செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பரிணாமத்தின் பாதை -புத்தகம்னா இப்படித்தாங்க இருக்கனும் .


இது வரையில் நாம் அறிந்திராத ஓர் உயிரினத்தை
கண்டுபிடிப்பதென்பது சிரம்மான காரியமல்ல ...
எனத்தொடங்கும்
'' வாழும் டார்வின் ''என்றும் ,
''நடமாடும் டார்வின்'' என்றும் புகழப்படும்
''டேவிட் அட்டன்பரோ'' அவர்களின்
''பரிணாமத்தின் பாதை '' என்னும்
படிக்கவேண்டிய பொக்கிஷத்தை நண்பர்களின் அதிதூண்டுதலால்
விலைகொடுத்து வாங்கினேன் .
ஏன்னா ? இதை வாங்கிய அவர்கள் தினமும் இது சம்பந்தமா நிறைய விசயங்கள் மணிக்கணக்கில் பேசிக்கிட்டே இருந்தனர் .புத்தகத்தை படித்துக்கொண்டே அவர்கள் விவாதத்தில் இருந்ததால் இரவல் வாங்கவும் வழியில்லை .அவர்கள் அதற்கு தயாராகவும் இல்லை. ஆனால் மிகவும் சுவாரசியமான தகவல்கள் அவர்களின் விவாத்த்தில் இருந்தது எனக்கு வியப்பு மேல் வியப்பை அளித்ததால் இவ்வளவு வியங்களை உள்ளடக்கி ஒரு புத்தகம் இருக்கிறதா ? சரி வாங்கிவிடலாம் என்று முடிவு செய்துவாங்கிவிட்டேன் .
நான் விலை கொடுத்து வாங்கிய சட்டம்சாரா புத்தகங்களில் இதுவும் ஒன்று .

பாத்த மாத்திரத்திலேயே வாங்கத்தூண்டியது விசயம்
கண்டபடிக்கு முன்னுரை ,என்னுரை,பின்னுரை ,
ஜல்ரா உரை,பதிப்புரை ,புகலுரை ,பக்தியுரை என இல்லாமல் இருந்ததுவே .

மற்றபடி முதல் பக்கத்திலிருந்து கடைசி 312ம் பக்கம் வரைக்கு எழுத்துக்கு எழுத்து அர்த்தங்கள் ''சிற்பா'' போல .
அவ்வளவு அடர்வு ,அவ்வளவு ஆழம் ,அவ்வளவு அகழ்வு,
அவ்வளவு செறிவு ,அவ்வளவு அறிவு ,
அவ்வளவு செய்திகள்,அவ்வளவும் உண்மை,
அவ்வளவும் அனுபவம் .
புத்தகம்னா இப்படித்தாங்க இருக்கனும் .

அவ்வளவு நேர்த்தி.''LIFE ON EARTH " என்னும் "DAVID ATTENBOROUGH" அவர்களின் புத்தகம் .

இதை தமிழில்'' டோரதி கிருஷ்ணமூர்த்தி '' அவர்கள்
மிகஅழகாக ,மிகவும் நேர்த்தியாக மொழிபெயர்த்துள்ளார் .

''யுனைடெட் ரைட்டர்ஸ் '' ன் மிகநேர்த்தியான வெளியீடு .அருமை .

சரி புத்தகத்திருந்து சில துளிகள் ...

டார்வின் நாத்திகரல்ல,கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழத்தில் இறையியல் பட்டம் வாங்கியவர் .ஆனால்,உயிரினங்களில் அபரிதமான வகைகளையும்,ரகங்களையும் கண்டு தீவிரமான குழப்பத்திற்கு உள்ளானார் ...

பெரும்பாலான உயிரினங்கள் தாம் வாழ்ந்திருந்ததற்கான எந்தவித அடையாள ஆதாரத்தையும் தமக்குப்பின் விட்டுச்செல்லவில்லை...

நாம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ நம்மீது கடினமான பொறுப்பெனும் சுமை ஏறிவிட்டது .நமது எதிர்காலம் மட்டுமன்றி நம்முடைய இப்பூமியைப் பகிர்ந்து கொள்ளும் சகல ஜீவராசிகளின் எதிர்காலமும் நம் கையில் அடங்கியுள்ளது .

. Download As PDF

21 கருத்துகள் :

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

வாங்கிப் படிக்கிறேன் ....

பிரியமுடன் பிரபு சொன்னது…

வாங்கிப் படிக்கிறேன் ....

ITS VERY SHOT POST
I THINK YOU CAN WRITE SOME MORE DETAIL
THANK YOU

பிரியமுடன் பிரபு சொன்னது…

WHR DID U GOT THIS BOOK?
IN ERODE?

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

அட்டன்பரோவின் நிறைய நிகழ்ச்சிகளை டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கேன்,வித்யாசமான மனிதர்

கண்டிப்பா இந்த புத்தகத்த வாங்கணும்

Jey சொன்னது…

//நமது எதிர்காலம் மட்டுமன்றி நம்முடைய இப்பூமியைப் பகிர்ந்து கொள்ளும் சகல ஜீவராசிகளின் எதிர்காலமும் நம் கையில் அடங்கியுள்ளது.//


எல்லோரும் சிந்திக்கவேண்டிய அவசியம்...

NO சொன்னது…

நண்பர் திரு நண்டு,

அருமையான பதிவு. David Attenborough, (காந்தி படத்தை எடுத்த) Richard Attenborough வின் சகோதரர்! இருவரும் மாபெரும் அறிவாளிகள்!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//பிரியமுடன் பிரபு said...
வாங்கிப் படிக்கிறேன் ....

ITS VERY SHOT POST
I THINK YOU CAN WRITE SOME MORE DETAIL
THANK YOU //

Repeat

அம்பிகா சொன்னது…

நல்ல பகிர்வு.

நியோ சொன்னது…

புத்தகம் பரிணாம தத்துவத்தை வலியுறுத்தி பேசுகிறதா .. இல்லை ... இரண்டிற்குமிடையே ஒரு சமநிலையிலா?

V.Radhakrishnan சொன்னது…

விரைவில் வாங்கி படித்துவிடலாம். மொழிபெயர்ப்பு சுவாரஸ்யம் எனில் நிச்சயம் அதன் மூலம் அதிசிறப்பாக இருக்கும்.

கல்வெட்டு சொன்னது…

//
டார்வின் நாத்திகரல்ல,கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழத்தில் இறையியல் பட்டம் வாங்கியவர் .ஆனால்,உயிரினங்களில் அபரிதமான வகைகளையும்,ரகங்களையும் கண்டு தீவிரமான குழப்பத்திற்கு உள்ளானார் ...//

உண்மையில் கடவுளை அறிந்து கொள்ள நினைப்பவனின் பயணமானது "அப்படி ஒன்று இல்லை" என்று அறிய உதவி , அதையும் தாண்டி அறிவியலை அறிய உதவும்.

கடவுளைத்தேடும் உண்மையான பயணம் கேள்விகளால் நிரம்பியது. எந்த முன்முடிவும் இல்லாமால் பயணம் தொடருமானால், அது சொர்க்கத்தை காவல்காக்கும் கடவுளும், சொர்க்கமும் இல்லை என்பதில் போய் முடிந்து , அப்புறம் எப்பிடி?... என்று அறிவியலாக மாறி நிற்காமால் தொடர்ந்து கொண்டே இருக்கும் அந்தப்பயணம்...முடிவற்றது.

ஆனால், இதுதான் இறுதி இதைத்தாண்டி ஒன்றும் இல்லை என்று ஒரு சில பொஸ்தகங்களுடன் குத்துக்காலிட்டு உட்கார்ந்து, அதையே மனனம் செய்ய ஆரம்பித்தால் அதைத்தாண்டிய தேடல் இல்லாமல் தேங்கிய குளமாகிவிடும். :-(((

குளத்தைவிட்டு வரமுடியாத பயமே அங்கேயே இருந்து அதை மட்டுமே நம்பி இருக்கச் சொல்கிறது.

.

velusamymohan சொன்னது…

Kavuthaiyil irunthu karuthukku maareeteengaa Nandu.Nice post & nice info adv Sir.

sudhanthira சொன்னது…

உங்கள் பதிவு நன்றாக உள்ளது
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

வால்பையன் சொன்னது…

படிச்சிட்டு கொடுங்க தல, படிச்சிட்டு தர்றேன்!

பெயரில்லா சொன்னது…

//இதை வாங்கிய அவர்கள் தினமும் இது சம்பந்தமா நிறைய விசயங்கள் மணிக்கணக்கில் பேசிக்கிட்டே இருந்தனர் .புத்தகத்தை படித்துக்கொண்டே அவர்கள் விவாதத்தில் இருந்ததால் இரவல் வாங்கவும் வழியில்லை .அவர்கள் அதற்கு தயாராகவும் இல்லை. ஆனால் மிகவும் சுவாரசியமான தகவல்கள் அவர்களின் விவாத்த்தில் இருந்தது எனக்கு வியப்பு மேல் வியப்பை அளித்ததால் இவ்வளவு வியங்களை உள்ளடக்கி ஒரு புத்தகம் இருக்கிறதா ? சரி வாங்கிவிடலாம் என்று முடிவு செய்துவாங்கிவிட்டேன் .//

எங்களையும் உங்களைப் போன்ற சூழலுக்கே தள்ளுகின்றது உங்கள் பதிவு. நேர்த்தியான வர்ணணை.... வாங்கத் தூண்டுகிறது.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி

கே.ஆர்.பி.செந்தில் @

பிரியமுடன் பிரபு @

ஜில்தண்ணி - யோகேஷ் @

Jey @

NO @

T.V.ராதாகிருஷ்ணன் @

அம்பிகா @

நியோ @

V.Radhakrishnan @

கல்வெட்டு @

velusamymohan @

sudhanthira @

வால்பையன் @

ஜூனியர் தருமி

அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//பிரியமுடன் பிரபு said...

WHR DID U GOT THIS BOOK?
IN ERODE? //
இங்கு தான் வாங்கினேன் பிரபு.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//NO said...

நண்பர் திரு நண்டு,

அருமையான பதிவு. David Attenborough, (காந்தி படத்தை எடுத்த) Richard Attenborough வின் சகோதரர்! இருவரும் மாபெரும் அறிவாளிகள்! //

ஓ,அப்படியா , அதானே பாத்தேன் .
அவ்வளவு அறிவு ,உழைப்பு ,தெளிவு ,நேர்த்தி.

இது எனக்கு புதிய செய்தி .
மகிழ்ந்தேன் .
மிக்க நன்றி .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//velusamymohan said...

Kavuthaiyil irunthu karuthukku maareeteengaa Nandu.//

(:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//வால்பையன் said...

படிச்சிட்டு கொடுங்க தல, படிச்சிட்டு தர்றேன்! //

தர்றேன் வால்
உங்களுக்கு இல்லாததா .

தருமி சொன்னது…

இன்னும் கொஞ்சமாவது எழுதியிருக்கலாமே ...!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "