புதன், 15 செப்டம்பர், 2010

பன்றி மாமிசம் சாப்பிட்ட புத்தர் - ராகுல்

எந்த ஜீவனுக்கும் இம்சை செய்யலாகாது , என்று புத்தநெறி பரப்பிய புத்தருக்கா இந்த விருந்து நடந்ததாகச்சொல்வது ! எப்படிப்பொருந்தும் ! ஆனால் ,ராகுல் தனது இந்த ஏட்டை ஒரு ஆராய்ச்சி நூல் என்று தெரிவிக்கிறார் .(கைதி எண் 6342 -167. 07/04/64 ). என்றார் 'சிந்து முதல் கங்கை வரை' என்ற நூலில்
''புத்தர் ,புத்த பிச்சுக்களோடு பன்றி மாமிசம் சாப்பிட்டார்'' என்று இராகுல் சாங்கிருத்தியாயன் சொல்லியிருப்பதைப்படித்த அண்ணா  .
இதை அண்ணா புத்தத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கு ஆதரவாக கூறுவர் .

குறுகிய கண்ணோட்டம் எங்களுக்கு இல்லை .எமது கண்ணோட்டம் பரந்து,விரிந்து இருப்பது எனக் காட்டிக்கொள்ள விரும்பி சுயமரியாதை இயக்கத்தவரைக் கம்யூனிஸ்டுகள் காட்டிக்கொடுக்கின்றனர் .பாகிஸ்தான் பிரிவு கூடவே கூடாது என்றவர்கள் பிரிவினை உறுதிப்பட்டதும் அதற்கு ஆதரவு என்றனர் .இது பற்றி ஜின்னா கூறினார் .''பாகிஸ்தான் திட்டத்துக்கு ஆதரவு திரண்டு வராதிருந்த கட்டத்தில் ,அதன் நியாயத்தை இந்த யோக்கியர்கள் மதித்து ஏற்றுக்கொண்டிருந்தால் ,நான் இந்த கம்யூனிஸ்டுகளுக்கு நன்றி செலுத்தியிருப்பேன் .ஆனால் ,அப்போது என் மீது கல்வீசினர் .இவர்கள் பைத்தியக்காரர்கள்.என் நன்றிக்கு உரியவர்கள் அல்ல ''.
(அண்ணாவின் கடிதங்கள் 18.09.1953)

''நான் லுங்கி கட்டாத முஸ்லீம் ,சிலுவை அணியாத கிறித்துவன் ,திருநீறு பூசாத இந்து '' - அண்ணா  .

விருதுநகர் சங்கரலிங்கனார்  ''தமிழ் நாடு'' என சென்னை இராச்சியத்திற்கு பெயர் சூட்டவேண்டும் என போராடி மறைந்தார் . அண்ணா தான் முதல்வரானதும் முதல் வேலையாக ''தமிழ்நாடு'' என பெயரிட்டு அன்னாரின் ஆசையை நிறைவேற்றினார். ஒட்டுமொத்த தமிழர்களின் ஆசைகளையும்  நிறைவேற்றினார்.

அண்ணாவை படித்தவைகளில் படிந்தவைகள் .
.Download As PDF

12 கருத்துகள் :

velusamymohan சொன்னது…

Anna pirantha naal thahaval nalla irukku Nandu.

மதுரை சரவணன் சொன்னது…

//''நான் லுங்கி கட்டாத முஸ்லீம் ,சிலுவை அணியாத கிறித்துவன் ,திருநீறு பூசாத இந்து '' - அண்ணா //

பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையான தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்... பகிர்வுக்கு நன்றி..

Chitra சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

அண்ணாவினை நினைவு கூர்ந்தது - அவரது எழுத்துகளைப் படித்த போது படிந்தவை அத்தனையும் அருமை. கடலிலே சிறு துளிகள் மட்டுமே எடுத்து தலையில் தெளித்துக் கொள்வோம். அது மாதிரி இச்சிறு இடுகை.

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

ceekee சொன்னது…

Vadavar aathikkam, Maarvadiyin koduram, madhiya arasin thamizhar virodha poku,Thamizh desiyam kuritha Annavin karuthukkal idam peravillaiye ..

Pagutharivu pagalavan Periyaarai naalai arimugapattuthungal indraiya thalaimuraikku

சசிகுமார் சொன்னது…

//''நான் லுங்கி கட்டாத முஸ்லீம் ,சிலுவை அணியாத கிறித்துவன் ,திருநீறு பூசாத இந்து '' - அண்ணா .//

அருமை நண்டு

SARAVANA BALAAJI சொன்னது…

nice article

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

நல்ல பகிர்வுங்க.....நன்றி.

விடுத‌லைவீரா சொன்னது…

அருமையான தகவல்கள். அறியப்படாதா சில நல்ல தகவல்களை தொடர்ந்து எழுது வருவதை அறிந்து மகிழ்கிறேன் அய்யா. நன்றி நட்புடன் வீரா அரபுஎமிரேட்ஸ்.

ஹேமா சொன்னது…

நல்ல நினைவலைகள்.பகிர்ந்து அறியத்தந்தீர்கள்.நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி

velusamymohan @

மதுரை சரவணன் @

Starjan ( ஸ்டார்ஜன் ) @

Chitra @

cheena (சீனா) @

ceekee @

சசிகுமார் @

SARAVANA BALAAJI @

நித்திலம்-சிப்பிக்குள் முத்து @

விடுத‌லைவீரா @

ஹேமா

அவர்களே

மிக்க நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "