சனி, 11 செப்டம்பர், 2010

அன்னியம்

.


வேகமாக

புன்முறுவலிடும்

கடக்கும் முகம்

கடந்த என்னை

சவுக்கியமா

அம்மா அப்பா

கல்யாணம் குழந்தைகள்  தொழில்

என்ன ஏது என

பரிமாறிக்கொண்டது

சில கேள்விகளை

சில நிமிடங்களில்

அவசர நிமித்தத்தில்

பாசப் பிணைப்புடன் .

பத்து வருடத்திற்கு முன்

இருபது வருடம்

பக்கத்து வீட்டிலிருந்து

எந்த கணமும்

புன்முறுவல் பூக்காத

மனிதர் .


. Download As PDF

9 கருத்துகள் :

Chitra சொன்னது…

பத்து வருடத்திற்கு முன்

இருபது வருடம்

பக்கத்து வீட்டிலிருந்து

எந்த கணமும்

புன்முறுவல் பூக்காத

மனிதர் .


......ம்ம்ம்ம்ம்ம்...... அப்படித்தான் சில நேரங்களில் ஆகி விடுகிறது.

நந்தா ஆண்டாள்மகன் சொன்னது…

வாழ்க்கை துரத்துகிறதே!! இயந்திரமாகிப்போன இந்த உலகத்தில்

goma சொன்னது…

எனக்கும் அப்படி ஒரு பக்கத்து வீடு ....இப்பொழுதெல்லாம் ,
பதில் புன்னகையைக் கூட எதிர்பார்க்காத கட்டத்துக்கு வந்தால்தான் ந்ல்லது.

புன்னகைக்காதவர்களைப் பார்த்தால் ,பாவம் பல்வலியோ,என்று பரிதாபப்படக் கற்றுக் கொண்டால்தான் பிழைப்போம்

ரோகிணிசிவா சொன்னது…

//
புன்னகைக்காதவர்களைப் பார்த்தால் ,பாவம் பல்வலியோ,என்று பரிதாபப்படக் கற்றுக் கொண்டால்தான் பிழைப்போம் //rolling on the floor laughing

Jeyamaran சொன்னது…

*/பத்து வருடத்திற்கு முன்

இருபது வருடம்

பக்கத்து வீட்டிலிருந்து

எந்த கணமும்

புன்முறுவல் பூக்காத

மனிதர் ./*

உண்மையான கருத்துகள் அசத்துங்க

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

இவை எல்லாம் தவிர்க்க இயலாதவை - பக்கத்து வீட்டில் இருக்கும் போது புன்னகைத்தால் மட்டும் போதும். விசாரிக்க வேண்டாம் - அனைத்தும் தெரிந்து விடும். ஆனால் விலகியபின் - புனக்கைத்து விசாரிக்க வேண்டும். மனித இயல்பு.

ஆனால் 20 ஆண்டுகளாக புன்னகைத்தாவரை புன்னகைத்து புன்னகைக்க வைத்திருக்கலாமே நண்பா - இயல வில்லையா

நல்வாழ்த்துகள் நண்பா நண்டு
நட்புடன் சீனா

velusamymohan சொன்னது…

Nice,but this is the modern world where you have to lead life like this.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Nice Post

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி

Chitra @

நந்தா ஆண்டாள்மகன் @

goma @

ரோகிணிசிவா @

Jeyamaran @

cheena (சீனா) @

velusamymohan @

T.V.ராதாகிருஷ்ணன்

அவர்களே


மிக்க மகிழ்ச்சி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "