வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

நடிகர்களாகிப்போனவர்களை என்ன செய்ய ?.

மனிதன் ,தன் வாழ்வை  ,இங்கும்அங்கும் ஓட்டி ,அலைந்து திரிந்து , ஒன்றையும் புரிந்துகொள்ளமல்,சக மனிதர்கள் மத்தியில் தவிக்கும்பொழுது , அவனால்  கடினத்துடன் கூறும் வார்த்தை தான்  ''நாடகமே உலகம் '' .

 ''நாடகமே உலகம்,நாமெல்லாம் நடிகர்கள் ''   என்ற நாடக வார்த்தை  நாடகவாதியால்   கூறுவதற்கு முன் இவ்வுலகம் பற்றிய கணிப்பு மதவாதக்கூற்றுகளின் படி இருந்தது .

 மனிதனை ,தனது சுயத்தினின்னு ,புறம் தள்ளி ,நாடக மனேபாவத்திற்கு கொண்டுசென்று,மனிதர்களை நாமெல்லாம் நடிகர்கள் என நடிகர்களாக்கி , அதன் முலம் தன்னை விட நன்றாக நடிப்பவனை உயர்ந்தவனாக நோக்க வைத்து ,மக்களை நடிகர்களின் மாயையில் ஆழ்த்தி ,நடிகனை  இலட்சியவாதியாகவும் ,தானக்கு தலைவனாகவும் எண்ண வைத்து  , அவனை தொடர வைத்து ,சமுதாயத்தை சீரழித்து ,உலகையே கேள்விக்குறியாகவும்,கேலிக்குரியாதகவும் ,கேளிக்கைக்கோ உரியதாகவும் ஆக்கி விட்டதால்  உலகை பீடித்த உன்னதவரிகள்   ''நாடகமே உலகம் , நாமெல்லாம் நடிகர்கள் '' என்கின்றேன்.

''நாடகமே உலகம் ,நாமெல்லாம் நடிகர்கள் ''  என்ற பதத்தை  பயன்படுத்தியவருக்கு உண்மையில் நாடகமே உலகமாக இருந்திருக்கிறது தான் .ஆனால் ,அதனை நிஜ உலகத்தில் புகுத்தி  உண்மையை கற்பனையாக்கி விட்டது தான் கவலைதருகிறது .மனிதனின்  இயல்பை நடிப்பாக ஆக்கிவிட்ட ,மாற்றிவிட்ட  மிகப்பெரிய கெடுதி  இது அல்லவா ?

ஆடல்பாடலுடன் ஆரம்பித்தது .ஆடல்பாடலுடன்  கலாச்சார சீரழிவும் அதிகமாகி தற்பொழுது நடிப்பாகவே அனைத்தும் .

இன்று,
நிஜ வாழ்வை தொலைத்து ,
எது வாழ்வு என புரியாமல்
'' நாடகமே உலகம் ''என
நடிகர்களாகிப்போனவர்களை என்ன செய்ய ?.






Download As PDF

9 கருத்துகள் :

Yarlpavanan சொன்னது…

அருமையான எண்ணங்கள்
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
இன்றைய இளைஞரினம் விழிப்புணர்வுப் பெறவேண்டும்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
இன்றைய இளைஞரினம் விழிப்புணர்வுப் பெறவேண்டும்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மாறும் காலம் வரும்....

ஸ்ரீராம். சொன்னது…

ஆமாம், என்ன செய்யலாம்?

Unknown சொன்னது…

உலகை பீடித்த உன்னத வரிகளா ,பீடை வரிகளா :)

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நடிப்பே பழகிப் போய் நடிப்பே உண்மையோ என்ற நம்பும் நிலை ஏற்பட்டுவிட்டதோ..பொய்யை பல முறை சொல்லும் போது உண்மையாகிப் போவது போல்!!!??

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை தோழரே சரியான சாடல்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இக்காலத்திற்கேற்ற சரியான பதிவு.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "