ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

கடவுள் பெரிசா ? காசு பெரிசா ?
நண்டு : கடவுள் பெரிசா ? காசு பெரிசா ?

நொரண்டு :அது தான் பலபல பேர் கேட்டு பலபல பேர் பலபல பதில் சொல்லி சொல்லி சலித்து புளித்துப்போனதை இப்ப கேக்கர....

நண்டு : இன்னும் கடவுளும்,காசும் சலித்துப்புளித்துப்போகாமல் இருப்பதனால் தான் .மேலும் சில சந்தேகங்களும் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது அதனால் தான்...

நொரண்டு :என்ன சந்தேகம் ....?

நண்டு : மாற்றம் என்பதைத்தவிர மற்ற அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்கின்றாயா?

நொரண்டு :....ம்........ம்.....அதை வைத்துக்கொண்டு உனது கருத்தை கூறு .

நண்டு : அப்படினா கடவுளும்,காசும் ஏன் இன்னும் மாறாமல் இருக்கு ?

நொரண்டு :அட மண்டு , அப்ப இருந்த கடவுளும் ,காசும் இப்போது இல்லையே.மனிதன் தன்னை அச்சுறுத்தும் விசயங்கள் இவை, இவை அவ்விசயத்தில் நாம் கவனத்துடன் இருக்கவேண்டும் இல்லையெனில் நாம் அழிந்து போவோம் என்னும் கருத்தை வெளிப்படுத்தும் வடிவமாக கடவுளை படைத்தான் .பின் நாம் அதனை மண்டியிட்டால் ஒன்றும் செய்யாது என்று தொடங்கி ,பூசை,பிரார்த்தனை ,வணங்குமுறை என ஆரம்பித்தான் . பின் வாழ்வு நிலை ஆனபொழுது அது பயக்கவழக்கமானது .அப்பயக்கவழக்கம் படிப்படியாக கேள்வி கேட்காமல் தொடர்த்து மேலும் பல இடைச்செருகல்கள் சேர்ந்து நிறுவனமானது .அதில் கடவுள் நிலையாகி தான் படைக்கப்பட்டது என்பதனை மறைத்து தன்னால் படைக்கப்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்டது .
காசும் அப்படித்தான் பாதுகாப்புமிக்க பண்டமாற்று முறையில் வளர்ந்து பின்
படிப்படியாக எளிய வடிவெடுத்து அது அவனை பசியில் அலையவிட்டதாலெ அதன் மீது அதிகம் ஆசை கொண்டு சுரண்டலினால் ஓரினத்தின்  பெருக்கமானது.

நண்டு : கடவுளும்,காசும் இல்லாமல் வாழ முடியாதே ?

நொரண்டு :ஏன் ? கடவுளும்,காசும் இல்லாமல் ஆதிமனிதன் வாழவில்லையா ..? மனிதனுக்கு விபத்தாக வந்ததுதான் கடவுளும்,காசும் .இன்று ஆனேக உயிரினங்கள் கடவுளும்,காசும் இல்லாமல் தான் வாழ்கிறது. மனிதன் படைத்தான் அதில் வாழ்கிறான் .உங்க வீட்டு நாய்க்கு  கடவுளும்,காசும் தேவையில்லே தானே.

நண்டு : நான் மனிதனுக்கு கேட்டேன்......

நொரண்டு : நான் உலகைப்பற்றியும் ,ஒட்டுமொத்த உயிரினங்களைப்பற்றியும் சிந்திக்கிறேன் .

நண்டு :மனிதன் மட்டும் தானே முக்கியம்...

நொரண்டு :உலகில் மனிதன் மட்டும் இருந்தால் மனிதன் மட்டும் தானே முக்கியம் என சொல்லலாம் . அப்படியில்லையோ உலகம் ....

நண்டு :அப்படியெனில்.....

நொரண்டு :கடவுளால் மனிதனுக்கு பாதுகாப்பும் ,நிறைவும் கிடைக்கிறது என்பதனின்று அது
மனிதனுக்கு மட்டுமே படைக்கப்பட்ட ஒன்று என்றாகிறது .அப்படியாயின் பிரபஞ்சத்தை படைத்தான்
என கூறுவது எங்கனம் ?

நண்டு : என் கேள்வி கடவுள் பெரிசா ? காசு பெரிசா ? என்பதுதான்

நொரண்டு :இல்லாத கடவுள் பெரிசா , இருக்கும் காசு பெரிசா என்றுதானே கேட்கிறாய்?.
திறமையுள்ளது பிழைக்கும் .காசை அடைய அவ்வழிதான் . அதனை போதுமான
அளவு அடைந்த பின்னும் பேராசையால் மேலும் மேலும் சேர்த்து அல்லது இழந்து
பரிதவிக்கும் மனிதன் மனநோயாளி ஆகிறான் .தனது திறமையால் எதுவும் அல்ல வேறு சக்தியால் அது தான் இயக்குகிறது என்ற மனநோயில்
தன்னை இழக்கின்றான்.மனநோய் மற்றவர்களால் அங்கிகரிக்கப்படுகின்றன.வளர்க்கப்படுகின்றன அதனால் தானும் தன்னை மனநோயாளியாகவே ஆக்கிக்கொளகிறான் . உலகில் அனைவரும் ஏதோ ஒருவகையில் மனநோயாளிகளாகவே உள்ளதாக கூறும் அளவிற்கு உலகம் ஆக்கப்பட்டுவிட்டது .

மனநோய் குணமானால் கடவுள் பெரிசா ? காசு பெரிசா ? என்ற கேள்வியே இல்லாமலபோய்விடும்.
மனநோய்க்கு மருந்து சுரண்டலற்ற வாழ்க்கை முறையே .அது வரை மனநோய் கிருமி ' கடவுளே' பெரிசு .

நண்டு :சுரண்டலற்ற சமூகத்தை கற்பனை செய்து பார்க்கின்றேன்.

அப்போது கடவுளும் , காசும் ......என்னாகும்(அ.பொ ...பயக்கவழக்கம் -பயந்து வாழும் பழக்கம் .)


. Download As PDF

7 கருத்துகள் :

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Present

நந்தா ஆண்டாள்மகன் சொன்னது…

////மனநோய் குணமானால் கடவுள் பெரிசா ? காசு பெரிசா ? என்ற கேள்வியே இல்லாமலபோய்விடும்.
மனநோய்க்கு மருந்து சுரண்டலற்ற வாழ்க்கை முறையே .அது வரை மனநோய் கிருமி ' கடவுளே' பெரிசு///உண்மை நண்பரே

விடுத‌லைவீரா சொன்னது…

உண்மையான கருத்து. படித்த பின்பாவது திருந்துவார்களா? இந்த மானங்கெட்டவர்கள்..

DrPKandaswamyPhD சொன்னது…

நண்டு, என்னமோ சொல்றீங்க, இந்த மர மண்டைக்கு ஒண்ணும் புரிய மாட்டேங்குதே.

சசிகுமார் சொன்னது…

முன்பு- மனிதனால் படைக்க பட்டது கடவுள் .
தற்போது - மனிதனை படைத்தது கடவுள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் , பின்னூட்டத்திற்கும்
மிக்க நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் @

நந்தா ஆண்டாள்மகன் @

விடுத‌லைவீரா @

DrPKandaswamyPhD @

சசிகுமார்

அவர்களே

மிக்க மகிழ்ச்சி .

Jayadeva சொன்னது…

Have you ever read Srimad Bhavad Gita Fully? If not kindly read it with authentic commentary from : http://www.asitis.com/1/1.html

I agree with you, that cheaters are making money in the name of religion, yet genuine guides to know God is also out there. You should use your intelligence to find out a genuine Guru. Gita is mind boggling, it is not made by men, you will understand this truth if you go through it. Best of Luck.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "