எங்கும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது கடவுளின் தேசம்,இரண்டு வாரங்களாக நாட்களாக.
சாதாரண நெருப்பல்ல ,கடவுளின் ஆணை என்ற வதந்தி நெருப்பு எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்த்து.
கடவுளுக்கு கீழ் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்,இனி எப்படி வாழ்வது என்ற அச்சத்தில் உறக்கமின்றி .
செய்தி கேட்டு சிறைச்சாலைகளில் மகிழ்விலிருந்தவர்களுக்கு ,அனைவருக்குமான ஆணைகளை பிறப்பிக்கப்பட்டு விட்டது என்ற வதந்தி மிக்கஅச்சத்தை ஏற்படுத்தியதால்,சிறைகள் முழுதும் ஒரே கலவரத்தில்.
அச்சம்,அச்சம்,எங்கும் ஒரே அச்சம்.
இனி என்ன நடக்குமே,ஏது நடக்குமோ என்ற கேள்விகளுடன் .
பொதுவில் அறிவிக்கப்படும் நாள் நாளை என்பதால் ,அனைவரும் ஆங்காங்கு திரண்டு ,அறிவிப்பை எதிர் நோக்கி காத்திருந்தனர்.
முதல் முறையாக சிறைச்சாலை மைதானம் மக்களுக்காக சைடோனில் திறக்கப்பட்டது.இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.எப்படி செய்தி வியப்போ, அது போலவே சிறைச்சாலை திறப்பும்.
ஒரு பக்கம்,உரிமைக்காக போராடியவர்கள், கொலைகாரர்கள், கொள்ளையர்கள்,திருடர்கள்,மதவாதிகள்,காமக்கொடுரன்கள் போன்ற சிறைவாசிகள் கூட்டம்,மறுபக்கம் பணக்காரர்கள், உழைப்பாளிகள், வீரர்கள்,படித்தவர்கள்,அறிவாளிகள்,மதவாதிகள்,ஏழைகள் என மக்கள் கூட்டம், நடுவில் செய்திகளை கொண்டுசெல்ல பல இடங்களிலிருந்து வந்திருந்த தந்துகிகள்.பல்லாயிரம் பேர் பல எண்ணவோட்டத்தில் கூடியிருந்தாலும்,குதிரைகளின் கனைப்பும்,விலங்குகளின் உரசல் ஒலியையும் தவிர்த்து,வேறு எந்த சப்தமும் அங்கு எழவில்லை. வதந்தியாகவே இருக்கவேண்டும் என்ற ஆசையுடன் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
சூரியன் உச்சியை தொட்டுக்கொண்டிருந்தான்.வெப்பத்தை ஒவ்வொருவரும் உணர்ந்துகொண்டிருந்தனர்.தாகமாய் ஒரு பேரிகை முழங்கியது.அனைவரும் ஆர்வத்தில் ஆர்ப்பரித்தனர், ஊரே அதிர்ந்த்து. இரண்டாவது பேரிகை ஒலித்த போது மீண்டும் பழைய அமைதி.இரண்டாவது பேரிகையை தொடர்த்து வெண்புரவியில் அனைவரும் அஞ்சும் செலாஸ்டஸ் வந்தான்,கண கம்பிரமாக,தனது வெள்ளுடையை காற்றில் பறக்கவிட்டு.
.....
மக்களே உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி கொண்டுவந்துள்ளேன்.அது கடவுள் இனி தண்டிக்கமாட்டார்.ஆம்,கடவுள் இனி ஒருபோதும் உங்களை தண்டிக்கமாட்டார்.
இது கேட்டு மக்களின் கூட்டம் இது சரியல்ல,இது சரியல்ல,கடவுளின் முடிவு தவறானது,ஏற்றுக்கொள்ளமுடியாது என ஆர்ப்பரித்தனர்.
கூட்டத்தைப்பார்த்து இது கடவுளின் முடிவு.கட்டுப்படுவது நமது கடமை என்றான் செலாஸ்டஸ்.
நீ பொய்யன் என்றான் கூட்டத்திலிருந்த சீகன்.
கடவுளின் கருணையால் நீ தப்பித்தாய் என்றான் சீகனை பார்த்து செலாஸ்டஸ்.
செலாஸ்டஸ் பொய்யன் ,செலாஸ்டஸ் பொய்யன் என்றது கூட்டம்.
கூச்சல் கேட்டு செலாஸ்டஸ் தனது வாளை உருவினான்.
இதையும் பார்க்க .
தொடரும் ....
Tweet |
|
9 கருத்துகள் :
தலைப்பே நல்லாயிருக்கே....அநியாயங்கள் தொடருமோ !
இருந்தால் இனி தண்டிப்பார்..:-)))
ஆகா ன்னு படிக்கத் துவங்கிய பிறகு கொஞ்சம் வரிகளுக்க்கு பின்னே தொடரும் னு வந்துவிட்டதே.
:)
கடவுள் யாரையும் தண்டிப்பதில்லை. தொடருங்கள் ...
என்னய்யா வித்தியாசமா இருக்கே....!!!
’முடிவு என்ன?” என்று அறியத் தூண்டுகின்றன விறுவிறுப்பான கதையோட்டமும் ‘நடை’யும்.
கதை தொடரட்டும்.
கதைக்கலை மீதுள்ள தங்களின் ஆர்வம் பெருகட்டும்.
பாராட்டுகள்; வாழ்த்துகள்.
அடுத்தது எப்போ?
ம்ம்ம்.. நல்லாயிருக்குங்க...
இன்றைய வலைசரத்தில் உங்கள் பதிவைப்பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.நேரம் இருப்பின் வருகை தந்து கருத்து தெரிவிக்கவும்
http://blogintamil.blogspot.in/2012/06/6.html
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "