புதன், 10 மார்ச், 2010

நம்பிக்கை விதை என் கைகளில் ...

.


.

எங்கள் தாய் நாட்டைச் சுட்டெரியுங்கள்
எங்கள் கனவுகளைப் பொசுக்கி சாம்பலாக்குங்கள்
எங்கள் கவிதைகளை அமிலத்தில் மூழ்கடியுங்கள்
எங்கள் சகோதரர்களைப் படுகொலை செய்து
அவர்களின் ரத்தச் சுவடுகளை
மண் தூவி மறையுங்கள்.
எமக்குச் சொந்தமான அனைத்தையும் ,
எமது சுதந்திரமான இயற்கையை
எங்கள் மண்ணின் தொன்மை மரபுகளை,
உங்கள் அதிநவீனத் தொழில் நுட்பங்களால்
வாயடைத்து...குரல்வளை நெறித்துக்
கொல்லுங்கள்.
அழியுங்கள்...அழியுங்கள்.
எங்கள் புல்வெளிகளை
எங்கள் வளமண்ணை
அழியுங்கள்
எங்கள் வயல்வெளிகளை
எங்கள் கிராமங்களை
எங்கள் முதாதையர் கட்டிய வீடுகளை
எங்கள் காவியங்களை
எங்கள் தொன்மை மரபு விதிகளை
எல்லாம் தரையோடு தரையாக
நசுக்கி அழியுங்கள்.
எங்கள் பச்சை மரங்களை
எங்கள் சமத்துவ வாழ்வை
எங்கள் ஒத்திசைந்த மரபை
அழியுங்கள்...அழியுங்கள்.
உங்கள் குண்டு மழையால்
எங்கள் பள்ளத்தாக்குகளை நிரவுங்கள்
உங்கள் கட்டளைகளால்
எங்கள் கடந்த கால நினைவுகளை
எங்கள் இதிகாச பெருமைகளை
எங்கள் இலக்கிய உவமைகளை
எல்லாம் தரைமட்டமாக்கி அழியுங்கள் .
எங்கள் சோலைகளை
எங்கள் பூமியை
ஒரு புழு பூச்சியின்றி
ஒரு பறவை...ஒரு வார்த்தையுமின்றி
ஒண்டி ஒளியவும் இடமின்றி
அழித்துச் சாம்பலாக்கித் துடைத் தெறியுங்கள்.
இன்னும் என்னவெல்லாம் முடியுமோ
அத்தனை கொடுமைகளையும்
செய்து முடியுங்கள்
ஆனால்...
உங்கள் அராஜகம் என்னை அச்சுறுத்திவிடாது .
நான் ஒரு போதும் சோர்ந்து விழப் போவதில்லை
என் இறுகி மூடிய கைகளுக்குள்
ஒரு விதை ...ஒரு சின்னஞ்சிறு உயிர் வித்து
அதை நான் பத்திரமாகக் காத்து வைத்துள்ளேன் .
அதை எம் மண்ணில் மீண்டும் விதைப்பேன்
அதுவே என் நம்பிக்கை .


===========

பெயர் தெரியாத ஒரு பாலஸ்தீனியனின் உணர்வுகளின் சாரம் .

===========

நன்றி வழக்கறிஞர் U.K.S & நன்றி டாக்டர் ஜீவா .

===========


.

.

.


.


.

Download As PDF

43 கருத்துகள் :

பழமைபேசி சொன்னது…

பகிர்வுக்கு நன்றிங்க!

வானம்பாடிகள் சொன்னது…

ஒடுக்கப்பட்ட இனம் அத்தனைக்கும் பொருந்தும் உணர்வுகள். நன்றி உணர்வுப் பகிர்தலுக்கு,

அண்ணாமலையான் சொன்னது…

நல்ல குரல் நாடெங்கும் கேட்கட்டும்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அண்ணாமலையான் அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
வானம்பாடிகள் அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
பழமைபேசி அவர்களே
மிக்க நன்றி

வினவு சொன்னது…

அடக்குமுறைக்கு அஞ்சாத கம்பீரத்தை உணர்வுப்பூர்வமாக கவிதை பேசுகிறது. நல்ல கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

நல்ல உணர்வுப்பூர்வமான கவிதை. ஒடுக்கப்பட்டவர்கள் உணர்வுகளை பிரதிபலிக்கிறது. அருமை நண்டு சார்.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
வினவு அவர்களே
மிக்க நன்றி

Muniappan Pakkangal சொன்னது…

Vithai kavithai,super Nandu.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
Muniappan Pakkangal அவர்களே
மிக்க நன்றி

நேசமித்ரன் சொன்னது…

கவிதை பிரதிபலிக்கிற உணர்வுகள் அருமை

vimalavidya சொன்னது…

rt touching Poem-well done-

மதன் சொன்னது…

வாழ்த்துகள்!

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
நேசமித்ரன் அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
மதன் அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
vimalavidya அவர்களே
மிக்க நன்றி

பிரியமுடன் பிரபு சொன்னது…

உணர்வுப்பூர்வமான கவிதை

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
பிரியமுடன் பிரபு அவர்களே
மிக்க நன்றி

பித்தனின் வாக்கு சொன்னது…

ஈரோடா நீங்க எங்கன இருக்கீங்க (எந்த ஏரியா).

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல கவிதை பகிர்தலுக்கு நன்றி. இது பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் அல்ல, நம் சகோதரர்களுக்கும் பொருந்தும்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி
பித்தனின் வாக்கு அவர்களே .
நான் ஈரோட்டில் வீரப்பன் சத்திரத்தில் உள்ளேன் .

அன்புடன் அருணா சொன்னது…

பகிர்வுக்கு நன்றிங்க!

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அன்புடன் அருணா அவர்களே
மிக்க நன்றி

அக்பர் சொன்னது…

நல்ல கருத்தாழமிக்க கவிதை.

vimalavidya சொன்னது…

Now the time is 12.35 the Palestine poem disturbing me...very good translation by heart-congratulations--vimalavidya

vimalavidya சொன்னது…

Lawyer Sir,

Could you send me the original English version of the poem ?
please send me .Thank you sir

vimalavidya சொன்னது…

//இன்னும் என்னவெல்லாம் முடியுமோ
அத்தனை கொடுமைகளையும்
செய்து முடியுங்கள்
ஆனால்...
உங்கள் அராஜகம் என்னை அச்சுறுத்திவிடாது .
நான் ஒரு போதும் சோர்ந்து விழப் போவதில்லை
என் இறுகி மூடிய கைகளுக்குள்
ஒரு விதை ...ஒரு சின்னஞ்சிறு உயிர் வித்து
அதை நான் பத்திரமாகக் காத்து வைத்துள்ளேன் .
அதை எம் மண்ணில் மீண்டும் விதைப்பேன்
அதுவே என் நம்பிக்கை// What a beauty and confidence in life ..

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
பழமைபேசி அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
வினவு அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அண்ணாமலையான் அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
வானம்பாடிகள் அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
நேசமித்ரன் அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
Muniappan Pakkangalஅவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
மதன் அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
vimalavidya அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
பித்தனின் வாக்கு அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
பிரியமுடன் பிரபு அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அக்பர் அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அன்புடன் அருணா அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
vimalavidya அவர்களே
அனுப்பிவைக்கின்றேன்
நன்றி.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "