வியாழன், 18 ஆகஸ்ட், 2011

ஊழலை ஒழிக்க லோக்பாலை விட மிகவும் வலிமையான WHITE BOX தான் வேண்டும் .


லோக்பால் என்பது வீட்டிற்குள் சுத்தம் செய்வது போன்றது .


ஆனால் வீட்டை சுற்றி...அதையும் தாண்டி ஊரை நாட்டை என சுத்தம் செய்யாமல்?. யாருக்கும் பலன் இல்லாமல் ,மீண்டும் ,மீண்டும் பழைய இடத்திற்கே வந்து நிற்பதற்கு பதிலாக ,ஒட்டுமொத்த அமைப்பின் குறைபாடுகளையுமே களைய லோக்பாலை விட மிகவும் வலிமையான  WHITE BOX முறை தான் இன்று இப்பொழுது மிகவும் அவசியமாக உள்ளது . இந்த WHITE BOX முறையால் தான் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும் .மற்றவைகளினால் சிறிய அதிர்வை மட்டுமே ஏற்படுத்த முடியுமே தவிர வேறு ஒன்றையும் சாதிக்கப்போவது இல்லை .

WHITE BOX  என்பது புகார் பொட்டி .இது தூய்மைப்படுத்தும் செயலை செய்வதால் .தூய்மையைக்குறிக்கும் வெண்மை நிறத்தின் பெயர் பெறுகிறது .இந்த புகார் பெட்டிக்கும் மற்றைய புகார் பெட்டிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் ,இந்த WHITE BOX ல் அளிக்கப்படும் புகாரின் மீது நடத்தப்படும் விசாரணைக்கும் மற்றைய புகார் பெட்டிகளில் அளிக்கப்படும் புகாரின் மீது நடத்தப்படும் விசாரணைக்கும் உள்ள நடைமுறைகளினால் தான் இது  சிறப்பு பெறுவதோடு ,தனது தூய்மைச்செயலையும் இது செய்வதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது .

இப்படி சிறப்புவாய்ந்த WHITE BOX என்ற புகார் பெட்டி ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மற்றும் அரசிடம் அனுமதி பெற்று இயங்கும் அனைந்து அலுவலகங்களிலும் ,நிறுவனங்களிலும் கட்டாயம் வைக்கப்படவேண்டும் .அலுவலகத்தில் பாதுகாப்பான இடத்தில் மக்கள் அணுகும் வண்ணம் ,அறியும் இடத்தில் வைக்கப்படவேண்டும் .24 மணி நேரமும் மக்கள் பயன்படுத்தும் படியான ஏற்பாட்டுடன் அதன் அமைவிடம் அமையவேண்டும்.பாதுகாப்பு இருக்கவேண்டும் ,ஆனால்,கண்காணிப்பு எதுவும் இருக்கக்கூடாது .இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள WHITE BOX ல் மக்கள் அச்சமின்றி புகார்களை தெரிவிக்க விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தவேண்டும் .


WHITE BOX  புகார் பெட்டியில்  ஊழல்,சுரண்டல்,லஞ்சம் பெறுதல், கொடுத்தல்,சரியான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துதல்,தங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை சரிவர செய்யாதிருத்தல்,கலப்படம் செய்தல், கையாடல் செய்தல் ,சுற்றுப்புற சீர்கேடுகள் செய்தல்....இன்ன பிற இது போன்ற எந்த புகார்களையும் எங்கும் வேண்டுமானாலும் மனுவாக அளிக்கலாம். இதற்கு கட்டணம் கிடையாது .இங்கு அளிக்கப்படும் புகாரின் மீது விசாரிந்து நடவடிக்கை எடுக்க குற்றம் சாட்டப்பட்டவர் முறையான அனுமதி என்ற பதத்தை  பயன்படுத்த தகுதியில்லாதவராகிறார் .அரசியல் அமைப்பு குறிப்பிட்டுள்ள அனைத்து நபர்களும் இதன் மூலம் விசாரிக்க எந்த தடையும் இல்லாத அளவில் உருவாக்கப்பட்ட ஒரு புகார் முறை . 

WHITE BOX ல்  புகார் கொடுப்பவர் தனது பெயரை தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை .பெயர் குறிப்பிட்டால் சரியான நடவடிக்கை உதவியாக இருக்கும் .

WHITE BOX ல் அளிக்கப்படும் புகார்களை வாரவாரம் கடைசி வேலை நாளில் கடைசி மணி நேரத்தில் WHITE BOX வைக்கப்பட்ட இடத்தில் உள்ள பணிப்பதிவேட்டில் முதலில் உள்ள நபர் முதலில் என தொடங்கி பின் அடுத்தவர் என சுழற்சிமுறையில் தலைமையை உருவாக்கி அனைவரின் முன்னிலையிலும் WHITE BOX  அவ்வலுவலத்தில் திறக்கப்படவேண்டும்.

தலைமை ஏற்றவரால் யார் யார் மீது என்ன என்ன புகார் வந்துள்ளது என்பதனை அனைவரும் அறிய படிக்கப்பட்டு ,புகாரின் தன்மைக்கேற்ப உரிய சட்டப்படியான உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் .தலைமை ஏற்றவரின் மீதே புகார் இருக்கும் பட்சத்தில் அவருக்கு அடுத்த புகாரில்லாத பணிப்பதிவேட்டில் அடுத்துள்ள நபர் தலைமை ஏற்கவேண்டும்.இங்கு உயரதிகாரி ,கடைநிலை ஊழியர் என பேதம் இல்லை.அனைவரும் ஒரு வாரம் தலைமை வகிப்பர் .

புகார்கள் பற்றிய முழுவிவரங்களையும் அந்த அந்த அலுவலக அறிவிப்புப்பலகையில் கட்டாயம் ஒட்டப்படவேண்டும் .அன்றே வட்டார புகார் ஆணையத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட வேண்டும்.

இவ்வாறு பெறப்பட்ட புகார்களைப்பற்றிய விவரங்களையும் , நடவடிக்கைகளையும் கண்காணிக்கவும் ,மேல் நடவடிக்கை எடுக்கவும் வட்டார புகார் ஆணையம் ஒன்று அமைக்கப்படவேண்டும்.அது அந்த அந்த வட்டாரத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் சம்பந்தாமான அனைத்து விசயங்களையும் அவைகள் பரிசீலிக்கவேண்டும் .அவைபற்றிய அனைத்து விபரங்களையும் வட்டார புகார் ஆணையத்தின் அலுவலக அறிவிப்புப்பலகையில் கட்டாயம் ஒட்டப்படவேண்டும் .வட்டாச்சியர் வட்டார புகார் ஆணையத்தினை வழிநடத்தவேண்டும்.

வட்டார புகார் ஆணையம் தான் பெற்றவைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட விவரங்களை 15 நாட்களுக்கு ஒரு தடவை மாவட்ட புகார் ஆணையத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட வேண்டும்.அங்கு அவைகள் பரிசீலணைக்கு உட்படுத்தப்பட்டு அது சம்பந்தமாக எடுக்கப்பட்ட விபரங்களை  தனது அறிக்கையாக 30 நாட்களுக்கு ஒரு முறை மாநில புகார் ஆணையத்திற்கு பரிசீலனைக்கு அறிக்கை அனுப்பப்பட்ட வேண்டும்.மாவட்ட ஆட்சியர் மாவட்ட புகார் ஆணையத்தினை வழிநடத்தவேண்டும்.

மாநில புகார் ஆணையம் தம்முன் கொண்டுவரப்பட்ட புகார் மனுக்கள் சம்பந்தாமான அனைத்து விசயங்களையும் பரிசீலிக்கவேண்டும் . மேலும் பத்திரிக்கை ,செய்தி நிறுவனங்கள் மற்றும் இணையதளம் ஆகியவற்றின் மூலம் 45 நாட்களுக்கு  ஒரு முறை புகார் மனுக்கள் பற்றிய அனைத்து விபரங்களையும் வெளியிட வேண்டும் .அது சம்பந்தமான மத்திய புகார் ஆணையத்திற்கு பரிசீலனைக்கு அறிக்கை அனுப்பப்பட்ட வேண்டும்.மாநில தலைமை செயலர் மாநில புகார் ஆணையத்தினை வழிநடத்தவேண்டும்.

மத்திய புகார் ஆணையம் ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும் .அதன் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து  மாநில புகார் ஆணையத்தினையும் வழிநடத்தவேண்டும்.மத்திய புகார் ஆணையத்தில்,ஒரு தலைமை புகார் ஆணையரும் மற்றும் 4 புகார் ஆணையர்களும் அதற்கான நாடாளுமன்றத்தால் உருவாக்கப்படும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படவேண்டும் .

இவ்வாறு அமைக்கப்படும் புகார் ஆணையத்திற்கு அரசியல் அமைப்பு  அங்கீகாரம் கொடுக்கப்படவேண்டும் .

இவ்வாறு ஒரு விரிவான அமைப்பை ஏற்படுத்தினால் தான் இந்தியா தூய்மைப்படும் .

எனவே  லோக்பாலுக்கு பதிலாக அதை விட வலிமையான WHITE BOX  எனும் புகார் ஆணையத்தை நிறுவுவதே நலம்.

எனவே
ஊழலற்ற இந்தியாவை விடதூய்மையான இந்தியாவையே நான் விரும்புகிறேன் .


.( படங்கள் உதவி கூகுள் ) .மீள்வு.
Download As PDF

21 கருத்துகள் :

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

புதிய சிந்தனைதான்...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

வாழ்க்கையில் மக்களும் அரசியல்வாதிகளும் தூய்மையை விரும்பாத வரை இந்த ஊழலை ஒழிக்கமுடியாது....நாட்டின் தூயமை மிக முக்கியம்...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

லோக்பாலை விட மிகவும் வலிமையான WHITE BOX முறை தான் இன்று இப்பொழுது மிகவும் அவசியமாக உள்ளது

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஊழலற்ற இந்தியாவை விட
தூய்மையான இந்தியாவையே நான் விரும்புகிறேன் .

ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "

நட்புடன் ஜமால் சொன்னது…

ஆசை தான் ...

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

ஏற்கனவே படித்த நியாபகம்.. நல்லதொரு வழி.. பரவச்செய்யணும்..

kashyapan சொன்னது…

ஐயா! எந்த பாக்ஸ் வைத்தாலும் விளங்காது. மொட்டைக் கடுதாசி பொட்டாலும் கி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று விதி உள்ளது. செய்ய மாட்டர்கள்.பாகிஸ்தானில் பிறந்தார்.அமிர்தசரசில் படித்தார். தெர்தலுக்காக அசமில் பிறந்ததாக புளுகினார். மன்மோகன் சிங். இத்தகைய புளுகுணிகள் இருக்கும்பொது ஒன்றும் நடக்கப் போவதில்லை. ---காஸ்யபன்.

மாலதி சொன்னது…

புதிய சிந்தனைதான்...

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு. நல்ல யோசனை. மக்களுக்கும் விழிப்புணர்வு, லஞ்சம் கொடுக்கக் கூடாது என்ற உணர்வு வரவேண்டும். இந்த யோசனை செயல்படுத்த விடுவார்களா?
வாழ்த்துக்கள்.

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

But the politicians can t allow to create white box. . .

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

But the politicians can t allow to create white box. . .

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்ல பதிவு.

M.R சொன்னது…

அறிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை பகிர்ந்துள்ளீர்கள் .
பகிர்வுக்கு நன்றி நண்பரே .

பெயரில்லா சொன்னது…

முதலில் வீட்டை சுத்தம் செய்வதற்கே இங்கு அனுமதி மறுக்கப்படும்பொழுது நாம் எங்கே வீட்டிற்கு வெளியே சுத்தம் செய்வது? எனினும் முற்றிலும் புதிய சிந்தனை

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - சிந்தனை நன்று - செயல்படுத்துவது சிரமம். நடைமுறைச் சிக்கல் அதிகம். பல்வேறு ஆணையங்கள் சரி வராது. எனினும் முயன்று பார்க்கலாம். நமது ஆயுட் காலத்தில் நிச்சயம் வராது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

அருமையான யோசனை,

ஆனா இங்க பிரச்சனையே தலைமை சரியில்லை என்பது தானே.. அது மட்டும் இல்லாமல் இங்கு தலைமை அனுமதிப்பது இல்லை என்பதும் இன்னொரு பிரச்சனை..

புகார் ஆணையம் ஒரு சுதந்திர அமைப்பாய் இருக்க வேண்டும். அதன் தலைவர் கூட அரசு பணியில் இருந்து இருக்க வேண்டும் (எந்த பணி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆசிரியர், நீதிபதி...) , மேலும் பணியில் எந்த தவறும் செய்யாதவர் என்று அறியப்படவேண்டும்.. குறிப்பிட்ட மக்களே (உதாரணம் கெசடட் அபீசெர்) தேர்ந்து எடுக்கவேண்டும்.. அவர் சரியாக இயங்க வில்லை என்றால் திரும்ப பெரும் அதிகாரம் இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் WHITEBOX வெற்றி பெறும், இல்லையேல் இருக்கும் பத்தோடு பதினொன்றாய் WHITEBOX ஆகும் அபாயம் உண்டு..

பெயரில்லா சொன்னது…

அருமையான யோசனை...
பகிர்வுக்கு நன்றி நண்பரே....

காட்டான் சொன்னது…

ஆச தோச அப்பளம்.. லோக்பாலுக்கே இந்த துல்லு துல்லுறாங்க இதில வெள்ளை பெட்டி வேறயா..!??

காட்டான் குழ போட்டான்...

! ஸ்பார்க் கார்த்தி @ சொன்னது…

நல்ல சிந்தனை, இது எப்போ நிறைவேறும்,

கவி அழகன் சொன்னது…

புதிய சிந்தனை

ராஜ நடராஜன் சொன்னது…

மனு,புகார் கலாச்சாரத்தை துவக்கி வைத்து குப்பைக்கூடைக்குள்ளும் தள்ளி விட்ட பெருமை தி.மு.கவிற்கு சேரும்.புகார் முறை தோல்வியானது என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று என்பதால் நான் இதற்கு ஓட்டுப்போட மாட்டேன்:)

கிடைக்காத படகை விட கிடைக்கும் துடுப்பைக் கொண்டு நீந்தி செல்வதே விவேகமாகும்.அன்னா ஹசாரே இயக்கம் தற்போது பாதி கடல் தாண்டிய ஒன்று.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "