சனி, 10 ஜூலை, 2010

நட்சத்திரத்திரம்

.

ஒற்றை நட்சத்திரமாய்
ஓராயிரம் ராவுகள்
கழிந்த பின்
ஒவ் வொரு
பின்னக் கூட்டலிலும்
சேகாரமான சோகங்கள்
உள்ளொளி பெற்று
பீச்சி யடித்த
பிண்டங்களினாலான உலகில்
ஊர்ந்து செல்லும் பட்டாம்பூச்சிக்கு
வண்ணம் கொடுத்தது
ஒரு நட்சத்திரத்திரம்
ஓர் இரவில்
உன்னால் .


.

.

Download As PDF

15 கருத்துகள் :

அகல்விளக்கு சொன்னது…

//நட்சத்திரத்திரம்//

அருமை.....

க.பாலாசி சொன்னது…

எனக்கு கொஞ்சம் புரிஞ்சமாதிரியும் இருக்கு, புரியாதமாதிரியும் இருக்கு...

vasu balaji சொன்னது…

ஒரு வேள பாலாசி/ஜின்னு இருக்கிறவங்களுக்கு இப்படியோ?:(

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//எனக்கு கொஞ்சம் புரிஞ்சமாதிரியும் இருக்கு, புரியாதமாதிரியும் இருக்கு...//

அதேதான் எனக்கும். (எல்கேஜி பிள்ளைங்களுக்கு ரெண்டாம் க்ளாஸ் பாடம் புரியிறது கொஞ்சம் கஷ்டம்தான் :)

ரோகிணிசிவா சொன்னது…

//எனக்கு கொஞ்சம் புரிஞ்சமாதிரியும் இருக்கு,
புரியாதமாதிரியும் இருக்கு...//
repeataaaiiiiiiiiiiiiiiiii-label missing

ஹேமா சொன்னது…

வண்ணம் கொடுத்த வார்த்தைகள் அழகாயிருக்கு !

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கவிதை அருமை. வரிகளில் நட்சத்திரம் மின்னுகிறது.

ஜோதிஜி சொன்னது…

இன்னும் தேவை எளிமை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை. இன்னும் தேவை எளிமை.

Unknown சொன்னது…

கவிதை அருமை....

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

On 11/07/2010 02:09, Sengai Podhuvanar செங்கைப் பொதுவன் \ பொதுவன் அடிகள wrote:


நட்சத்திரத்திரம்

இத்தகைய சொற்கள் உங்களின் 'நொரண்டு'. தமிழைக் கிள்ளிவிடுவது.

தமிழையோ, தமிழனையோ தூண்டுங்கள்.

காயம படக் கிள்ளாதீர்கள்.

அன்புள்ள

பொதுவன் அடிகள
22, 13-வது தெரு, தில்லை கங்கா நகர், சென்னை 600 061
Dr.Sengai Podhuvan
Phone: (91-44) 2267 0203 Cell (91) 99406 41510
http://ancient1tamil.wordpress.com/
www.tamiliyam.blogspot.com

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

ஜோதிஜி கூறியதை வழி மொழிகிறேன்

நல்வாழ்த்துகள் நண்டு

நட்புடன் சீனா

நேசமித்ரன் சொன்னது…

நல்ல கவிதை !

சாந்தி மாரியப்பன் சொன்னது…

பட்டாம்பூச்சிக்கு கிடைத்த வண்ணம் அழகா இருக்கு.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,
பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
அகல்விளக்கு @
க.பாலாசி @
வானம்பாடிகள் @
அக்பர் @
ரோகிணிசிவா @
ஹேமா @
Starjan ( ஸ்டார்ஜன் ) @
ஜோதிஜி @
சே.குமார்@
கே.ஆர்.பி.செந்தில் @
பொதுவன் அடிகள@
cheena (சீனா) @
நேசமித்ரன் @
அமைதிச்சாரல் ,

அவர்களே
மிக்க நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "