பெரியாரை புரிந்துகொள்வது என்பது மிகமிக சிக்கலான ஒன்றாகும்.
அதற்கு உண்மையில் மிகச்சீரிய சுயபயிற்சிவேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது.பெரியாரைப்பின்பற்றுபவர்கள் கூட அத்தகைய ஒரு பயிற்சியின் மூலம் பெரியாரை தெரிந்துகொண்டவர்கள் தானா என்பது கேள்விக்குரிய ஒன்றாகும் .ஏனெனில் பலர் இன்னும் பக்குவம் இல்லாமல் இருக்கின்றனர். அதனால் தான் இன்னும் நம் சமுதாயம் அவரை ஒரு மத எதிர்ப்பாளராகவே பார்த்துக்கொண்டிருக்கிறது .
சாதிகள் இன்னும் இங்கு சாதீகளாக எறிகிறது .
பெரியாரைப்பற்றி தெரிந்துகொள்ள அறிந்துகொள்ள எத்தகைய பயிற்சி வேண்டும் எனக்கேட்டால்,
முதலில் பெரியார் வாழ்ந்த காலகட்டதையும்,அந்த காலகட்டங்களில் நடந்த நிகழ்வுகளையும்,சூழலையும் ,அப்போதைய தேவையாக இருந்தது எது என்பது பற்றியும் ,அந்த காலகட்டத்தில் பகுத்தறிவின் தேவை எவ்வாறு இருந்தது என்பதையும் ,பகுத்தறிவின் அவசியத்தையும் , நமது சமுதாயம் எந்தவிதமான இடையூறுகளை அத்தகைய காலகட்டத்தில் சுமந்து கொண்டிருக்க வேண்டியிருந்தது என்பதையும்,அதனால் எவ்வளவு பின்னடைவுகளை இன்றுவரை அடைந்திருக்கிறோம் என்பதையும் ஆழ்ந்து ஆய்ந்து மனித நேயத்துடன் நோக்கும் பார்க்கும் பக்குவத்தையும் மனப்பான்மையையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.
பின் அத்தகைய காலகட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவர் செயல்பட்ட விதத்தையும்,அவரின் அவசியத்தையும் உற்றுப்பார்க்கவேண்டும்.அதன் மூலம் சமுதாயம் அடைந்த நன்மைகள் என்ன ?.பயன்பட்டவர்கள் யார் ?. என்பதனையும் சீர்தூக்கி பார்க்கவேண்டும்.
இந்தகைய படிப்பினையை பயிற்சியாக மேற்கொண்டால் பெரியாரைப்பற்றிய உங்களின் கேள்விகளுக்கான விடையை நீங்களே எழுதிச்செல்வீர். மற்றவர்கள் பெரியாரை அறியாமையினால் கேட்கும் கேள்விகளுக்கு சரியான உண்மையான பதிலாக நீங்கள் இருப்பீர்கள்.
இதைத்தவிர்த்து
பெரியாரின் எழுத்துக்களை மட்டும் படிப்பது என்பது மிகமிக முட்டாள் தனமான ஒன்றாகும் .
பெரியாரை மட்டும் படித்தல் என்பது சரியான புரிதலை தராது .
அவர் படும் முரண்களை புரிந்துகொள்ளமுடியவே முடியாது .
அதனால் பெரியாரைப்பற்றிய சரியான புரிதலையும் காணமுடியாமல்
ஒரு மத எதிர்ப்பாளராக,
கடவுள் மறுப்பாளராக,
கிளிப்பிள்ளையாக நாம் வலம்வர முடியுமே தவிர
ஒரு பகுத்தறிவனாக பயணிக்கமுடியாது .
கிளிப்பிள்ளையாக ஒரு பாமரனால் கூட வலம்வர முடியும்.
இவ்வாறு வலம்வரும் பெரியாரிஸ்டுகள்
பெரியாரை புறக்கணிக்கும் கிளிப்பிள்ளைபெரியாரிஸ்டுகளாவார்கள்.
(படத்தில் காணும் கட்டிலில்,அது போடப்பட்டுள்ள இடத்தில் தான் பெரியார் செப்டம்பர் 17, 1879 ல் பிறந்தார் )
சாக்கிரட்டீஸை புரிந்துகொள்ள பிளேட்டோ தேவைப்பட்டான் .
இருவரும் சிந்தனையாளர்களாக அறியப்பட்டனர்.ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.
ஆனால் ,இங்கு பெரியார் ? .
(அ-பொ : எறி -அழி,வெட்டு)
.
Tweet |
|
16 கருத்துகள் :
நல்ல பதிவு நண்பரே...
அன்பின் நண்டு - பெரியாரைச் சரிவர புரிந்து கொள்ளாமல் இன்று பல பேர் பெரியாரைப் பற்றிப் பேசுகிறார்கள்........ நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
சரியாகச் சொன்னீர்கள் தோழரே.. பிறந்த இடத்தை படத்தோடு பகிர்ந்து கொண்டது சிறப்பு..
காலம் எனும் கண்ணாடி கொண்டு அறிவது அவசியம் என்பது உணர்த்தப்பட்டுள்ளது..இது கம்யூனிஸ்ட்களுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும் !
ஒரு பகுத்தறிவாளனாக பயணிக்கமுடியாது... ம்ஹீம் நினைக்கவே முடியாது / கூடாது...
அருமையாக சொல்லி விட்டீர்கள்...
முரண்பட்டுக்கொண்டால்தான் தெளிவு கிடைக்கிறது.பெரியாரை நிறுத்திச் சொன்னது அருமை !
ஒரு மத எதிர்ப்பாளராக,
கடவுள் மறுப்பாளராக,
கிளிப்பிள்ளையாக நாம் வலம்வர முடியுமே தவிர
ஒரு பகுத்தறிவனாக பயணிக்கமுடியாது .
அருமையான கருத்து நண்டு.
பெண் விடுதலைக்கு பெரியார் ஆற்றிய பணிபற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. ஆணாதிக்கம் இன்றும் சிறிதும் குறையவில்லை. பெரியாரின் வழி செல்வதாகக் கூறிக்கொள்ளும் பேர்வழிகள் வீட்டில் பூப்பு நன்னீராட்டு விழா!
திருமணம் என்ற பந்தம் எவ்வளவு கொடுமையாக பெண்ணினத்தை அடிமைகளாக்குகிறது என்பதை ஆசார்ய ராஜ்நீஷ் கூறி உலகம் முழுதும் வாங்கிக்கட்டிக் கொண்டார்.
ஆனால் இதை பெரியார் ராஜ்நீஷுக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே பேசினார்.
தி க கூட்டமொன்றில் பெரியார் முன்னிலையில் ஒரு நண்பர் சீர்திருத்த மணங்களை மட்டுமே அரசு அங்கீகரிக்கவேண்டும் என்று முழங்கினார். பின்னர் பேசிய பெரியார் ''திருமணம் என்பதே ஒரு காட்டுமிராண்டி முறை, இதில் சீர்திருத்த மணம் என்ன வேண்டிக் கிடக்கிறது.''
மணமக்கள் இருவர் பெரியாரை அணுகி நாங்கள் கலப்புமணம் புரிந்துகொண்டோம். எங்களை வாழ்த்துங்கள் என்றனர். ஒரு ஆண் ஒரு மாட்டையோ அல்லது ஒரு பெண் ஒரு ஆட்டுக் கிடாயையோ மணம் செய்துகொண்டால் அது கலப்புமணம். ஒரு ஆண் ஒரு பெண்ணை மணம் செய்வதில் கலப்பு எங்கே உள்ளது என்று கேட்டார்.
அறிந்துகொண்டேன்!
பெரியாரைப் பற்றி பேசி தங்களைத் தாங்களெ பகுத்தறிவாளர்களாக எண்ணுபவரே அதிகம். வாழ்த்துக்கள்.
சரி
பெரியார் என்று பட்டம் கொடுத்தது யார்? பெண்கள்...
அனால், இன்று அதே மகளிர்கள் பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல்...வெகுஜனப் பத்திர்க்கையின் agenda தெரியாமல் அவைகளைப் படித்து பெரியாரை எதிர்க்கிறார்கள்...
ஓட்டு வாங்கவாவது பெரியார் உதவுறாரே??!
புத்தன் போலும் பெரியாரைப்பற்றிப் படித்துக் கிழித்ததை தாறுமாறாக ஒட்டி இதோ பார் பூதம் என்கிறார்கள்.
//முதலில் பெரியார் வாழ்ந்த காலகட்டதையும்,அந்த காலகட்டங்களில் நடந்த நிகழ்வுகளையும்,சூழலையும் ,அப்போதைய தேவையாக இருந்தது எது என்பது பற்றியும் ,அந்த காலகட்டத்தில் பகுத்தறிவின் தேவை எவ்வாறு இருந்தது என்பதையும் ,பகுத்தறிவின் அவசியத்தையும் , நமது சமுதாயம் எந்தவிதமான இடையூறுகளை அத்தகைய காலகட்டத்தில் சுமந்து கொண்டிருக்க வேண்டியிருந்தது என்பதையும்,அதனால் எவ்வளவு பின்னடைவுகளை இன்றுவரை அடைந்திருக்கிறோம் என்பதையும் ஆழ்ந்து ஆய்ந்து மனித நேயத்துடன் நோக்கும் பார்க்கும் பக்குவத்தையும் மனப்பான்மையையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.//
இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது!அருமையான ஆய்வு மிக்க பதிவு என மனங்கனிந்த வாழ்த்துக்கள்
நீங்கள் சொன்னது முற்றிலும் சரி.
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "