பங்கு எம்முடையது தானே. இம்மலர்களை பார்க்கும்போது பெரும் அதிசயமாக இருக்கிறது. பெயர் தெரியாது இத்தனை மலர்கள் பெயரிடப்பட்டு என்னால் அறியப்படாது இருந்திருக்கிறதே. வெட்கம். இதை அறியத்தந்த உங்களுக்கு மிக்க நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "