Thursday, June 16, 2011

நெஞ்சு கனக்குதம்மா



நெஞ்சு கனக்குதம்மா
நின்  மடி  மண்

நானும்  பேடி வாழுரேன்
வாட
தமிழ் நாட்டில் இங்க

கொஞ்சச்சோறு
மிச்சம்  வச்சாலும்
கொண்டு போகுது மனசு அங்க

வெந்த சோறு கிடைக்குதா ?
வெறு வயிரா தூங்குதா ?

பட்டாசு வெடிக்கயிலே
பதறவில்லை என் மனசு
சுட்ட உடலுக்கு சூடு தான் உரைக்குமா ?

நான் இங்க நல்லாயிருக்கேன் ?
நம்ம டோமி அங்க நல்லாயிருக்கா ?

காத்துல தூது விட்ட
இக்கவித  கிடைச்சா

பதில் கூறும்மா
உடனே
பதில் கூறு

நான்
இங்க  காத்திருக்கேன்
உன் இருப்ப
உசிரா வச்சு .

















.
Download As PDF

12 comments:

நிரூபன் said...

நாம் வாழுமிடங்கல் வேறுபட்டாலும், எம் உணர்வுகள் எப்போதும் ஒரே இலட்சியக் கோட்டில் தான் செல்கின்றன என்பதற்கு சாட்சியாய் உங்களின் கவிதை.

Lakshmi said...

பிரிவின் துயரம் நன்கு சொல்லி இருக்கீங்க.

ஹேமா said...

கேடுகெட்ட உயிரை மட்டுமே புலம்பெயர்ந்து காத்து வச்சிருக்கிறோம்.மனம் முழுதும் மண்ணில்தான்.வேறேதுமில்லை !

கந்தசாமி. said...

///ஹேமா said...

கேடுகெட்ட உயிரை மட்டுமே புலம்பெயர்ந்து காத்து வச்சிருக்கிறோம்.மனம் முழுதும் மண்ணில்தான்./// என் உணர்வுகளும் அதே தான் சகோதரி , கையால் ஆகாதவர்களாக..

Mahan.Thamesh said...

எங்கிருந்தாலும் எம் நினைவுகள் எம் மண்ணிலே தான் நிக்கின்றன
பலதரப்பட்ட வினாக்களோடு

Mohamed Faaique said...

//எங்கிருந்தாலும் எம் நினைவுகள் எம் மண்ணிலே தான் நிக்கின்றன
பலதரப்பட்ட வினாக்களோடு//

உண்மைதான்...

இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகண போட்டோக்கள் 15-06-2011

http://faaique.blogspot.com/2011/06/normal-0-false-false-false-en-us-x-none.html

cheena (சீனா) said...

அன்பின் நண்டு - நெஞ்சு உண்மையிலேயே கனக்குது - என்ன சொல்வதெனத் தெரியவில்லை - ம்ம்ம்ம்ம்ம் - நட்புடன் சீனா

Ramani said...

மனம் சுட்டுப்போகிறது உங்கள் கவிதை
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
தீக்கங்குகளாய்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

உயிரை உரையவைக்கும் தூது...

தங்கள் வார்த்தைகள் காயத்துடன் எங்களையும் காயப்படுத்துகிறது...
வலியின் வீரியம் கவிதையில் தந்து வியக்க வைத்தீர்...

கவி அழகன் said...

கண்களில் கண்ணீர் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ராஜ நடராஜன் said...

உணர்வோடு கலந்து கொள்கிறேன்.

Rathnavel said...

நல்ல கவிதை.
படிக்க வேதனையாக இருக்கிறது.

Post a Comment

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "

Bloggers.com

Nandunorandu - Find me on Bloggers.com