வெள்ளி, 16 டிசம்பர், 2011

தெருவாசகம்











ஒவ்வொரு சதுர அடியிலும்
ஒரு சதுர மைலுக்கு உண்டான
பிரச்சனைகள்

.............................................................


மேற்கு - இரண்டு கடல்களைக
கூட இணைத்துவிட்டது
கிழக்கு - இரண்டு நதிகளைக்
கூட இணைக்கவில்லை


 ............................................................


ஈழத்தில்
யுத்த பிட்சுக்கள்


......................................................




பிற மாநிலங்கள் இருப்பது
தேசப் படத்தில்
தழிழகம் இருப்பது

திரைப் படத்தில்


............................................

எழுத்து
நம்மை காட்டிக் கொடுக்கும்
நண்பன்

...............................

கவிஞன்
காலம் எழுதிய
கவிதை

...........................................

மக்கள்
நின்றால் கம்பம்
எழுந்தால் பூகம்பம்

 ...........................................


தேர்தல்

வெற்றி பெறுபவன்
அரசியல்வாதி
தோல்வியடைவது
அரசியல்
 ......................................

சென்னை
தமிழகத்திற்கு தலைநகரம்
டில்லிக்கு வால்நகரம்

.........................................

கறை படாத கை
இயற்கை

.................................

மிகவும் தாமதமான மதம்
தாமதம்

....................................

நூல்கள்
நம்மையே நெய்கின்ற
நூல்கள்

..............................

நாட்கள்
யுகங்களைத்
தின்னும் பற்கள்

................................

நரிகள்
சும்மா இருந்தாலும்
சுழ்ச்சியே செய்யும்

....................................


ஜன்னல்
வீட்டின் விழி

..................................

சிற்பம்

சிற்பியின் மனதில்
ஏற்கெனவே
செதுக்கப்பட்டது

.......................................

தோல்வி
கோழைக்கு ஆணி
வீரனுக்கு ஏணி

....................................

முத்தம்
எசசில் கலை

...................................

மனிதன்
இயற்கையிலேயே
மிகவும்
செயற்கையானவன்

...........................


தூக்கு
கழுத்துக்கு மட்டுமே
கருத்துக்கு அல்ல!

.........................................

தனிமை
தென்னந் தோப்பில்
ஒற்றை பனைமரம

............................................



கற்றுக் கொள்ளவும்
நடிகர்களிடமிருந்து அரசியல்
அரசியல் வாதியிடமிருந்து நடிப்பு !


............................................


தீமைக்கு கரு
திமிர்

............................................

மரணம்
தண்டனை அல்ல விடுதலை !

................................................

ஆத்திகம்
தொழுநோய்
நாத்திகம்
வாதநோய்

.................................................

ஏழைகள்
வறுமையின் பசிக்கு
இரை

.................................................


ஜனநாயகம்
தேசத்திற்குள் ஜெயில்
இருப்பது
சர்வாதிகாரம்
ஜெயிலுக்குள் தேசம்
இருப்பது

...............................................


மதங்கள்
தற்காலத்தை மறைக்கும்
கற்காலங்கள


...................................................


தீர்க்க தரிசிகள்

காலம் இவர்களுக்கு தெரியும்
காலத்திற்கு மட்டும்
இவர்களை தெரியாது


............................................


அரசியல்


சமுதாயத்தை ஒழுங்கு படுத்தும ;
ரசமட்டம்
சகாப்தத்தை நிமிரவைக்கும்
உலைக்கூடம


.......................................



சுதந்திரம்


இந்தியாவில் வியாபாரம்
செய்ய வந்தவர்களிடமிருந்து
இந்தியாவை வியாபாரம்
செய்ய வந்தவர்கள் பெற்றது


...........................................



சருகுகள் சன்னிதானத்தில்
இருந்தால
பூக்கள் புழுதியில் தான் கிடக்கும் !


....................................................



ஒட்டு மொத்தமாக
வாங்கிய சுதந்திரத்தை
தவணை முறையில்
இழந்து விட்டோம்

............................................



படிப்பதற்கு மட்டுமே
கற்றுக் கொள்கிறோம ;
ஆனால ;
கற்றுக் கொள்வதற்காக
படிப்பதே இல்லை !

........................................




நமக்குள்ளே நண்பர்கள்
இருந்தால்
நமக்கு வெளியே
எதிரிகள் இல்லை

...........................................



யாரும் எங்களை
ஆளத் தேவையில்லை
நாங்களாகவே
அடிமைகளாக இருப்போம்

 .........................................


இருந்தால ;
முழுமைகள் மூலையில்தான்
இருக்கும்


....................................................




ஐரோப்பியர்கள் சிந்தனை
சூரியக் குடும்பத்தையும்
கடந்து விட்டது
ஆனால் நம்முடைய சிந்தனை
நமது குடும்பத்தைக்கூட
தாண்ட மறுக்கிறது…


..................................................





மனிதன் கும்பலில்
மனித இனமோ தனிமையில்.


.............................................


இந்தியாவிலேயே மிகவும்
தெளிவாக இருப்பது
குழப்பம் ஒன்றுதான்


..........................................



இளைஞர்கள் ஆட்சிக்கு
வருவதற்குள் இளமை
போய்விடுகிறது
ஆட்சி இளைஞர்களுக்கு
வருவதற்குள் ஆட்சியும்
போய்விடுகிறது



...........................................


மிகவும் நீண்டதூரம்
பயணம் செய்தாக வேண்டும்
ஓர் ஆரம்பத்தை
அடைவதற்கு…



................................................


தத்துவத்தில் காவிகள்
நடை முறையில் பாவிகள்


...................................................



காலத்தின் தீர்ப்புக்கு
மேல் முறையீடு இல்லை


...........................................



காலப் போக்கில்
மாறாதது எதுவும் இல்லை
கலப்பையைத் தவிர




...........................................................



கத்தியின்றி ரத்தமின்றி
வாங்கப்பட்ட சுதந்திரம்
கத்தியின்றி ரத்தமின்றியே
கொல்லப் படுகின்றது

...........................................................



மடிசுரப்பது
கன்றுகளுக்காக
மாடுகளுக்காக அல்ல


................................................................

மேற்கண்ட தெருவாசகங்கள்
வழக்குரைஞர் யு.கே.செங்கோட்டையன் அவர்களின்
தெருவாசகம்   என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது .



நூலைப்பற்றி  சேலம் சு.துரைசாமி

புதுக்கவிதை வரிசையில் தெருவாசகம் ஒரு புதிய அணுகு முறையை , ஒரு புது யுக்தியை ,அறிமுகம் செய்கிறது.இது போன்ற படைப்புகள் அண்மைக் காலத்தில் நிறைய வெளிவருகின்றன. காரணம் என்ன?.பொழுது போக்கிற்கா? நண்பர்களோடு ரசித்து சுவைக்கவா? இல்லவே இல்லை.நாட்டின் அரசியல் சமூகம் பொருளாதாரம் கலை பண்பாடு ஆக அனைத்துத் துறைகளிளும்
ஊழல் உருக்குலைவு ஒழுக்கச் சிதைவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த சீரழிவு தடுத்து நிறுத்தப்படவில்லை. சாதாரண ஏழை எளிய மக்களை மையமாகக் கொண்டு அனைத்துத் துறைகளிலும் சம  உரிமை,சம வாய்ப்பு ,சம  வாழ்வு என்ற நிலையை ஏற்படுத்த உருப்படியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. சமுதாயத்தில் யாருக்கு உடனடியானமாறுதல் தேவையோ அவர்கள் எவ்வித சலனமுமின்றி பற்றற்ற முனிவர்களைப் போல் மௌனமாக இருக்கிறார்கள்.நெஞ்சு பொறுக்காத இந்த நிலையில் சமூக மாற்றத்தைக் கோருவோரின் வேதனை வெளிப்பாடுகளே இந்த அறை கூவல்கள். காதில் வந்து அறைவதைப் போல இந்த அதிரடிகளின்
வலிமை இருக்கிறது. கல்லான மனதையும் ஆழத் துளைக்கும் ஆற்றல் இருக்கிறது. இன்னும் வேறு என்ன வேண்டும்? சமுதாயமே சீர்கெட்டு கிடக்கிறது; கவிதையில் சீர் இல்லை என்றால்
குடியா மூழ்கிவிடும்!




நூலைப்பற்றி வழக்குரைஞர். கி.சிதம்பரன்

எனது நண்பன் யு.கே.செங்கோட்டையன் பெரியார் மாவட்டம் ஈரோட்டில் வாழும் சிறந்தவழக்குரைஞர். எங்கள் நகரத்து இளைஞர்கள் இவரின் சிந்தனைகளினால் ஈர்க்கப்பட்டு அதன்மூலம் ஏராளமான விஷயங்களை இவரிடம் கற்றுக் கொண்டனர். இதை இந்த நகரம் மட்டுமேதெரிந்து கொள்வதைவிட தமிழகம் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன.அவ்வகையில் இவருடைய எழுத்துக்கள் நூலாகி உங்களிடம் வந்துள்ளது.ஒரு நூல் படிக்கிற வாசகனை எந்த வகையிலாவது பாதிக்க வேண்டும். அப்போதுதான் அந்த நூல் ஆசிரியருக்கு வெற்றி உருவாக்கும். தெருவாசகத்தில் இருக்கும் கருத்துக்கள் சமுதாயத்தை அதன் அவலத்தை ஈட்டியாய் குத்துகிறது. மக்களின் ஒட்டு மொத்த எண்ணத்தையும்
கவிதையாக்க முடியாது ஆயினும் - இவரின் எண்ணத்தின் வெளிப்பாடு படிக்கிற வாசகனை எந்த வகையிலாவது பாதிக்கச் செய்யும்.
அது இவர் மேலும் சில நூல்களை எழுத உதவி செய்யும். அவ்வகையில் எதிர்கால சந்ததியினருக்கு நடப்பு உலகினை எழுத்தின் மூலம் ஏராளமாய் சொல்ல வேண்டும் என இவரை வாழ்த்துகிறேன். வழக்குரைஞர் பணியோடு இலக்கியப் பணியையும் ஆற்றும் இவருக்கு வாசகர்கள் நல்ல ஆதரவைத் தருவார்கள்.



நன்றி  யு.கே.செங்கோட்டையன் .


.
Download As PDF

55 கருத்துகள் :

Unknown சொன்னது…

ஒவ்வொன்றும் நல்ல தெ(தொ)ரு வாசகங்கள்!

ADMIN சொன்னது…

அடேயப்பா.. நிறைய கருத்துள்ள வரிகள்.. அனைத்தும் யு.கே. செங்கோட்டையன் அவர்களின் படைப்புகளா? அருமை. எழுதிய ஆரியருக்கும், பகிர்ந்த உமக்கும் நன்றி.. !!

நல்லதொரு படைப்பையும், படைப்பாசிரியரையும் அறிந்துகொண்டோம்.

ADMIN சொன்னது…

நன்றி திரு நண்டு@நொரண்டு அவர்களே..!!

கோகுல் சொன்னது…

இது அது என குறிப்பிட முடியவில்லை
எல்லாமே ஒவ்வோர் உணர்வை தாங்கி நிற்கிறது.
நண்பருக்கும் ,பகிர்ந்த உங்களுக்கும் நன்றி!

Lakshmanan17 சொன்னது…

அருமையான பதிவுகள். நல்ல சிந்தனை வளம். செங்கோட்டையனுக்கு வாழ்த்துகள்.
தங்களுக்கும் கூட.

சக்தி கல்வி மையம் சொன்னது…

மக்கள்
நின்றால் கம்பம்
எழுந்தால் பூகம்பம்
/// ரசித்தேன்..

M.R சொன்னது…

வாவ் அனைத்தும் அருமை ,பொருள் நிறைந்தது நண்பரே

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அத்தனையும் திருவாசகங்கள் ஐயா...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இரண்டு மூன்று பதிவாககூட போட்டிருக்கலாம்...

அத்தனையும் அழகு...


குறிப்பாக...

////
காலப் போக்கில்
மாறாதது எதுவும் இல்லை
கலப்பையைத் தவிர

//////

இதை மக்கள் உணரும்போது விவசாயத்திற்கு நிளங்கள் இருக்குமோ இருக்காதோ தெரியவில்லை...

shanmugavel சொன்னது…

//பிற மாநிலங்கள் இருப்பது
தேசப் படத்தில்
தழிழகம் இருப்பது

திரைப் படத்தில்//

தழிழகம் மற்றும் சில எழுத்துப்பிழை இருக்கிறது.கவனியுங்கள்.தெருவாசகம் புது முயற்சியாய் சிந்திக்க வைக்கிறது.அருமை.

குறையொன்றுமில்லை. சொன்னது…

எல்லாமே நல்லா இருக்கு. எனக்கு மிகவும் பிடித்தது.

படிப்பதற்கு மட்டுமே
கற்றுக் கொள்கிறோம ;
ஆனால ;
கற்றுக் கொள்வதற்காக
படிப்பதே இல்லை !

ராஜி சொன்னது…

பிற மாநிலங்கள் இருப்பது
தேசப் படத்தில்
தழிழகம் இருப்பது

திரைப் படத்தில்
>>>
இதுதான் டாப்பு. அருமையான புத்தகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி

ராஜி சொன்னது…

த ம 9

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ஆழமாக சிந்திக்க வைக்கும் தெருவாசகங்கள்.அல்ல! அல்ல!புதிய திருவாசகங்கள்! படித்ததோடு பகிர்ந்ததற்கும் நன்றி.

Admin சொன்னது…

அத்தனை கவிதைகளும் அற்புதம்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எல்லாமே அருமை. அதிலும்

"கறை படாத கை
இயற்கை"

...இது அருமை Sir!

சம்பத்குமார் சொன்னது…

//வெற்றி பெறுபவன்
அரசியல்வாதி
தோல்வியடைவது
அரசியல்//

நச் பஞ்ச்

ஒவ்வொன்றும் அருமை..

Admin சொன்னது…

ஆசிரியருக்கு வாழ்த்துகள்..

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

ம்...

பால கணேஷ் சொன்னது…

பல உணர்வுகளை எழுப்பிய தெருவாசகங்கள். எதையும் சுமார் என்று ஒதுக்கிவிட முடியாமல் அருமையாக இருக்கிறது. அரசியல்வாதிகள் வென்றார்கள் தோற்றது அரசியல் என்ற வாசகம் அருமை. இதையே அரசியல்வாதிகள் வென்றார்கள் தோற்றது பொதுஜனங்கள் என்றும் படிக்கலாம். ‌நண்பர் செளந்தர் சொன்னமாதிரி இரண்டு பதிவுககானமேட்டர்களை கொடுத்து திக்குமுக்காட வைத்து விட்டீர்கள். ரசிக்க வைத்த பகிர்வுக்கு நன்றி!

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

அருமை!
காரஞ்சன்

SURYAJEEVA சொன்னது…

தலைப்பை பார்த்ததும் ஒரு நிமிடம் யுகபாரதி எழுதிய தெருவாசகமோ என்று ஓடி வந்தேன்... ஆனால் இது வேறு தெருவாசகம்... அது என்னவோ தெரியவில்லை திருவாசகத்தின் மீது வராத மரியாதை, தெருவாசகத்தின் மீது வருகிறது.. என் இனமடா நீ.. என்பதாலா

ஹேமா சொன்னது…

எதையென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.எல்லாமே கருத்துச் சொல்லுது.ஈழம் உறைத்தது !

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

வெற்றி பெறுபவன்
அரசியல்வாதி
தோல்வியடைவது
அரசியல்////

உண்மை தான்....

வாசகங்கள் அனைத்தும் முத்துக்கள்...
பகிர்வுக்கு நன்றி....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பிற மாநிலங்கள் இருப்பது
தேசப் படத்தில்
தழிழகம் இருப்பது

திரைப் படத்தில்
>>
இதுல எதாவது உள்குத்து இருக்கா?

மகேந்திரன் சொன்னது…

அருமையான வாசகங்கள் நண்பரே.
பகிர்வுக்கு நன்றி.

Unknown சொன்னது…

இரண்டு மூன்று வரியில் நச்சென்று உள்ளது...

தனிமரம் சொன்னது…

கவிதை முத்துக்கள் சிறப்பு அதுவும் கம்பம் மிகவும் வேதனை நிலையில் ஈழம் கொடுமையின் உச்சத்தில் . நன்றி நல்ல ஒரு தெருவாசகத்தை வலையில் வலம் வரவிட்டதற்கு!

MyKitchen Flavors-BonAppetit!. சொன்னது…

Arumaiyana Theru Vasagam Vakkil Sir!.Vazhthukkal

சுதா SJ சொன்னது…

எல்லாமே அசத்தல் ரகம் பாஸ்.... தொகுப்புக்கு தேங்க்ஸ்.... ஈழம் , அரசியல்வாதி, கறைபடியா கை இவை நான் ரெம்ப ரசித்தவைகள் :)))

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - அருமையான குறுங்கவிதைகள் - நாட்டின் நிலையினை வெளிப்படுத்தும் ஆதங்கக் கவிதைகள். நன்று நன்று - புத்தகம் எங்கே கிடைக்கிறது ? ஈரோட்டில் கிடைக்குமா ? மிக மிக இரசித்தேன் -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Yaathoramani.blogspot.com சொன்னது…

கவிதைகள் அனைத்தும் அருமையாக
ரசிக்கும் படியாக மனதை பாதித்துப் போகும்படியாக உள்ளது
நல்ல நூல் அறிமுகம் மனம் கவர்ந்த ப்திவு
தொடர வாழ்த்துக்கள் த,ம 17

kankaatchi.blogspot.com சொன்னது…

ஆத்திகம் தொழுநோய்
ஆத்திகம் நம்மை இறைவனை
தொழ வைக்கும் நோய்
அதனால் நன்றே விளையும்

நாத்திகம் வாத நோய்
இந்த உலக சேற்றில் தள்ளி
மீள வழியின்றி
அது நம்மை செயலிழக்க வைக்கும்

எது வேண்டும் என்பதை
நீயே முடிவு செய்
இவ்வுலகில் உன் வாழ்வு முடிவதற்குள்

இரண்டிலும் போலிகள் உண்டு
போலிகளிடம் சிக்கினால் பொலிகடாதான்
எச்சரிக்கை தேவை

சின்னப்பயல் சொன்னது…

அருமை...பகிர்வுக்கு நன்றி.
நன்றி நண்டு..!

சசிகுமார் சொன்னது…

பதிவு சூப்பர் சார்.....

G.M Balasubramaniam சொன்னது…

எல்லாமே அருமையான குறுங்கவிதைகள். சாதாரணமாகவே மனிதன் எதிலும் திருப்தி அடைவதில்லை. ஆதங்கங்களும் அதிகம் .அவற்றைப் பிரதிபலிக்கும் கவிதைகளும் எழுத்துக்களும் பரவலாக ரசிக்கப்படும். அவையே அழகாக இருந்துவிட்டால் வரவேற்புக்கு கேட்கவா வேண்டும். ?எழுதியவருக்கு வாழ்த்துக்கள். பகிர்ந்ததுக்கு உங்களுக்கு நன்றி.

கும்மாச்சி சொன்னது…

"தோல்வி
கோழைக்கு ஆணி
வீரனுக்கு ஏணி"

தெருவாசகங்கள் ஒவ்வொன்றும் அருமை. பகிர்ந்ததற்கு நன்றி எஸ்.ரா.

ஓசூர் ராஜன் சொன்னது…

nalla noolai arimugap patuthiyamaikku nandri!

N.H. Narasimma Prasad சொன்னது…

பதிவு ரொம்ப நீளமாக இருக்கிறதென்று நினைத்தேன். ஆனால் இந்த பதிவின் கருத்துக்கள் மிக 'அழகாக' இருக்கிறதென்று தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தனிமை
தென்னந் தோப்பில்
ஒற்றை பனைமரம//

எல்லாமே அசத்தல் ரகம், எனக்கு அதில் மிகவும் பிடித்தது மேலே உள்ள வாசகம், அது ஆயிரம் கதை சொல்கிறது!!!!!!

துரைடேனியல் சொன்னது…

தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. குறிப்பாக சமூக உணர்வு என்னை வியப்புக்குள்ளாக்குகிறது. நாம் பிறந்த இந்த மண்ணுக்கு இந்த மனுக்குலத்துக்கு நம்மால் இயன்றதை செய்யவேண்டும். அப்போதுதான் மனிதனாக பிறந்ததுக்கு அர்த்தம் ஆகும். தொடரவும்.

- அன்புடன் சகோ. துரை டேனியல்.

துரைடேனியல் சொன்னது…

Tamilmanam 24.

Menaga Sathia சொன்னது…

அருமை!!

RAMA RAVI (RAMVI) சொன்னது…

அருமையான கருத்துக்கள்.பகிர்வுக்கு நன்றி.

Unknown சொன்னது…

சிந்திய முத்துக்கள் அனைத்தும் சீரிய சிந்தனையின்
சத்துக்கள்!

புலவர் சா இராமாநுசம்

Unknown சொன்னது…

ஒவ்வொன்றும் கலக்கல் பாஸ்!

//வெற்றி பெறுபவன்
அரசியல்வாதி
தோல்வியடைவது
அரசியல்//
எனக்கு மிகப்பிடித்தது! இங்கும் பொருந்தும்!

Riyas சொன்னது…

எல்லாமே அசத்தல்..

kowsy சொன்னது…

மிக்க நன்றி தேடிப்பெற்ற செல்வங்களைப் பிறரும் அனுபவிக்கச் செய்யும் தாராள மனப்பாங்கு மிகவும் பிடித்திருக்கின்றது. அருமையான சிலவரி பெரிய செல்வங்கள் . வாழ்த்துகள்

Mahan.Thamesh சொன்னது…

சார் அத்தனையும் சிறந்த மணி வாசகங்கள் போல் உள்ளன . எழுதிய ஆசிரியருக்கும் . பிறர் அறிய செய்த உங்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும் .

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்ல பகிர்வு நண்பா..

ananthu சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்தது...சுதந்திரம்

##இந்தியாவில் வியாபாரம்
செய்ய வந்தவர்களிடமிருந்து
இந்தியாவை வியாபாரம்
செய்ய வந்தவர்கள் பெற்றது## ... ஆசிரியருக்கும் உங்களுக்கும் நன்றி ...!

kaialavuman சொன்னது…

நல்ல அறிமுகம் நன்றிகள்.

pazha.chandrasekaran சொன்னது…

நல்ல கவிதை.நல்ல சிந்தனைகல்.வாழ்த்துகள்
பழ.ச்ந்திரசேகரன்

செங்குட்டுவன் சொன்னது…

மனிதன்
இயற்கையிலேயே
மிகவும்
செயற்கையானவன்
அருமை நல்ல சிந்தனை

ezhil சொன்னது…

எல்லாமே நல்லாயிருக்கு....

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "