சனி, 16 ஜூலை, 2011

பத்மநாபஸ்வாமி கோவில் சொத்துக்கள் யாருக்கு சொந்தம் , அதனை என்ன செய்யலாம் ? -1நொரண்டு  : வணக்கம் நண்டு

நண்டு  : வாங்க நொரண்டு  ,என்ன செய்தி  ?

நொரண்டு  : கேரள வரலாற்றைப்பற்றி

நண்டு  : எதுக்குவரேனு தெரியுது . முதலில் நமது வரலாறுகள்  நமக்கு  நமது  உண்மை வரலாற்றை உரைப்பதில்லை என்பதனை புரிந்துகொள்.இங்கு நமக்கு கற்பிக்கப்பட்டுவரும் வரலாறுகள் அனைத்தும் சார்புடையவையாகவே உள்ளன.மறைக்கப்பட்ட வரலாறு என்பதனை விட சொல்லமறுத்த ,மறுக்கடிக்கப்பட்ட  மறைக்கப்பட்ட வரலாறுகள் தான் இங்கு உள்ளன . ஆனால்  வரலாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது .அவ்வாறு அது தன்னை வெளிப்படுத்தும் ஒவ்வொரு பொழுதும் அதனை புரிந்து கொள்ளமுடியாத மூடர்களாக முட்டாள்களாக வரலாற்று மூட்டைகட்டிகளும், இலக்கிய வியாதிகளும் இருப்பதையும் ,அவர்களை  நம்பும் மனிதர்களையும் பார்த்து வரலாறு சிரிப்பதையும் யாவரும் அறிவர்.அப்படிப்பட்ட ஒரு நிகழ்வாக கேரளம் பற்றி அதிகம் தெரிந்தவர்களாக, புரிந்தவர்களாக எழுதி தங்களை அதிமேதாவிகளாக காட்டிக்கொண்ட வரலாற்று புரட்டர்களை நான் உனக்கு இனம் காட்டத்தேவையில்லை.அதனை இனி மார்க்ஸ்  பார்த்துக்கொள்வார்.

நொரண்டு  :  ஓ....

நண்டு  : இதுபோன்று தான்  ....வரலாறு தன்னை சிந்துவில் வெளிப்படுத்தியபொழுதும்  அதனை கண்டு உலகம் வியத்தது.புரட்டர்களின் புரட்டு புரண்டது .

நொரண்டு  :  என்ன பிரயோஜனம்  ,இன்னும் ...?

நண்டு  :   இன்னும் உண்மையை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டே வருவதற்கு முழுக்க முழுக்க அறியாமையே காரணம்.நானும்,நீயும் ,நம்முடன் கைகோர்க்கும் நல்லவர்களும் தான் விடைகாண வேண்டும் .

நொரண்டு  :  உண்மை தான் ...செய்யலாம் ...

நண்டு  : மகிழ்ச்சி .அதோடு அப்பொழுது நமது ஆட்சி இல்லை .அதோடு அந்த அளவிற்கு நம்மிடையே படிப்பறிவும் இல்லை .

நொரண்டு  :  ஆம்,உண்மைதான்.  சரி இப்ப விசயத்துக்கு வரேன் ,ஒன்னுமில்லை பத்மநாபஸ்வாமி கோவில் சொத்து யாருக்கு சொந்தம்? .அதனை என்ன செய்யலாம் ? .

நண்டு  :  நீ என்ன நினைக்கற ?

நொரண்டு  :  ரோடு போட, குளம் வெட்ட, மின்சாரம் தர  இப்படி மக்கள் நலத்திட்டங்களை ...

நண்டு  : கிண்டலா ... சிரிப்பு தான் வருது

நொரண்டு  :  ஏன் ,இது மக்கள் பணம் தானே .

நண்டு  : அதுவல்ல இப்பொழுது முக்கியம் .

நொரண்டு  :  அப்புறம் ,அத அரசியல்வாதிக கிட்ட கொடுத்தரலாமா ?...இல்ல

நண்டு  : இப்படியே அறிவுகெட்ட தனமாக பேசி பேசியே நாம் நமது தன்மையை,உண்மையை இழந்தது போதும் உருப்படியா சிந்தி

நொரண்டு  : என்ன சொல்ல வர்ற

நண்டு  :  பத்மநாபஸ்வாமி கோவில் சொத்துக்களை பணத்தின் அளவாலே மட்டுமே  அளவிடுவது  எவ்வளவு முட்டாள் தனமானது தெரியுமா ? .

நொரண்டு  :  ஓ.... ம் ....

நண்டு  :அந்த சொத்துக்கள் கூறும் வரலாற்று உண்மைகளின் மதிப்பு அதன் பணத்தின் மதிப்பை விட மிகவும் அதிகமானது ,மதிப்பிட முடியாதது என்பதனை முதலில் தெரிந்துகொள் .

நொரண்டு  :  ஓ...

நண்டு  :  :
பணத்தினால் அளவிட்டு  அதன் முக்கியத்துவத்தையும் , அதுகூறும் உண்மைகளையும்,வரலாற்றையும் மறைக்கப்பார்ப்பது என்பது வரலாற்றை திரித்துவிட்டவர்களுக்கு தான் ஆதாயமே ஒழிய .உண்மையான வரலாற்றை நோக்கி  பயணப்படும் நம்மைப் போன்றவர்களுக்கு அது கூறும் வரலாறு மற்றும் அங்கிருந்து கிடைத்த ஆதாரங்கள் முலம் வெளிப்படும் உண்மைகள் ,உண்மையில் ஒரு புது சரித்திரத்தை உரைக்கும் என நம்புகிறேன் .அவ்வாறு அது உரைத்தால் அதைவைத்து நாம் நமது முன் உள்ள வரலாற்றை உரைத்துப்பார்க்கும் ஒரு உரைகல்லாகவே அது  இருக்குமல்லவா ?.

நொரண்டு  :  ஆமா ...மில்ல ...

நண்டு  :  அந்த வரலாறு கேரளத்து வரலாறு மட்டுமல்ல தமிழின் வரலாற்றையும் தமிழர்களின் வரலாற்றையும் வெளிப்படுத்தும் ஒரு வெளிப்பாடாக இருக்கும் . அதனால் பயனடையப்போவது நாம் தானே ..

நொரண்டு  : உண்மை தான் . சரி  என்ன செய்யலாம் .

நண்டு  : முதலில் நமக்கு தேவையான சிலவற்றை கூறுகிறேன் .

நொரண்டு  :  எத கேட்டா என்னவோ சொல்ர,சரி  ...அத ...சொல்லு ...

நண்டு  : நம்ம வீட்டுக்கு வெளியூரிலிருந்து  2 நாள் தங்கரதா  ஒரு விருந்தினரோ இல்ல உறவினரோ வந்தா என்ன செய்வோம் .

நொரண்டு  :  நம்ம ஊர் ஸ்பெசல் சமயலை சமைப்போன்

 நண்டு  : அட திங்கர   ...

நொரண்டு  :  இல்ல ...வந்து ....ஊர சுத்தி காமிப்பேன் .

நண்டு  : என்ன  காமிப்ப .

நொரண்டு  : கோயில்குலங்களை தான்.

நண்டு  :   அப்ப

நொரண்டு  : அப்ப ,நான்  அத காண்பித்து ,இது இவங்க காலத்துல  கட்டுனது,இங்குள்ள சிலைகளில் இருப்பவங்க இவங்க இவங்க ,இது இவங்ங இவங்க வங்க பாடிய ஸ்தலம் , இந்த இடம் இதற்கு பிரசித்தம் ,இங்க வந்தா இது கிடைக்குமுனு இந்த புராணம் கூறுது ,இவங்க இத செஞ்சாங்க ,இவங்க இத்தனை மானியம் கொடுத்தாங்க என...

நண்டு  : ம் ...

நொரண்டு  : அதத்தானே சொல்லமுடியும்

நண்டு  : உண்மை தான் .அதில் தவறில்லைதான் .என்றாலும் ...

நொரண்டு  : என்ன இழுக்கிற ...
தொடரும் .... Download As PDF

9 கருத்துகள் :

ரோகிணிசிவா சொன்னது…

ம்ம, அடுத்து ?

பெயரில்லா சொன்னது…

உண்மை தான் பாஸ் ,பணத்தில் பெறுமதியால் அதன் பின்னால் உள்ள வரலாறுகள் மறைக்கப் பட்டுவிடக் கூடாது

Karikal@ன் - கரிகாலன் சொன்னது…

என்ன சார், ரொம்ப ஆவலை கிளப்பி விட்டுட்டு பாதியிலே அபீட்டு ஆயிட்டீங்க

காத்துகிட்டு இருக்கேன், சீக்கிரம் வந்து மீதியை சொல்லுங்க.

goma சொன்னது…

யாருக்கும் உதவாத பொருள் , தங்கமோ வெள்ளியோ பணமோ வைரமோ அவை யாவுமே வெறும் மண்,கல்,பாறை.....etc etc

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.

Ramani சொன்னது…

உரையாடல் மூலம் சொல்லவேண்டியதை
மிகச் சரியாக சொல்லிப்போகும் உங்கள் பாணி
ரசிக்கும் படியாகவும் விஷயங்களை
மிகச் சரியாக கிரகிக்கும்படியாகவே உள்ளது
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

cheena (சீனா) சொன்னது…

அன்புச் சகோ நண்டு - அருமையான உரையடல் - தொடரினை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

அசத்தலான உரையாடல்...

கலகலப்பாக தொடரட்டும்...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

நல்ல தொடக்கம்...

வாழ்த்துக்கள் அண்ணா

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "