திங்கள், 30 ஏப்ரல், 2012

வெத்து வீர வசனம் பேசி மறத்தமிழனை மழுங்கடிக்கும் பேச்சுத்தமிழர்களே கேளுங்கள்ஈரோட்டில் நடக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் மொழி ,இன ,நலம் விருப்பிகள் நடத்தும்  ஒவ்வொரு பொதுக்கூட்டத்திற்கும் ,மாநாட்டிற்கும் நான் சாதாரண பார்வையாளனாய் சென்று பார்ப்பது வழக்கம்.ஒவ்வொரு உணர்வாளர்கள் என்பவர்களும்  தாங்கள்  தமிழுக்காகவோ, அதன் உயர்வுக்காகவோ இல்லை என்பதனை பேச ஆரம்பித்த அடுத்த நிமிடத்திலே வெளிப்படுத்தி விடுவதுடன்  தமிழின் பெயரால் தவறாமல் தமிழர்களை மடையர்களாக்குவதோடு தாங்களை மட்டும் உன்னதமானவர்களாக காட்டிக்கொண்டு புரட்சியாளர் வரிசையில் அமரத்துடித்து ,வீர வசனம் பேசி நடித்துச்செல்வதை கண்டு ஒவ்வொரு தடவையும் நான் மிகவும் ஏமாற்றப்பட்டே திரும்பியுள்ளேன்.அப்பொழுது நான் நினைத்துப்பார்க்கும்  நாடு அமெரிக்கா .

(இதில் வேடிக்கை என்னவெனில் இன்றுள்ள பல வீர வசன தமிழ் தலைவர்களுக்கு நாடு, அரசு,மக்களாட்சி,கட்சி,இயக்கம் என்றால் என்னவென்றே  தெரியாத ஒன்றாக இருப்பதுவும் ,இருந்தாலும் இவர்கள் தலைவர்களாக உள்ளதும் தான் .ஆனால்,அவர்களுக்கு கற்பிதம் என்ற வார்த்தை மட்டும் நன்றாக உச்சரிக்கத்தெரியும் ,இது  தவிர்த்து வேறு எதுவும் இல்லை என்பது உள்ளங்கை நெல்லி .)

வெத்து வீர வசனம் பேசி மறத்தமிழனை மழுங்கடிக்கும் பேச்சுத்தமிழர்களே கேளுங்கள்  ...

நான் உலக அரசியல் அமைப்புச்சட்டங்கள் அனைத்தையும் ஆழ்ந்து படித்துவந்த பொழுது என்னை மிகவும் வசீகரித்தது அமேரிக்காவின் அரசியல் அமைப்புச்சட்டம் .
மிக மிக எளிமையான ஆனால் மிகமிக அழுத்தமான சரத்துக்களை தன்னுள் கொண்டுள்ளதை படித்த பொழுது மிகவும் வியந்தேன் .
அதை மிகவும் ஊன்றிப்படித்த பொழுது தான் தெரிந்து கொண்டேன் .தாங்களின் தலைவனை தனது மக்கள் எப்படிப்பட்டவராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதனை உள்ளீடாக கொண்டிருக்கும் பல விசயங்களை.
அதில் முதன்மையானது ,
தலைவன் மயக்கப்பேசும் தன்மையுடையவனாக ,மேடையில் முழங்கும் அட்டக்கத்தி வீரனாக இருக்கக்கூடாது என்பதுவே.

மேடையில் வீர வசனம் பேசும் வீணர்களுக்கு இங்கு இடமில்லை ,மக்களுக்கு நல்லது செய்பவன் வீர வசனம் பேச மாட்டான் .அப்படி பேசுகிறவன் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கமாட்டான் என்பதை மக்களிடம் அது கொண்டுசென்றுள்ள பாங்கை அறிந்து மிகவும் வியந்தேன்  .
அதனால் தான் அமெரிக்கா நல்லரசாக தனது மக்களுக்கு உள்ளது.

இங்கு வெத்து வீர்ர்ர வசனம் பேசியே நம்மை சாகடிக்கின்றனர் .

இனி நாமும் அமேரிக்காவின் வழியில் பயணிப்போம் .

வெத்து வீர வசனங்கள் பேசி மறத்தமிழர்களை  மழுங்கடிக்கும்  பேச்சுத்தமிழர்களே உங்களுக்கு நாங்கள் விடைகொடுக்கிறோம்.
இனி நீங்கள்  இன்டஸ்ட்ரீயில் கவனம் செலுத்துங்கள்.
அதையாவது தரமாக்குங்கள்.எனவே


இனிய தமிழ் நெஞ்சங்களே,இனி அவர்களின் வீர்ர்ர வசனங்களை  தியோட்டர்களில் மட்டுமே கேட்போம் .
நம் நாட்டை நாம் பார்த்துக்கொள்வோம்.Download As PDF

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

திருக்குறளை எழுதியவர் நக்கீரர் .


தமிழ்ப்புத்தாண்டு கூடல் நிகழ்வில் கலந்துகொண்டு இலக்கியவாதியாக,மாந்தரின வரலாற்று ஆய்வாளருமாக தன்னை அறிமுப்படுத்திக்கொண்டு பேசிய சகோதரர் திருக்குறளை எழுதியவர் நக்கீரர் என்பது எனது சமிபத்திய ஆய்வின் முடிவு என கூறக்கேட்டபொழுது நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.அதனை கண்டடைந்த முதல் நபர் தான் தான் என்பதில் பெருமை அடைவதாகவும்,அவ்வுண்மையை தான் புத்தகமாக வெளியிடும் வரை இங்கு தான் வெளியிடும் தரவுகளையும்,கண்டடைந்த உண்மைக்கூறுகளின்  மெய்மைத்தன்மைகளையும் யாரும் தயவுசெய்து வெளியே கசியவிடவேண்டாம் என்றும் ,இது சம்பந்தமாக வெளியிடவோ,பொதுவில் பேசவோ வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாங்கள் அவ்வாறே செய்வதாக உறுதியளித்தோம்.

தமிழை காக்க எத்தனை நெற்றிக்கண்களையும் சந்திக்கத்தயார். ஆனால்,நெற்றிக்கண்ணுடையான் நேர்மையை உலகிற்கு உணர்த்துவதுவே எமது வாழ்வு என்பது  எவ்வளவு ஏற்புடையது என்பதனை "நெற்றிக்கண்  திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கூறிய தீரரின் எழுத்துக்களை ஆய்வதன் மூலம் அறிவோம் என்ற அவரின் அறைகூவல் எம்மை மிகவும் ஈர்த்தது.

அவரின் ஆய்வு அவரின் தனி .ஆனால்,திருவள்ளுவரும்,நக்கீரரும் பொது என்பதால் நாங்கள் இது பற்றி மேலும் விவாதங்களை தொடர்ந்தோம்.நாங்கள் இது ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பற்றி விவாதித்தோம்.

தமிழ்ப்புத்தாண்டு,திருவள்ளுவராண்டு மட்டும் இது சம்பந்தமாக எழுந்துவரும் சர்ச்சைகளுக்கு  இப்புத்தகம் ஒரு  முடிவான முற்றுப்புள்ளி வைக்குமானால் அது தமிழை நல்லுலகை நோக்கி இட்டுச்செல்லும் என்பதுவே உண்மையிலும் உண்மை.

நாம் மிகவும் பின்தங்கித்தான் போயுள்ளோம்,தமிழை ஏட்டில் பகுத்தறிந்த அறிஞர் பெருமக்களால்.

தமிழனம் எவ்வளவோ பயணம் செய்யவோண்டியுள்ளது.

நாமாவது சரியான பாதையை நாமே ஏற்படுத்தி பயணிப்போம்.


இதையும் பார்க்க .


 தொடரும் ....

Download As PDF

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

"இயற்கை எதிர்பாளர்களை இயற்கை அழிக்கும்"... உறங்கிக்கொண்டிருப்பவன் எழட்டும் ...நாம் நமது மொழி மற்றும் இனம் பற்றி விசயங்களில் இன்னும் அதிகமாக சிந்தித்து செயல்படவேண்டிய தருணத்தில் உள்ளோம்.கடந்த காலத்தைவிட தற்பொழுது நம்மை விட்டு தூரதேயங்களாக விரிந்துவிட்ட நமது இனத்தையும்,அதனால் மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது .நாம் தற்பொழுது நமது இனத்தின் ,மொழியின் வளமையையும்,அதன் வளர்ச்சி மற்றும் பயணத்தையும் கணித்து,மிகவும் பாங்காக நமது இன,மொழி அடையாளங்களை அடுத்து எடுத்துச்செல்லும் உன்னதப்பொறுப்பிற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.நாம் தான் இதனை செய்ய முடியும் என்பதை விட நாம் தான் இதனை செய்தே ஆக வேண்டும் என்பதுவே உண்மையிலும் உண்மை.இது நமக்கே ஆன கடமையாகும்.இதனை நாம் உணர்ந்து செயல்பட்டே ஆக வேண்டும்.நமது இனமொழி காப்பு உறுதிமொழிக்கேற்ப இந்த அமர்விற்கு புதிய உறுப்பினர்கள் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இருந்தாலும் ,கடந்த காலத்து பதிவுகளைப்போல இம்மவர்வும் நமக்கு நல்ல படிப்பினையையும் ,பாடத்தையும்,பயணத்தையும் கொடுக்கும் என்று நம்புவோமாக.இது மூன்றாவது அமர்வு என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.நான் கலந்துகொள்ளும் இரண்டாவது அமர்வு இது.

தான் என்ற அகந்தையையும்,அகங்காரத்தையும் வெளிப்படுத்தி,அனைத்தையும் தெரிந்தவன் என்ற வேசமற்ற தன்மையுடையவர்களாக ,நமது குறிக்கோள் நமது இனம் மற்றும் மொழி மட்டுமே என்ற எண்ணம் கொண்டவர்களாக ,தனது அறிவுன் தன்மையை அனைத்தையும் மொழியில் வெளிப்படுத்தி ,இனத்தில்  வளர்ச்சியையும்,வனப்பையும்,உயர்வையும் கொண்டுவந்து சேர்த்த நமது முன்னோர்களின் பாதையில் பயணிக்கும் நாம்.நமது அனைத்தையும் அவர்களின் வழியிலே நின்று என்றும் உயர்ந்த குடிகளாவோம், பண்புடையவர்களாக.

புதியவர்கள் இங்கு எந்தவிதமான ஒளிவு மறைவு இன்றி,அனைத்து விசயங்களையும் மனத்திறந்து நமது இனம் மற்றும் மொழியின் நன்மையை மட்டும் கவனத்தில் கொண்டு,அதன் வளர்ச்சி மற்றும் பயணத்திற்கு உண்டான சங்கதிகளை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன்.அதோடு ,அனைவரும் தாங்கள் சந்தித்த அனைத்தையும் மிகவும் விபரமாக தெரிவிக்குமாறும் கோட்டுக்கொள்கிறேன்.அது நமது மொழியின் வளர்ச்சிக்கு,இனத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.நமது நடவடிக்கைகள் தான் நமது இனத்தையும்,மொழியையும் காக்கும் அருமருந்து என்பது தான் கடந்தகால அசைவுகள் வெளிப்படுத்தியுள்ளது.தற்பொழுதைய அமர்வில் கடந்த அமர்வுகளில் கலந்துகொண்ட சுசுமானியரும்,டமாசும் இதுவரை கலந்துகொள்ளமுடியாத நிலை கவலை தருகிறது.அது நமக்கு சற்று பின்னடைவே ஆகும்.


...


நான் புதியவன்,நான் "ங"விலிருந்து வருகிறேன்.நான் எங்களின் மூன்றாவது பீடத்தின் உத்திரவின் பெயரில் இங்கு அனுப்பப்பட்டுள்ளேன்.எனக்கு முன் பேசிய பாப்போ ஆகட்டும்,கீர்,எகமடான் மற்றும் லாத்தர் ஆகட்டும் தாங்கள் நிலையை தெளிவாக கூறினார்கள்.அது போலத்தான் நானும் கூற உள்ளேன்.ஆனால்,அதற்கு முன் "இயற்கை எதிர்பாளர்களை இயற்கை  அழிக்கும்" என்றும் ,அது விசயமாக நாங்கள் கண்ட சில தெளிவுகளையும்.மேலும்,அது நடைமுறையாகவும்,பழக்கவழக்கமாகவும் ஆகிவிட்டால் அதன் உண்மைத்தன்மையின் உறுதியையும் ,அதனால் நாம் அடையும் உயர்வையும் ,தாழ்வையும் நாங்கள் சோதித்தது அறிந்ததை இங்கு கட்டாயம் சொல்ல முனைகிறேன்.இது எனது சொந்த விருப்பமாகும்.பீடத்தின் செய்தியல்ல.பீடத்தின் செய்தியை பிறகு சொல்கிறேன்.சரி விசயத்திற்கு வருகிறேன்.

இயற்கையை நாம் முழுவதும் உணரவேண்டும்.நாம் அதனை நேசிக்கவேண்டும்.அதனை கூர்ந்து கவனிக்கவேண்டும்.அதனை கூர்த்து கவனிக்க ,கவனிக்க அது செய்திகள் சொல்லும்.அந்த செய்திதான்  உயிரினங்களின் செய்தியாகும்.அந்த செய்தி தான் இந்த பிரபஞ்சத்தின் வரலாறாகும்.அதனை இயற்கையால் மட்டுமே கூற முடியும்.அதனால் மட்டுமே அது சாத்தியமாகும்.அதனைத்தான் நாம் அறியவேண்டும்.அது கூறும் செய்திகளை அறிந்துகொள்ளும் பக்குவத்திற்கு வரும் வரை நாம் அதனை நேசிக்கவில்லை என்பதுவே முதல் பாடமாகும்.அதன் செய்திகள் நமக்கு புரியவில்லை எனில் நம்மை நாம் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.இது இரண்டாவது பாடம்.இரண்டாவது பாடத்தின் முதல் சோதனையே நாம் இயற்கையாக இருக்கின்றோமா என்பதுதான்.இப்படி நாம் இயற்கையாக இல்லையெனில் நாம் இயற்கையை வெறுமையாக ஆயும் பகலில் கண்ணால் நட்சத்திரம் பார்க்கமுயற்சிக்கும் வானியலான் ஆவோம்.அப்பொழுது இயற்கை நமக்கு மிகவும் சிக்கலானதாகவும்,புதிராகவும்,அச்சமூட்டக்கூடியதாகவும் தோன்றி நம்மை இருமையில் ஆழ்த்திவிடும்.அத்தகைய சூழலுக்குள் இன்று நாம் சென்றுகொண்டிருக்கின்றோம்.இது நமது அழிவின் ஆரம்பம்.இயற்கையை நாம் பலநாட்கள் அழித்தாலும் அது தன்னை ஒரே வினாடியில் சீரமைத்துக்கொள்ளும் ,ஆனால் நாம் நம்மை அவ்வாறு ஒருபொழுதும் மீண்டுகொள்ளவே முடியாது .
எங்களின் பீடம் ,இயற்கை ஏன் தன்னை சீரமைத்துக்கொள்கிறது ?.அதன் அவசியம் என்ன ?.என்பதனை கடந்த இரு குறிஞ்சி ஆண்டுகளாக ஆராய்துவருகிறது .இன்னும் ஆய்வுகள் நடந்துகொண்டுதான் வருகிறது.எங்களில் பலர் இயற்கையில் செய்திகளை உணர ஆரம்பித்தவர்களாக உள்ளோம்.இன்னும் இரண்டு திவலைகளில் கடும் மழை பொழிய உள்ளதால் நாம் உடனே சாலைக்கு சொல்வோம் ....
இதையும் பார்க்க .


 தொடரும் ....Download As PDF