வியாழன், 26 ஆகஸ்ட், 2010

அன்னை - 100


நான் என் வாழ்நாளில் சந்திக்க விருப்பிய நபர்களில் மிகவும் முதன்மையானவர்
'அன்னை' என்ற வார்த்தைக்கே
அழகு சேர்த்த 'கோஞ்ஜா ' .
நினைத்துப்பார்க்கவேண்டிய அன்பு உள்ளம் .

யூகோஸ்லாவியாவில் 1910 ல் ஸ்காப்சி என்னும் ஊரில் வேளாண் அல்பேனிய தம்பதியினருக்கு பிறந்த 'ஆக்னஸ் கோஞ்ஜா பொயாஜியூ ' என்பவர் 'ஏழைகளுக்கும் ,நோயாளிகளுக்கும் ' செய்த ஒப்பற்ற தொண்டினால் என்னை மிகவும் கவர்ந்தார் .

20 ஆண்டுகள் புவியியல் , வரலாற்று ஆசிரியையாக கல்கத்தாவில் பணக்கார விட்டுப்பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் பணியாற்றினார் .அந்த பள்ளிக்கு அருகில் 'மோதிஜில் 'என்ற சேரி இருந்தது .இங்குள்ள ஏழைகளின் அவலத்தை கண்டு வருந்தினார் . தான் இனி ஏழைகளுக்கு உதவி செய்தேயாகவேண்டும் என 1947 செப்டம்பர் 10 ல் உறுதிபூண்டார் .

ஏழைகளுக்குத் தொண்டு செய்ய தான் எடுத்த முடிவை தான் வேலைசெய்த பள்ளி தலைமையாசிரியருக்கு அறிவித்தார் . இவரின் வேண்டுகோளை கல்கத்தா 'ஆர்ச் பிஷப் ' இது தற்காலிக வேகம் காலப்போக்கில் நீங்கிவிடும் என நம்பினார்.
அதோடு மட்டுமல்லாமல் அவர்
அதிக கல்வி அறிவில்லாந அன்னிய நாட்டினல்,
இந்திய பின்னணியைப்பற்றி ஒன்றும் தெரியாத ,
அதுவும் பணவசதியின்றி ,
விடுதலை பெற்றிருந்த மக்களிடம் வெள்ளைக்கார வெறுப்பு மாறாத நிலையில் ,
நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களே சமூகப் பணியிலும் ஈடுபட்டிருந்த வேளையில் ,
பெண் துறவி
என்ன செய்து விடமுடியும் என ஆணித்தரமாக நம்பினார் .
'ஆர்ச் பிசப்' நிராகரித்ததால் நேரடியாகவே 'போப்'பிடம் விண்ணப்பம் செய்து அனுமதியை பெற்றார் .

'மோதிஜில் ' சேரியிலேயே 5 ருபாய் பணத்துடன் தனது தொண்டை ஆரம்பித்தார் அவருடன் பணியாற்ற முதலில் 'சுபாஷிணி தாஸ்' என்ற 19 வயது மாணவி வந்து சேர்ந்தார் .

இவ்வாறு ஆரம்பித்தது அவரின் பயணம் ...
அவர்தான்

தனது அன்பான உள்ளத்தால் உலகை அணைத்த

'அன்னை தெரசா'


இன்று அன்னையின் பிறந்த தினம் .

வணக்கத்துடன் நினைத்துப்பார்க்கின்றேன் ..
Download As PDF

18 கருத்துகள் :

Chitra சொன்னது…

A lady with a good soul and a heart.

விந்தைமனிதன் சொன்னது…

தொண்டு என்றால் என்ன என்பதில் பொதுப்புத்தியில் இருந்து முரண்பட்டிருப்பினும்...

நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!

வானம்பாடிகள் சொன்னது…

ஆஹா! வாராது வந்த மாமணி அல்லவா. என் வணக்கங்களும்.

ஹேமா சொன்னது…

நினைவு படுத்தி நினைவுகொள்ள வைத்தமைக்கு மிக்க நன்றி.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அன்னை தெரசாவின் தியாகத்தை யாராலும் மறக்க இயலாது.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

அன்னை தெரசாவின் அன்புள்ளம் மறக்க முடியுமா ?
நினைவு படுத்தியமை நன்று
வணக்கத்துடன் பிறந்த தினத்தினை நினைத்துப் பார்ப்போம்
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

எம்.ஏ.சுசீலா சொன்னது…

பயனுள்ள பதிவு

Vidhoosh சொன்னது…

arumaiyaana padhivunga. vazthukkal.

அம்பிகா சொன்னது…

நல்ல பகிர்வு. நன்றிகளும்.

அருண் பிரசாத் சொன்னது…

அன்னை டெராசாவை மறக்க முடியுமா? என்ன நாம் வருடத்தின் ஒரு நாளில் மட்டுமே அவரை நினைக்கிறோம், மற்ற நாட்களிலும் நினைத்து அவர் வழி நடந்தால் நாட்டில் அன்பு பெருகும்

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

அன்னை தெரெசாவின் தொண்டுள்ளம் யாருக்கு வரும். இது இன்னும் ஒருவர் பிறந்தால் தான் ஆச்சு. அருமையான பதிவுங்க நன்றி.

சசிகுமார் சொன்னது…

அருமை சார்

பா.ராஜாராம் சொன்னது…

மிக அருமையான பதிவு!

VELU.G சொன்னது…

நல்ல பதிவு நண்டு

velusamymohan சொன்னது…

Nice info Nandu abt a Saint who lived with us.

ஜோதிஜி சொன்னது…

தொடக்கத்தில் கிறிஸ்துவம் கல்விக்கு கண்ணாக இருந்தது. இன்றுள்ள பலரும் அவர்கள் மூலம் தான் உயர்ந்துள்ளார்கள். அதைப் போலவே பழங்குடி மக்கள் வாழ்க்கை கூட அவர்களால் தான் உயர்ந்துள்ளார்கள்.

ஆனால் இன்று?

குறைகளை தாண்டி நிறைகளுடன் நிறைவாய் வாழ்ந்த அன்னைக்கு என்னுடைய வணக்கம்.

The helper சொன்னது…

We introduce ourself a group from educational background.We are ready to help you for any competitive examinations or engineering studies at free of cost.Ask your doubts and get clarified

http://regionofachievers.blogspot.com/

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி

Chitra @

விந்தைமனிதன் @

வானம்பாடிகள் @

ஹேமா @

Starjan ( ஸ்டார்ஜன் ) @

cheena (சீனா) @

எம்.ஏ.சுசீலா @

Vidhoosh @

அம்பிகா @

அருண் பிரசாத் @

நித்திலம்-சிப்பிக்குள் முத்து @

சசிகுமார் @

பா.ராஜாராம் @

VELU.G @

velusamymohan @

ஜோதிஜி

அவர்களே

மிக்க நன்றி.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "