வெள்ளி, 16 மே, 2014

3 வெற்றிகள் 1 இந்தியமக்களுக்கு 2 மோடிஜிக்கு 3 எனக்கு,இனி ஆடுவோமேபள்ளு பாடுவோமே.

வெற்றியை தந்த இந்திய தங்கதாமரைகளுக்கு எனது பணிவான வணக்கங்கள் பல.


மோடிஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

 

இது 17 ஏப்ரல், 2014  அன்று போட்ட பதிவு .பார்க்க 

365 எம்.பி க்களுடன் நரோந்திர மோடி பிரதமர் ஆகிறார்.வருக,வருக,வாழ்த்துக்கள் மோடிஜி.

 

இதற்கு வந்த கருத்துரைகள் சில - பார்வைக்கு

G.M Balasubramaniam சொன்னது…
அப்படிநடக்குமானால் இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
P.S.Narayanan சொன்னது…
எவ்வளவு கூட்டிக் கழித்தாலும் 230க்குமேல் வரவில்லை: இது காவிக்கும்பல் கவைலையோடு சொன்னது. ஆனால் நீங்கள் இஷ்டம் போல 365 என அவிழ்த்து விடுகிறீர்கள்...

தனிமரம் சொன்னது…
கொஞ்சம் பேராசைதான்!
kari kalan சொன்னது…
கனவு காண்பது என்று முடிவெடுத்த பின்னால் எதுக்கு ஒரு கஞ்சத் தனம்? சும்மா ஒரு 500 தொகுதின்னு அடிச்சி விட வேண்டியது தானே. காசா, பணமா..... :))
gurumoorthy சொன்னது…
vilankipogum

juneeb saikh சொன்னது…
பகல் கனவு பலிக்காது பார்போம் ?????????????

 

ஏதே பேராசை கனவு கொண்டு போடப்பட்ட பதிவாக பலரும் பார்த்தனர்.

 

பேராசை கொண்டு போடப்பட்ட பதிவல்ல என்பதை தற்பொழுது வெளியாகிக்கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள்  பறைசாற்றுகின்றன.

 

 நான் உலகை சுவாசிப்பவன் ,இந்தியாவை நேசிப்பவன்.

 இந்தியாவை நேசித்ததால்  இதனை கணிக்க முடிந்தது.

 

எந்த கருத்துகணிப்பும் 15ல் இருந்து 20எண்ணிக்கை முன்பின் இருக்கும்,ஏனெனில்,543 தொகுதிகளையும்  கருத்தில் கொண்டு கணிக்கும் பொழுது இந்த வித்தியாசம் கட்டாயம் வரும்.

 

தமிழகத்தில் பாஜக தனித்தே நின்றாலும் வெற்றிபெறக்கூடிய தொகுதிகள் பல கிடைக்காமல் போனது பாஜகவிற்கு பின்னடைவே.தமிழகத்தில் இப்படி நடக்கும் என்பது எனக்கு முன்பே தெரியும், அதனை கருத்தில் கொண்டும், தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களின் நிலையை அறிந்தும் தான் நான் 365 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என முடிவுக்கு வந்தேன்.இன்னும் வலுவான உத்தியை கையாண்டிருந்தால் 400 க்கு மேல்  பாஜக ஆயத்தமாகியிருக்கும்.

 

தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்று என்றாலும் 

 

உண்மையில் இது  இந்தியமக்களுக்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க முதல் வெற்றி யாகும்.

 

இரண்டாவது மோடிஜி அவர்களின் உறுதிக்கும் உழைப்பிற்கும் தேசப்பற்றிற்கும் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

 

மற்றும் 

 

எனக்கும்,எனது கணிப்பிற்கு கிடைத்த மகிழ்வான  வெற்றியாகும் இது.

 

வெற்றியை தந்த இந்திய தங்கதாமரைகளுக்கு எனது பணிவான வணக்கங்கள் பல.


மோடிஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

 

நல்லவரிடம் நாட்டை ஒப்படைத்து விட்டோம் ,

இனி  ஆடுவோமே பள்ளுபாடுவோமே.


வாழ்க பாரதம்.

படங்கள உதவி நன்றி இணையம் மற்றும் கூகுள்.

Download As PDF

11 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

YES.................

bandhu சொன்னது…

இது உங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி. கிட்ட தட்ட அனைவருமே பதிவுலகில் எதிர் முகாமில் இருந்த போதும், உங்கள் கருத்தை உரக்கக் கூறிய துணிவுக்கு இந்த வெற்றி. வாழ்த்துக்கள்.

Manickam sattanathan சொன்னது…

நண்பரே சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் " மங்கிய மாய பிம்பம் " "நீ வருவாய் என இந்த நாடு காத்து நிற்கிறது " என்ற இரண்டு பதிவுகள் இட்டேன் நீங்களும் அவைகளை படித்தீர்கள் ஞாபகம் இருக்கிறதா??
உங்களிடமிருந்து இந்த கருத்துக்கள் மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று.

http://ponmaalaipozhuthu.blogspot.com/2013/08/blog-post_6734.html

http://ponmaalaipozhuthu.blogspot.com/2012/10/blog-post_12.html

kari kalan சொன்னது…

உண்மைதான் ! என்னால் அப்போது நம்ப முடியவில்லை.
உங்கள் கணிக்கும் திறனை எண்ணி வியக்கிறேன்.
வாழ்த்துக்கள் !

Maasianna சொன்னது…

weldon for modi weldon for you

Bagawanjee KA சொன்னது…

இப்படி நடக்கும் என்று தெரிந்து தானே நான் கமெண்ட்போடாம கம்முன்னு இருந்துட்டேன் )))))
த ம 5

பழனி. கந்தசாமி சொன்னது…

உங்களுடைய கணிப்பிற்கும் அதை தைரியமாக வெளியிட்டமைக்கும் பின்புலமாக இருக்கும் உங்கள் கருத்துத் தெளிவை மனமாரப் பாராட்டுகிறேன்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே

புலவர் இராமாநுசம் சொன்னது…

உங்களுக்கு மட்டுமே என் வாழ்த்து!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வெற்றி இப்படித்தன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான்! தாங்களும் அதையே கணித்து வந்தீர்கள்!

வாழ்த்துக்கள் நண்பரே!

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

உங்களின் கணிப்பு வென்றதில் மகிழ்ச்சி! நல்லது நடந்தால் சரி! நன்றி!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "